கதையாசிரியர் தொகுப்பு: எஸ்.பழனிச்சாமி

1 கதை கிடைத்துள்ளன.

வெற்றியின் ரகசியம்!

 

 காலையிலிருந்து பாத்ரூம் ஷவர் குழாயில் சிறிதளவு தண்ணீர் தொடர்ந்து கொட்டிக்கொண்டே இருக்கிறது. குமிழை முழுவதுமாக மூட முடியவில்லை. ராஜனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. பிளம்பரைக் கூப்பிடலாமா? அவன் கேட்கும் கூலி ஒரு பக்கம் இருக்கட்டும். குழாயைக் கழட்டுகிறேன் பேர்வழி என்று சுவர் டைல்ஸை எல்லாம் உடைத்து விட்டால் என்ன செய்வது? பார்த்து பார்த்து செலக்ட் செய்த டிசைன் என்று வாடகைக்கு விடும்போது வீட்டுக்காரர் சொன்னாரே! அது இப்போது உடைந்துவிட்டால் கடையில் இதே டிசைன் கிடைக்குமோ என்னவோ?