கதையாசிரியர் தொகுப்பு: கேசவன்

1 கதை கிடைத்துள்ளன.

தோஷம்

 

 மணி தெரு முனையிலேயே இறங்கிக் கொண்டான். ஆட்டோக்-காரன் கூடுதல் பணம் கேட்டான். எல்லோரும் நிலவு வெளிச்-சத்தில் வாசலில் அமர்ந்து நேரம் போகப் பேசிக் கொண்டிருந்-தார்கள். தலையில் கட்டுடன் மணி நடந்து செல்வதைப் பார்த்து-விட்டுச் சிலர் ரகசியமாக தங்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டார்கள். மணி, வீட்டுவாசலை நெருங்கும் போது அவனின் அம்மா புலம்பிக் கொண்டிருப்பது அவனுக்குத் தெளிவாகக் கேட்டது. வாசல் லைட்டைப் போட்டுவிட்டு உள்ளே போனான். அவனைக் கண்டதும் அம்மாவின் புலம்பல் இன்னும் அதிகமானது. நான் அப்பவே சொன்னேன்கேட்டீயா?