கதையாசிரியர் தொகுப்பு: கங்காதுரை கணேசன்

8 கதைகள் கிடைத்துள்ளன.

அம்மாவ பார்க்கப் போறேன்…..

 

 என்னை அந்த வெள்ளை மெத்தையில்தான் போட்டு வைத்திருக்கிறார்கள். உயிர் இருக்கிறது; அசைவில்லை. மூச்சு இருக்கிறது; பேச்சில்லை. வாயில் சுவாசக்கவசம் அணியப்பட்டிருக்கிறது. போத்தலில் உள்ள இரத்தம் கையில் துளையிட்டு கிடந்த குழாயின் வாயிலாக என் உடலுக்கு இடம் மாறிக் கொண்டிருக்கிறது. ஒட்டுப்போட்டத் துணி போல உடலில் ஆங்காங்கே தையல் போடப்பட்டிருக்கிறது. தலையில் வெள்ளைத் துணி சுற்றப்பட்டிருக்கிறது. புரியாத கணக்கைக் காட்டியபடி ஒரு பெட்டிக்குள் பச்சைக் கோடு மேலேயும் கீழேயும் ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறது. என்னைச் சுற்றி யாரார் இருக்கிறார்கள்


என் அம்மா பாவங்க…..

 

 நான் சுமார் எட்டு மாசமா இங்கதான் குடியிருக்கேன். அம்மாவுக்கே இடைப்பட்ட காலத்துலதான் நான் இங்க குடியிருக்கேனு தெரியும். வாடகையும் இல்ல, வெளிச்சமும் இல்ல. ஏதோ ஒரு காரணத்துக்காக தலை வணங்கியபடிதான் இருப்பேன். எனக்குனு எதும் பேரு கிடையாது. அம்மா மட்டும் என்ன சனியன்னு கூப்பிடும். அதுவும் இடைப்பட்ட சிலமாசம் முன்னாடிதான் அந்த பேரும் என் காதுக்கு முதன்முறையா எட்டுச்சு. அதுல இருந்து இப்பவரைக்கும் என் அம்மாவுக்கு நான் சனியந்தான். என்னோட வயசுனு எடுத்துகிட்டா எதுவும் சொல்லமுடியாது. ஆனா


அடைத்துக்கொண்ட காதும் அடங்காத நானும்

 

 எஸ்கூஸ்மீ… உங்ககிட்ட கோட்டன்பாட் இருக்கா? மன்னிக்கனும் காதுபஞ்சு இருக்கா? காது கொடையுனும்! என்னங்க அப்படி பாக்குறீங்க! இருக்கா இல்லையா? இல்லனா சொல்ல வேண்டியதுதானே…எதுக்கு இந்த மொறப்பு? காது கொடையுற சுகம் தெரியாத ஆளா இருப்பீங்க போல! அதான் கண்ணுல கடுப்பு கொழுந்துட்டு எரியுது! காது கொடையுறது எவ்வளவு சுகமுன்னு தெரியுமா உங்களுக்கு? கொடைய கொடைய சும்மா கொடைஞ்சிகிட்ட இருக்கனும்னு தோனும் போங்க… என்னையே எடுத்துகோங்க, பொழுது போகலனா உடனே காதக் கொடைய ஆரம்பிச்சுடுவேன். காது கொடையும் போது


ஆட்டுக்கல்லு

 

 வீட்டின் முற்றத்தில் ஆட்டுக்கல்லை இறக்கி வைத்தார் அப்பா. தனது ஆசையை நிறைவேற்றி விட்ட பூரிப்பில் அம்மா அப்பாவுக்குக் காப்பி கொடுத்துக் கொண்டிருந்தாள். அண்ணனும் நானும் ஆட்டுக்கல்லையே வெறித்துக்கொண்டிருந்தோம். உரலில் வெற்றிலையும் பாக்கையும் ஒன்றாக இடித்து வாயில் திணித்துக்கொண்டே ஆட்டுக்கல் மீதான விசாரணையைத் தொடங்கினாள் பாட்டி. “யேன்டா இந்த கல்லு என்ன வெல?” “முப்பது வெள்ளி “ “என்ன கல்லாம்? கருங்கல்லா இல்ல மாவு கல்லா?” “கருங்கல்லுதான்” “பாத்தா மாவு கல்லு மாதிரில்லடா இருக்கு” “ஆமா, பூவிழுந்த கண்ணுல


அப்பாவும், அவரது டட்சன் 120Y-யும்

 

 மதிய உணவு நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. சாப்பிடுவதற்காக அலுவலகம் விட்டு வெளியேறினேன். அலுவலகம் எதிரே இருக்கும் ஒட்டுக்கடையை நோக்கிச் சென்றேன். கடையில் அமர்ந்திருந்தபோது, சாலையில் ஒரு வெள்ளை நிற டட்சன் 120Y வண்டி என்னை கடந்துச் சென்றது. மனதில் மறைந்திருந்த அப்பாவின் முகம் தானாகவே நிழலாடியது. எப்படியும் முப்பது வருடமாவது இருக்கும் அந்த வண்டிக்கு. இன்னும் சாலையில் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. இப்போதெல்லாம் அந்த ரக வண்டியைக் காண்பது அரிதாகி விட்டது. வண்டி என் கண்களிலிருந்து மறையும் வரை


போராட்டம்

 

 ஓர் இரவு: நடுநிசியில் ஈரம் சொட்டச் சொட்ட அறைக்குள் நுழைந்தாள் அம்மா. ஒன்றும் புரியாதவனாய் விழித்துக்கொண்டிருந்தேன். சுவரில் சாய்ந்து சறுக்கியபடி தரையில் குத்திட்டாள் அம்மா. ஈரமான உடைகள் அவள் அங்கங்களோடு அழுத்தியிருந்தன. குளிரில் அவளது உரோமங்கள் விரைத்திருந்தன. உடல் வளைந்து, கரங்கள் கால்களை கட்டிக்கொண்டிருந்தன. கட்டிலை விட்டு அம்மாவிடம் வந்தேன். சாய்ந்திருந்த அவளது தலையை எனது இரண்டு கரங்களால் நிமிர்த்தினேன். அம்மா அழவில்லை. விசும்பினாள். நான் கேட்டேன், “யேம்மா! என்னாம்மாச்சி? யேம்மா இப்படி இருக்கே?” அம்மா சொன்னாள்,


அப்பாவைப் பற்றி ஒரு வாக்குமூலம்

 

 உங்களுக்கு என் அப்பாவைப் பற்றி தெரியுமா? அவரைப் பற்றி கேள்விப்பட்டதுண்டா? சரி, அது இருக்கட்டும். நீங்கள் ஜென்டாராட்டா தோட்டம் பற்றியாவது கேள்விப்பட்டதுண்டா? அப்படி தெரிந்திருந்தால் என் அப்பாவையும் தெரிந்திருக்க வேண்டும் அல்லது தெரிந்து வைத்திருக்க வேண்டும். சபாக் பெர்ணம் சாலையின் பத்தாவது மைலில் அமைந்திருக்கிறது இந்த ஜெண்டாராட்டா தோட்டம். பலருக்கு மூனாம்நம்பர் எஸ்டேட் என்பதுதான் பரீட்சார்த்தமான பெயர். தோட்டத்திற்கு நுழையும் பிரதான வாயிலின் அருகே விசாலமான திடல். இடது கோடியில் கிளைகளைப் பரந்து விரித்து நிற்கின்ற பெரிய


பூமாலை

 

 கிருபாவுக்கு என்னதான் பிரச்சனை? கிருபா ஏன் இப்படி நடந்து கொள்கிறாள்? எதுவுமே எனக்கு புலப்படவில்லை. அவள் நடந்து கொள்ளும் விதம் எனக்கு எரிச்சலைத்தான் மூட்டுகின்றது. எரிச்சல் தலைக்கு ஏறும்போது கோவாமாக மாறுகிறது. அந்த கோவத்தில்தான் கிருபாவை நன்றாக அடித்துவிட்டேன். நெஞ்சழுத்தம் நிறைந்தவள்; வாங்கிய அடிக்காவது கண்ணீர் விட்டாளா? ஏதோ பெரிய மனுஷியைப் போல அறைக்குள் சென்றுவிட்டாள். எல்லாம் அவள் பாட்டியைச் சொல்ல வேண்டும். அவர் இவளுக்குக் கொடுத்த செல்லம்தான். அவரைச் சொல்ல என்ன இருக்கிறது? அவர்தான் படத்தில்