கதையாசிரியர் தொகுப்பு: உஷா சுப்ரமணியன்

2 கதைகள் கிடைத்துள்ளன.

இடைவெளி

 

 கார்த்திக், நீனாவின் முகத்தை நேருக்கு நேர் பார்த்தான். இருவர் கண்களும் ஒரு நேர்க்கோட்டில் சந்தித்து மலர்ந்தன. குறும்பு, சிரிப்பு, காதல். “ஏய், என்னை அப்படிப் பார்க்காதே” – கார்த்திக் நெளிந்தான். “இந்த வெட்கம்லாம் நான் படணும்டா… நீ ஏன் இப்படி வழியறே?” – இருவரும் மேஜை மேல் கைகோத்துச் சிரித்தனர். “என்ன சாப்பிடறே?” “சாப்பாடு. அப்புறம்… தாகமா இருக்கு. ரெண்டு பியர் சொல்லுடா.” உயரமான கண்ணாடிக் கோப்பையில் வெயிட்டர் ஊற்றிய நுரை பொங்கும் பியரை ‘சியர்ஸ்’ சொல்லி


குடும்பம்.com

 

 அதிகாலையில், சென்னை விமான நிலையத்தில் நிறுத்திச் சென்றிருந்த கார் கதவைத் திறந்து, டெல்லி குளிருக்கென அணிந்திருந்த கம்பளிக் கோட்டைக் கழற்றி ஸீட்டில் வைத்துவிட்டு, காரை ஸ்டார்ட் செய்தான் நிகில். நோட்புக் கம்ப்யூட்டரும், ஒரு செட் அவசர உடைகளும் அவனருகில் ஸீட்டில் அலுங்காமல் அமர்ந்திருந்தன. ஐ&பாடிலிருந்து பாலமுரளி இனிமையாக அவனை அணைத்தார். ‘‘வாட் எ லவ்லி டே!’’ டெல்லி தலைமையகத்தில் காலாண்டுக் கூட்டம். அடுத்த காலாண்டுக்கான சேல்ஸ் புரொஜக் ஷன்ஸ், வியாபார உத்திகள், விற்பனை ஸ்ட்ராட்டஜி என்று ஸி.ஜி-&யும்