கதையாசிரியர் தொகுப்பு: சுகுணா திவாகர்

4 கதைகள் கிடைத்துள்ளன.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதி

 

  இரவு தூங்கி எழுந்ததும் மனம் ஆடை களைந்திருந்தது. ‘இப்படியே ஷவர் முன்னால் நின்றால் ஒரு தெளிவு கிடைக்கும்’ என்று நினைத்தான் கதிரேசன். உஷாவும் ராகேஷும் இன்னும் எழவில்லை. ஷூ அணிந்தபடி நடைப்பயிற்சி கிளம்பினான். ஐந்தே நிமிடங்களில் மனக்குரங்கு அலைபாய்ந்து பேன் பார்க்கத்தொடங்கியிருந்தது. இன்னமும்கூட ராகேஷ் நடந்துகொள்ளும் விதத்தை அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை. 16 வயதாகிறது. இந்தப் பதினாறு வயதில் கதிரேசன் பைக் ஓட்டக்கூடக் கற்றுக்கொண்டதில்லை. ஆனால் ராகேஷ் வெப்சீரிஸ், வித்தியாசமான செயலிகள், ஆன்லைனில் விநோதமான தளங்கள்


குழந்தைகளைக் கொல்வது எளிது!

 

 ”ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம்…” என்று கதை சொல்ல ஆரம்பித்தேன். ”ராஜாவுக்கு எந்த ஊருப்பா?” என்றான் மகன். என்ன சொல்வதென்று தெரியவில்லை. ”உங்க ஊரு திண்டுக்கல்; அம்மா ஊரு மார்த்தாண்டம்; என் ஊரு சென்னை. அப்ப ராஜாவுக்கு… ராஜாவுக்கு எந்த ஊருப்பா?” என்றான். ஆமா, ராஜாவுக்கு எந்த ஊர்? நம் ஊரில்தான் இப்போது ராஜாக்களே இல்லையே! அப்படியும் சொல்லிவிட முடியாதோ! அது முழு உண்மை ஆகாதுதான். ஆனாலும் நம் மனச் சித்திரத்தில் பதிந்துபோன ராஜாக்கள் இப்போது


நசீர் அண்ணன்

 

 ‘கும்கி’ படம் பார்த்தபோது எனக்கு நசீர் அண்ணன் நினைவுதான் வந்தது. ‘கும்கி’ என்று இல்லை, பொதுவாகவே யானைகளைப் பற்றிப் பேச்சு வரும்போதும் யானைகளைப் பார்க்கின்றபோதும் நசீர் அண்ணனின் உருவம்தான் மனச் சித்திரமாக வந்துபோகும். அண்ணனுக்கும் யானையைப் போலவே சின்னக் கண்கள். சென்ற வாரம் அம்மாவிடம் பேசும்போது நசீர் அண்ணன் இறந்துவிட்டதாகத் தெரிவித்தார். ரொம்ப நேரம் மனசு அடைத்துக்கிடந்தது. யானை ஒன்று இறந்து வீழ்ந்துகிடப்பதான மனச் சித்திரம் அப்போது வந்துபோனது. யானை இறந்து கிடப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அது


ஒரு பெண்ணைக் கொலை செய்தோம்!

 

 ”எங்க வீட்டுக்கு நீங்கதான் போன் பண்ணீங்களா?” கார்த்திகா என்னைப் பார்த்துத்தான் அந்தக் கேள்வியைக் கேட்டாள். தேகம் முழுக்கக் கருகியிருந்த சருமப் பொசுங்கல்களுக்கு நடுவில் அவளது கண்கள் மட்டும் வெள்ளையாக அலைபாய்ந்தன. ஜீவா மூலம்தான் கார்த்திகா எங்களிடம் வந்து சேர்ந்தாள். நாங்கள் நவீன இலக்கியம், அரசியல் பேசித் திரிந்து டீமாக மாறியவர்கள். டீம் என்றால் அது ஒன்றும் அவ்வளவு பெரிய டீம் இல்லை. நான், ஜீவா, அக்தர் உசேன், என் பெயர் கொண்ட இன்னொரு செந்தில் என்கிற கவிஞர்