கதையாசிரியர் தொகுப்பு: கிரிஜா மணாளன்

2 கதைகள் கிடைத்துள்ளன.

புதுமனை புகுவிழா

 

 “ஏன்டா கோபாலு,……பசு மாட்டுக்கு சொல்லிட்டு வந்துட்டே இல்லே…? எப்போ ஓட்டிட்டு வரேன்னான்?” வாசல் பந்தலில் வாழைமரம் கட்டுவதை மேற் பார்வை பார்த்துக்கொண்டே என்னைப் பார்த்துக் கத்தினார் மாமா. “சொல்லிட்டேன் மாமா……. விடியக்காலை நாலு மணிக்கே மாட்டோட வந்துடுறேன்னான். ஃபங்ஷன் அஞ்சு மணிக்குத்தானே ஆரம்பிக்குது மாமா…?” “நோ..நோ…ராத்திரியே மாட்டை ஓட்டிக் கிட்டு வந்து கட்டிடச்சொல்லுடா! விடியக்காத்தாள அவன எங்கே தேடிப் பிடிக்கறது? கிரஹப்பிரவே சத்துக்கு பசுமாடு கேட்டா இப்படித்தான் பிகு பண்ணிப்பானுங்க!” மாமாவுக்கு எந்த விஷயத்திலும் அட்வான்ஸாக இருக்கவேண்டும்.


புத்திசாலித்தனமா நடந்துக்கோடா

 

 அந்த நிறுவனத்திலிருந்து இன்டர்வியூ கடிதம் வந்தது முதல், ராகவனுக்கு மகிழ்ச்சியில் தலைகால் புரியவில்லை. அதுதான் அவனுக்கு முதல் அனுபவம் என்பதால், இன்டர்வியூவில் கேள்விகளுக்கு எப்படிப் பதிலளிக்க வேண்டும், அங்கே எப்படியெல்லாம் நடந்துகொள்ள வேண்டும் என்று புரியாமல் தவித்தான். பின்பு, அந்த அழைப்புக் கடிதத்தை எடுத்துக்கொண்டு போய், பக்கத்து வீட்டு பலராமனிடம் காட்டி ஆலோசனை கேட்டான். பெரிய வங்கி ஒன்றில் உயர்பதவி வகித்து, ஓய்வு பெற்றவர் அவர். ‘‘அட! இது நல்ல கம்பெனிடா! என் சினேகிதனோட பையன் ஒருத்தன்