கதையாசிரியர் தொகுப்பு: கோமகள்

3 கதைகள் கிடைத்துள்ளன.

இடைவெளி இல்லாத சந்தோஷங்கள்

 

 (1986ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) விஜயா ஆபீஸ் விட்டு வரும் போது வழக்கமில்லாத வழக்கமாக நரசிம்மனும், செல்லம்மாவும் ரொம்பவும் கலகலப்பாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். புருவத்தை உயர்த்தியவாறே நோட்டமிட்ட அவளை கண்டு, “ஒரு நல்ல செய்திம்மா!” என்றார் நரசிம்மன். “விஜி! உனக்குத் திருமண யோகம் வந்தாச்சுடி!” என்ற செல்லம்மாவின் முகத்தில்தான் எத்தனை திருப்தி. விஜி சலனப்படவில்லை. மனத்தில் ஒரு சின்ன சோகம் ஆட்கொண்டது. அப்பாவுக்கும் அம்மாவுக்கும் இத்தனை மகிழ்ச்சியா? அவளை


ரசனைகள்

 

 (1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அண்ணாவுக்கு ரசனை அதிகம். அதைப் பலமுறை கண்டு வியந்திருக்கிறேன் நான். ஒன்றுக்குப் பத்துக் கடை. ஏரீத் தான் சட்டைத்துணியோ, பாண்ட் துணியோ எடுப்பான். சட்டையைக் கன கச்சிதமான அளவில் தான் தைத்துக் கொள்வான். மோட்டார் பைக்கை அவன் துடைப்பதும், பாலிஷ் போடுவதும் அந்தக் காலனிக்கே வெளிச்சம்.. அத்தன பயபக்தி! “என் உருவம் அதில் தெரியணும்! போய் ஒரு டப்பா பாலிஷ் வாங்கிட்டு வா


பால் மனம்

 

 படைப்பின் நேர்த்தி வெகு விசித்திரமானது. அதில் மனிதனின் ஆரம்பக்கட்டமான குழந்தைப் பிராயம்தான் எத்தனை அழகு படைத்த ஒன்று! பட்டை தீட்டாமலேயே ஜொலிக்கும் கட்டி வைரமாக எழில் சிந்தும் அந்தப் பருவம். மீட்டாமலேயே குரலிடும் மோகன வாத்தியமாக இசையிடும் நாதநயம் அதன் மழலை. லோகாயத லாப நஷ்டங்களை, சூதுவாதுகளைக் கற்ற பெரியவர்கள்கூட சின்னக் குழந்தையின் சிரிப்பில் சொக்கி நிற்கிறனர். பெருங்காற்றே தென்றலுக்குத் தலை சாய்ந்து நிற்பது போல்! எங்கள் வீட்டில் என் அண்ணாவின் முதல் குழந்தையாகக் கிருஷ்ணா பிறந்த