கதையாசிரியர் தொகுப்பு: செங்கை செல்வராசன்

1 கதை கிடைத்துள்ளன.

சத்தியம்

 

 ஆலமரத்தடி. கிராமப் பஞ்சாயத்து. “எலேய் சொடலை! நீ ஓயாம குடிச்சுக் குடிச்சுக் கெட்டுப் போறது மட்டுமில்லாம, குடும்பத்தயும் கவனிக்க மாட்டேங்குறேன்னு உம் பொஞ்சாதி போன மாசம் வந்து பிராது பண்ணுனதுனாலதான், இதே பஞ்சாயத்துல ஊர்ப் பெரிய மனுசங்க முன்னாடி, ‘இனிமே குடிக்கிறதில்லே’னு பால் சொம்பு மேல உங்கிட்ட சத்தியம் வாங்கினேன். ஆனா, சத்தியத்தை மீறி மறுபடி நீ குடிக்கிறியாமில்ல..? என்னடா நினைச்சுட்டிருக்க உம் மனசுல!” – கர்ஜித்தார் ஊர்ப் பண்ணை மாடசாமி. “ஐயா, நா சத்தியத்தை மீறலீங்களே!