கதையாசிரியர் தொகுப்பு: ந.பச்சைபாலன்

7 கதைகள் கிடைத்துள்ளன.

கணக்கு

 

 தேவாலயத்தில் ஜெபம் செய்துவிட்டு வெளியே வந்தார் ஜோசப். ஞாயிற்றுக்கிழமை என்பதால் கூட்டம் அதிகமாக இருந்தது. ‘தோத்திரம் செய்வேனே இரட்சகனே தோத்திரம் செய்வேனே’ உள்ளே பாடிய பாடல் இன்னும் காதில் ஒலித்தது. அவர் பின்னால் மனைவி மேரி ஏதோ யோசனையோடு வந்தார். வழக்கமாகப் பிள்ளைகளோடு வருவார்கள். மகன்கள் இருவரும் இப்பொழுது பல்கலைக்கழகத்தில் படிக்கிறார்கள். மூத்தவன் டேவிட் பினாங்கில். இளையவன் பீட்டர் சபாவில். ஒருவாறாக, பிள்ளைகள் கல்வியில் கரையேறி விட்டார்கள். கல்விக் கடமை முடிந்ததாய் மனம் நிம்மதிகொள்ள வேண்டிய தருணம்.


ராமசாமிகள் கவனிக்கவும்

 

 ராமசாமியைத் தெரியுமா உங்களுக்கு? தெரியும். நீங்கள் கேட்பது எந்த ராமசாமி என்று திருப்பிக் கேட்பீர்கள். சினிமாவில் நடிப்பிசைப் புலவர் எனப் புகழப்பட்டு, ‘உள்ளம் தேடாதே என்று சொல்லுதே’ பாடல் பாடி ரசிகர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டாரே கே.ஆர். ராமசாமி. அவரா என்றால் இல்லை. திராவிடர் கழகத்தினைத் தோற்றுவித்துத் தமிழர்களிடையே மூடநம்பிக்கைகள் களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடினாரே வைக்கம் வீரர், தந்தை பெரியார் ஈ.வே.ராமசாமி. அவரா என்றால் அவரும் இல்லை. பிறகு எந்த ராமசாமி? சிவாஜி காலத்து நடிகராகத்


தொடாத எல்லை

 

 ‘நாங்கள் பயணம் செய்த கூட்ஸ் வண்டி மலாயா எல்லையைத் தாண்டி சயாமில் நுழைந்தபோது பிற்பகல் மணி ஒன்று. இராமு, சுப்பன், வேலு இன்னும் பலரும் பசி மயக்கத்தில் சுருண்டு கிடந்தார்கள். எனக்கும் கடுமையான பசி. தாங்க முடியவில்லை. “குர்ரா..குர்ரா” ஒரு முரட்டு ஜப்பான்காரன் கையில் நீண்ட கத்தியோடு வந்து எங்களைக் கீழே இறங்கச் சொன்னான். அவனின் குரலிலிருந்த முரட்டுத்தனம் எங்களைப் பயமுறுத்தியது. “சீக்கிரம் இறங்குங்க. இல்லாட்டி இந்த கட்டயன் வெட்டிப்புடுவான்.” யாரோ எங்கள் பின்னாலிருந்து கத்தினார்கள். கீழே


நினைவின் நீரோடை

 

 வீட்டிற்கு வெளியே வந்து வானத்தை அண்ணாந்து நோக்கினேன். அங்கே இறைந்து கிடக்கும் நட்சத்திரங்களைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம்போல் தோன்றியது. மௌனத்தைப் பூசி மெழுகிப் பரந்து விரிந்த வானத்தில் நட்சத்திரங்கள் கண்களைச் சிமிட்டியவாறு என்னிடம் ஏதேதோ பேசின. இயற்கையை நெருங்கும் போதெல்லாம் இனம்புரியாத அமைதியும் ஆனந்தமும் மனத்தில் பிரவகிப்பதை உணரமுடிகிறது. வீட்டில் தீபாவளிப் பரபரப்பு உச்சத்தில் இருந்தது. பலகாரம், புத்தாடைகள், வீட்டு அலங்காரம் என ஏற்பாடுகள் முடிந்துவிட்டன. ஆனாலும் அம்மாவுக்கும் மனைவிக்கும் இன்னும் வேலை முடியவில்லை. விடிந்தால் தீபாவளி ஆதலால்


தேசியம்

 

 கோலாலம்பூர் ராஜா லாவுட் சாலையை அணைத்தவாறு கம்பீரமாக நிற்கும் அந்த ஐந்து நட்சத்திர தங்கும் விடுதியை அண்ணாந்து பார்த்தார் இளங்கண்ணன். மாலை மங்கி இருள் கௌவத்தொடங்கிய பொழுது. கண்ணைப் பறிக்கும் வண்ண வண்ண விளக்குகள் அந்த முப்பது மாடி தங்கும் விடுதியின் மேனியை வெளிச்ச வெள்ளத்தால் நனைத்திருந்தன. ஏற்பாட்டு வேலைகள் அனைத்தும் முடிந்துவிட்டன. இன்னும் கொஞ்ச நேரத்தில் அங்கு ஒரு வரலாற்று நிகழ்வு நடந்தேறப்போகிறது. யாரும் எதிர்பார்த்திராத நிகழ்வு. அதற்குப் பின்னணியில் தான் இருப்பதை நினைத்துப் பார்க்கும்பொழுதே


நான் ஒரு நாடகம் பார்க்கிறேன்

 

 “மலர்விழி 82, கண்ணன் 72, மாலதி 75, கோபால் 30..” ஒரு கணம் தாமதித்தேன். கையிலிருந்த தேர்வுத்தாளின் சிவப்புநிறப் புள்ளியில் கண்கள் நிலைகுத்தின. அதற்குமேல் என்னால் புள்ளிகளை வாசிக்க முடியவில்லை. கோபம் எனக்குள் எட்டிப்பார்த்தது. என் முகமாற்றத்தை மாணவர்கள் உணர்ந்திருக்க வேண்டும். எத்தனை விதமான முயற்சிகள்! எவ்வளவு பயிற்சிகள்! பல மாத உழைப்பின் அறுவடையை அளந்து பார்க்கக் காத்திருந்தவனுக்குப் பலன் ஒன்றுமில்லை என்றால் எழும் ஏமாற்றம்தான் என்னையும் துவைத்தது. அரையாண்டுத் தேர்விலேயே இப்படியென்றால் உண்மையான எஸ்.பி.எம். தேர்வில்?


நிதர்சனங்கள்

 

 அன்று நண்பகல் பத்திரிகை அலுவலகத்திற்கு வேலைக்குப் போனபோது வழக்கம்போல் எனக்குச் சில பணிகள் காத்திருந்தன. சங்கச் செய்திகளை ஒரு பக்கத்தில் அடங்குமாறு தொகுத்துத் தரவேண்டும். ஏற்கெனவே எடுத்த பேட்டிகளைச் செப்பமிட்டு ஞாயிறு மலர் பொறுப்பாசிரியர் பார்வைக்கு அனுப்பவேண்டும். இடையிடையே செய்திகளின் பிழை திருத்தம் வேறு. ஒற்றுப்பிழைகள் மலிந்து வருவதாகத் தீவிர வாசகர்கள் கோபித்துக்கொள்கிறார்களாம். வாராந்திர பணியாளர்கள் கூட்டத்தில் சிரியர் அடிக்கடி சுட்டிக்காட்டுகிறார். எல்லாரும் தலையை ஆட்டுகிறோம். ஏட்டில் எப்படியாவது பிழைகள் முகங்காட்டிவிடுகின்றன. அலுவலகம் மந்தகதியில் இயங்கிக் கொண்டிருந்தது.