கதையாசிரியர் தொகுப்பு: சரசா சூரி

94 கதைகள் கிடைத்துள்ளன.

அனுபவம் புதுமை..!

 

 கருப்பையா கருப்பு கிடையாது.நல்ல சிவப்பு நிறம்.அம்மா அகிலாண்டம் மாதிரி.. ! நல்ல உயரம் கூட..! “பொறந்த குழந்தய பக்கத்துல நரஸம்மா படுக்க வைக்கயில எனக்கு நம்ப முடியல. குழந்த செவப்பா என்னொசரம் இருந்தான்..கண்ணுபடும்போலத்தான் இருந்துச்சு…!” அதனால்தானோ என்னவோ அவனுக்கு கருப்பையா என்று நாமகரணம் செய்தாள் போலிருக்கிறது.! கருப்பையா பார்ப்பதற்கு தாயைப்போல இருந்தாலும் குணத்தில் அப்பாவைக் கொண்டிருந்தான்… அகிலாண்டம் பாம்பைக் கண்டால் கையால் பிடிப்பாள்.கணவன் முத்தையாவோ தொடை நடுங்கி..பாம்பு என்ற பெயரைக் கேட்டாலே நடுங்குவான்…. கருப்பையாவுக்கு அப்பா அளவுக்கு


அமாவாசை இரவில் சந்திரனைத் தேடி…

 

 தொப்பென்று ஏதோ கிணற்றுக்குள் விழுந்த சப்தம்… கிணற்றுக்குள் முங்கி முங்கி குளித்துக் கொண்டிருந்த நிலா ஒரு வினாடி நடுங்கிப் போய் தெறித்து விழுந்தது.. ஒரு நிமிடம் மறைவதும் , பின்னர் எம்பிக் குதிப்பதுமாய் கண்ணாமூச்சி ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த நிலா பயந்து போய் ஒரு ஓரமாக மறைந்து கொண்டது..! “ஏய்..நீ எவ்வளவு நேரம் தண்ணிக்குள்ளயே இருப்ப…? ஜலதோஷம் பிடிக்கப்போறது…! இல்லைனா ஜுரம் வரும்.. பேசாம மேல போயிடு….! சொன்னா கேக்கமாட்டியா? இரு இதோ வரேன்…! குமுதா சரசரவென்று


வெற்றிப்படம்!

 

 “குஞ்சரம்மா..! உங்களுக்கு ஒரு கடுதாசி… சென்னையிலிருந்து..உங்க பேரன் வெற்றிதான் எழுதியிருக்கப்ல..” “என்ன கொமரு..கடுதாசிய குடுத்துப்புட்டு உம்பாக்குல போனா..? யாரு படிச்சு சொல்லுவாக…?” “ஆச்சி.. ஊருக்கே தெரிஞ்ச ரகசியம் எனக்கு தெரியாதா.? நீ கைநாட்டுன்னு…! இன்னும் மூணு கடிதாசு இருக்குது.பக்கத்தாப்லதான். குடுத்துபுட்டு ஓடியாரமாட்டேன்…? இங்கனக்குள்ள குந்தி இருங்க ஆச்சி.!” குஞ்சரம்மாவால் சும்மா இருக்க முடியுமா..? ‘ பேரன் என்ன எழுதியிருக்கும்..? ஒருவேள அப்பத்தாளப் பாக்க கெளம்பி வருதோ…? எம்பேரனுக்கு எம்மேல எம்புட்டு பிரியம்.? இந்தகாலத்தில அப்பச்சிய மதிச்சு கடுதாசி


வானில் ஒரு மாற்றம்…!

 

 வானில் ஒரு மாற்றம்..!!! சிகாகோ நகரின் ‘ஓ ஹேர் ‘ (O’HARE) பன்னாட்டு விமானநிலையம். பறவைகள் கூட்டம் போல வினாடிக்கொரு விமானம் டேக்ஆஃப் .லேண்டிங். உலகிலேயே மிக அதிக விமானப் போக்குவரத்து உள்ள நகரங்களில் ஒன்று. வானிலை மாற்றங்கள் காரணமாக அதிக தாமதங்களும், விமான பயணம் ரத்தாவதும் ஏற்பட்டாலும் மிகவும் பரபரப்பான விமான நிலையம். இன்றைக்கு அந்த மாதிரியான ஒரு நாள். பனிமூட்டம், மழை, புயல் காரணமாக இரண்டு மணி நேர தாமதம் நாலாகி, ஆறாகி, பின்னர்


என்னைப்போல் ஒருவன்..!

 

 “டூ பாக்கட் பார்லிமென்ட் சிகரெட்..சாவேஜ் ஆஃப்டர் ஷேவ்..லின்ட் டார்க் சாக்லேட்…தாட்ஸ் ஆல்…” ஒருநிமிடம் திடுக்கிட்டேன்.. எனக்காக யாரோ ஒருத்தன் ஆர்டர் பண்ணுகிறானா…?? அதுவும் என் குரலில்…! எல்லாமே நான் உபயோகிக்கும் சாதனங்கள் .. இங்கே…?? யார்…?? என்னைக் கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்… டார்ஜீலிங்கில் மிகவும் பிரபலமான டிராகன் மார்க்கெட்டில் நானும் என் மனைவி வீணாவும் ஷாப்பிங் பண்ணி முடித்து விட்டு திரும்பும் போதுதான் இந்த அதிசயம் நடந்தது…. குரல் வந்த திக்கை நோக்கித் திரும்பினவனுக்கு மேலும் ஒரு


தொலையாத செல்வமும்..!

 

 “ஏங்க..பிள்ளை ஒழுங்கா போய் சேந்திருப்பானா..? போயி ஒரு வாரம் இருக்குமா..?கண்ணுக்குள்ளே இருக்காங்க..” “ஏன்..கண்ணுக்குள்ளேயே பொத்தி வச்சிக்கிடறதுதானே..!! தொறந்து ஏன் வெளியே விட்ட? வாயில விரல வச்சா கடிக்கத் தெரியாது பாரு…நல்லா பெத்து வச்சிருக்க…!! “ஏன்.. உங்களுக்குத் தெரியாம பெத்துகிட்டு வந்திட்ட மாதிரியில்ல பேசுதீங்க…!!” “ஏண்டி.. அக்கம் பக்கம் யாரு இருக்காங்கன்னு பாத்து பேசமாட்ட.?” “அதேதான் நானும் கேக்குதேன்…!!” “அம்மா..!! அண்ணன் வேலைக்கு போயி ஒரு வாரங்கூட ஆவல . மறுபடியும் சண்ட போட ஆரம்பிச்சிட்டீங்களா…? “ஆமா…உங்க அண்ணன்


மணக்க மணக்க ஒரு கொலை..!

 

 மீண்டும் ஒரு முறை அந்த மூன்று மாடி அழகுநிலையத்தை அண்ணாந்து பார்த்தார் இன்ஸ்பெக்டர் சாரங்கன்… ‘அம்புலி ‘ என்று மின்னி மின்னி அணைந்து கொண்டிருந்தது… ‘ம்ம்ம்.!!! இரண்டு வருஷத்துக்கு முந்தி குப்பனும் சுப்பனும் இருந்த எடத்தையெல்லாம் வளச்சு போட்டு குளுகுளு ஏசியில உக்காந்து மாதுளம் பழச்சாறு குடிச்சிட்டிருக்க..!!! இப்ப உன்ன களிதிங்கணும்னு சொன்னா….??? காலத்தோட கொடுமையப் பாரு….!!!’ தனக்குள் முனகிக் கொண்டார் சாரங்கன்.. வாசலில் இருந்த செக்யூரிட்டி போலீஸ் ஜீப்பைப்பார்த்து அலறி அடித்துக் கொண்டு சலாம் வைத்தான்…


மலைக்கண்ணன்…

 

 எங்கு நோக்கினும் மலைகள்.மலைகள்…மலைகள்.! நீலம், இள நீலம், கருநீலம், பச்சை, கருப்பு..! அச்சுதனுக்கு அந்த மலைகளெல்லாம் கண்ணனாகவே தெரிந்தது…! எந்தக் கண்ணன்? சாட்சாத் கிருஷ்ண பரமாத்மாதான்..! கண்ணன் நீலவண்ணன்..! “கண்ணா! கருமை நிறக் கண்ணா..!”..பாடிவைத்தான் ஒரு கவிஞன். “காக்கைச் சிறகினிலே நந்தலாலா..நின்றன் கரிய நிறம் தோன்றுதய்யே!” என்று பாரதியாரால் பாடப்பெற்றவன். ‘பச்சைமாமலைபோல் மேனியனாக’ காட்சி தருகிறான் தொண்டரடிப்பொடியாழ்வாருக்கு. அச்சுதனுக்கோ அவன் எல்லா வண்ணத்திலும் சுற்றிலும் காட்சி தருகிறான்.. அவன்தான் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறான். கண்ணனை தெய்வமாக ஒரு


பார்த்த நியாபகம் இல்லையோ…?

 

 கற்பகம் ஒன்றைப் பிடித்தால் பிடித்ததுதான். அது புளியங்கொம்பாயிருந்தாலும் சரி, உடும்பு பிடியாய் இருந்தாலும் சரி.. ஸ்டூலைப் போட்டுக்கொண்டு எம்பி எம்பி ஒரு பழைய ஃபோட்டோவை ஆணியிலிருந்து எடுப்பதில் முனைந்திருந்தாள். எனக்கு பயமாக இருந்தது.. ஏற்கனவே தலைசுற்றல், முழங்கால் வலி , முதுகு வலி போன்ற ஏகப்பட்ட சமாச்சாரம் கைவசம் வைத்திருந்தாள்.. தலைசுற்றி விழுந்து விட்டால்? “கற்பகம்.. என்னம்மா பண்ற? அந்த ஃபோட்டோ இப்போ எதுக்கு..? கேட்டால் நான் எடுத்து தர மாட்டேனா..? இறங்கு முதல்ல..!” “உங்களுக்கு இத்தன


திரைக்குப் பின்னால்…!

 

 ஸ்டெல்லாவின் நீண்ட விரல்கள் என் கேசத்தைப் பூப்போல் நீவிவிடுவதை என்னால் உணர முடிகிறது… ஏதோ ஒரு ‘டிரான்ஸ்‘ என்று சொல்வார்களே அதில் நான் என்னை கரைத்துக் கொண்டிருந்தேன்.. “மேடம்..உங்க முடி எவ்வளவு அழகு தெரியுமா…??” ஒவ்வொரு முறையும் என் தலையை வாரிவிடும் போது அவள் இந்த வார்த்தைகளை சொல்லாமல் இருந்ததே இல்லை.. அவளுடைய மழலைத் தமிழில் அதைக் கேட்கும்போது எனக்கு வானத்தில் பறப்பது போல ஒரு உணர்வு.. உண்மையிலையே எனக்கு நல்ல அடர்ந்த அலைஅலையான கூந்தல் தான்..இடுப்பு