கதையாசிரியர் தொகுப்பு: ம.காமுத்துரை

25 கதைகள் கிடைத்துள்ளன.

லட்சும்ணி

 

 பேப்பர் பொறுக்கிய பணத்தைப் பத்திரமாகக் கொண்டுவந்து செல்வியிடம் நீட்டினான் லட்சுமணன். நீட்டிய காசைவாங்கிய அந்தக் கணத்தில் செல்வியின் கண்களில் ஒரு கலக்கம் நிழலாடியது. கண்ணீரா கர்வ்மா இன்னதென விளங்காமல் லட்சுமணனின் கழுத்தில் கிடந்த துண்டைப் பிடித்து வேகமாய்த் தன் பக்கமாய் இழுத்தாள் சித்தாள் வேலைவிட்டுவந்து தலையைக்கூட தூசு தட்டாமல் இருந்த செல்வியின் உடலெங்கும் ஒட்டியிருந்த சிமெண்ட் தூசி லட்சுமணனுக்கும் படர்ந்தது. முன்னெல்லாம் இந்த மூர்க்கம் அவனுக்கு மட்டுமே சொந்தமாயிருந்தது. ’ச்சீய்.. மனுசந்தானா..நிய்யி..!” – நாணிக்கொண்டு மூச்சு வாங்குவாள்


பார்த்திபன்சார் காத்திருக்கிறார்

 

 அனல் உலையாய் கொதிநிலை பெற்றிருந்தது வீதி. மரத்தடி, கூரையடி, வீட்டு மனையின் நிழலவடிவம் எதிரேவந்து விருட்டென கடக்கும் பேருந்தின் புகைமலிந்த காற்று..என பேதமில்லாது எங்கெங்கும் வெப்பம் நிறைந்திருந்தது. சுவாசம் கூட இதமாய் இல்லை. நாசித்துவாரத்துள் சூடு புகுந்து கிடந்தது. கண்களிலும் காந்தல். தலையினில் எரிச்சல். மேனியெங்கும் வெந்நிலை. தலையில் போட்டிருந்தகைக்குட்டையை எடுத்து, நெற்றியில் மேல்புறம் கசிந்த வியர்வையையை ஒற்றி எடுத்தபடி அந்த அலுவலக வாசலில் வந்து நின்றான் அவன். கண்ணாடியால் ஆகியிருந்த அதன்கதவைத் திறக்க ஒருநிமிடம் எடுத்து


நாயக பாவம்

 

 இயல்பாகவே இந்தக்கதைக்கு வாசகராகிய உங்களைத்தான் கதாநாயக னாக்க நினைத்திருந்தேன். ஆனால் உங்கள் மனது இதனை ஒப்புக்கொள்ளுமா என எனக்குள் ஒரு ஐயப்பாடு. ஆகவே இப்போதைக்கு கதையின் நாயகனுக்கு கோபால் என பெயர் சூட்டிக்கொள்வோம். தேவையின் பொருட்டு பின்னால் சரி செய்து கொள்ளலாம். கோபாலை சராசரி மனிதன் எனச் சொன்னால் வருத்தப்படுவான். பொதுவாகவே நாயகனென்றால் ஒரு தனித்துவம் வேண்டும்ல்லவா.. கோபால் இளைஞன். கலியாணம் ஆகாதவன் என்பதுதானே பொருத்தமாக இருக்கும். தொழில்..? சீருடை அணிந்திருப்பின் நலமென நீங்கள் சொல்வது காதில்


சுப விரயம்

 

 எச்சில் இலைகளின்மீது நாய்கள் இரண்டும் ஒன்றையொன்று அடித்துப் புரண்டு கொண்டிருந்தன. பந்தல் தடுப்பின் பின்னால் நடக்கும் அந்த அமளி, பந்தலின் உள்ளும் எதிரொலித்தது. வசந்தவிழா (காதணிவிழா) வைபவம் முடிந்து மொய்ப்பணம் சாமியறைக்குள் வைத்து எண்ணப்பட்டுக் கொண்டிருந்தது, பத்து நிமிடத்துக்கொருமுறை மனோகரனின் மனைவி கௌசல்யா எனும் கௌசி சாமிபடத்துக்கு எதோ செய்வதுபோல அறைக்குள் போவதும் வருவதுமாய் இருந்தாள். கௌசியின் தம்பி செந்திவேலுக்கு மூக்கின்மேல் கோவம் வந்துவிட்டது. “நோட்டுல எழுதுனதத்தான் எண்ணிகிட்டிருக்கம். யாரும் வாய்க்குள்ள போட்டு, மென்டு முழுங்கீற மாட்டம்”


தப்பித்தல்

 

 ”இப்ப நா என்னா செய்யணும் அத்தா” காத்தாயி அத்தனை பயத்துடன் மெதுவாகவே கேட்டாள். அடுப்பில் சோறு வெந்து கொண்டிருக்கிறது. மகள் இருக்கிறாள்தான். அதைப் பார்ப்பாளா எனத் தெரியவில்லை. அழகருக்கும், ராவுத்தருக்கும் வாய்த்தகராறு எனக் கேள்விப்பட்ட நிமிசத்தில் பதட்டத்தோடு வந்தவள், வந்ததும் முதல் வேலையாய் அழகரைக் கடத்தி விட்டாள். ”நீ கெளம்பு” எட்டாக நெளிந்து கிடந்த சைக்கிளின் முன்புற சக்கரத்தை கண்களால் அளந்தபடி வாயடைத்துப் போயிருந்த ஐசக் ராவுத்தர், பதில் ஏதும் சொல்லாமல் காத்தாயி பக்கம் திரும்பினார். காத்தாயி


உதட்டோடு முத்தமிட்டவன்

 

 யாரிடமாவது பேசி, மனசிலுள்ளதை பகிர்ந்து கொண்டால் தேவலையே என்று பரிதவித்தாள் ரேணுகா. ஒருத்தரும் கிடைக்கவில்லை. எல்லாரிடமும் ‘இதை’ப் பேசிவிட முடியாது. தன்னை ஒரு மாதிரியாகப் பார்ப்பார்கள். வீட்டில் பத்த வைப்பார்கள். புகையுமா குப்பென பற்றி எரியுமா என்றும் அனுமானிக்க முடியாது. அந்த வெப்பம் தன்னைச் சுடும்போது ஒருவேளை தானும் ‘அவளை’ப் போல எதுனாச்சும் செய்ய வேண்டி வரலாம். சட்டென ஒரு கீற்று ரேணுகா மனசில். இதே போலத் தான் அவளுக்கும் நடந்திருக்குமோ… அந்த புழுக்கம் தான் அவளை


கண்ணாடிக் குருவி

 

 நாலு சுசியாப்பம், ஒரு சுருள்போளி வாங்கி வந்திருந்தான் நாகராசு. அதை தேவியிடம் கொடுத்து அக்காளிடம் கொடுக்கச் சொல்லியிருந்தான். பேருந்தை விட்டு இறங்கி வீட்டுக்கு நடந்து வந்ததில் கலைந்திருந்த தலைமுடி, ,அரும்பிய வியர்வை, இன்னபிற ஒப்பனைகளை தன் இருகைகளலும் சரிசெய்து கொண்ட தேவி,, நாகராசுவிடமிருந்து வாங்கிய பலகாரப் பொட்டலத்தை, ஸ்டைலாக விரல் நுனியில் கோர்த்துக் கொண்டாள் ” மதனீ .“ வீட்டுக்குள் காலடி எடுத்துவைக்கும் முன்பாக குயில்போல ஒரு குரல் விடுத்தாள். தேவி. பின்னால் நாகராசு நின்றான் .


கட்டியவளைக் கொண்டாடுகிறவர்கள்

 

 ”சொல்லச் சொல்ல இனிக்குதடா – முருகா உள்ளமெல்லாம் உன் பெயரை . .” அழைப்புமணியை அழுத்தியதும் மணியோசைக்குப் பதிலாய் வந்தபாட்டு ஒலியில் சுசீலா அம்மாவின் குரலில் உருகி நின்றோம். “முருகன் என்றால் அழகன் என்று தமிழ்மொழி கூ ஊ றும் அழகன் எந்தன் குமரன் என்று . . “ “வாங்க சார் !”- பாடலை விழுங்கிக் கொண்டு அமுது அண்ணன் கதவைத் திறந்தார்.. “என்னண்ணே படக்குனு கதவத் தெறந்துட்டீங்க ?” ஏக்கத்துடன் சொன்னேன். எனக்குப் பின்னால்


மட்டன் பிரியாணியும் மேட்னி ஷோவும்

 

 அவன் கட்டிய தாலியை கையில் எடுத்துப் பார்த்தபடி நின்றிருந்தாள் மாயா. அந்தக் குறுகிய தெருவில் பதித்திருந்த சிமென்ட் தளம், வெப்பத்தை முழுமையாகத் திருப்பித் தந்துகொண்டிருந்தது. ரீசஸ் பீரியடு முடிந்ததும் கிளம்பி வந்திருந்தாள். இந்நேரம் மூன்றாவது பீரியடு தொடங்கியிருக்கும். ”ஒன்னிய கௌம்பச் சொல்லிட்டேன். கௌம்பு…” – அவளைக் கண்கொண்டு பார்க்க விரும்பாதவன்போல ராஜு கட்டளையிட்டான். மாயாவுக்கு, தலை கிறுகிறுத்தது. பிடித்து நிற்கக்கூட ஒரு கொழுகொம்பு இல்லாத நட்ட நடுவீதி. ஒதுங்கி நின்ற வீட்டின் சுவரைத்தான் தொட்டு நிற்கவேண்டி இருந்தது.


வேகாளம்

 

 ‘’ என்னா விசியம்டா பச்சிராசா ?” வெளித்திண்ணையிலிருந்து எழுந்து வந்த அய்யா, நிலைப்படியில் நின்றமானைக்கு முகத்தைமட்டும் வீட்டுக்குள் நீட்டினார். ’நேக்கால் ஒடிந்துபோன மாட்டுவண்டிபோல கைகள் இரண்டையும் பின்கழுத்தில் சேர்த்துக்கட்டி சாய்ந்து கிடந்தான் பட்சிராசா. அவனுக்கு முன்னால் சோத்துக் கும்பாவோடு வானதி.. பதிலுக்காகக் காத்திருந்தார் அய்யா. பட்சிராசாவுக்கு அய்யாவின்பால் எப்போதும் அலட்சியம்தான். பகலிலாவது அவர் ஏதாவது புத்தி சொன்னால் கேட்பான். அதுவே ராத்திரிப் பொழுதாகிவிட்டால் அவர் இருக்கும் பக்கம் திரும்பியே பார்க்கமாட்டான். ஏனென்றால் இரவில் அய்யா தொண்டை நனைக்காமல்