கதையாசிரியர் தொகுப்பு: சுகா

3 கதைகள் கிடைத்துள்ளன.

ராயல் டாக்கீஸ்

 

 காசிதான் ரயில்வே ஸ்டேஷனுக்குப் போயிருந்தான். தம்பி வரப்போவது பற்றி அவன் வீட்டுக்கே அரசல்புரசலாகத்தான் தெரியும். ஆனால், காசிக்கு மட்டும்தான் உறுதியாக இன்ன தேதியில், இந்த ரயிலில் வருகிறேன் என்பதை தம்பி சொல்லியிருந்தான். தம்பியின் உண்மையான பெயரான ‘கணபதி சுப்பிரமணியம்’ என்பது, அவனது சர்ட்டிஃபிகேட்டில் மட்டும்தான் உள்ளது. சுந்தரம் சார்வாள் சொல்வார்… ‘ஒண்ணு ‘கணவதி’னு வெச்சிருக்கணும்; இல்லன்னா ‘சுப்ரமணி’னு வெச்சிருக்கணும். அதென்னடே ஒருத்தனுக்கு ரெண்டு பேரு?’ வீட்டிலும் சரி, நண்பர்கள் மத்தியிலும் சரி… கணபதி சுப்பிரமணியம் எப்போதும் தம்பிதான்.


உள் காய்ச்சல்

 

 “எலெ… இப்பத்தானெ காலேஜுவிட்டு வந்தெ? அதுக்குள்ள எங்கெ கௌம்பிட்டெ?” பதில் ஏதும் சொல்லாமல் கண்ணாடி முன் நின்று உதட்டைக் கடித்தபடி தலை சீவிக்கொண்டு இருந்தான் திரவியம். ”ஒன்ட்டத்தானெ கேக்கென்?” சிவகாமி மறுபடியும் மகனைப் பார்த்துக் கேட்டாள். அதற்கும் பதில் இல்லை. செருப்பை மாட்டிக்கொண்டு, ”சொக்கத்தானப் பாத்துட்டு வாரென்” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினான் திரவியம். ‘சொக்கத்தானாம்லா சொக்கத்தான். அவன் ஒன் வாள்க்கைல சொக்கட்டான் ஆடத்தான் போறான். விடிஞ்சுபோனா அடஞ்சு வார மனுசன் காதுலயும் என் பொலப்பம் விள மாட்டெங்கு.


சஞ்சீவி மாமாவும் ஸ்மிதா பாட்டீலும்

 

 ”கே.ஏ.அப்பாஸ்தான் அதுக்குக் காரணம். இன்னைக்கும் ராஜ்கபூர் படங்கள்லயே ‘மேரா நாம் ஜோக்கர்’… அதானெ நம்மால மறக்க முடியல. அப்பாஸ லேசுப்பட்டவன்னு நெனச்சுராதெ. ‘ஆவாரா’வும் அவன் கததான்!” – சஞ்சீவி மாமா இப்படித்தான் திடீர் எனப் பாதியில் இருந்து பேசத் துவங்குவார். அதற்கு முந்தைய நாளோ, முந்தைய சந்திப்பிலோ எங்களுடைய உரையாடலின் தொடர்ச்சியாக, விட்ட இடத்தில் இருந்து தொடங்கிப் பேசிக்கொண்டே போவார். அவர் பேசப் பேசத்தான் எனக்கு முதல் நாள் என்ன பேசினோம் என்பது மெள்ள மெள்ள நினைவுக்கு