கதையாசிரியர் தொகுப்பு: எம்.டி.கருணாகரன்

1 கதை கிடைத்துள்ளன.

விதை புதிது

 

 முதலில் ஒரு சொம்பு உருண்டு வந்து குருக்கள் வீட்டுக்கு எதிரே தெருவில் விழுந்தது. அதைத் தொடர்ந்து டம்ளர் “டங்டங்… டங்…ட…ங்’ என்று நொந்துகொண்டு தன் ஒலியை நிறுத்திக் கொண்டது. வேதாந்த குருக்கள் ஒரு கணம் ஆடிப்போய்விட்டார். ஜாதகத்தைப் பிரித்து வைத்துக் கணித்துக் கொண்டிருந்தவரால் நடப்பது என்ன என்பதைக் கணிக்க இயலவில்லை. “”நாராயணா…நாராயணா” என்று சன்னமாக நாராயணனைத் துணைக்கு அழைத்தார். “”என்ன சாமி… பயந்துட்டீங்களா… ஒண்ணும் பயப்படாதீங்க. இது மாசத்துல நாலு தடவை நடக்கற கூத்துதான். நீங்க இங்கே