கதையாசிரியர் தொகுப்பு: உஷா அன்பரசு

59 கதைகள் கிடைத்துள்ளன.

ஒத்த ரூபா…!

 

 மணி ஒன்பது அடித்ததும் ராதாவிற்கு படபடப்பு கூடியது,’ ம் என்னதான் ஓடி ஓடி செஞ்சாலும் நேரம் போறதே தெரியலை… அவசரமாக கிச்சனுக்குள் நுழைந்து காஸ் ஆப் பண்ணியிருக்கோமா என்று செக் செய்து கதவை பூட்டி பஸ்ஸை பிடிக்க ஓடினாள். இன்னும் பத்து நிமிடங்கள்தான் இருந்தது பரவாயில்லை வேகமாக நடந்தால் சீட்டில் உட்கார்ந்து விடலாம்.. நேற்றே அந்த சிடுமூஞ்சி மானேஜர், “ மேடம் உங்களை பார்த்து மத்தவங்களும் லேட்டா வர்றாங்க.. நாளையிலர்ந்து டைமுக்கு வரலைன்னா அட்டெண்ட்டஸ்ல ஸைன் பண்ணாதீங்க…”


யாரிடம் சொல்வேன்…?

 

 எனக்கு வேடிக்கை பார்ப்பதென்றால் ரொம்ப பிடிக்கும். அதை தவிர வேறு எனக்கு வேலையுமில்லை.. அப்போதெல்லாம் பரபரப்பான காட்சிகள் எதுவும் எனக்கு கிடைக்காது.. மாட்டு வண்டிகள், சைக்கிள்களுக்கு இடையில் வரும் நான்கு மோட்டார் வாகனங்களை அதிசயமாய் பார்ப்பேன். அதை விட அதிசயமாய் தெரியும் இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை வரும் டவுன் பஸ்ஸும் அதை பிடிக்க ஓடும் ஆட்களையும் .. இப்பொதெல்லாம் என் கண்களுக்கு ஓய்வே இல்லை இரவும் பகலும் இயங்கி கொண்டிருக்கும் உலகத்தை விட்டு தனியாய்


பரிசு – ஒரு பக்க கதை

 

 அம்மா ரெடி மிக்ஸ் சமையல் போட்டி ஊர் ஊராக நடத்தும் பொறுப்பு சமையல் நிபுணர் செல்லம்மாளிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. நிறைய ஊர்களில் பரிசுக்குரிய போட்டியாளரை தேர்ந்தெடுப்பது கஷ்டமாகவே இல்லை. ஆனால் கும்பகோணத்தில் மட்டும் ஐந்து பேர் நல்ல சுவையுடன் தயாரித்திருந்தார்கள். அவர்களில் ஒருவரை மட்டும் எப்படி தேர்ந்தெடுப்பது குழம்பித்தான் போனாள். ஐந்து பேரில் நான்கு இளம் பெண்கள், ஒருவர் வயதான பெண்மணி. அவருடன் வந்திருந்த கணவர் “ இதற்கு போய் என்ன குழப்பம் ஐந்து பேரிடமும் தனித்தனியாக இந்த


படையல்…

 

 காலையில் ஆறுமணிக்கெல்லாம் போன் மணி அடித்தது.. இது போன்ற நேரங்களில் போன் வந்தாலே எதோ ஒரு கலக்கம் வந்து ஒட்டிக்கொள்ளும்… போனை எடுக்க பயந்து ‘ நீங்களே பேசுங்க “… கணவரிடம் தந்தேன். காதில் வைத்த அவர், “ ஓ.. சாரி.. அப்படிங்களா எப்ப என்ன ஆச்சு எத்தனை மணிக்குண்ணா..?” என்று கேட்கும் போதே எதோ ஒரு துக்க செய்திதான் என்று புரிந்து பதட்டமாகிவிட்டது. “சுஜி உங்க சித்தப்பா போய்ட்டாராம்டி…. ஈவ்னிங் அஞ்சு மணிக்கு எடுப்பாங்களாம்.. நீ


பொன்னு விளையுற பூமி…!

 

 இந்த முறை ஊரில் உள்ள நிலத்தை விற்று விடுவது என்று தீர்மானித்து விட்டேன். ஜோதியின் பிடுங்கல் தாளாமல். “ என்னங்க உங்க பிரெண்டு எல்லாம் சொந்த வீடு கட்டி , கார் வாங்கி பந்தாவா போய்கிட்டிருக்காங்க.. இன்னமும் வாடகை வீட்டை கட்டிகிட்டு அழ வேண்டியதாயிருக்கு.. கொஞ்ச லோன் போட்டு மிச்சத்துக்கு ஊர்ல இருக்கிற நிலத்தை வித்துடுங்களேன். அங்க ஷூ கம்பெனி ஒண்ணு ஆரம்பிக்க போறாங்கன்னு பக்கத்துல இருக்கறவங்களெல்லாம் நிலத்தை தந்துட்டாங்களாம். இன்னமும் உங்கப்பாதான் வீம்பா வச்சிகிட்டிருக்கார்..” வேணும்கிறது


திலகாவும்…மாலாவும்…!

 

 “மாலா வேலை எல்லாம் முடிச்சிட்டியா..?திலகா பக்கத்து வீட்டு காம்பவுண்டிற்குள் எட்டி கேட்க , “இதோ வந்துட்டேங்கா.. 12 மணி சீரியலுக்குள்ள சாதம் வச்சுடாலாம்னு உலை வச்சேன்.. அதுக்குள்ள நீங்க கூப்பிடவே சிம்ல வைச்சிட்டு வந்துட்டேன்…” “உனக்கு ஒரு விஷயம் தெரியுமா..? நேத்து நான் மார்க்கெட் பக்கம் போயிட்டிருந்தப்ப எதிர்த்த வீட்டு கமலாவோட பொண்ணு எவனோ ஒருத்தன் கூட பைக்ல போயிட்டுருந்தா…என்னை பார்த்ததும் பார்க்காத மாதிரி திரும்பிகிட்டா..காலேஜ் போறன்னு இப்படிதான் சுத்தறா போலிருக்கு….” “அப்படியாக்கா.. என்னவோ எப்பவும் நாம


நிம்மதி

 

 சுருதியை கைபிடித்து இறக்கியவள், ராஜுவை தோளில் சாய்த்து பையுடன் பேருந்திலிருந்து , அப்பா வந்திருக்கிறாரா என்று சுற்றும் முற்றும் பார்த்தாள் சுகந்தி. அப்பா கணேசன் ஓடி வந்தார். ” வாம்மா… ஒரு மணி நேரம் முன்னாடி வந்து காத்துக்கிட்டிருந்தேன்….மாப்பிள்ளை வரலையா..? கேட்டுக்கொண்டே பேரனையும், பேத்தியையும் தூக்கி கொஞ்சினார். “அப்பா .. அவருக்கு திடீர்னு சேலத்துக்கு போகவேண்டியதாயிட்டு..திருப்பி அழைச்சிட்டு போக வர்றேன்னிருக்கார்.அப்புறம் வீட்டுல எல்லாம் எப்படி இருக்காங்க..? ” “எல்லாரும் சௌக்கியம்தான்… நீ வர்ற செய்தி கேட்டதிலிருந்து பம்பரமா


இந்த குற்றத்தை நீங்க செய்றிங்களா?

 

 “அப்படியே டிபன் பாக்ஸை கொண்டு வந்திருக்கா பாரு… தினம் வேஸ்ட் பண்றதே வேலையா போச்சு..” வினிதா பாத்திரங்களை அலம்பும் சத்தங்களோடு கத்தி கொண்டிருந்தாள். “அபி … அம்மா திட்டிட்டிருக்கா பாரு.. ஸ்கூல்ல லஞ்ச் என்ன சாப்பிட்டே?” “போங்கப்பா… அம்மா கொடுத்தனுப்புற லஞ்ச் ஒரே போர்… தெனம்.. பருப்பு , கீரைன்னு.. வெரைட்டி ரைஸ்ன்னா கூட பரவால்ல…” “நூடுல்ஸ், பானி பூரின்னு மூணுவேளையும் வச்சாக்கூட தின்பா.. உடம்புக்கு நல்லதா காய்கறி, கீரை சாப்பிடனும்னா கஷ்டம்… தினம் நான் அரக்க


நினைவெல்லாம் நீயே ஆனாய்…

 

 “இனியா, நீதான் எத்தனையோ கதை எழுதறியே… என் அப்பாவை பத்தி ஒரு கதை எழுதேன்… ப்ளீஸ் பா….” “ நீ நினைக்கறதை நீயே எழுதினா நல்லாருக்குமே சூர்யா…?” “ இல்லப்பா… எனக்கு எழுதல்லாம் வராது…. என் எண்ணத்துக்கு நீ உயிர் குடுத்தா நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்…” கடற்கரை மணலில் ‘அப்பா’..என்று எழுதி கொண்டே உற்று பார்த்து கொண்டிருந்த சூர்யாவை வியப்புடன் பார்த்தவள், “ சூர்யா உனக்கு அப்பான்னா அவ்வளவு பிடிக்குமா?” “ ஏன் இப்படி கேட்கிற …


பிரம்மாக்கள்

 

 லேசாக தூறல் ஆரம்பித்தது.மழை பிடிக்கும் முன் ஸ்கூலுக்கு சென்று விடலாம் என்று பஸ்ஸை விட்டு இறங்கியதும் வேகமாக அடியெடுத்து வைத்தேன். அவசரம் புரியாமல் செருப்பு வார் அறுந்து காலை இழுத்தது.இந்த ஊருக்கு ஆறு வருடம் கழித்து இப்போதுதான் வருகிறேன். சுற்றி முற்றி பார்க்கிறேன்… செருப்பு கடை எதுவும் கண்ணில் தென்படவில்லை. தூரத்தில் ரோட்டோரம் குடையை விரித்து கடை போட்டு அறுந்த செறுப்புகளை ஒருவன் தைத்துக்கொண்டிருந்தான். சமாளித்து நடந்து, “ஏம்ப்பா… இந்த செருப்பை கொஞ்சம் தைச்சிடுப்பா… ஸ்கூலுக்கு நேரமாகுது…”