கதையாசிரியர் தொகுப்பு: தே.சுந்தர்ராஜ்

3 கதைகள் கிடைத்துள்ளன.

நிஜத்தில் நடக்குமா?

 

 மாலை நேரம். மஞ்சள வெய்யில் கண்ணைக் கரித்தது. சாலை போக்குவரத்து நெரிசல் அதிகமாகவே இருந்தது. வண்டி ஓட்டுவது மிகுந்த சிரமமாயிருந்தது.ரவிக்கு வீடு வந்து சேர்ந்தால் போதும் என்றாகிவிட்டது. ஸ்கூட்டி தெருமுனை திரும்பும் போதே தன் வீட்டின் முன்பு கூட்டமாய் பரபரப்புடன் தெரிந்தது. வண்டியின் வேகத்தைக் கூட்டினான்.வீடு வந்ததும் வண்டி யை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தான். எதிர் வீட்டு கனகம்மாள், “தம்பி நல்லவேளை நீங்க சீக்கிரமா வந்துட்டீங்க. பார்வதிக்கு மத்தியானத்திலிருந்தே உடம்பு சரியில்லை. ஒரே வாந்தி. நா கசாயம்


வள்ளிக்கு வந்த யோகம்?

 

 காலை நேரம் ஒரே பரபரப்பு குப்பை கொட்டப்போன வள்ளியம்மைக்கு ஒரு திடீர் அதிருஷ்டம் காத்திருந்தது அருகில் ஒரு பேக் கிடைத்தது. அதில் முழுவதும் பணம். ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வள்ளியம்மை என்ன செய்வது என யோசித்தாள். அதைப் பார்த்த வள்ளியம்மை வீட்டுக்கு சென்று அந்த பேக்கை வைக்க நினைத்தாள் வேலை செய்யும் வீட்டில் கடைக்கு வேறே போய் சாமான் வாங்கச் சொல்லியிருந்தாள் எப்படியும் ஒரு ஐந்து நிமிடத்தில் போய் திரும்பி விடலாம். யோசிக்காமல் வேக நடையில் நடந்தாள்.


சீனுவுக்கு என்ன பிரச்சனை?

 

 காலை நேரத்தில் பரபரப்பாக ஸ்ரீராம் ஆபிஸ் போக கிளம்பிக் கொண்டு இருந்தான். அப்போது அவனுடைய செல் போன் அடித்தது. போனை எடுத்து… ”ஹலோ யாரு?” ” நான் சீனுவோட டீச்சர் பேசறேன்” ” சொல்லுங்க டீச்சர். என் பையன் தான் என்ன விஷயம்?” ”உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும். உடனே ஸ்கூல்க்கு வாங்க”. ”ஓகே டீச்சர்.”என்று போனை வைத்தான். ” ஏய் கீதா ஸ்கூல்லிருந்து போன். சீனுடைய டீச்சர் பேசினாங்க என்னவோ தப்பு செஞ்சுட்டான்”.