கதையாசிரியர் தொகுப்பு: ரா.பாலகிருஷ்ணன்

2 கதைகள் கிடைத்துள்ளன.

மனிதருள் ஒரு தேவன்

 

 (1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பத்திரிகைச் செய்திகளைப் படித்து விட்டுப் பரபரப்புடன் பதினைந்து நாள் ரஜாவில் பஞ்சாபுக்குப் புறப்பட்டுச் சென்ற சுபேதார் மல்ஹோத்ரா, கிளம்பிச் சென்ற பன்னிரண்டாவது நாளே முகாமுக்குத் திரும்ப நேர்ந்த விபரீதத்தை விதி என்று ஏற்றுக்கொண்டு ஆறுதல் பெறுவது எளிதன்று. விடுதிக்குக்கூடச் செல்லாமல் ஹோல்டாலும் கையுமாக நேரே அலுவலகக் கூடாரத்திற்குள் நுழைந்த சுபேதாருக்கு இராணுவ சம்பிரதாயப்படி மரியாதை செலுத்தக்கூடத் தோன்றவில்லை எனக்கு. அப்படியிருந்தது அவரது தோற்றம்!


துயர் ஆரஞ்சுகளின் நிலம்

 

 ஜப்பாவிலிருந்து ஆக்ரிக்கு நாங்கள் புறப்படத் துவங்கும் நிலையில் எங்கள் புறப்பாடு ஏதும் துயர் கொண்டதாயில்லை. விழாக்காலங்களில் மற்றவர்கள் எவ்வாறு அயல் ஊருக்கு ஒவ்வொரு ஆண்டும் செல்வரோ, அவ்வாறே நாங்களும் செல்ல நினைத்தோம். ஆக்ரியிலும் எமது நாட்கள் நன்கு கழிந்தன. எவ்விதச் சம்பவங்களுமின்றி. எனக்கு இந்நாட்கள் பிரியமானவை. ஏனெனில் நான் அந்நாட்களில் பள்ளி செல்ல வேண்டியிருந்ததில்லை, சூழல் எதுவாயினும், ஆக்ரியில் அன்றிரவு நிகழ்ந்த பெருந்தாக்குதலைத் தொடர்ந்து பின் நிகழ்ந்தவைகள் வேறொன்றை உணர்த்தின. அவ்விரவு கசப்பாக, கொடூரமாகக் கழிந்தது; ஆண்கள்