கதையாசிரியர் தொகுப்பு: அகரம் செ.தர்மலிங்கம்

3 கதைகள் கிடைத்துள்ளன.

புதிய சக்தி

 

 அந்தப் பள்ளியில் நவநீதன் வாங்கி வந்த அபுடவையைப் பற்றித்தான் பேச்சாக இருந்தது. ‘டார்க் மெரூன்’ கலர் பட்டுப்புடவை அனைத்து ஆசிரியைகளையும் கவர்ந்தது. “சூப்பர் செலக்ஷன் சார்… இந்தப் புடவையைப் பார்த்ததும் உங்கள் மனைவி அசந்துருவாங்க…” என்று சாவித்திரி டீச்சர் கூறும்போது, நவநீதனுக்குப் பெருமையாக இருந்தது. “புடவையை நன்றாகத் தேர்வு செய்திருக்கீங்க… உங்க மனைவியையும் அப்படித்தானே தேர்வு செய்திருப்பீங்க…? அவங்களைப் பார்க்கணும் சார்…” என்றாள் கமலம் டீச்சர். “என் மனைவி மைதிலி அழகானவள், அறிவுள்ளவள்….. அவளும் ஆசிரியையாகப் பணிபுரிந்தவள்


அன்புத்தங்கச்சி..!

 

 வெளிநாடு சென்ற அண்ணன் முத்துப்பாண்டி. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, கிராமத்துக்கு வந்திருப்பதை அறிந்ததும் மகிழ்ச்சி அடைந்தாள் தங்கை பானுமதி. முத்துப்பாண்டி வெளிநாட்டிலிருந்து நிறைய பொருட்களும், நகைகளும் வாங்கி வந்திருப்பான். அந்த `ஓடுகாலி’ வள்ளி வருவதற்குள் நாம் முந்திக்கொள்ள வேண்டும் என்று இரு பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டாள். முத்துப்பாண்டிக்கு இரண்டு தங்கைகள். மூத்தவள் வள்ளி. இளையவள் பானுமதி. இருபத்தெட்டு வயதாகியும் வள்ளிக்குத் திருமணமாகவில்லை. பக்கத்துக் கிராமத்துக்குக் கூலி வேலைக்குச் சென்ற வள்ளி, அந்தக் கிராமத்து இளைஞனைக் காதலித்து


அம்மா மனசு

 

 பேருந்து நிறுத்தத்தில் கல்லூரிப் பெண்கள் கூட்டம். பெட்டிக்கடை அருகில் நின்று கொண்டிருந்த ஒருவர் மெல்ல நெருங்கி அங்கிருந்த ஒரு பெண்ணிடம் பேச முயன்றார். அந்த பெண் அவரை ஒரு அற்பப் பொருளாகப் பார்த்து விட்டு சற்றுத் தள்ளி போய் நின்றாள். தன் முயற்சி தோல்வி என்பதை புரிந்து கொண்ட அந்த மனிதர் மறுபடியும் பெட்டிக்கடை அருகில் போய் நின்று கொண்டார். இதே இடத்தில் டி.வி. ரிப்பேர் கடை வைத்திருக்கும் மெக்கானிக் ராம்குமார், தினசரி இந்த காட்சியைப் பார்த்துக்