கதையாசிரியர் தொகுப்பு: அஸ்வகோஷ்

9 கதைகள் கிடைத்துள்ளன.

காசுக்காக அல்ல

 

 எக்ஸ்பிரஸ் பஸ், ஸ்டாண்டில் வந்து நின்றது. ‘ரிக்ஷா சார்…..ரிக்ஷா… ‘ ‘சார் ரிக்ஷா…. ‘ ‘ரிக்ஷா வேணுமா சார், ரிக்ஷா… ‘ தளத்தில் வந்து இறங்கும் விமானத்தைச் சுற்றி பெட்ரோல் வண்டிகளும், டிரக்குகளும் சூழ்வதைப் போல சைக்கிள் ரிக்ஷாக்கள் சூழ்ந்தன. மாணிக்கம் இடது கையால் ஹாண்பாரைப் பிடித்தபடி பஸ்ஸிலிருந்து இறங்கும் முகங்களைப் பார்த்துக்கொண்டிருந்தான்.டாக்காகவும்….நாசுக்காகவும்….வெள்ளை சள்ளையுமாகவும்……பேன்ட்டும் சூட்டுமாகவும் அவன் கண்கள் தேடிக்கொண்டிருந்தன. ‘ரிக்ஷா சார்…. ‘ மல்லிகைப் பூ நிறத்தில் சவரன் மார்க் வாயில் வேஷ்டியும், முழுக்கை டெரிகாட்டன்


பாசிகள்

 

 நண்பன் ஒருத்தன் டாக்ஸி ஓட்டுகிறான். சொந்த ஊர்க்காரன். மெட்ராஸ் போனால் பார்க்காமல் வரமாட்டேன். வண்டியிலேயே உட்கார்ந்து கதை பேசி, அரட்டை அடித்து பொழுதைப் போக்கிக் கொண்டிருப்பேன். முன்சீட்டில் உட்கார்ந்து கொள்வேன். எப்போதும் போல அவன் பின்னால் சவாரி ஏற்றிக்கொள்வான். எனக்காகவே ரெண்டு பேர் சவாரியாக கிடைக்கிறதா என்று தேடிப்பார்த்து ஏற்றிக்கொள்வான். மூணுபேர் வந்தால் ‘வேண்டாம் சார், வண்டி வராது ‘ என்று சொல்லி விடுவான். கொஞ்சம் குஷாலான பேர் வழி அவன். வாய்த்துடுக்கு. முன் பின் தெரியாத


மனப்பான்மைகள்

 

 திருமணத்துக்குப் போயிருந்தேன். நண்பனது திருமணம், நெருங்கிய நண்பன்தான். ஆனால் பார்த்து மூன்று ஆண்டுகளுக்குமேல் ஆகிவிட்டன. மறக்காமல் பத்திரிகை அனுப்பியிருந்தான். கடைசி வரைக்கும் புறப்படுவதாகவே உத்தேசம் இல்லை. பொருளாதார நெருக்கடிதான். என்னோடு படித்தவர்கள் எல்லோரும் ஒவ்வொரு உத்தியோகத்துக்குப் போய்விட்டார்கள். நான் மட்டும் விதி விலக்கு. எனக்கு மட்டும் வேலை கிடைக்கவில்லை. பெரிய இடத்து சிபாரிசோ, லஞ்சம் கொடுக்குமளவுக்கு ஒரு பெருந்தொகையோ என்னிடமில்லாதது அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். எங்கெங்கோ பொறுக்கிப்போட்டு வண்டிச் சார்ஜை தயார் செய்துகொண்டு புறப்பட்டு வந்தேன்.


சாம்பல் குவியலில்

 

 காஸினோ தியேட்டர். எண்பத்தி நாலு பைசா டிக்கெட் க்யூ; மேட்னிக்காக… தலைக்கு மேலே வெய்யில் கொளுத்துகிறது. பிளாட் ஃபாரம் சுடுகிறது. தார்ச்சாலை கொதிக்கிறது. சாலையில் சந்தடி அதிகம் இல்லை. பிரம்பு நாற்காலிக் கடை; ரேடியோ ரிப்பேர்க் கடை; வாட்ச் ரிப்பேர்க்கடை எல்லாமே தூங்கி வழிகின்றன. பான் புரோக்கர் கடையில் அட்டிகைக்கு பிரஷ் போட்டு தேய்த்துக் கொண்டிருக்கிறான். பக்கத்திலிருந்தவர் கைக் கடிகாரத்தைப் பார்க்கிறேன்… மணி ரெண்டரையாகி யிருந்தது. ரெண்டே முக்காலுக்காம் டிக்கெட். படம்… ‘ரோமியோ அண்ட் ஜ்ஊலியட். ‘


நான் பண்ணாத சப்ளை

 

 என் புத்தி எதிலுமே இந்த மாதிரிதான்—துப்புக்கெட்ட புத்தி பதினைந்து ரூபாய் என்றதும் தலையாட்டி விட்டு வந்தாய் விட்டது. கொஞ்சம் பேசியிருந்தால் எப்படியும் குறைத்திருப்பான். பன்னிரண்டு ரூபாய்க்கு முடித்துவிட்டிருக்கலாம். கூட இருந்தவர்கள் என்ன சொல்கிறார்களோ அதுவே சரியென்று ஒப்புக்கொள்வதாக ஒருவார்தை நாக்கு நீட்டி சொன்னது குற்றமாகப் போய்விட்டது. உள்ளூர்காரனுக்கு வஞ்சனையா செய்வான் ? நாயத்தை பேசுகிறமாதிரி வாய் கூசாமல் சொல்லி விட்டார்கள். பதினைந்து ரூபாயாம் ‘ எலக்ஷன்காரன் இருபத்தைந்து கொடுத்தானாம். அப்படித்தான் வீடு என்ன பெரிய வசதியா….முன்புறம் ஒரு


கடன்

 

 கொண்டா ரெட்டியாரிடம் ஒரு ரூபாய் கடன் வாங்குவதானால் கூட பத்து நடை நடந்தாக வேண்டும் என்பது ஊரில் எல்லோருக்கும் அத்துப்படியான விஷயம். ஊரில் பெரிய புள்ளி அவர்தான். பயிர்வழி, வெளிவிவகாரம், நாலு பெரிய மனுஷாள் சாவகாசம் எல்லாவற்றிலுமே ஒசத்தியும் அவர்தான். ரெண்டடுக்கு மெத்தை வீடும் சுத்துக்காட்டில் ஆளுயரமதில் சுவரும், அதைப்போல மூணு மடங்கு உயரமுள்ள கனமான வைக்கோல் போரும் ஊரில் வேறு யாருக்கும் கிடையாது. எல்லாம் கால் காணி, அரை காணிகள் காலாணி குடிசைகள். நெல்லு வட்டிக்கும்,


குருவி வர்க்கம்

 

 சிலுசிலுக்கும் காலைக் காற்று. சூடேறி வரும் வெளுப்பு வெயில். மொட்டைமாடியில் நெல்மணிகள் காயப்போட்டிருந்தார்கள். ‘கீச்கீச் ‘ சென்று சிட்டுக்குருவிகள், நெல்மணிகளைக் கொறித்துக் கொண்டிருந்தன. காச்மூச்சென்று சப்தம். சின்ன சலனம் ஏற்பட்டால் கூடப் போதும், கும்பலாக சிறகடித்துப் பறந்து சென்றன; பிறகு தயங்கித் தயங்கி, கட்டைச்சுவரில் உட்கார்ந்து, கூரையில் உட்கார்ந்து மறுபடியும் நெல்மணிகளை வந்து கொறித்தன. ஒரு பக்கம் நெல் பரப்பின் அடுத்த முனையில் ஒரு குருவி–பார்வைக்கு சிட்டுக் குருவி மாதிரியேயிருந்தது. ஆனால் சிட்டுக்குருவியில்லை. கொஞ்சம் வித்யாசம். கழுத்தில்


தற்செயல்

 

 நாளைய எட்டாம் நாள் கலியாணம். இந்நேரம் தாலி கட்டி முடிந்திருக்கும். வரிசை வைத்து காப்புக் களைந்து விட்டிருப்பார்கள். பந்திக்கு ஆயத்தம் செய்து கொண்டிருந்தாலும் இருக்கலாம். சாப்பிட்டுக் கொண்டிருந்தாலும் இருப்பார்கள், புதுக்கயிறு கழுத்திலே ஏறி விட்டிருக்கும். பச்சை மஞ்சள் பூச்சோடு பசபசவென்று தவழும், தங்கக் காசும் நாணலும் நெஞ்சிலே கொஞ்சும். கலியாணத்துக்காக செய்த புது நகைகளோடு கூரைப் புடவையோ, அதைக் களைந்து விட்டுப் பட்டுப் புடைவையோ கட்டிக் கொண்டு நிற்பாள். ஒன்றும் புரியாமல் சுற்றிச் சுற்றி வருவாள். பெருமிதத்தால்


பக்கவாத்தியம்

 

 பாழாய்ப் போன செருப்பு நேரங்காலம் தெரியாமல் அறுந்துத் தொலைத்தது. சந்தர்ப்பம் தெரியாமல். கடைத்தெருவில். நாலுபேருக்கு மத்தியில்; விட்டுவிடவும் மனமில்லை. ஒரு நாலணா செலவு செய்தால் இன்னும் ரெண்டு மாசம் உழைக்கும். கழற்றிக் கையில்தான் எடுத்துக் கொண்டேன். யாராவது பார்த்தால் அசிங்கமாக….அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை. செருப்பு என்னுடையதுதானே ‘ அதன் அருமை எனக்கல்லவோ தெரியும்’. நகரத்தின் மையப் பகுதி. நான்கு தெருக்களும் கூடும் நெருக்கமான சந்திப்பு. மார்க்கெட், கடைத்தெரு, பஜார், எல்லாம் அதுதான். சந்திப்பின் μரம் தண்ணீர்த் தொட்டிக்குப்