கதையாசிரியர் தொகுப்பு: கவின்மலர்

9 கதைகள் கிடைத்துள்ளன.

மூன்று நிற வானவில்

 

 தாம்பரம் செல்லும் ஜி.எஸ்.டி. சாலையில் வாகனங்கள் பறந்துகொண்டு இருந்தன. கடலுக்குள் நீந்தும் ஒரு சிறிய மீனைப் போல என் ஸ்கூட்டி அந்தச் சாலையில் போய்க்கொண்டு இருந்தது. மனம் பரபரத்ததைப் போலவே என் வாகனமும் பரபரப்பாகச் சென்றுகொண்டு இருந்தது. முன்னால் செல்லும் வாகனங்களின் மிக அருகில் நான் சென்ற பின்னரும்கூட பிரேக் போட்டு வேகத்தைத் தடை செய்யப் பிடிக்கவில்லை. அப்படி ஓர் ஆர்வம். பல ஆண்டுகளுக்குப் பிறகு முரளியைப் பார்க்கப்போகிறேன் என்பதே எனக்கு சந்தோஷத்தைக் கொடுத்தது. இப்போது எப்படி


மின்மினி வெளிச்சம்!

 

 ராசுவுக்கு அன்றைக்குப் பள்ளிக்கூடம் போகப் பிடிக்கவில்லை. பையை எடுத்துக் கொண்டு, போகலாமா… வேண்டாமா என்கிற யோசனையோடு ஒவ்வோர் அடியாக எடுத்துவைத்தான். ஒரு குச்சி ஐஸ் வண்டி போனது. நிறுத்தி ஐஸ் வாங்கித் தின்றான். சப்பிச் சப்பி வெறும் குச்சியை நக்கிக்கொண்டே பள்ளிக்கூடத்தைக் கிட்டத்தட்ட நெருங்கிவிட்டான். காம்பவுண்ட் சுவர் அருகே வந்து நின்று சுற்றுமுற்றும் பார்த்தவாறே உள்ளே நுழைந்தான். வகுப்பில் வாத்தியார் பாடத்தைத் தொடங்கி இருந்தார். வாசல் அருகே நிழலாடவும் நிமிர்ந்து பார்த்தார். ”வாங்க சார்… நீங்க மட்டும்


தொடர்பு எல்லைக்கு வெளியே…

 

 கடிகாரத்தைப் பார்த்தவாறே அமர்ந்திருந்தாள் கவிதா. நொடி முள் நகர்வதையே பார்க்கையில், தலை சுற்றுவதுபோல் இருந்தது. சுதா இன்னும் வரவில்லை. பசி வேறு தாங்கவில்லை. வயிற்றை ஒரு கையால் தடவிக்கொண்டே, ”கொஞ்சம் பொறுத்துக்கோ! சுதா வந்துரட்டும்” என்று வயிறோடு பேசினாள். மஞ்சு கட்டிலில் ஷிட்னி ஷெல்டன் நாவலுடன்கிடந்தாள். ”மஞ்சு! இந்த சுதா பாரேன்… தினமும் நைட் லேட்டா வர்றா. எனக்குப் பசி தாங்க மாட்டேங்குது!” என்றாள் ஆதங்கமாக. ”நீ எதுக்கு அவளுக்காக வெயிட் பண்றே? நீ பாட்டுக்குச் சாப்பிட


இரவில் கரையும் நிழல்கள்

 

 இப்போதெல்லாம் கயல்விழி நினைவு ஓயாமல் வருகிறது. பள்ளிக்கு ஒன்றாகப் போகும் சிறுமிகளைப் பார்க்கும்போதும் சைக்கிளில் செல்லும் மாணவிகளைப் பார்க்கும்போதும் அவள் நினைவு தவறாமல் வந்து போகிறது. அப்போதுகூட அவள் இப்போதிருக்கும் உருவத்தில் எனக்கு நினைவுக்கு வர மறுக்கிறாள். கருநீல பாவாடை தாவணியுடனும் வெள்ளை ஜாக்கெட்டுடனும் மட்டுமே நினைவுக்கு வருகிறாள். அந்தப் பள்ளிச் சீருடையில் நாங்கள் ஊரை சைக்கிளிலேயே வலம் வந்த நாட்கள் நெஞ்சில் இன்னும் பசுமையாய் நினைவிருக்கின்றன அவள் வீட்டிலிருந்து என் வீடுவரை வந்து என்னை அழைத்துக்கொண்டு


அண்ணன்

 

 அண்ணன் என்றால் எனக்கு உயிர். அண்ணன் என்றால் கூடப்பிறந்த அண்ணன் இல்லை. அண்ணனின் பெயர் முத்து. ஆனால் ஒருபோதும் அண்ணனின் பெயர் எனக்கு மனதில் இருக்காது. அண்ணன் என்று தான் நினைக்கத்தோன்றும் எப்போதும். ‘அண்ணன் இப்ப என்ன பண்ணிக்கிட்டுருப்பான்?’, ‘சாப்பிட்டிருப்பானா?’, ‘நான் தினமும் நினைச்சுப் பார்க்குற மாதிரி அண்ணனும் நினைச்சுப் பார்ப்பானா?’ இப்படி பல எண்ணஙக்ள் ஓடும் உள்ளுக்குள். அவன் தான் எனக்கு ஒரே ஆறுதல். என்ன கஷ்டம் வந்தாலும் சொல்லி அழ, ஆறுதல் தர அவன்


நீளும் கனவு

 

 சின்னு வந்திருக்கிறாள். அவளுக்கு அனுவின் சமையல் என்றால் ரொம்ப இஷ்டம். அனு அவளுக்காக மீன் குழம்பு வைத்திருந்தாள் . காரம் கொஞ்சம் அதிகமாகி விட்டது. ஆனாலும் என்ன? சின்னுவுக்குப் பிடிக்கும் தான். இரண்டு தட்டுகளை கழுவி எடுத்து வந்தாள். சின்னு சாப்பிட அமர்ந்தாள். தன் சின்ன கைகளால் மெல்ல தட்டிலிருந்து ஒரு பிடி எடுத்து உருட்டினாள். “நம்பி சாப்பிடலாமா? ஆம்புலன்ஸுக்கு சொல்லி வச்சுட்டு வாய்ல வைக்கவா?’’ என்று கேலி செய்தவாறே ஒரு கவளத்தை வாய்க்குள் வைத்தவள் சாப்பிட்ட


விட்டு விடுதலையாகி..

 

 கடிகாரத்தைப் பார்த்தவாறே அமர்ந்திருந்தாள் கவிதா. நொடி முள் நகர்வதையே பார்த்துக்கொண்டிருந்தவளுக்கு தலை சுற்றுவது போலிருந்தது. சுதா இன்னும் வரவில்லை. பசி வேறு தாங்கவில்லை. வயிற்றை ஒரு கையால் தடவிக்கொண்டே “கொஞ்சம் பொறுத்துக்கோ! சுதா வந்துரட்டும்” என்று வயிறோடு பேசினாள். வயிறோ பலவித சப்தங்களை எழுப்பி தன் எதிர்ப்பைத் தெரிவித்தது. ஏதாவது நொறுக்குத்தீனி அல்லது வாழைப்பழம் இருக்கிறதா என்று அறைக்குப்போய் பார்த்தாள். அறைக்குள்ளே காலையில் ஐம்பது பைசா சில்லறையில்லாமல் இல்லாததால் பக்கத்துக் கடைப்பையன் கொடுத்த ஒரே ஒரு ஹால்ஸ்


மின்மினி வெளிச்சம்

 

 ராசுவுக்கு அன்றைக்குப் பள்ளிக்கூடம் போகப் பிடிக்கவில்லை. பையை எடுத்துக் கொண்டு, போகலாமா… வேண்டாமா என்கிற யோசனையோடு ஒவ்வோர் அடியாக எடுத்துவைத்தான். ஒரு குச்சி ஐஸ் வண்டி போனது. நிறுத்தி ஐஸ் வாங்கித் தின்றான். சப்பிச் சப்பி வெறும் குச்சியை நக்கிக்கொண்டே பள்ளிக்கூடத்தைக் கிட்டத்தட்ட நெருங்கிவிட்டான். காம்பவுண்ட் சுவர் அருகே வந்து நின்று சுற்றுமுற்றும் பார்த்தவாறே உள்ளே நுழைந்தான். வகுப்பில் வாத்தியார் பாடத்தைத் தொடங்கி இருந்தார். வாசல் அருகே நிழலாடவும் நிமிர்ந்து பார்த்தார். ”வாங்க சார்… நீங்க மட்டும்


மீனுக்குட்டி

 

 என்னால் நம்ப முடியல. பாட்டி சொல்றது நெசந்தானா? அப்பாவா அப்புடி சொன்னாரு? அப்படி அழுதாரு? எம் மனசுக்குள்ள அப்ப்டியெல்லாமிருக்காதுன்னு தோணிக்கிட்டேயிருந்துச்சு. ”நெசமாவா சொல்றே?” – பாட்டிகிட்ட திரும்ப கேட்டேன்.. ”அட! ஆமா! பின்ன பொய்யா சொல்றேன்?” “நம்ப முடியலயே?” ”நெசந்தான். நீ வேணுமுன்னா ஒங்கம்மாகிட்ட போய்க்கேளு” அதுக்கு மேல் எனக்கு இருப்பு கொள்ளலை. அம்மா சாயங்காலம் வரட்டும். கேட்டுற வேண்டியதுதான். ஆனா அதுவர எப்படி பொறுக்க? யோசிச்சுக்கிட்டே குடிசைக்கு வெளிய வந்துட்டேன். ரோட்டுல சர் சர்ருன்னு பஸ்,