கதையாசிரியர் தொகுப்பு: அனுஷ்யா ஷாம்பவி

22 கதைகள் கிடைத்துள்ளன.

ஏனோ தெய்வம் சதி செய்தது!

 

 சிவக்குமார் சிங்கப்பூர் வேலை நிமித்தம் வந்தபோது சாதாரண தினக்கூலி வேலை தான். ஊரில் நல்ல படிப்பு படித்திருந்தும் அதற்கான தகுந்த வேலை இரண்டு வருடம் தேடியலைந்து கிடைக்காததாலும், உற்றார் உறவினர் நண்பர்களின் வசை சொல்லை கேட்க சகிக்க முடியாமல்…., குடும்ப கடன் தொல்லையாலும்…., திருமணம் செய்து கொள்வதற்கு முன் சம்பாதிக்க வேண்டும் என்கிற வெறியாலும்…., இப்படி கூலி வேலைக்கு ஒப்புக்கொண்டு வந்தாகிவிட்டது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அவன் ஆங்கில திறமை மற்றும் வேலையில் துரிதமாக, காசையும் நேரத்தையும் மிச்சப்படுத்தும்படியாக


ஒரு ஜீவன்…துடித்தது!

 

 (கவனிக்க: காதல் தோல்வியா? மற்றும் வாழ்வில் பற்பல இன்னல்களா? – இக்கதையை படியுங்கள் புரியும்) தூறலாக ஆரம்பித்து. லேசான மழையாக மாறி, அது மண் வாசனையை கிளப்பியதும், இதமான குளிர்ந்த காற்றும் சேர்ந்து வீச. ஜன்னலை திறந்து வைத்து படுத்திருந்த ரவி மதிய தூக்கம் கலைந்து எழுந்து கொண்டான். சில நிமிடங்களில் மழை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க, ஒரு ரம்மியமான ஓசையில், சூழலில், ஆனந்தமாக கட்டிலிலிருந்து இறங்கி ஜன்னலை அடைந்து சிறு பிள்ளை போல் வேடிக்கை பார்த்தான்.


அந்த ஒரு முத்தம்…

 

 குறிப்பு: சுமார் 32 வருடங்களுக்கு முன் நான் வேலை பார்த்த இடத்தில் ஆங்கிலத்தில் எழுதி சிறு பரிசையும் வென்று முதன் முதலாக அந்த கம்பெனியின் மாத இதழில் வெளியான என் முதல் சிறுகதை ஆகும். தீபாவளி பண்டிகை முடிந்த மறுநாள் அது… வாசு வேலைக்கு வந்து தான் செய்ய வேண்டிய வேலையைப் பற்றி யோசிக்கலானான். அவன் ஒரு கட்டிட தொழிலாளி… நாள் சம்பளத்தில் வேலை செய்பவன்… ஒரு பீடியை பற்ற வைத்தவன், எதிரே இருந்த இரண்டு மாடியை


காலம் ஒரு நாள் மாறும்!

 

 கவனிக்க: இக்கதையில் வர்ணிக்கப்பட்டுள்ள விண்வெளி பயண தொழில் நுட்பங்கள் முற்றிலும் கதாசிரியரின் கற்பனையே…காப்பி ரைட் உள்ளது (Copy Right)…. நாசாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது! கி.பி. 2025 இந்தியப் பெருங்கடலின் நடுவில், சரியாக பூமத்திய ரேகை (Equator) பகுதியில் நடந்து கொண்டிருந்த அந்த பிரமாண்டமான வேலைப்பாடுகளை, மேலே ஹெலிகாப்டரில் இருந்து பார்த்த விக்னேஷ்வரை மெய்சிலிர்க்க வைத்தது.. சமீப காலத்தில் பிரபலமாகிப்போன இளம் விஞ்ஞானி சுதர்சனை நினைத்து மனமாற மெச்சினார். சுதர்சனுக்கு இப்பொழுது வயது இருபத்தி ஆறு தான் இருக்கும். எந்தவொரு


மனிதா!…மனிதா!!

 

 (நகர நரக வாழ்க்கையில் நகர்வது கடினமே!..) திருமணமான புதிதிலேயே சுரேஷ் தன் மனைவி கலாவை கவனித்தான்… காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றுக்கு அவள் அருந்துவது காப்பி தானா? அல்லது ஒரு 1% காப்பியோடு 99% சர்க்கரை தண்ணீரா??… காப்பியில் அவ்வளவு சர்க்கரை கலந்து இருப்பாள்!! “அதிகாலையில்… அதுவும் வெறும் வயிற்றில்… இந்த மாதிரி எல்லாம் சர்க்கரை அதிகம் சாப்பிடாதே! உடம்புக்கு ஆகாது” எவ்வளவோ முறை மண்டையில் அடித்துக் கொள்ளாத குறையாக சொல்லி பார்த்தான்… கேட்டாளா அவள்? “வாழற


அந்த இனம்… – ஒரு பக்க கதை

 

 தேர்தல் பிரச்சாரம் ஆரம்பமாகி விட்டிருந்தது…. எங்கு பார்த்தாலும் பலவித கட்சிகளின் கொடிகள்…. வண்ணங்கள்…. பிரச்சார பொன்மொழிகள்…. வாக்குறுதிகள்…. ஒரு கட்சியின் தலைவர் (பெயர், மற்றும் ஆணா பெண்ணா என்பதை அவரவர் கற்பனைக்கு!!) ஊர் ஊராகச் சென்று பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். தலைவர் என்பதால் அவருக்கு பலத்த பாதுகாப்பு இருந்தது…. எங்கு சென்றாலும் முன்னும் பின்னும் நான்கு படை வீரர்கள், இயந்திரத் துப்பாக்கியுடன் அவரை சூழ்ந்து காவல் காத்தனர்….. அவர் நடந்தாலும்…. உட்கார்ந்தாலும்…. பொதுவாக ஒருத்தருக்கு ஒரு நிழல்


நடக்காதென்பார்… நடந்துவிடும்!

 

 50 வயதில் ரவிக்குமாரின் வாழ்க்கையில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கக் கூடாதுதான்…. ஆனால் என்ன செய்வது?… உலகத்தில் நாகரீகம் வெகுவாகத்தான் மாறிப் போயிருந்தது. வாலிபத்தை முழுமையாகத் திரும்பப் பெறும் மருந்து ஒன்றை இந்தியாவில் ஒரு சித்த வைத்தியர் கண்டுபிடிக்க…. அம்மருந்து உடனேயே உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றது! அதன் காரணமாக ஆங்காங்கே சில நகைச்சுவையான சம்பவங்கள், சில சோகமான சம்பவங்கள், சில கொடூரமான சம்பவங்கள், என அவ்வப்போது நிகழ்ந்து கொண்டிருந்தது…. ரவிக்குமாரின் வாழ்க்கையில் ஒரு கொடூர சம்பவம்….


விதியோ விதி!

 

 மதிய சாப்பாட்டிற்கு பின் வெற்றிலை பாக்கை வாயில் மென்றவாறு வாசலில் வந்தமர்ந்த சுந்தரேசன், வீதியின் இருபுறமும் நோட்டமிட்டார். பின்பு வீட்டிற்குள் இருந்த சுவர் கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தார். அருகில் வந்து நின்ற மனைவி திலகவதியிடம் “என்ன இன்னும் நம்ம ஜோசியரை காணலியே?” என்றார். “அவர் கிராமத்து பக்கம் கொஞ்சம் மழை பெய்யுது போல இருக்கு பாருங்க…. கொஞ்ச நேரம் கழிச்சு வருவார்…. நீங்க உள்ளே வந்து கொஞ்ச நாழி தூங்குங்க” என்றாள் திலகவதி. வீட்டிற்குள் நுழைந்தவர், இருபது


முதலா?…முடிவா?…

 

 ‘காலங்கள் மாறும்……கோலங்கள் மாறும்.. ஆனால் இந்த சென்னையின் குப்பை கூளம் மாறாதா?’ சிங்கப்பூரில் இருந்து, பல வருடங்கள் கழித்து, நெருங்கிய உறவினர் ஒருவரின் திருமணத்திற்காக சென்ற வாசுதேவனுக்கு முதலில் தோன்றியது இதுதான். ஆனால் பிறகு தான் தெரிந்தது…. சில மனிதர்களும் மாறவில்லை என்று….. சுமதியும் மாறியிருக்கவில்லை. கடைசியாக சென்ற முறை இனிமை பூத்தாட வேண்டிய வயதில் சோகமே உருவாக காட்சி அளித்த சுமதியின் முகத்தில் இன்னும் அதே சோகம். நெருங்கிய உறவினர்கள் என்பதால், எப்போது சென்னைக்குச் சென்றாலும்


யாரைத் தான் நம்புவதோ?!

 

 பாகம் 1| பாகம் 2 ஞாயிற்றுக்கிழமை, காலை ஆறு மணி. மாமனார் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார் இன்ஸ்பெக்டர் ராஜேஷ். இரண்டு நாட்களாக சரியாக தூங்காததாலும் முந்தின நாள் இரவு மாமனாருடன் வெகு நேரம் பேசிக் கொண்டே இருந்ததாலும், அண்ணாநகர் சோமுவின் வீட்டில் செய்த வேலை களைப்பினாலும் நேரம் கழித்துத்தான் உறங்கினார். அந்தக் கடத்தல் ஆசாமி ஏதாவது ஃபோன் பண்ணி சொல்லுவான், அவனை மடக்கலாம் என்று மிக ஆவலுடன் சோமுவின் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்து பின்னர் ஏமாந்து போனதில்