கதையாசிரியர் தொகுப்பு: ஆதிலட்சுமி சிவகுமார்

4 கதைகள் கிடைத்துள்ளன.

முகாமில் இருப்பவன்

 

 கைத்தொலைபேசி தலைமாட்டில் கிணுகிணுத்தது. வலதுகையை போர்வைக்குள்ளால் வெளியேவிட்டு அதைஎடுத்து அழுத்தி, யாரென்று பார்க்காமலேயே காதில்பொருத்தினான் வேந்தன். “என்னடா நித்திரையே…குழப்பிட்டன்போல……” “இல்லதனுக்கா…அப்போத முழிச்சிட்டன்….எழும்பித்தான் என்ன செய்யிறதெண்டுபோட்டு சும்மா படுத்திருக்கிறன்…..சொல்லுங்கோ……” “உப்பிடியே படுத்து படுத்து கிடந்து என்ன செய்யப்போறாய்?…அம்மாவோடை கதைச்சனியே…..” “இல்ல….” “ம்…அதுகள் உன்னை இஞ்ச அனுப்பிப்போட்டு…அங்கை என்னபாடுபடுங்கள்…ஒருக்கா ரெலிபோன் எடுத்துகதைச்சால் என்னடா?….” “இஞ்சயிருந்து கதைக்க கனக்ககாசு வெட்டுமக்கா….அவைக்கு என்ரநிலைமை விளங்காது..போன் எடுத்தால் வையாயினம்…” “அதுக்காக கதைக்காமல் இருக்கிறதே…அதுசரி காலமை என்ன சாப்பாடு….” “இன்னமும் கட்டிலைவிட்டு எழும்பேல்லை…பிறகு என்ன சாப்பாடு


அகதியின் பயணம்

 

 கண்வெட்டாமல் அவன் இருட்டையே பார்த்தபடி படுத்துக்கிடந்தான். நேரம் என்னவென்று கூட உத்தேசி்க்க முடியவில்லை. பக்கத்துக்குடிசையில் ஒரு குழந்தையின் அழுகுரல் ஒரு குட்டிப்பூனை கத்துவதுபோல ஈனஸ்வரமாக கேட்டது. அந்தக்குழந்தை ஏன் அழுகிறது என நினைத்தான். குழந்தை பசியில் அழலாம். அதன் தாய் பாலூட்டமுடியாமல் இருக்கலாம். காய்நத பாண்துண்டையும் சீனியில்லாத வெறுந்தேநீரையும் அந்தத்தாய் உணவாக உட்கொண்டிருக்கலாம். எப்படி அழுகின்ற குழந்தைக்கு அவள் பாலூட்ட முடியும். அவனுடைய குழந்தைகள் இரண்டும் நன்றாக தூங்கிக்கொண்டிருந்தன. அஅவனுடைய மனைவி ஐானகி இன்னும் இரண்டு மாதங்களில்


புதிய மனுசி

 

 நிலவின் ஒளியில் கூரைத்தகரங்கள் பளபளத்தன. அவள் தன் உள்ளங்கைகளை ஒருதரம் தடவிப் பார்த்தாள். கரகரப்பாய் காய்த்தபடி கைகள். தன் கைகளால் மண்வெட்டியும் பிக்கானும் பிடித்து அவள் உழைத்த உழைப்பின் அறுவடைதான் இந்தக் தகரங்கள் என நினைத்துப் பெருமைப் படுபவளாய்.. அவள் முகம்.. ‘இந்தப் பிஞ்சுகள் ரெண்டும்.. மழையிலையும்.. குளிரிலையும் விறைக்கக் குடாது..” குழந்தைகளைத் திரும்பிப் பார்த்தாள். பாயைவிட்டு விலகிப்போய் ஓரமாய் தூங்கிக்கொண்டிருந்தார்கள்… மூத்தவள் ஐஸ்வர்யா அச்சில் வார்த்த மாதிரி தகப்பனையே போன்று அகலிகா கொஞ்சம் கறுப்பு. ஆனால்


ஒரு பயணப்பொழுது

 

 பனைவெளியூடாக நாங்கள் சென்றுகொண்டிருந்தோம். மணற்தரையில் வாகனச் சில்லுகள் நகர்வதற்கு அடம்பிடித்தன. ‘யோகன் ரைக்கரர் பாதையைவிட்டு விலகாம ஓடு…” ஓட்டுநருக்கு எங்களோடு வந்தவர் சொன்னார். “ஏன் அப்பிடிச் சொல்லுறியள்…” “;அப்பாவித்தனமாகக் கேட்ட என்னைப் பார்த்து அவர் புன்னகைத்தார்.”இந்தப்பக்கம் எல்லாம் ஆமி இருந்தவன்… ஏராளமான புதைவெடிகளட இருக்கும்… பாரத்துக்கு ஏற்றமாதிரி வெடிக்கிறதுக்கு வைச்சிருப்பான்” கண்ணாடியூடாக வெளியே பார்த்தான். எங்கும் பனைமரங்கள் காயப்பட்டவை. கருகியவை, கழுத்துமுறிந்தவை.. போரின் வடுக்களை அவையும் சுமந்திருந்தன. வீடுகள் அதிகமாய் இல்லை…. இருந்தவைகளும் கற்குவியல்களால் இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து