கதையாசிரியர் தொகுப்பு: முல்லை பி.எல்.முத்தையா

223 கதைகள் கிடைத்துள்ளன.

மகிழ்ச்சியாக வாழ்ந்தவன்

 

 ஒரு சிறிய நாடு. அந்த நாட்டின் அரசன் ஒரு சமயம் நோய் வாய்ப்பட்டிருந்தான். மருத்துவர்கள் பலர் வந்து பார்த்து, சிகிச்சை அளித்தனர். என்ன நோய் என்பதைக் கண்டுபிடிக்க இயலவில்லை நோயும் குணமாகவில்லை. மிகவும் வருந்தினான் அரசன். “தன் நோயைக் குணப்படுத்துபவருக்கு நாட்டில் பாதியை அளிப்பதாக அரசன் அறிவித்தான். ஆட்சியில் உள்ளவர்கள் கூடி ஆலோசித்தனர். எந்த வழியும் புலப்படவில்லை. ஒரு அறிஞர் தனக்குத் தோன்றிய யோசனையைக் கூறினார். அதாவது ” மகிழ்ச்சியோடு வாழ்க்கை நடத்தும் ஒரு மனிதனைக் கண்டுபிடித்து,


மூடத்தனத்தால் ஏமாந்த வியாபாரி

 

 கங்கைக் கரையில் சிறிய நகரம் ஒன்று இருந்தது. அங்கே காவி உடை அணிந்த ஒருவன் வசித்து வந்தான். அவன் யாரிடமும் எதுவும் பேசுவதில்லை. அதனால், அவனை மௌன சாமி என்று எல்லோரும் அழைத்தனர். தினமும் அந்த மௌனசாமி வீடுவீடாகச் சென்று, பிச்சை எடுத்து உண்பது வழக்கம். மௌனசாமி வழக்கம் போல் ஒரு நாள் பிச்சை எடுக்கச் சென்றான். அப்பொழுது, ஒரு வீட்டில் வியாபாரியின் மகள் பிச்சை போட வந்தாள். அவள் மிக அழகானவள். திருமணம் ஆகாதவள். அவளைக்


சமயோசித புத்தியால் தப்பித்தாள்

 

 சித்திராங்கி என்ற இளம்பெண், ஒரு பணக்காரச் செட்டியிடம் வேலைக்கு வந்து சேர்ந்தாள். செட்டியின் மனைவி இறந்து பல ஆண்டுகள் ஆயின. குழந்தைகளும் இல்லை, செட்டியிடம் தங்க நகைகள், வைரநகைகள், பொன், வெள்ளி நாணயங்கள், ஏராளமாக இருந்தன. என்றாலும், செட்டி ஒரு கஞ்சன். தர்மம் என்பதையே அவன் அறியாதவன். செட்டியிடம் கணக்கன், தோட்டக்காரன், வண்டிக்காரன், சமையல்காரன் ஆகியோர் வேலைக்கு இருந்தனர். பணிப் பெண்ணாக வந்து சேர்ந்த சித்திராங்கி, செட்டியின் குணத்துக்கு ஏற்றவாறும், அவனுடைய குறிப்பு அறிந்தும், சாமர்த்தியமாக நடந்து


இளவரசனின் தியாக உள்ளம்

 

 ஒரு நாட்டை ஆட்சி செய்து கொண்டிருந்த அரசன், திடீரென்று இறந்து விட்டான். அந்த அதிர்ச்சியில் ராணியும் இறந்து போனாள். அரசனின் ஒரே வாரிசான இளவரசனுக்கு முடிசூட்டுவதற்கான ஏற்பாடு நடைபெற்றுக் கொண்டிருந்தன. தாய் தந்தையரை இழந்த துக்கம் இளவரசனை துயரத்தில் ஆழ்த்தியது. அரச குருவிடம் சென்று, “குருவே! துக்கம் எதனால் ஏற்படுகிறது? துக்கம் உண்டாகாமல் வாழ வழி என்ன?” என்று கேட்டான் இளவரசன். “இளவரசே ! வழி வழியாக வருவது பாசம் ! பாசத்தின் விளைவு துக்கம், பாசத்தை


தொழில் கற்று முன்னேறினான்

 

 இரும்பு வியாபாரி ஒருவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். அவர்கள் இருவரும் தந்தைக்கு உதவியாக கடையில் இருந்து கொண்டிருந்தனர். வியாபாரிக்கு வயதாகி விட்டது. எனவே, தன்னுடைய சொத்து முழுவதையும் இளைய மகனுக்கே கொடுத்து விட விரும்பினார். ஏன் என்றால், இளைய மகனிடம் மிகுந்த பிரியம் கொண்டிருந்தார். அதை அறிந்த வியாபாரியின் மனைவி கணவனிடம், “இருவருமே நம்முடைய பிள்ளைகள் தானே சொத்து இருவருக்கும் பொது அல்லவா? இளையவனுக்கு எல்லாவற்றையும் கொடுத்து விடால், மூத்தவன் என்ன செய்வான்? இருவருக்கும் சமமாகக் கொடுப்பதே


சுண்டெலிகளின் ஏமாற்றம்

 

 ஒரு விவசாயியின் தானியக் களஞ்சியத்தின் அருகில், சுண்டெலி ஒன்று வசித்து வந்தது. அந்தக் களஞ்சியத்தில் சிறு துவாரம் இருந்தது. அதன் வழியாகச் சிந்தும் தானியங்களைச் சுண்டெலி வயிறு நிறையத் தின்று சுகமாகத் திரிந்தது. அது தன்னுடைய சுகத்தை மற்ற சுண்டெலிகளுக்குக் காட்ட வேண்டும் என்று ஆசைப்பட்டு, களஞ்சியத்தின் துவாரத்தை பெரிதாக்கிவிட்டது. உடனே மற்ற சுண்டெலிகளை தன் வளைக்கு , விருந்துக்கு வருமாறு அழைத்தது. மேலும் ஒவ்வொன்றுக்குத் தேவையான அளவு தானிய உணவு கிடைக்கும் என, பெருமையாகக் கூறியது


ஏழைகளின் நெஞ்சக் குமுறல்

 

 ஒரு ஊரில், ஒரு விறகு வியாபாரி இருந்தான். ஏழை, எளியவர்கள் காட்டில் கஷ்டப்பட்டு, விறகுகளை வெட்டிக் கொண்டு தலையில் சுமந்து வருவார்கள். அவர்களிடம் மிகவும் குறைவான விலைக்கு வாங்குவான். அதிகமான விலைக்கு பிற்பது விறகுக் கடைகாரனின் வழக்கம். இப்படியாக, அவன் பணக்காரனாகி விட்டான். வீடு கட்டி வசதியாக வாழ்ந்தான். அந்த ஊரில் அவனைத் தவிர வேறு வியாபாரி இல்லை. அதனால், அவன் கேட்கும் விலைக்கு விற்பார்கள், சொன்ன சுண்டெலிகளுக்குக் காட்ட வேண்டும் என்று ஆசைப்பட்டு, களஞ்சியத்தின் துவாரத்தை


உணவுக்குப் பயன்படுகிறோம்

 

 ஒரு பண்ணையாரிடம் வல்லூறும், சேவலும் இருந்தன வல்லூறு பண்ணையாரிடம் பழகி அவர் அழைத்த போதெல்லாம் சென்று, அவருடைய மணிக்கட்டில் உட்கார்ந்து கொள்வது வழக்கம். ஆனால், சேவல் மட்டும் பண்ணையாரை நெருங்குவதில்லை அவர் அருகில் வந்த உடனே, அது கூவிக் கொண்டே ஓடிவிடும். ஒரு நாள் வல்லூறு ; சேவலைப் பார்த்து, “உங்களுக்கு நன்றி என்பதே கிடையாது” என்று கூறியது. மேலும், கோழி இனத்தையே ஏளனமாகப் பேசத் தொடங்கியது. நீங்கள் அடிமைப்புத்தி உள்ளவர்கள். உங்களுக்குப் பசி வந்தால் மட்டும்


தாயை ஏமாற்ற நினைத்தான்

 

 =ஒரு ஊரில் இளைஞன் ஒருவன் இருந்தான். அவன் படிக்கவில்லை. வேலை எதுவும் பார்க்கவில்லை. அவன் தந்தை இறந்து விட்டான். தாய் மட்டுமே இருந்தாள். அவள் தன்னிடம் இருந்த பணத்தை அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்கு வட்டிக்குக் கொடுப்பாள். அந்த வட்டியைக் கொண்டு வாழ்ந்து வந்தாள். “எனக்குப் பிறகு, உனக்கு யார் சோறு போடுவ. ஏதாவது வேலை செய்து பிழைத்தால் நல்லது என்று எவ்வளவோ சொல்லியும் அவன் அதை பொருட்படுத்துவதே இல்லை. மகன் மீது உள்ள பாசத்தால், தினமும் உணவு


திருட்டில் ஒரு தந்திரம்

 

 பட்டணத்திலிருந்து ஒரு வியாபாரி ஒரு சிற்றூருக்கு வந்தான் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்தான். பழைய பொருள்கள் எதுவானாலும் விலைக்கு வாங்கினான். எந்தப் பொருளானாலும் நான்கணா, எட்டணா, ஒரு ரூபாய் அதற்குமேல் வாங்குவதில்லை. இந்தச் செய்தி ஊர் முழுதும் பரவியது. தினமும் மக்கள் வந்து பொருளை விற்று, பனம் வாங்கிச் சென்றனர். வியாபாரிக்கு , வீட்டை வாடகைக்கு விட்டவர், “இந்தப் பொருள்களை வாங்கி நீர் என்ன செய்வீர்?” என்று கேட்டார். “இந்தப் பொருள்களை லாரியில் ஏற்றி, மலைப்பகுதி, மற்றும்