கதையாசிரியர் தொகுப்பு: கோவிலூர் செல்வராஜன்

2 கதைகள் கிடைத்துள்ளன.

அம்மாவின் அசத்தல்

 

 படலை திறக்கும் சத்தங்கேட்டுத் தன் வீட்டுக் கதவை திறந்து வாசலைப் பார்த்தாள் பாக்கியம். வருவது அவள் கணவன் சிவகுரு என்று கண்டதும். “என்னங்க நேரத்தோட வந்திட்டீங்க . மழையும் விட்டபாடில்லை என்ன” “வேறென்ன பின்ன, முந்தநாள் பிடிச்ச மழை, கொஞ்சமும் ஈவு இல்லாம பேஞ்சுகொண்டுதான் இருக்கு. ஆத்துல கரப்பு குத்தவும் முடியல்ல. தண்ணி கழுத்தளவுக்கு போகுது. இண்டைக்கு கறிப்பாட்டுக்கும் ஒண்டும் அம்புடயில்ல. அதுதான் வந்திட்டன்” அலுத்துக்கொண்டான் சிவகுரு. “சரி,சரி பரவாயில்ல நீங்க வந்ததும் நல்லதாப் போயிற்று. இண்டைக்கு


கைவிட்டுப் போன கார்

 

 வீட்டினுள் இருந்து சத்தம் கேட்டதும், வெளியில் டிரைவேயில் தனது காருக்குக் கிட்ட நின்று புலம்பிக்கொண்டிருந்த நந்தகுமாருக்கு பிரக்ஞை வந்தது.”இல்ல அது வந்து …போஸ்ட்மன் வந்தான் ..அவனோடு பேசினேன்” தடுமாற்றத்துடன் பதில் சொன்னான் நந்தகுமார். அவனுக்கு வீட்டுக்குள் செல்வதற்கு மனமே இல்லை. தனது கார் தரித்து நின்ற டிரைவேயில் நின்றுகொண்டு அதைச்சுற்றிச் சுற்றி வந்து கொண்டும், தொட்டுப்பார்த்துப் பெருமூச்சு விட்டும், காரின் கதவைத் திறந்து அதனுள் ஏறி இருந்ததும் தன்நிலை மறந்தான். பதினைந்து வருடங்களுக்கு முன்னர் ஜெர்மனியிலிருந்து லண்டனுக்கு