கதையாசிரியர் தொகுப்பு: பா.ராகவன்

1 கதை கிடைத்துள்ளன.

நாலு சக்கர போதிமரம்

 

 கல்யாண வீட்டிலிருந்து இன்னும் கொஞ்சம் சீக்கிரம் கிளம்பியிருக்கலாம். கட்டாயப்படுத்தினார்களே என்று டின்னருக்குக் காத்திருந்திருக்கவேண்டாம். எத்தனை கூட்டம்! பழைய நண்பர்கள் பலரைப் பார்த்துவிட்டதில் நேரம் போவது தெரியாமலாகிவிட்டது. பேச்சைக் குறைத்திருந்தால் நேரத்தோடு கிளம்பியிருக்க முடியும். மேடையேறி, பரிசுப் பொட்டலத்தைக் கொடுத்துவிட்டு, புகைப்படத்துக்குச் சிரித்துவிட்டு அப்படியே கைகூப்பியவண்ணம் வெளியே வந்திருக்கலாம். ஆனால், கல்யாண வீடென்பதென்ன? நினைவில் மங்கத் தொடங்கிய பலரைச் சந்திக்கிற ஒரு வாய்ப்பு. போட்டோ க்களை தூசு தட்டி மீண்டும் மாட்டிவைக்கிற மாதிரி. அங்கே தாமதமானதில் பிழையில்லை. திரும்பும்போது