கதையாசிரியர் தொகுப்பு: கவிப்பித்தன்

9 கதைகள் கிடைத்துள்ளன.

ஸ்பரிசம்

 

 சின்னப்பா ரெட்டியாரின் உடல், அவர் எப்போதும் படுத்திருக்கும் அந்த வெளிர் நிற சுமைதாங்கிக் கல்லின் மீதே கிடத்தப்பட்டிருந்தது. அரைகுறைத் தூக்கத்தில் அவசரமாய்த் தட்டி எழுப்பிவிட்டதைப்போல, கண்களைச் சிவக்கச் சிவக்கத் தேய்த்துக்கொண்டே எழுந்த சூரியன் ஏரிக்கரையின் பின்னிருந்து மசமசவென முளைக்கத் தொடங்கியிருந்தான். சுற்றிலும் பரவியிருந்த சாயம்போன இருட்டிலும் உடலின் மீது போர்த்தியிருந்த வெள்ளை வேட்டி மட்டும் பளிச்செனத் தெரிந்தது. சுமைதாங்கிக் கல்லைப் பக்கவாட்டில் தாங்கியிருந்த புங்கமரம், வழக்கத்துக்கு மாறாக தன் நீண்ட கிளைகளை விறைப்பாக நீட்டிக்கொண்டு நின்றிருந்தது. ஓர்


பின் கட்டு

 

 கண்களில் விளக்கெண்ணெய் விடாத குறையாகக் கூட்டத்தை ஊடுருவிப் பார்த்துக் கொண்டிருந்தார் எஸ்.ஐ. சுந்தரம். இந்த வருடம் காலையிலிருந்தே கூட்டம் கட்டுக்கடங்கவில்லை. கடைசித் தேருக்கு எப்போதுமே கூட்டம் அதிகம் வரும். அதிலும் ஞாயிற்றுக்கிழமை கடைசித் தேர் வந்தால் சொல்லவே தேவையில்லை. வள்ளிமலையின் மேற்கில் பெருமாள்குப்பம் மூலையில் மூன்றாம் நாளான நேற்றிரவு நிறுத்தப்பட்ட தேர் இன்று காலை நகரத் தொடங்கியபோதே எஸ்.ஐ.சுந்தரத்துக்குள் பதற்றம் தொற்றிக் கொண்டது. வண்ண வண்ண தோரணங்களும், வாய் விரிந்த ஆளிகளும், கால்களைத் தாவிப் பறக்கும் குதிரைகளும்,


தெரு நாய்கள்

 

 தெருக்குழாயின் அடியில் குத்துக்காலிட்டு குந்தி துணி துவைத்துக் கொண்டிருந்தாள் வசந்தி. அண்ணக்கூடையில் தண்ணீர் தளும்பிக்கொண்டிருந்தது. சோப்புத்தூள் போட்டு ஊற‌வைத்த துணிகள் சின்ன மலையைப் போல குவிந்திருந்தன. வீட்டுக்காரனின் லுங்கியை லேசாகப் பிழிந்துவிட்டு, எதிரிலிருந்த பலகைக்கல்லில் “தப்தப்தப்’ என்று ஒரே சீராகத் தப்பினாள். இரண்டு கைகளிலும் கும்பலாகப் பிடித்து கல்லின்மீது கும்கும்மென்று கும்மிவிட்டு நிமிர்ந்தவள், தூரத்தில் கணவன் மனோகரன் மிதிவண்டியில் வருவதைப் பார்த்தாள். அனிச்சையாக அவள் கண்கள் அவளையே பார்த்துக்கொண்டன. மாராப்புத்துணி விலகவில்லை. புடவையும், பாவாடையும் சோப்பு நுரைகளுடன்


சிப்பாய் கணேசன்

 

 ஏழாவது முறையாக புங்கமரத்தில் ஏறிய துரைமுருகன் கிளைகளில் கால்வைத்து, புங்கை சுளிர்கள் கண்களை குத்தி விடாதபடி தலையை இப்படியும், அப்படியுமாய் வளைத்து ஏறி மரத்தின் உச்சிக்குப் போனான். அந்த உயரமானக் கிளையின் முனையில் பல கைகளைப் போல நாலாபுறமும் நீட்டிக் கொண்டிருந்த மண்டைகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு ஆற்றங்கரையை நோக்கி பார்வையைக் கூராக்கினான். அவனுக்கு மீண்டும் ஏமாற்றமே மிஞ்சியது. காய்ந்து, கரம்பான வயல் வெளிகளும், அதைத் தொடர்ந்த எட்டிக்கால்வாயும், அதன் முடிவில் நீண்ட வேட்டியைக் காயவைத்தது போன்ற


கரக ரெட்டியார்

 

 பெரிய மகன் அதைச் சொன்னபோது நம்ப முடியாமல்தான் பார்த்தாள் சுந்தரம்மாள். “டே நைனா… இந்த வெளாட்டுப்புத்தி என்னிக்கித்தாண்டா உன்ன உட்டுப் போவுங்?” என்று சிரித்தாள். “அய்யே… இப்ப உங்கூட வெளாடிகினு கீர்துதாங் எனுக்கு வேலயா? மெய்யாலுமே உனுக்கு ரத்தத்துல சக்கர, உப்பு கீதாம்” என்றான் அவன் கவலையுடன். “இன்னாடியிது கூத்தா கீது… துன்ற பொருள்ல கீற மாதிரி உப்பு, சக்கர, வெல்லங் எல்லாங் ரத்தத்துல கூடவாடி கீது” என்று ஆச்சரியப்பட்டாள் தன் மருமகளிடம். கொஞ்ச நாளாகவே சுந்தரம்மாளுக்கு


ரெட்டக்குண்டி

 

 மரத்தைப் பார்த்ததும் அவனது உள்ளங்காலிலிருந்து மேலெழுந்து ஓடியது ஒரு சிலிர்ப்பு. அந்த நுனா மரத்தில்தான் ‘ரெட்டக்குண்டி’ சின்னைய்யனை அடித்து மாட்டி வைத்திருந்தனர். ரெட்டைக்குண்டி சின்னைய்யனின் சாவு இன்று வரையும் புதிராகவே தான் இருக்கிறது. அதைப்பற்றி ஊருக்கு ஊர் கதை கதையாகப் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். சின்னையன் சூராதி சூரனான மாட்டு வியாபாரி. வட தேசம் போய் சோப்புப்போட்டு வெளுத்ததைப்போல் வெள்ளை வெளேரென்று மேற்கத்திய காளைகளை வாங்கி வருவான். ஒத்தை ஆளாகவே இரண்டு, மூன்று ஜோடிகளை ஓட்டி வந்து இங்கே


பாப்பாரப்பூச்சி

 

 பிரசவ வலியில் துடித்துக்கொண்டிருந்தாள் லட்சுமி. குமரனால் உட்கார முடியவில்லை. கீழே உட்கார்ந்தால் ஆசனவாயில் முள்ளை சொருகிவிட்டதைப்போல உறுத்தியது. எழுந்து வராந்தாவில் இப்படியும் அப்படியும் நடந்தான். தொடர்ந்து நடக்கவும் முடியவில்லை. லட்சுமியின் கதறல் அதிகமானதும் மருத்துவர் அறைக்கு ஒடினான். நிதானமாய் நடந்து பிரசவ அறைக்கு வந்த மருத்துவர் லட்சுமியின் வயிற்றை அழுத்திப் பார்த்தார். அருகில் நின்ற நர்சிடம் கையை ஆட்டி சைகை செய்தார். ஒரு கை நீளமுள்ள கம்பின் முனையில் பந்துபோல சுற்றப்பட்டிருந்த துணியை மண்ணெண்ணைய் டப்பாவில் முக்கி


ஜஸ் பெட்டியில் படுத்திருக்கும் உருவம்

 

 இறந்துவிட்டோம் என்பதை ஒருவனால் எப்படி தெரிந்துகொள்ளமுடியும்? இந்தக் கேள்வி அடிக்கடி மூர்த்தியை சல்லடையாய் துளைக்கிறது. யோசிக்க யோசிக்க சூன்யமே மிஞ்சுகிறது. “நாம் உயிரோடுதான் இருக்கிறோம் என்று எப்போது நம்மால் உணரமுடியவில்லையோ, அப்போது நாம் இறந்துவிட்டதாக நினைத்துக்கொள்ள வேண்டும்’ என்று ஒருவாறு விளக்கம் சொல்லிக்கொண்டான். இறந்துவிட்டபின் எப்படி நினைத்துக் கொள்ளமுடியும்? என்று திருப்பிக்கேட்டது அவன் மனம். ‘சே’ என்று அலுத்துக்கொண்டு, விரல்களால் பவுடரைத் தொட்டு கண்ணாடிக்குள் ஊடுருவிப் பார்த்து முகத்தில் பூசினான். கருப்பாக இருந்தாலும் சதைப்பிடிப்பான முகம் அழகாகவே


ஊர்ப்பிடாரி

 

 இந்த வெயில் காலம் தொடங்கியதில் இருந்தே மாரியின் வேதனை நாளுக்குநாள் கூடிக்கொண்டே போனது. இரவும் பகலும் அவளது மனத்துக்குள் இருந்த ஊமை வலியும் கூடியபடியே இருந்தது. யாரிடம் சொல்வாள்? எப்படி சொல்வாள்? ஒரு காலத்தில் ஊரார் எல்லோரும் தங்களின் குறைகளை, ஏக்கங்களை, ஆசைகளை, வேதனைகளை இவளிடம் சொல்லி உருகினர். நெடுஞ்சாண் கிடையாய் இவளது கால்களில் விழுந்து கதறினர். சிலர் இவளை வாய்க்கு வந்தபடி ஏசினர். ‘நீ என்ன கல்லா?’ என்று ஆத்திரப்பட்டனர். கல்லா என்று தன்னிடமே கேட்கும்