கதையாசிரியர் தொகுப்பு: அ.பாண்டியன்

3 கதைகள் கிடைத்துள்ளன.

‘டை’ அணிந்தவன் கணேசன் இல்லை

 

 என் கைப்பேசியின் பெயர் பட்டியலைத் திறந்து ‘ G ’ எழுத்தைத் தட்டினால் மூன்று கணேசன்கள் வந்து வரிசை பிடித்து நிற்கின்றனர். முதலாவது கணேசன் என் மகளின் டியூசன் ஆசிரியர். ‘வாவாசான் இன்டெலெக்’ டியூசன் சென்டரை நிர்வகிக்கிறார். இரண்டாவது கணேசன் என் பழைய தோழன். ஆரம்ப பள்ளியில் இருந்து பழக்கமானவன். மூன்றாவது கணேசன் யாரென்று தெரியவில்லை. எப்போதோ பதிவு செய்த அந்த நபரை ஞாபகப்படுத்த முடியவில்லை. இன்று காலை நான் பக்சன் பேரங்காடியில் நீண்ட இடைவெளிக்குப் பின்


சூனியக்காரனின் பூனை

 

 கிழக்கு நோக்கி சட சட என சரியும் மெர்தாஜாம் மலை நிதானமாக ஒரு சமவெளியை அடையும் போது அந்தக் கிராமத்தின் தொடக்கம் தெரியும். முதன் முதலில் அங்கு வந்து குடிசை போட்டவன் யார் என்று இன்று யாருக்கும் தெரியாது. அது பழங்கதை. படிப்படியாக சுமார் ஐம்பது அறுபது குடும்பங்கள் நிரந்தரமாக அங்கே வசிக்க ஆரம்பித்து விட்டன. சின்னதும் பெரியதுமாக வீடுகள்… குடிசைகள்… இஷ்டப்பட்ட திசையைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தன. மின்சாரமும் குழாய் நீரும் முழுமையாகக் கம்பத்தை இன்னும்


குற்றம்

 

 இரவும் அமைதியும் எங்கும் பரவி கிடந்தன. மஞ்சள் புள்ளிகளாக விண்மீன்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக மின்னிக்கொண்டிருந்தன. அந்த செம்பனைக் காட்டுக்கு சற்று தூரத்தில், நெடுஞ்சாலையில், வாகனங்கள் சீறிக் கொண்டு ஓடும் சத்தம் சன்னமாக அவ்வப்போது கேட்டு மறைந்தது. அந்த மோன அமைதியைக் கெடுத்துக் கொண்டு மோட்டார் சைக்கில் ஒன்று ‘ட்ரு….ட்ரு’ என்ற சத்தத்தோடு வருவது கேட்டது. தொடர்ந்து, வீரா கடமை உணர்வோடு குரைத்தது. செல்லதுரை சன்னல் சீலையை கொஞ்சமாக விலக்கி, நிரந்தரமாக இருந்த சிறிய இடைவெளி வழி பார்த்தான்.