கதையாசிரியர் தொகுப்பு: அப்பாதுரை

42 கதைகள் கிடைத்துள்ளன.

தைவாதர்சனம்

 

 ஜகதஃப் பிதரௌ, வந்தே பார்வதீ பரமேஸ்வரம்னு ஸ்துதியும், முடிஞ்ச வரைக்கும் பாத்துக்கோடா மூஷிகவாகனானு சங்கல்பமும், மனசாரப் பண்ணிண்டுப் பிரதாபத்தை ஆரம்பிக்கிறேன். வியாக்யானமும் சம்பாஷணையும் ஏ சர்டிபிகேட்டா எசகுபிசகா இருக்கலாம், பால்யருக்கு உசிதமில்லேனு பெரியவாள்ளாம் பவ்யமா எடுத்துச் சொல்லுங்கோ. கேக்கலேனா, செவிட்டுல ரெண்டு சாத்துங்கோ, குத்தமில்லை, பகவான் ரக்ஷிப்பார். இந்த காலத்து குழந்தைகளுக்கெல்லாம் தெய்வ நம்பிக்கை பக்தி எதுவுமில்லே, கோவிலுக்குப் போச்சொன்னா வக்ரம் பேசறானு சொல்றோமே தவிர, பாருங்கோ, பதினஞ்சு பதினாறு வயசானாப் போறும், பொண்களும் சரி, பையன்களும்


ஸ்மரண யாத்ரை

 

 ஜகதஃப் பிதரௌ, வந்தே பார்வதீ பரமேஸ்வரம்னு ஸ்துதியும், முடிஞ்ச வரைக்கும் பாத்துக்கோடா மூஷிகவாகனானு சங்கல்பமும், மனசாரப் பண்ணிண்டுப் பிரதாபத்தை ஆரம்பிக்கிறேன். வியாக்யானமும் சம்பாஷணையும் ஏ சர்டிபிகேட்டா எசகுபிசகா இருக்கலாம், பால்யருக்கு உசிதமில்லேனு பெரியவாள்ளாம் பவ்யமா எடுத்துச் சொல்லுங்கோ. கேக்கலேனா, செவிட்டுல ரெண்டு சாத்துங்கோ, குத்தமில்லை, பகவான் ரக்ஷிப்பார். மரண யாத்ரை தெரியும். அதான் பாடறாளே, நாலு பேருக்கு நன்றினு. சினிமாப் பாட்டு பாடினா எல்லாருக்கும் ஞானம் வந்துடறது. ஸ்மரண யாத்ரை தெரியுமோ? ஒரு எடத்துக்குப் போகணும்னு நெனக்கறோம்..


வந்தவளை – எங்கள் சவடால் 2K+11

 

 வேகமாக நடந்த புங்கவர்மனைத் தொடர்ந்தாள். “மன்னா.. மன்னா” “என்னா?” “நான் சொல்வது காதில் விழாதது போலச் செல்கிறீர்களே? என் கணவருக்கு உறவோ என்று நினைத்துவிட்டேன்.. எனக்கு உதவி செய்வீர்களா?” “பெண்ணே.. அரக்கன் கணவன் காப்பாற்று போன்ற வசனங்களெல்லாம் கூத்துக்குப் பொருந்தும், சோத்துக்குப் பொருந்தாது. ஆளை விடம்மா” “உங்களால் மட்டுமே முடியும் மன்னா, மறுக்காதீர்கள்” “இது போல் எத்தனை பேரிடம் சொல்லியிருக்கிறாய் பெண்ணே?” “ஆறு பேரிடம் மன்னா” “பிறகென்ன வசனம் வேண்டிக் கிடக்கிறது? உங்களால் மட்டுமே முடியும்..” என்று


அதர்மு மாமா

 

 மூஷிகவாகனா, முடிஞ்ச வரைக்கும் காப்பாத்துடாப்பா. ஸ்மச்ரம்னா தேவபாஷைலே மீசைனு அர்த்தம். பொம்னாட்டிகளுக்கு அந்தக்காலத்துலே மீசை உண்டாக்கும். மீசைக்குச் சின்னதா பட்டுக் குஞ்சலம் கட்டி அலங்காரம் பண்ணுவா. சர்வமும் ஒரு நா காக்கா ஊஷ்னு காணாமப் போயிடுத்து. ஸ்த்ரீகளுக்கு ஸ்மச்ரம் போன கதைதான் இன்னக்குப் பிரசங்கம். கீர்த்தனாரம்பத்துலே டிஸ்கி ஒண்ணைச் சொல்லிடறேன். எசகு பிசகா நெறைய விஷயம் வரும். பால்யரெல்லாம் படிக்கப்படாது, அப்படியே படிச்சாலும் கள்ளத்தனமா படிக்கணும். யுகாரம்பத்திலே மாண்டவியர் மாண்டவியர்னு ஒரு மகரிஷி இருந்தார். அவருக்கு அதிசுந்தரியா


நாகூர் 2012, கசம் சே!

 

 என் அம்மாவின் அறுபதாவது பிறந்த நாளையொட்டி ஊர்ப்பக்கம் சென்றிருந்தேன். சாதாரணக் கோவிலில் கொண்டாடினால் சரியாக இருக்காது என்று, அறுபதாவது பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காகவே ஒரு கோவில் இருப்பதாகச் சொல்லி அங்கே கொண்டாடுவதாக ஏற்பாடு. கடலூர் தாண்டி இருக்கும் அந்த ஊரின் பெயர் நினைவுக்கு வர மறுக்கிறது. அபிராமி அம்மன் கோவில், மார்க்கண்டேயன் கோவில் இருக்குமிடம். ஆ! நினைவுக்கு வந்து விட்டது, திருக்கடையூர். போன இடத்தில் கொஞ்சம் கூட எதிர்பாராவிதமாக ரகுவைச் சந்தித்தேன். ரகுவுடன் எனக்கு ஓட ஓட


சம்மதம்

 

 [சற்றே வளர்ந்தப் பாப்பாக்களுக்கு] டெபொசிஷன் தொடங்கக் காத்திருந்தேன். நான் சொல்லப்போகும் ஒரு கோரமான கொலையின்… ரீவைன்ட்.. தீர்மானிக்க வேண்டியவன் நானல்ல என்பதால் கோர நிகழ்வு என்று கொள்க… நிகழ்வின் விவரங்களைப் பதிவு செய்யப் போகிறார்கள். நான், என்னுடைய வக்கீல், டிஏ ஆபீசிலிருந்து இரண்டு பேர், உள்ளூர் காவலதிகாரி ஆக ஐந்து பேர் வசதியாக உட்கார்ந்துப் பேசப் போதுமான இடமில்லை. அறை அடைக்கும் வட்டமேஜையைச் சுற்றி ஒருவரையொருவர் தொட்டும் தொடாமல் அமர்ந்திருந்தோம். எனக்கு இடப்புறம் இருந்த அரசு வக்கீலுக்கு


மனதிற்கினிய மேரி டீச்சர்

 

 ருத்துவக்குடி என்ற உடைந்த சிமெந்ட் பலகையருகே காரை நிறுத்தினான் ரகு. கண்ணாடிக் கதவைக் கீழிறக்கி, பலகையருகே கைக்குழந்தையோடு நின்றிருந்தப் பெண்ணிடம் “அம்மா.. இது மேல்மருத்துவக்குடி தானே?” என்று கேட்டான். “ஆமாம்.. யாரைப் பாக்க வந்திங்க?” சொன்னான். “தெரியாதுங்களே.. தபாலாபீஸ் ஐயாட்டே கேட்டுப் பாருங்க..” என்றுத் தெருக்கோடிக்கு வழி சொன்னாள் குழந்தைக்காரி. தபாலாபீஸ் எதிரே நிறுத்தி, காரிலிருந்து கைப்பெட்டியை எடுத்துப் படியேறி வருமுன், வாசலுக்கு வந்தார் ஒரு பெரியவர். “வணக்கம். நீங்க யாரு? என்ன வேணும்? இன்னிக்கு தபாலாபீஸ்


மன விலங்கு

 

 கனவுகளின் மகிழ்ச்சியை விட, கனவுகளின் நம்பிக்கையை விட, கனவுகளின் வலி சிலருக்குப் பிடித்திருக்கிறது. என் குரோம்பேட்டை நாட்களின் அதிகம் பழகாத நண்பன் ஸ்ரீரங்கன். ஒன்பதாம் வகுப்பில் எங்கள் பள்ளியில் சேர்ந்தான். கரிய நிறம். களையான முகம். சம்மர் கட் என்று அந்த நாளில் புழங்கிய மண்டை ஒட்டிய முடிவெட்டு. பெரிய நெற்றியில் வடக்கு தெற்காக ஒரு சந்தனக்கீற்று. பெரிய கண்கள். செதுக்கி வைத்தாற்போல் உதடுகள். இலவசமாகச் சுண்ணாம்பு அப்பியது போல் பற்களில் அத்தனை வெண்மை. இதான் ரங்கன்.


பெத்தாபுர மலர் – அறிமுகம்

 

 மூஷிராபாத் க்ராசிங்கில் புது அடுக்குமாடிக் கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் பெரிய வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தோம். ஒரு படா கம்பெனியின் உள்ளூர் விற்பனை அதிகாரிகளான நானும் வத்சனும் தற்காலிக ரெட்டை நகர வாசிகள். நேன்ஸ், வெங்கட் இருவரும் மெடிகல் அட்வைசர்ஸ் என்பதால் மாதத்தில் பத்து நாள் தங்குவார்கள். எங்களுடன் தினமும் வீட்டைக் கலக்கும் உள்ளூர் வாசிகளான உமேஷ், விஜய், ரங்கன் மூன்று பேர். எப்போதாவது எங்களுடன் சேர்ந்து கொள்ளும் எங்கள் மேலதிகாரிகள் இருவர். தினமும் அரை நாள் மார்கெட்


மகிழ்ச்சி எந்திரம்

 

 மாடியிலிருந்து லியோ அவர்களைக் கவனித்துக் கொண்டிருந்தான். உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் என்று பலர் பண்ணை வீட்டில் குழுமியிருந்தார்கள். தெரிந்த முகங்களிடையே புரிந்த அன்பின் அடையாளம் விரவியிருக்கும் என்று எண்ணிய லியோவுக்கு அவர்கள் ஒருவருக்கொருவர் ஏசிக்கொண்டும் அடித்துக் கொண்டும் இருந்தது வருத்தமாக இருந்தது. வலித்தது. “நிறுத்துங்க! போதும்!” என்று கூவிக்கொண்டே அவர்களை நோக்கிச் சென்றான். லியோ ஓடி வருவதைக் கண்ட பெரிய பாட்டன் சிரித்தார். “டேய்.. நீ ஏன் இங்க வரே? போய் ஏதாவது கண்டுபிடி போ! இதெல்லாம்