கதையாசிரியர் தொகுப்பு: ஆரணி யுவராஜ்

6 கதைகள் கிடைத்துள்ளன.

ரெண்டு மாத்திரை

 

 கணக்குப் போட்டுப் பார்த்தேன்… சரியாக இரண்டு வருடங்கள், 66 நாட்கள் ஆகியிருந்தன. கடைசியாக வெளியான அந்தச் சிறுகதையும் அப்படி ஒன்றும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. இன்னும் சரியாகச் சொல்வது என்றால், அதற்கு முன்பு வந்த சில சிறுகதைகளும் அதே ரகம்தான். வெற்றிகளாகக் குவித்த ஒரு விளையாட்டு வீரனின் கடைசிக் கால தோல்விகளைப்போல் அந்தப் படைப்புகள் என்னைப் பார்த்துப் பரிகாசம் செய்தன. நான் பத்திரிகையாளனாகி ஆறு வருடங்கள் இருக்கும். ஆயினும் இப்போதும் எழுத்தாளனாக அறிமுகம் செய்துகொண்டால்தான், ‘ஓ… நீங்கதானா?’ என்று


அப்பாவின் சைக்கிள்

 

 அப்பாவின் சைக்கிளை இந்த ஞாயிற்றுக்கிழமை கண்டிப்பாக விற்றுவிடுவது எனத் தீர்மானித்துவிட்டேன். ‘விற்றுவிடுவது’ என்று சொல்வதைவிட, ‘தள்ளிவிடுவது’ என்ற வார்த்தையே சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். இடப் பிரச்னை முக்கியக் காரணம். நான் பைக் வாங்கியதிலிருந்தே அந்தப் பிரச்னை ஆரம்பித்துவிட்டது. வீட்டுச் சொந்தக்காரர் மிகவும் கண்டிப்பானவர். பைக்கோ, சைக்கிளோ… ஒரு குடித்தனக்காரர் ஒரு வண்டிக்கு மேல் வைத்துக்கொள்ளக் கூடாது என்பது அவரது சட்டம். ‘‘பைக்கை கேட்டுக்கு வெளியே நிறுத்திவிட்டு, சைக்கிளை உள்ளே நிறுத்திக்குங்க. இல்லேன்னா, சைக்கிளை உங்க வீட்டுக்கு


இந்தக் காலத்துப் பசங்க..!

 

 ராம்குமார் வீடு தேடி வந்து அழைப்பிதழ் வைத்தபோது, தாமோதரனுக்கே பிரமிப்பாகத் தான் இருந்தது. கனகாவைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்… திடீரென ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட சாலையைப் போல அவள் கண்கள் விரிந்திருந்தன. படபடவெனக் கேள்விக் கணைகளை வீசி, அவனைத் துளைத்தெடுத்தாள். ‘‘தி.நகர்ல இடம் கிடைக்கிறது குதிரைக் கொம்பாச்சே… எப்படிப் புடிச்சே?’’ ‘‘தெரிஞ்சவர் மூலம் வந்தது. நல்ல சான்ஸ்… விடக்கூடாதுன்னு ஆபீஸ்ல லோன் போட்டு வாங்கிட்டேன் டீச்சர்!’’ ‘‘காலி கிரவுண்டா?’’ ‘‘இல்லே டீச்சர்! பழைய பில்டிங்தான். முழுசும் இடிக்காம, கொஞ்சம்


ஆபரேஷன் தருமன்

 

 ‘‘வெங்கட்!’’ ‘‘சார்?’’ ‘‘அவங்க எத்தனை மணிக்கு வர்றாங்க?’’ ‘‘பதினோரு மணிக்கு சார்!’’ ‘‘மறுபடியும் போன் செய்தாங்களா?’’ ‘‘ஆமா சார்… சரியா பதினோரு மணிக்கு இங்கே வந்துடறதாச் சொன்னாங்க!’’ ‘….’ ‘‘என்ன சார் யோசிக்கிறீங்க?’’ ‘‘ஒ… ஒண்ணுமில்லே…’’ ‘‘புரியுது சார். சங்கடப்படாதீங்க. அவனவன் பொண்டாட்டிக்கு ஒட்டியாணமும் சின்ன வீட்டுக்கு நெக்லஸ§ம் செய்து போடறதுக்கு லஞ்சம் வாங்கறான். நீங்க ஒரு உயிரைக் காப்பாத்தத்தானே வாங்கறீங்க? தப்பில்லை சார்!’’ ‘‘சொந்தப் பொண்டாட்டியின் உயிரைக் காப்பாத்தன்னு சொல்லு!’’ ‘‘அதனால என்ன சார்… உங்களையே


அக்கா ஆடிய பல்லாங்குழி!

 

 ‘‘அடடே! வாப்பா சந்தோஷ். எப்படி இருக்கே?’’ என்று உற்சாகமாக வரவேற்றார் அக்காவின் மாமனார். ‘‘நல்லா இருக்கேங்க’’ என்றான். ‘‘அப்பா, அம்மா, பாட்டி எல்லாம்..?’’ ‘‘நல்லா இருக்காங்க. நீங்க எல்லாம் எப்படி இருக்கீங்க?’’ ‘‘எங்களுக்கு என்னப்பா… உன் அக்கா வந்ததுல இருந்து எந்தக் குறையும் இல்ல. ஏன் நின்னுட்டே இருக்கே… சொன்னாதான் உட்காரு வியா?’’ ‘‘சேச்சே! அக்காவைப் பார்க்க-லாம்னு…’’ என்றபடி அவரருகே அமர்ந் தேன். ‘‘காட்டாமலா போயிடு-வோம். சந்தியா… சந்தியா…’’ என்று குரல் கொடுத்தார். ‘‘வந்துட்டேன் மாமா’’ என்று


நல்ல புள்ள… நல்ல அம்மா…

 

 ‘‘நல்லா யோசிச்சு தான் சொல்றியா?’’ ‘‘ஆமாங்க.’’ ‘‘உன்னைவிட்டு அவன் இருந்ததே இல்லையே!’’ ‘‘இப்படிச் சொல்லியே எத்தனை நாளைக்கு தான் எங்கே போனாலும் அவனைக் கூட்டிக் கிட்டே போறது? அவனுக்கு ஏழு வயசு ஆகுதுங்க. இதுவே ரொம்ப லேட். இனிமேலாவது பழக்கப் படுத்தணும்.’’ ‘‘எனக்கு ஒண்ணுமில்லே. அவனைப் பாத்துக்க நான் ரெடி. ஆனா, அவன் இருப்பானா என்கிட்ட? அம்மா நம்மளை விட்டுட்டு தங்கச்சியை மட்டும் கூட்டிட்டுப் போறாங்கன்னு ‘ஃபீல்’ பண்ணப் போறான்.’’ ‘‘அதெல்லாம் ஒண்ணும் ‘ஃபீல்’ பண்ண மாட்டான்.