கதையாசிரியர் தொகுப்பு: அ.செ.முருகானந்தன்

7 கதைகள் கிடைத்துள்ளன.

சிங்கக்கொடி சிரித்தது

 

 (1950ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சைக்கிள்களும் ஆள்களுமாக சுமார் ஒரு மைல் நீளமுள்ள ஊர்வலம் அது. முழுவதும் சிங்களவர்கள். “ஜயவிஜயீ பவா” என்று எழுதிய ஒரு கொடியை ஒருவன் ஊர்வலத்துக்கு முன்னே பிடித்துக் கொண்டிருந்தான். அதன் பின்னால் “2000 வருஷங்களாக இலங்கை மக்களின் சொந்தக் கொடி சிங்கக்கொடி” என்று பெரிய எழுத்தில் எழுதிய சீலையை இருவர் சேர்ந்து உயர்த்திப் பிடித்திருந்தார்கள். இப்படி ஊர்ந்துபோகும் ஊர்வலத்தை அவதானித்துக் கொண்டு ஒரு


தளரா வளர் தெங்கு

 

 (1971 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கொழும்பிலிருந்து காலிவரை பெரும் பகுதியும் கடற்கரை ஓரமாகவே நீண்டு கிடக்கும் காலி வீதியில் வெள்ளவத்தை நகர எல்லைக்குள்ளாக காலி வீதியையும் கடற்கரை ரயில் பாதையையும் இணைக்கும் ஒரு குறுக்கு “லேன்” (சிற்றொழுங்கை) முகப்பில் இருப்புப் பாதை கடந்து அதற்கு அப்பால் நீண்டு கிடக்கும் கடற்கரையில் அலைகள் மோதும் கருங்கல் வரிசைக்குள் சிக்குண்டு நின்றது ஒரு தென்னை மரம். அதற்கு இரு பக்கமும் நெடுந்தூரம்


பழையதும் புதியதும்

 

 “ஏய்! ஏய்!” என்று இரண்டு அதட்டல் போட்டு மாடுகளைத் தட்டிவிட்டான் கார்த்திகேசு. ஒரு நிலையில் நின்று அலுத்துப்போன மாடுகள் உற்சாகத்தோடு முதலில் கொஞ்சத் தூரம் ஓடின. இந்தச் சமயம் கார்த்திகேசு என்பக்கம் திரும்பி, பெருமை பொங்க ஒரு கம்பீரப்பார்வை பார்த்தான். அதற்கு ஒன்றும் சொல்லாம லிருந்தால் நல்லாயிருக்காதல்லவா? “அவசரமில்லை, அண்ணே! ரயிலுக்கு நேரமிருக்கு ; மாடுகள் மெள்ளப் போகட்டும். ஏது, சோடி வாய்த்துவிட்டது போலிருக்கே உனக்கு!” என்று சும்மா சொன்னேன். கால்மைல் தாண்டியதும் நடக்கும் சங்கதி எனக்குத்


மாடு சிரித்தது!

 

 பல நாட்களுக்குப் பிறகு வண்டிக்காரக் கார்த்திகேசுவை மறுபடியும் சந்தித்தேன். ரயிலடிக்கு யாரையோ கொண்டுபோய் விட்டுவிட்டு வெறும் வண்டியோடு வீடு திரும்பிக் கொண்டிருந்தான். வழியில் என்னைக் கண்டதும் வண்டியை நிறுத்தி என்னை ஏறிக்கொள்ளச் சொன்னான். 4 1/2, மைல் தூரத்துக்கும் கால் – கோச்சில் போக நடந்து கொண்டிருந்த நான் இந்த வசதியைத் தப்ப விடுவேனா? ஏறிக் கொண்டேன். கார்த்திகேசுவின் வண்டியில் ஏறினால் என்னால் பேசாமலிருக்க முடிவதில்லை. வண்டியில் உட்கூடாரத்திலே ஒரு ஓரமாக ஒட்டியிருந்த எலக்ஷன் நோட்டீஸ் ஒன்று


காளிமுத்துவின் பிரஜாஉரிமை

 

 இலங்கையின் சமூக பொதுவாழ்வில் காளிமுத்து பிரமாத சேவைகள் புரிந்துவிட்டதாக அப்படி ஒன்றும் பிரமாதப்படுத்தவில்லை. அதனால் இலங்கையின் கௌரவப் பிரஜையாக அரசாங்கம் அவனை ஏற்றுக்கொள்ளவுமில்லை. ஒரு சாதாரண தோட்டத் தொழிலாளியாகத்தான் இலங்கை மண்ணில் அவன் வாழ்ந்தான். காளிமுத்துவின் குடும்பம் ஒரு தலைமுறையல்ல, பல தலைமுறையாக இலங்கையில் வாழ்ந்து மலைநாட்டை வாழவைத்தது. அந்த மூதாதைகளின் வியர்வையில் செழித்து வளர்ந்துதான் இன்று ராஜகிரித் தோட்டம் கம்பீரத்தோற்றங்கொண்டு குளு குளுவென்று நிற்கிறது. ஏன், உண்மையைச் சொன்னாலென்ன, மலைநாடு இன்றைக்கெல்லாம் மலைபோல நிமிர்ந்து நிற்பது


புகையில் தெரிந்த முகம்

 

 சாப்பிட்டுவிட்டு ஒரு சுருட்டைப் பற்றவைத்துக்கொண்டு சாய்வு நாற்காலியில்சாய்ந்தேன். மேலே எலெக்ட்ரிக் லைட் பிரகாசமாக எரிந்து கொண்டிருந்தது. இரவு பத்து மணிக்குமேலிருக்கும். என் அறையிலும் வெளியிலும் ஆழ்ந்த அமைதி குடிகொண்டிருந்தது. புகைப் போட்ட திறம் யாழ்ப்பாணத்துப் புகையிலை (என்று தான் கடைக்காரன் சொல்லித் தந்தான்) குழப்பம் செய்யாமல் நன்றாக எரிந்தது. எனது சொற்ப நேர விறுவிறுப்பு இன்பத்துக்கு அந்தப் புகையிலைச் சுருட்டு தன் உடலையே அக்கினிக்கு அர்ப்பணித்துக் கொண்டது. இந்தக் காலத்திலே பிறர் நலத்துக்காக இம்மாதிரித் தியாகம் செய்யும்


வண்டிற்சவாரி!

 

 1 எழுத்தாளர் அ.செ.முருகானந்தன்இறைப்பு ஆரம்பமாயிற்று. ஆளை ஆள் தெரியாத இருட்டு. துலாவில் இரண்டுபேர் ஏறினார்கள். பட்டைக் கொடியை ஒருத்தன் பிடித்தான். பரந்து கிடந்த புகையிலைத் தோட்டத்துள்ளே இன்னொருத்தன் நுழைந்தான். துலா மேலுங் கீழுமாக ஏறி இறங்கிற்று. ‘ஆறுமுக வேலனுக்கண்ணனாமடி’ என்று துலாவில் நின்ற ஒருத்தன் ஆரம்பித்தான். மற்ற இருவரும் அதற்குப் பிற்பாட்டு இழுத்தார்கள். இந்த அமளியில் பக்கத்தே பூவசரசு மரத்தில் அரைக்கண் உறக்கம் உறங்கிக் கொண்டிருந்த சேவல் கோழி ஒன்று சிறகடித்துக் கூவியது. அதைப் பின்பற்றி அந்த