கதையாசிரியர் தொகுப்பு: மா.சண்முகசிவா

4 கதைகள் கிடைத்துள்ளன.

சாமி குத்தம்

 

 ‘நம்ம கோயில இடிச்சிட்டாங்க…’ வேகமாக ஓடிவந்த முருகன் இடுப்புக்குக் கீழாக இறங்கும் டவுசரை ஒரு கையால் பிடித்துக்கொண்டு, மறுகையால் கோயில் இருக்கும் திசையைக் காட்டி சொன்னபோது கூடவே ஓடிவந்த ஜிம்மியும் வால் வெட்டப்பட்டதால் தன் ஆசன வாயை அசைத்து ‘அது உண்மைதான்’ என்றது. “டேய் … என்னடா சொல்ற … நம்ம முனியாண்டி கோயிலையா…” ஆறுமுகத்திற்கு அதிர்ச்சியைக் காட்டிலும் ஆச்சரியம்தான் மேலோங்கி இருந்தது. இரண்டு நாள் அடைமழை பெய்தாலே ஆட்டங்கண்டுவிடும் மதில்களும் காற்றடித்தாலே கழன்றுஓடும் தகரக்கூரையையும் இடிக்க


அவள் – நான் – அவர்கள்

 

 சற்று தூரத்தில் துர்க்காபாய் மூச்சிரைக்க நடந்து வருவது தெரிந்தது. ஏழாம் நம்பர் குழந்தைகளுக்கான வார்டின் ஆயம்மா அவள். வெள்ளை சேலையில் கைகளில் கேஸ் கட்டுகளுடன் கனத்த உடலில் ஊளைசதையும், தளர்ந்த மார்பகங்களும் குலுங்க கையைத் தூக்கி ஆட்டியவண்ணம் என்னை நோக்கித்தான் வந்துக் கொண்டிருக்கிறாள். ‘ஐயா ஒங்கள பார்க்கத்தான் லொங்கு லொங்குனு வர்றேன்’ நெற்றியில் விபூதி கீற்று, சின்னதாக மஞ்சள் பொட்டு, வியர்வை துளிகள். ‘ஏம்மா?’ என்றேன். ‘நம்ம வார்டுக்கு ஒரு கேஸ் வந்திருக்கு, அந்த சிடுமூஞ்சி செரினா,


மெர்சிடிஸ் பென்சும் முண்டக்கண்ணியம்மனும்

 

 முனியாண்டிக்கு மிதப்பது போலிருந்தது, அந்தப் புதிய கப்பல் போன்ற ‘எஸ்’ சீரியஸ் மெர்சிடிஸ் பென்ஸை ஓட்டிச் செல்வதால் மிதப்பது போல் உணர்வது இயல்புதானே. அதன் இருக்கைகளின் தோலுறைகள் ஒரு விதமான சுகந்த வாசனையைப் பரப்பிக் கொண்டிருந்தன. அந்தச் சுகமான உணர்வை நீடிக்கவிடாமல் ஒரு ஏக்கம் வந்தது. “காலாகாலத்துக்கும் இப்படிப் பின்னாடி ஒருத்தனைச் சொகுசா ஒட்கார வச்சி நான் வண்டியோட்டியாகத்தான் காலம் கழிக்கனுமா” வேதனையாக இருந்தது.’கிருஷ்ண பகவானே வண்டியோட்டித்தானே’ கொஞ்சம் திருப்தியாக இருந்தது. குல தெய்வத்தை நினைத்துக் கொண்டான்.


தவிப்பு

 

 அகிலா என்ற அகிலாண்டேஸ்வரிக்கு இன்றைக்கு நெஞ்சின் படபடப்பு கொஞ்சம் அதிகமாகத்தான் இருந்தது. சரக்… சரக் என்று தரையில் தேய்த்து நடக்கும் மாமாவின் கால் செருப்பின் சப்தம்தான் அதற்குக் காரணம். சப்தம் நின்று அவர் அவரது அறைக்கதவை திறக்கும் போது, அவளுக்கு வியர்க்க ஆரம்பித்தது. வயிற்றைப் புரட்டியது. மேஜையில் குனிந்து வீட்டுப் பாடம் எழுதிக் கொண்டிருந்த அவளின் உள்ளங்கை வியர்வையில் பேனா வழுக்கியது. நோட்டுப் புத்தகத்தின் தாள் ஈரமானது. மாமா இந்நேரம் தன் பேண்ட்டை கழற்றிப் போட்டு விட்டு