கதையாசிரியர் தொகுப்பு: மலைமகள்

15 கதைகள் கிடைத்துள்ளன.

இறுதி வணக்கம்

 

 (2002 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) உடலுக்கு எந்த அலுப்பையும் ஏற்படுத்தாது ஊர்தி வழுக்கிப் போய்க்கொண்டிருந்தது, இடையிடையே வீதியோரமாக காப்பரணிலிருந்து நீண்ட துப்பாக்கி முனைகளை, அரைத்தென்னை உயர விளம்பரப் பலகைகளைக் கடந்தவாறு நெரிசலான வீதிவழியே சக்கரங்கள் விரைந்தன. பயணம் சுகமான பயணம்தான். மனம்ம்தான் கொந்தளித்துக்கொண்டேயிருந்தது. அடையாள அட்டையைக் காட்டி, பெயரைப் பதிவு செய்து, ஊர்தியைப் பதிவு செய்து, வினோத உடைப்போட்டிக்காக அலங்காரம் செய்து மைதானத்தின் நடுவே வரும் சிறு பிள்ளையைப்


முற்றுகை

 

 (2000 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) நு… ங்… ங்… என்ற சத்தம் காதைக் குடைந்தது. ‘சனியன்! விடியற்காலையிலேயே வந்துவிடும். இனி பதுங்குகுழியுனுள்ளே இருக்கவேண்டியதுதான்’ போன பிறகுகூட, தலைக்கு மேலே நிற்பதுபோல் காதுக்குள் இரைந்து கேட்கும். காதுக்கு ஓய்வே இல்லை. ஒன்றில் ஆளில்லா வேவு விமானம் திரியும் அல்லது வேவு விமானம். அதுவுமில்லாவிட்டால் மிக் 27 வந்து இந்த சாவகச்சேரியில் இன்னும் எஞ்சி நிற்கும் ஏதேனும் ஒரு கட்டிடத்தைத் தூக்கிப்


அனுமதி

 

 (1968 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) உந்துருளி தன்பாட்டில் போய்க்கொண்டிருந்தது. மனம் வேறெங்கோ தன்பாட்டில் போய்க்கொண்டிருந்தது. இடையிடையே திடுக்கிட்டு சுயநினைவுக்கு வரும்போது ஒரு முறை பரந்தன் சந்தியால் திரும்பிக் கொண்டிருப்பதை உணர்ந்தேன். மறுமுறை ஆனையிறவை கடந்துகொண்டிருப்பதை உணர்ந்தேன். குறுக்கும் மறுக்கும் கூவியபடி போய்க்கொண்டிருக்கும் ஊர்திகளோடு மோதாது எப்படி வந்துகொண்டிருக்கிறேன்? ஆச்சரியமாக இருந்தது. மூளையின் தொழிற்பாட்டை கைகளும், கால்களும் பொறுப்பேற்றுக் கொண்டனவோ? அல்லது, போகும் இடத்தையும் இலக்கையும் புரிந்து கொண்டு உந்துருளி


எனது மனிதர்கள் – 2

 

 (2002 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அன்றுதான் அவரை நான் முதன் முதலாகப் பார்தேன். பரந்த, வட்டமான, பெரிய விழிகளையுடைய குழந்தைத்தனமான முகம். நிமிர்து என்னைப் பார்த்த முகத்தில் அப்போதுதான் புதிதாக அல்லாமல் ஏற்கனவே என்னை அறிந்தவர் போல் ஒரு பாவனை. பார்த்த மாத்திரத்தில் மனதில் பதிந்து விடுகின்ற முகம் அது. யார் அது? புரியவில்லை. முன்னர் எப்போதாவது சந்தித்திருப்பேனா? நினைவில்லை. நான் போய்க்கொண்டிருந்த என் நண்பனைச் சந்திக்க. அங்கே


எனது மனிதர்கள் – 1

 

 (2002 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) என்ன முடிவை எடுப்பது என்று தெரியாத நிலையில் நாங்களிருந்தோம். தளம் முழுவதும் நூல்கள். வழமையாக நாங்கள் நகர முன்பே அவற்றை நகர்த்திவிடுவோம். கொக்குவிலிலிருந்து சாவகச்சேரி, அங்கிருந்து கிளிநொச்சி, பின்னர் துணுக்காய், இப்போது ஒட்டிசுட்டான் என்று பத்திரமாய் நாம் நகர்த்தி வந்த சீதனம் அவைதான். சீதனத்துக்கு இப்போது ஆபத்து வந்துவிட்டது. வெற்றி நிச்சயம் நடவடிக்கைப் படையினரை நெடுங்கேணிப் பகுதியில் இடைமறித்துப் புலியணிகள் போரிட்டுக்கொண்டிருந்தன. ஒட்டுசுட்டான்


கதவுகள் திறந்துதான் உள்ளன

 

 (1999 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) தலைமுறை தலைமுறையாகவே புத்திக்கூர்மையும், ஆளுமையும் என்னுள் கடத்தப்படுவதாக உணர்கின்றேன். எப்போதுமே எதையுமே சாதிக்கக்கூடிய ஆற்றலுடன்தான் நான் இருந்துவருகிறேன். எந்தப் பெரிய நிர்வாகத்தையும் சிக்கலின்றி இயக்கக்கூடிய ஆளுமை பண்டுதொட்டு என்னிடம் இருந்து வருகிறது. ஆனால், என் புத்திசாலித்தனத்தை தம் புத்திசாலித்தனத்தால் சந்திக்காமல், தம் அதிகாரத்தால் என்னை அடக்க முனையும் மனிதர்களே இந்த உலகில் பெரும் எண்ணிக்கையில் என் கண் முன் உலவுகிறார்கள். எனக்கு இருக்கும்


யார் உன்னை அழைத்தார்

 

 (2002 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) இரண்டு எறிகணைகள் கூவல் ஒலியுடன் தலையைக் கடந்தன. ஒரு கணம் நிதானித்தேன். வழமையான அதிகாலை உபசரிப்பா? யானை வரவின் மணியொலியா? யோசிச்சு முடிக்குமுன் ஒரு இருபத்தைந்து, முப்பது எறிகணைகள் சுழற்றி விசிறப்பட்டு விழுந்து வெடிக்க, மனமும் கையும் ஒரே நேரத்திலேயே இயங்கின. நான் வோக்கியை (Walky talky) இயக்கி “என்ன மாதிரி” என்று கேட்க அதே நேரம், நிறைய “என்ன மாதிரியும்….” “பதினெட்டால்


யாரோ யார் இவர் யாரோ?

 

 (2001 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) யாரிவள்? சாயலைப் பார்த்தால் அரியாத்தை போலுள்ளதே. அட! அரியாத்தையேதான். ஒரு அங்குசத்துடனும் வடக்கயிற்றுடனும் அப்படி எங்கேதான் போகிறாள் இவள்? குலத்தொழிலைக் கையிலெடுத்துவிட்டாள் போலும். அட! கதைத்துக்கொண்டிருக்கும் போதே கண் மறைவாகிவிட்டாள் அரியாத்தை. காட்டுக்குள் அந்த அலியன் யானை அலைகின்றது என்பது அரியாத்தைக்கு தெரியாதா? எதற்காகத் தனியாக, மிக வேகமாக, ஏதோ சாதிக்கப் போகின்றவள் போல் போகின்றாள்? ஏதேனும் அபாயம் நேருமுன்னர் வாருங்கள், நாமும்


அங்கோர் காட்டிடைப் பொந்திலே

 

 (2003 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஆரியகுளம் சந்தியால் திரும்பும்வரை அவளுக்கு அந்தச் சம்பவம் தெரியாது. தனியார் கல்வி நிறுவன வாயிலிலிருந்து மிதிவண்டியை எடுத்த நேரத்திலிருந்து வீதியோரமாக ஓரிரண்டு இடங்களில் மக்கள் குழுமி நின்று ஏதோ படுமுக்கியமான கருத்தாடல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அதைப் பொருட்படுத்தாமல் வந்தவளுக்கு ஆரியகுளம் சந்தியில் நின்ற கூட்டம் நிலைமையின் தீவிரத்தை உணர்த்தியதால், மிதிவண்டியின் வேகத்தை மிகவும் குறைத்துக்கொண்டு காதுகளை எறிந்தாள். அதிரிந்தாள். சம்பவத்தை நேரடியாகக் கண்ட


பயணம்

 

 (1998 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ‘ஸ்ஸ்ஸ்க்…’ சரி. குறி பிசகவில்லை . வேலி அடைப்பதற்காகக் குனிந்து பனையோலையைத் தூக்கிக்கொண்டு நிமிர்ந்தவனின் நெற்றியில் ரவை தைத்தது. ஒருவன் விழுந்துவிட்டான். கவிதா பார்த்துக்கொண்டேயிருந்தாள். விழுந்தவனைத் தூக்க எப்படியாவது முன்னுக்கு வருவார்கள். வருகின்றவர்களில் ஒருவனை விழுத்தவேண்டும். அதற்குள் வாணி ஓடிவந்தாள். “என்னடி, விழுத்திவிட்டியோ?” “ஓ. ஆள் ஓலையோடை நிமிர்ந்தார். சரி” என்றாள் கவிதா பார்வையைத் திருப்பாமலேயே. விடிந்தபின் இது மூன்றாவது பதுங்கிச்சூடு, பொழுது