கதையாசிரியர் தொகுப்பு: கடல்புத்திரன்

67 கதைகள் கிடைத்துள்ளன.

மாட்டுப் பிரச்சனை

 

 சலீம்மைத் தேடி சிற்ரரஞ்சன்,பாபு,இன்னும் இருவர் வந்திருந்தார்கள்.” தோழர் இவர்கள் மாட்டுப் பிரச்சனையைக் கொண்டு வாரார்கள். “எங்களை வந்து தீர்க்கட்டாம்” என்ற ரஞ்சஜனைப் பார்த்து “பிரச்சனையைக் கூறு” என்றவன், யோசித்து விட்டு “கேட்டடியிலே நின்று கதைக்க வேண்டாம், உள்ளே வாருங்கள்” கூட்டிச் சென்றான். வாடகையில் ‘ராஜ’ களையுடன் இருக்கிற அந்த பெரிய பழைய வீடு வந்தாரை வாழ வைக்கும். வெளியிலுள்ள பூச்சுக்கள் கழன்று பெரிதாக விழுந்திருக்கவில்லை. உள்ளுக்க தான் அங்காங்கே விழுந்து கொஞ்சம் அலங்கோலமாக இருக்கிறது. அந்த காலத்தில்,


வேலை

 

 ஒவ்வொரு மாதத்திலும் காயத்திரி தேவதையாகிப் போன நாளில் பிள்ளையார் கோவிலுக்கு போய் வாரதை வழக்ககமாகக் கொண்டிருக்கிறான். முகத்தில் மஞ்சள் பூசி கட்டிலில் படுத்திருந்ததை மறக்க முடியவில்லை. அன்று அவள் அதிகமாக சோர்ந்திருந்தது போல தெரிந்தது. நித்திரையிலிருந்து தானாக எழட்டும் என வீட்டை துப்பரவாக்குவதில் ஏடுபட்டான்.இடையிடையே வந்து எட்டிப் பார்த்துக் கொண்டுமிருந்தான். எழுவதைக் காணவில்லை. வழக்கத்திற்கு மாறாக தூங்குறாளோ?…புன்சிரிப்பு சந்தேகத்தை ஏற்படுத்த மூக்கில் கையை வைத்துப் பார்த்தான். அனுங்கலையும் காணவில்லை.எப்படியும் அவளிடமிருந்து சிறு சத்தம் வந்து கொண்டிருக்கும். மூச்சு


பூக்கொத்து

 

 ஜீவாவிற்கு அம்மாவையும், அப்பாவையும் இந்த நாட்டுக்கு எடுத்த பிறகு சாதனை புரிந்தது போல இருக்கிறது. மனதில் நிம்மதி பூக்கத்தான் செய்தது. ஆனால், கிராமத்தைப் போல வருமா?. பழக்கப்படாத கட்டடக்காடாக விரியும், செயற்கையாகப் படைக்கப்பட்ட நகரை நினைத்தால் பயமாக இருக்கிறது. சாலைகளில் பொறுமையில்லாமல் ஓடும் வாகனங்களினால் முதியவர்களே அதிகமாக உதிர்கிறார்கள். அங்கே இயற்கை இவர்களைஅரவணத்துக் கொள்கிறது. இங்கே இல்லை. என்ன தான் பிரச்சனை மனிதர்களிற்கு ?, வடக்கு, கிழக்கில் பொலிஸ் தெரிவையும் ஆள்றதையும் அவர்கள் கையிலேயே கொடுத்து விட்டால்…..அரைவாசி


பெண்மனம்

 

 அவனுடைய மனம் குழப்பமாகவே கிடக்கிறது.எழுத்து வேலையில்,’மனசு இறங்க மாட்டேன்’என முரண்டு பிடிக்கிறது.தேத்தண்ணீர் ஆற்றுறவன் ஆற்றிக் கொண்டே இருக்க வேண்டும்., ம‌ரதன் ஓடுறவன் ஓடிக் கொண்டே இருக்க வேண்டும். எழுதுறவனும் எழுதிக் கொண்டே இருக்க வேண்டும். முகமூடியைப் போட்டு விட்ட நடிகன் பிறகு அதை கழற்றி வைக்க முடியாதல்லவா. அவன் நிறுத்தி விட்டால், யார் கோகுலனா, அப்படி ஒரு பிறவி இருந்ததா ? புறநாடாக இராது சொந்த நாட்டில் இருந்திருந்தால், அங்கேயும் சொந்தமாக காணி நிலமும் வேண்டுமய்யா, ஒரு


வழி திறக்கவில்லை

 

 வாகனத்தின் வானொலியை இயக்கினான்.’ குட்டிக்கதை’ ஒன்றை ஒலிப்பொருப்பாளர் பவானி கூறிக் கொண்டிருக்கிறார். இதில் இடம் பெறுகிறது ‘மனம்’ என்ற இத்தூணித்துண்டு. அது தலையிலே, நெஞ்சிலே எங்கையாச்சும் இருந்துட்டு போகட்டும். “ஒரு ராஜா….” ஏன் அவரை இழுக்கிறார்கள். பிரபலங்கள் வர வேண்டும் போல இருக்கிறது. அவர் ஒவ்வொரு நாளும் சந்தனக் கட்டைகள் விற்கிற கடைக்கு முன்னால் நடந்து போகிறார். என்ன, நடை பயில்கிறாரா?. எளிமையாகப் போகிராராம். ஊரிலே தெரு, கிருவெல்லாம் நடக்கிறார் போல இருக்கிறார். நாட்டார்க்கதைகள் லொஜிக் மீறல்களுடன்


சாபம்

 

 நம் தீவு நாட்டில் தான் ‘ தீ ‘க் குளிப்புகள் நடக்கிறதென்றால் போற புலம் பெயர் நாடுகளிலுமா இடம் பெற வேண்டும்? இந்த பூமிப்பந்திற்கு என்ன தான் வந்து விட்டது. தாமாக ஈடுபட்டாலும் சரி, மற்றவர்கள் வலுவால் தூக்கி எறியப்பட்டாலும் சரி அது மனிதத்திற்கு அவமானமான செயல் தான். மனிதம் செத்துக் கொண்டிருக்கிறது என்பதற்கான ஒரு சமிக்ஞை. மிருக நிலையிலிருந்து தேவ நிலைக்கு வைக்கிற வைக்கப்படுற ( கால் ) அடிகள் சறுக்குண்டு பின்னோக்கி விழுவது போன்ற


சைக்கிள்

 

 “சைக்கிள் ” என்ற தலைப்பில் சுதாராஜ் எழுதிய சிறுகதை முதல் தடவையாய் சிறுவயதில் வெகுவாக கவர்ந்திருந்தது. அதை வாசித்ததிலிருந்து நான் இவரின் வாசகன். இவரைப் போல நானும் எழுத வேண்டும் என அந்த காலத்தில் ஆசைப்பட்டிருக்கிறேன். அப்ப சைக்கிள் ஓடக் கூடத் தெரிந்திருக்கவில்லை. இவரைப் போல என் அண்ணரும் பழைய சைக்கிள் எல்லாம் ஓடி, ஓடி வெறுத்து…கரைச்சல் கொடுக்க அம்மா, கடன் பெற்று ஒரு புதிய சைக்கிள் வாங்கி கொடுத்திருந்தார். அதை ஒரு மாசத்திலே பொதுசன நூலகத்தில்


பரமு

 

 “பரமு காலமாகி விட்டான்!” என கணபதி கைபேசியில் தெரிவித்த போது மிகத் துயரமாகவிருந்தது. முற்பது வருசங்களுக்கு முதல் மனம் வாயு வேகத்தில் சென்று விட்டது. அகில் தாமரை இயக்கத்தில் சேர்ந்த போது இருந்த பிரதேச அரசியல் அமைப்பில், இவர்களுடைய தலைமையில், பரமுவும் ஒருத்தன். மெலிந்த தேகம்.எளிமையான ஆடை.நட்பான பார்வை. முக்கியமாய் அவனை விட ஒன்று, இரண்டு வயசு மூத்தவன். அகிலை, கிராமப்பொறுப்பாளர் ஏதோ…விசயத்திற்கு சுளிபுரம் அனுப்பி இருந்தார். அவனுடைய நண்பன் சேகருடன் சென்றிருந்தான். சேகர், ஆதரவாளன்.தோழனாகவில்லை. இருவருமே


வேட்டை

 

 குறுநாவல்: வேட்டை நாவலில் வரும் சம்பவங்கள், பாவிக்கப்பட்டுள்ள இயக்கப்பெயர்கள் இவற்றிலிருந்து இக்குறுநாவல் இலங்கைத் தமிழர்களின் விடுதலைப்போராட்டத்தின் சில கட்டங்களைத் தொட்டுச் செல்கின்றது என்பதைப் புரிந்து கொள்வீர்கள். இந்நாவலில் பாவிக்கப்பட்டுள்ள இயக்கப்பெயர்கள், சம்பவங்களிலிருந்து அவற்றின் உண்மையான இயக்கப்பெயர்களை நீங்கள் ஊகித்துக்கொள்ளலாம். பெரிதாக நடந்த இயக்க மோதற் கால அனுபவங்களை மிகவும் யதார்த்தபூர்வமாக விபரிக்கும் குறுநாவலின் அனுபவங்கள் இலேசாக அவ்வப்போது மனத்தில் மெல்லிய வலியினை ஏற்படுத்து விடுகின்றன. அதே சமயம் முட்டி மோதிக்கொண்ட அமைப்புகளின் அடிமட்டத்தோழர்களுக்கிடையிலான நேரடிச் சந்திப்புகளின் அனுபவங்கள்


பயிற்சிமுகாம்

 

 அத்தியாயம் ஐந்து: பாம்பு, செண்பகச் சமையல்! அடுத்த நாளும் இதே பயிற்சிகள் தொடர்ந்தன. விரும்பின தோழர்க‌ள் இன்னொரு முறையும் வெற்றிகரமாகச் செய்து முடித்தார்கள். ஆறுதலாகக் குளித்து கொட்டிலினுள் புகுந்தார்கள். அரசியல் அமைப்பில் உறுப்பினர், ஆதரவாளர் என்ற பிரிவுகள் இருக்கின்றன. ஆதரவாளர் அதிக தளர்வுள்ளவர். விலகப் போகிறேன்; வெளிநாடு போகப் போகிறேன், கல்யாணம் முடிக்கப் போகிறேன்…எனக் கதைத்துப் பேசி இலகுவாக வெளியேறி விட முடியும். உறுப்பினர்கள் வெளியேற முடியா விட்டாலும் தீவிரமான விதி முறைகள் அமுலாக்கல்கள் இல்லை. ஆனால்