கதையாசிரியர் தொகுப்பு: என்.எஸ்.எம்.இராமையா

12 கதைகள் கிடைத்துள்ளன.

பிஞ்சுக்குவியல்

 

 (1968 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) காமாட்சிக் கிழவிக்கு நீலாம்பரி ராகம் தெரியாது. ஆயினும் அவளது ‘ரோ…ரோ’ சப்தத்தில் இரண்டு குழந் தைகள் கண்ணுறங்கத் துவங்கின. ஒன்று மடியில்; இன் னொன்று வெள்ளைத்துணியால் கட்டிய தொட்டியில். மடிக் குழந்தை அயர்ந்து தூங்கியதும், மெள்ளத்தூக்கி சுவர் ஓர மாக சாக்குத் துண்டு ஒன்றைவிரித்து அதன் மீது கிடத்தி னாள். அது ஒருமுறை தலையைச் சொறிந்துவிட்டு அயர்ந்தது. தொட்டில் குழந்தையிடம் சலனம் இல்லை.


வேட்கை

 

 (1967 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) முழங்காலைப் பிடித்துக் கொண்டு படிகளில் ஏறிவந்த ரங்கையாக் கிழவன்; கடைசிப் படியில் நின்று வாயால் ஊதிக் கொண்டான். பத்துப் பதினைந்து படிகள் அவன் எறியதில், அவனுடைய கிழட்டுக் கால்கள் ‘வெட வெட’ வென்று நடுங்கின. தன் லயத்து வாசலை நோக்கி நடந்த வன் சூழ்நிலையில் ஒரு மாற்றம் தெரிவது உணர்ந்து நின்று நிதானித்துப் பார்த்தான். அவனுடைய வீட்டிலிருந்து மூன்று வீடுகள் தள்ளியி ருக்கும்


தரிசனம்

 

 (1963 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஈஸி சேரில் சாய்ந்து ஒரு சுருட்டைப் புகைத்தவாறு யோசனையில் ஆழ்ந்திருந்தார் கன்னையா கணக்கப்பிள்ளை. சுருட்டின் நுனியிலே, அரை அங்குல நீளத்திற்கு, வயிற்றுக் குள் கனலை அடக்கிய சாம்பல். வலதுகை, புருவ மயிரை நெருடியும் தடவிக்கொண்டுமிருந்தது. பங்களாவுக்கு வெளியே லேசாக மனிதஆரவாரம் கேட் டது. கணக்கப்பிள்ளை தலையைத் திருப்பிப் பார்த்தார். பின் னர் ஈஸி சேர் சரசரக்க எழுந்து வெளியே வந்தார். வாச லுக்கு


மழை

 

 (1969 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வானத்தை அண்ணாந்து பார்த்துவிட்டுப் பெருமூச்சு விட்டவாறு, குனிந்து கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தான் மாணிக்கம். இரண்டு ஆள் உயரத்துக்குக் குழியாகத் தோண் டியிருந்த அந்த கிணற்றுக்குள் வானத்து மேகம் தெரிந்தது. ‘இப்போதைக்கு ஒப்பேத்தலாம் இல்லே?’ என்றவாறு பக்கத் திலிருந்த ராசப்பனை பார்த்தான். ‘இப்போதைக்குன்னா மழை பெய்ற வரைக்குமா?’ என்றான் ராசப்பன். அப்படித்தான் நெனைக்கிறேன்?. மானத்தைப் பார்த்தியா? இப்ப கிட்டனுசுலே மழை பெய்ற மானமாவா இருக்கு?’


எங்கோ ஒரு தவறு!

 

 (1961 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) போஸ்ட் ஆபீசுக்கு நேராக இருக்கும் அந்தப் பஸ் ஸ்டாண்டை ஒரு வட்டமடித்துக்கொண்டு வந்து நின்றது பஸ். எப்போதுமே நிரம்பிப் பிதுங்கும் பசறை ரூட் பஸ். இன்றும் அப்படியே. தன் இனத்துக்கேயுரிய மகா பொறுமையுடன் எல்லோரும் இறங்கும்வரை காத்திருந்து இறங்கினான் முனுசாமி. அவனைத் தொடர்ந்து அவனுடைய மகள் கமலமும் இறங்கினாள். பஸ் ஸ்டாண்டு கலகலவென்றிருந்தது. பத்து மைல் தூரம், சுளகில் கிடக்கும் தானியம் மாதிரி


நிறைவு

 

 (1962 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) என்னவோ தெரியவில்லை; மனம் ஆனந்தத்தால் துள் ளிக்கொண்டிருக்கிறது! சுற்றுப்புற சூழ்நிலையில் அமைதி கார ணமோ அல்லது மலைமுகட்டுக்குப் பின்னால் விழுந்துகொண் டிருக்கும் அந்திச் சூரியன், வானக்கிழியில் செய்யும் வர்ண ஜாலம் காரணமா? அதுவுமல்லாமல் வெகு காலத்துக்குப் பிறகு இந்தத் தோட்டத்துக்கு வந்து எனக்குப் பிடித் தமான மலை உச்சியில் நிற்பதால் ஏற்படும் எக்களிப்பா? எதுவென்று புரியவில்லை. ‘இதுதான் நான் முதன்முதல் வேலை ஏற்றுத்


ஒரு கூடைக் கொழுந்து

 

 (1961 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “அக்கா எனக்கு எது நெரை?” கொழுந்து இல்லாத கூடையின் தலைக்கயிறு தோள் வழியாக இடதுகைக்குள் அடங்கியிருக்க, வெற்றுக்கூடை முதுகில் அசைந்துகொண்டிருந்தது. லட்சுமியின் கேள்வி யார் காதில் விழுந்ததோ என்னவோ? பதிலே இல்லை. மற்ற நாட்களாக இருந்தால் அந்த ‘வயசுப்பெண்கள்’ குழுவினர் அவளை ஆளுக்கொரு பக்கமாக இழுப்பார்கள். “இங்கே வாடி லெட்சுமி! என்கிட்டே நிரைதாரேன்” “ஐயோ! லெட்சுமிக்குட்டி! என்கிட்டே நிற்கட்டுண்டி” நாலாபக்கத்திலிருந்தும் வரும் அழைப்பைக்கண்டு


ரணம்

 

 (1980 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சரியா ரெண்டு மணி இருக்கும். அப்பத்தான் வேலை முடிஞ்சு வீட்டுக்கு வந்துக்கிட்டு இருந்தேன். எங்க வீட்டுக்கும் அடுத்த வீட்டிலே- அதான் செங்கமலம் வீட்டுலே – என்னமோ பரபரப்பா இருந்துச்சு. யாராரோ புதுப்புது ஆளுக கொரலு கேட்டிச்சு. ‘என்னடாது’ன்னு நின்னு பார்த்தேன். ஒன்னும் வௌங்கலே. சர்த்தான் ‘என்னமோ’ன்னுட்டு வீட்டுக் குள்ளே போயி இடுப்புப் படங்கை அவுத்துப் போட்டு பைப்படிக்குப் போனேன். போகையிலேயும் லேசாத் திரும்


ரகுபதி ராகவ

 

 (1980 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கோவில் மண்டபத்தில் கொஞ்சங் கொஞ்சமாக ஜனங் கள் வந்து குழுமத் துவங்கினர். கம்பியில் கட்டித் தொங்க விட்டிருந்த காஸ்லைட்டின் ஒளி கோயிலைச் சுற்றிக் கிடந்த பனிமூட்டத்தையும் இருளையும் மீறமுடியாமல், தூரத்தில் வந்துகொண்டிருப்பவர்களுக்கு, புகைக்குப் பின்னால் தெரியும் ஒளியாக மங்கித் தெரிந்தது. குளிருக்கு அடக்கமாக எல்லோருமே போர்வைக் கண் காட்சியாக காணப்பட்டார்கள். சிவப்புக் கரையுடன் கூடிய கறுப்புப் போர்வை, பழைய காலத்து குங்குமக் கலர்


முற்றுகை

 

 (1980 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சரசு வேலைக்குப் புறப்பட்டாள். சேலைக்கு மேலாக இறுகக்கட்டிய படங்குச் சாக்கு கன மாய் உறுதியாய் இருந்தது. நான்காக மடித்திருந்த எட்டு எடுத்து முழ வேட்டியைத் தலையில் போட்டுக் கூடையை கயிற்றை உச்சந் தலையில் மாட்டிக்கொண்டபோது, இவை யாவும் வேண்டாத மேலதிக பாரங்கள் என்று மனம் மெல் லப் பொறுமி முணுமுணுத்தது. லயத்திலிருந்து ரோடு வரைக்கும் இறங்கும் இருபது சில்லிட்டு கருங்கல் படிக்கட்டுகளும் ஐஸ்