கதையாசிரியர் தொகுப்பு: காசி ஆனந்தன்

1 கதை கிடைத்துள்ளன.

உடைப்பு

 

 கதவைத் திறந்தாள் தவமணி. யாரோ ஒரு வெள்ளைக்காரர் எதிரில் நிற்கிறார். கூடவே, இன்னும் சிலர். ‘‘நான்தான் டேவிட்சன். உலக மனித உரிமைக் குழு தலைமை நிலையத்திலிருந்து வருகிறேன். உங்கள் கடிதம் கிடைத்தது.’’ அவர் பேசிய ஆங்கிலம் அவளுக்குப் புரியவில்லை. மட்டக்களப்பில் பணியாற்றும் மனித உரிமையாளர் பெரியதம்பி ஆசிரியர் மொழிபெயர்த்தார். விழிகளில் நீர் பொங்க பெருமூச்சின் வெடிப்போடு குலுங்கி விம்முகிறாள் தவமணி. ‘‘கவலைப்படாதீங்க. டேவிட்சன் ஐயா மூணு மாசம் மட்டக்களப்புலதான் நிற்பார். உங்கட மகளை எப்படியும் உங்களிட்டச் சேர்த்திடுவம்!’’