கதையாசிரியர் தொகுப்பு: பூவை எஸ்.ஆறுமுகம்

20 கதைகள் கிடைத்துள்ளன.

மழையில் நனையாத மேகங்கள்

 

 (1991ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மிருகத்தின் மூர்த்தண்ய வெறி இப்பொழுதுதான் அடங்கியதோ? மூச்சு. மஞ்சி விரட்டுப் பாய்ச்சலாக மூட்டியது: மோதியது; சிதறியது. கண்ணைக் கட்டிக் காட்டிலே விட்டமாதிரி இருந்தது. அவன் நின்றது காடுதான் ; தாராடிச்சாமிக்குக் குடிக் காணியாட்சிப் பாத்தியம்’ கொண்ட காடு ; பொட்டல் காடு ஆனால், அவனுடைய கண்களை யாரும் கட்டி விடவில்லையே? – இருட்டு, கண்ணை – கண்களை மறைத்தது ; மறைக்கிறது! –


இங்கே, ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்!

 

 (1991ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 1 சேரி… உலகாளும் ஆத்தா அங்காளம்மன் கோவில் திமிலோகப் படுகிறது. ஆடும் பம்பரமாக. ஆடாமல் சுழன்றார் சாம்பான் பூசாரி . மஞ்சள் கொத்துக்கள், ஒரு புறம். மறுபக்கத்திலே. செங்கரும்புக் கட்டுகள். ஈசான்யமுடுக்கில், வாரிப் பின்னப்பட்ட தென்னை ஓலைக் கூந்தல்கள். நட்ட நடுவிலே, மாவிலைத் தோரணங்கள் சுருண்டு கிடந்தன. இதற்கிடையில் – அந்திசந்தியின் ரம்யமான ஆர்ப்பாட்டம் வேறு. விடிந்தால், சங்கராந்திப் பொங்கல் ஆயிற்றே! அதற்காக


அந்த நாய்க்குட்டி எங்கே?

 

 1 ஹாலிவுட் நட்சத்திரம் ஜிப்பி தமிழ்நாட்டின் தலை நகரான சென்னைக்கு வருகை தந்திருந்ததல்லவா? அதைப் பற்றி அன்றைய தினசரியில் செய்தி வெளியாகியிருந்தது. அந்த மனிதக் குரங்கை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருந்தான் பூபாலன். அவனுக்கு வாயெல்லாம் பல்லாகிவிட்டது. சிரிப்பு அடங்கியது. அப்பொழுது அவனுடைய சிறுகுடலைப் பெருங்குடல் கவ்வியது, ஓடினான். மாம்பலம், ஜானகிராமப் பிள்ளைத் தெரு வீட்டு எண் இரண்டு . “அம்மா , பசிக்குதே, அம்மா! ஏம்மா இப்படிப் பசிக்குது?” என்று கேட்டான் பூபாலன்.


இளவரசி வாழ்க!

 

 1 தமதுரத் தமிழ் வாழ்த்துகின்ற பொங்குவிரி காவிரியின் வாழ்த்தைப் பெற்றது அல்லவா சோழவள நாடு! புலிக்கொடி வாகை சூடிக் கொடிகட்டி பறந்த சோழமண்டலத் திற்கு, அன்றைக்கு வழித்தடம் அமைத்துக் கொடுத்த முதல் மரியாதைக்குரியது சிருங்காரபுரி நாடு… அந்நாட்டின் பூலோக சொர்க்கமாகத் திகழ்ந்த அரண் மனையின் தலைவாசலில், வண்ணக் கலாபமயில் சின்னம் பொறித்த வெண்பட்டுக்கொடி பட்டொளி வீசிப் பறந்து கொண் டிருந்தது! அப்பொழுது – அத்தாணி மண்டபம் மிகுந்த பரபரப்பபுடன் காணப்பட்டது. மண்டபத்தின் பிரதான வாயிலில் காவலர்கள் இருவர்


மாஸ்டர் உமைபாலன்!

 

 1 உமைபாலன் அந்தப் புதிய இடத்துக்கு வந்து சேர்ந்ததும், மறந்துவிடாமல் பெருமூச்சை வெளியேற்றிவிட்டான். அதே சூட்டோடு, உள்ளத்திலே பரவிக் கிடந்த சூட்டையும் தணித்துக் கொள்ள எண்ணினான். ஆகவே, தன் பிஞ்சு நெஞ்சில் எழுதி, மனப்பாடம் செய்து வைத்திருந்த அந்த மூதுரையை மீண்டும் ஒரு முறை ஞாபகப்படுத்திக் கொண்டான். பிறகுதான், அவனுக்குத் தன்னுடைய உடற்சூடும் நினைவுக்கு வந்தது. உடனே, அரைக் கைச் சட்டையின் பொத்தான்களைக் கழற்றினான்; பூந்தென்றலை உள்ளே புகச் செய்தான். ஒரு சில வினாடிகள் வரை கண்களை


வட்டிற்சோறு

 

 பச்சை மண்’ சிரிக்கக் கண்டால், உள்ளம் கொள்ளை போய்விடுமல்லவா? அப்படித்தான் சுருளாண்டியும் மனம் பறிபோய் நின்றான். ஆனால், அவனை அவ்வாறு ஆக்கியது குழவியா? அல்ல! சம்பான் தளை’ எழுபத்தெட்டுக் குழி நிலத்தில் நடப்பட்டிருந்த நாற்றுக்கள் பசுமை ஏந்திச் சிரிப் பினைச் சிந்திக்கொண்டிருந்தன். அவன் சிந்தை இழந்து நின்றதில் வியப்பு ஏது? வினயந்தான் உண்டா ? சுருளாண்டியின் அடிப்பாதங்களில் வளை நண்டு நெளிந்து தப்பிய பொறியுணர்வு ஊடுருவியது ; வாய்க்கால் நீர் உடலை நடுங்கச் செய்தது ; ஊதல்


போட்டா போட்டி

 

 நுங்கும் நுரையுமாகக் குமிழியிட்டுச் சென்றிருந்த காவிரியின் புதுவெள்ளப் பூரிப்பில் மனம் விட்டு லயித்திருந்த அவள், காற்றில் கலந்துவந்த குழல் ஓசையைக் கேட்டுத் திரும்பிப் பார்த்தாள். நினைத்தபடி முத்தையனைக் காணவில்லை. குணவதிக்கு ஏமாற்றமாகப் போய்விட்டது. வழக்கமாக வரும் அந்த ஒற்றையடிப் பாதையை மீண்டும் ஒருமுறை நோக்கினாள். செடி மறைவிலிருந்து மெல்ல எழுந்த முத்தையனைக் கண்டவுடன் குணவதிக்குச் சந்தோஷம் எல்லை கடந்தது. தன்னை வழக்கம் போல ஏமாற்றி வேடிக்கை பார்க்கவே இப்படிச் செய்திருக்கிறான் முத்தையன் என்பதை அறிந்த குணவதி, சுய


செந்தட்டீ மம்மே பாரே!

 

 மூன்று முடிச்சுக்கள் விழுந்தன. வத்சலைக்கு ஏற்பட்ட மகிழ்வு இவ்வளவு அவ்வளவு அல்ல. எல்லாமே கனாப்போலவே தெரிந்தது. மங்கல நாண் அவளது விழி விரிப்பில் இழைந்தது. தனக்குத் தாலிபாக்கியம் அருளிய அலகிலா விளையாட்டுடையவனை நன்றி நெஞ்சுடன் தொழுதாள். மேனி புல்லரித்தது. நாதசுர முழக்கம் அவளுக்கு உணர்வையும் சுயநினைவையும் கொடுத்தது. தலையை உயர்த்த எத்தனம் செய்தாள். விழிகள் நாணம் பூண்டன. மூன்று முடிச்சுக்களை அருளிய சொக்கலிங்கத்தின் கடைவிழி நோக்கைச் சந்திக்க முடியாமல் திக்குமுக்காடினாள். மணப்பந்தல் மளமளப்பு மிஞ்சியது. ‘வாங்க, வாங்க!’


வாழப் பிறந்தவள்

 

 நடுச்சாமம். இரவு ஊர்ந்து கொண்டிருந்தது. ஒளி உமிழ்ந்து பரப்பி நின்ற மேஜை விளக்கின் பாதத்தில் விரிந்து கிடந்த வைத்திய சஞ்சிகை ஒன்றில் கருத்தை மையமிட்டுப் படித்துக்கொண்டிருந்தார் டாக்டர் சேகரன். “டாக்டர் ஐயா.” “….” “டாக்டர் எசமான்” ஒன்றியிருந்த உள்ளத்தைத் திருப்பிவிட்டுக் குரல் குறுக்கிட்ட திசைக்குத் திருஷ்டியைத் திருப்பினார். வாசல் கதவு படீர் படீ ரென்று ஓசை ஓலமிடத் தட்டும் சப்தம் காதைத் துளைத்தது; ஓடிப்போய்த் திறந்தார். மூச்சுப்பிடிக்க ஓடிவந்து அறையில் விழுந்த கண்ணுச்சாமியைக் கண்டதும் டாக்டருக்குத் திகைப்பு


பிள்ளைக் கனியமுதே

 

 ‘பிள்ளைக் கனியமுதே – கண்ணம்மா பேசும் பொற்சித்திரமே! அள்ளி யணைத்திடவே – என்முன்னே ஆடிவருந் தேனே!’ ரேடியோவினின்றும் எழுந்து காற்றில் மிதந்துவந்த இனிய கானம் டாக்டர் சுந்தரத்தின் மனத்தில் இன்பவலை பின்னியது. “கண்ணம்மா ஆம்; பேசும் பொற்சித்திரமேதான்! அன்று அமரகவியின் கனவில் தோன்றி மனத்தைப் பித்தாக்கினாள் அந்தக் கண்ணம்மா. ஆனால் தற்சமயம் இழந்த இன்பத்திற்கு நிரவல் கொடுத்து வாழ்விலே அமுத கீதத்தைப் பொழிகின்றாள் இந்தக் கண்ணம்மா.” டாக்டரின் மனம் குதூகலத்தில் ஆழ்ந்திருந்தது. அவர் பார்வை எதிரே சென்றது.