கதையாசிரியர் தொகுப்பு: இரா.மீ.தீத்தாரப்பன்

3 கதைகள் கிடைத்துள்ளன.

ஓரு கணிப்பொறியாளனின் நினைவுப் பாதை

 

 அன்புள்ள வாசகர்களுக்கு, என் பெயர் இளங்கோ முத்துசாமி; என்னை சுருக்கமாக இளங்கோ என்று தான் எல்லோரும் கூப்பிடுவார்கள். எனக்கு உங்களிடம் பேசுவதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன; நான் இந்த விஷயங்களை எழுதி கிழித்துப்போடவேண்டும் என்று தான் முதலில் எண்ணியிருந்தேன், ஆனால், உண்மையில் எழுதக்கூடாத எழுதப்படாத விஷயங்களை எழுதி தீர்த்துக்கொள்வது என்ற முடிவோடு, எனது கடந்த காலத்தில் என்னை வாட்டி வதைத்து, நெகிழ்ந்த நினைவுகளை முடிந்தவரை எனது ஞாபக அடுக்குகளிருந்து அசைப்போட்டு பார்த்து உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.


காந்திவதம்

 

 1948 ஜனவரி 30, மாலை சரியாக 5:17 மணியளவிலிருந்து 5:42 இடைபட்ட நிமிடங்களுக்குள் நடந்த அந்த சம்பவம்…. , …ஆம் ஒரு தேசமே என் காலடியில் விழுந்து கிடந்தது; ஒரே மரண ஓலம்; அழுகைக்கு தான் எத்தனை ஆயிரம் முகங்கள் இங்கே; வரலாறு தன் போக்கில் விசும்புவதை என்னால் தெளிவாக கேட்க முடிகிறது; இன்னும் சற்று நேரத்தில் நவ துவாரங்களில் எந்த துவாரங்களின் வழியாக வெளியே செல்லலாம் என்று யோசித்துக்கொண்டிருந்த அந்த களைப்பூட்டுகிற வேளையில்…. ஹே …


காலமுரண்

 

 Send to : liveinpeace.thatha.univ.venus From : ravi.universe.earth.ind தேதி : 18-5-2117(AD) 1943ல் இறந்துபோன கொள்ளுத்தாத்தாவிற்கு உங்கள் அன்பு பேரன் எழுதிய மடல், மனதளவில் நான் ரொம்பவும் நொந்து போயிருகிறேன் தாத்தா !!. எனக்கு, இந்த முறையும் என் மனு நிராகரிக்கப்படுவதை என்னால் தாங்கிக்கொள்ளமுடியவில்லை, தாத்தா. என்ன செய்வது! காலம் எனக்கு இட்ட கோலத்தை நினைத்து யாரிடம் சொல்லி அழுவது. உலக ஒட்டப்பந்தயத்தில் எனக்கான இடம் எது என்று இன்னும் தெரியாமல் இருக்கிறேன் தாத்தா, உங்களைப்