கதைத்தொகுப்பு: தினமணி

592 கதைகள் கிடைத்துள்ளன.

அட்டிகை எங்கே..?

 

 அக்பருடைய ஆட்சிக்காலத்தில் தலைநகரில் பெயர் பெற்ற நகை வியாபாரி ஒருவர் இருந்தார். அவரிடம் வைர அட்டிகை செய்து தருமாறு அக்பரின் பட்டத்துராணி கேட்டுக் கொண்டிருந்தார். அக்பருடைய ஆட்சிக்காலத்தில் தலைநகரில் பெயர் பெற்ற நகை வியாபாரி ஒருவர் இருந்தார். அவரிடம் வைர அட்டிகை செய்து தருமாறு அக்பரின் பட்டத்துராணி கேட்டுக் கொண்டிருந்தார். ராணியின் வேண்டுகோளுக்கிணங்கி, அந்த நகை வியாபாரி திறமை வாய்ந்த நகைத்தொழிலாளிகளை வைத்து அட்டிகை செய்ய ஏற்பாடு செய்தார். வேலை சிறப்பாக நடந்து கொண்டிருந்தது. அட்டிகைக்கு மெருகு


மாற்றம் மட்டுமே மாறாதது!

 

 அய்யனாரு கோயிலை ஒட்டிய நிழல் மரத்திற்கு அடியில், கூட்டமாய்ப் பெண்கள் அமர்ந்திருந்தார்கள். நேரம் இன்னும் இருப்பதால் முனைக் கடையில் பாடிய எம்.ஜி.ஆர். பாடலை ரசித்துக் கொண்டு அமர்ந்து இருந்தார்கள். ஆனாலும் மனசுக்குள் எப்போதும் கும்மியடிக்கும் உற்சாகம் இல்லை. அய்யாவுச் செட்டி வயலில் இன்று கடைசி அறுப்பு. கடைசி அறுப்பு என்றால், இந்த வருடத்தின் கடைசி அறுப்பு மட்டுமில்லை, காலம் காலமாய் பலபேரின் வயிறு நிறைத்த, வளம் கொழித்த அந்த பூமிக்கே அது கடைசி அறுப்பு. நினைக்கும் போதே


பாலங்கள் அற்ற நதி!

 

 இரண்டு நாளுக்கு ஒருமுறை பிரேமா பேசுவாள். அவரது மருமகள். அப்புறம் போனை வாங்கி மகன் ரமணன் பேசுவான். அவருக்கு பிரேமாவுடன் பேசப் பிடிக்கும். “வேற ஒண்ணும் விசேஷம் இல்லியேம்மா?” என அவர் கேட்பார். “இல்ல மாமா. இதோ இவர்கிட்ட குடுக்கறேன்” என்றபடி ரமணனிடம் பிரேமா போனைத் தருவாள். சூட்சுமமான பெண்தான். நர்மதா இறந்தபோது திரும்ப ஒரு தனிமை அவரை அப்பியது. கொஞ்சம் பக்தி சிரத்தையான ஆள் அவர். நெற்றியில் திருநீறு இல்லாமல் அவரைப் பார்க்க முடியாது. காலை


சாபம் நீங்கியது

 

 ‘வள்ளிக்கண்ணுவை காணோம்’ எனும் செய்தியோடுதான் அந்த மலைக்கிராமத்தின அன்றைய பொழுது புலர்ந்தது. மேற்குமலைத் தொடர்ச்சியின் இடையே, மிக அடர்த்தியான காடுகளால் பிணைந்திருக்கும் உயரமான மலைகள் அடங்கிய பகுதி அது. கண்ணுக்கெட்டியவரை தெரியும் அத்தனை மலைகளையும் விட உயரமாய் நின்ற ஒரு மலையில், எப்போதும் மேகங்களால் சூழப்பட்டு, பகல் நேரங்கள் கூட பலசமயம் அரையிருளாகவும் ஈரமாகவும் காட்சியளிக்கும் சிறுகுடி கிராமம். அக்கிராமத்தின் உயரமான பகுதியில்தான் அந்த தொழிற்சாலை கட்டிடம் அமைந்திருந்தது. தொழிற்சாலையை ஒட்டிய விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த அபர்ணாவுக்கு


அம் மா மரம்

 

 “டேய், இரண்டு கொத்து மாவிலை பறிச்சிண்டு வாடா, வாசல் நிலைப்படியில தோரணம் கட்டணும்” என்றாள் அம்மா. ஏதோ வீட்டில் சின்ன விசேஷம். ஓடிச்சென்று, காம்பவுண்ட் சுவரில் ஏறி, கைக்கெட்டிய கிளைகளிலிருந்து மாவிலைகளைக் கிள்ளி எடுத்து வந்தேன். அக்கம்பக்கத்துலேயும், எங்கள் வீட்டிலேயும் வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, சங்கராந்தி எல்லா நாட்களுக்கும் தோரணம் அந்த மாமரத்து இலைகள்தான். மரத்துக்கு சுமார் என்ன வயதிருக்கும்? தெரியாது. எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் அந்த மரம் அங்கே உள்ளது. எனக்கு


பிருந்தாவனமும் நந்தகுமாரனும்

 

 இப்போது நீங்கள் பூவுலகின் சொர்க்கமென்று கருதப்படும் பிருந்தாவன் கார்டன்ஸில் இருக்கிறீர்கள். சற்று நேரத்துக்கெல்லாம் ஒளி வெள்ளத்தில் இந்த இடம் இருப்பதைக் காணும்போது சொர்க்கம்தானோ என்ற மயக்கமே உண்டாகும். ஆனாலும் நண்பர்களே! ஒன்று சொல்கிறேன். இதிலேயே லயித்துப் போய் உங்களை மறந்துவிடாதீர்கள். எங்கள் ‘பந்த் டிராவல் சர்வீஸை’த் தவறவிட்டால் பெங்களூருக்கு வேறு பஸ் கிடையாது! தவற விட்டால், இந்த இடம் நரகமாகிவிடும்! ’நந்தகுமார் இன்னொரு தரம் எழுதியதைப் படித்துப் பார்த்தான். பரவாயில்லை என்று தோன்றிற்று. பலர் முன்னிலையில் –


பேரம்

 

 பாஸ்கரின் குடும்பம் சற்றேரக்குறைய பாபநாசம் பட சுயம்புலிங்கத்தின் குடும்பம் போலத்தான். அவர்களுக்குள் இருக்கும் அந்த பாசம், பிடிப்பு, மகிழ்ச்சி, கட்டுக்கோப்பு, எல்லாமே சுயம்புலிங்கத்தின் குடும்பம் போலத்தான் இருக்கும். என்ன?, குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை ரெண்டு பேர் கூட. பாஸ்கர், அவன் மனைவி கனகா அவனுடைய அப்பா தணிகாச்சலம், அம்மா பாக்கியலட்சுமி, இரண்டு பெண் பிள்ளைகள் தாரணி, மீனா. பெரியவள் ப்ளஸ் டூ வும், சின்னவள் டென்த் ம் படிக்கிறார்கள். ஆக மொத்தம் ஆறு பேர். பாஸ்கரின் அப்பா


கற்றது ஒழுகு

 

 “சாயாவனம்…சாயாவனம்…, உன்னை அய்யா கையோட இட்டாரச் சொன்னாரு…” ஓட்டமும் நடையுமாக வந்த செங்கரும்பின் அழைப்பில் அவசரம் தெரிந்தது. இன்றைக்கு மூன்றாம் நாள் சாயாவனத்தின் திருமணம். நாளை மறுநாள் அந்தியில் மணப்பெண்ணுக்கு பரிசம் போட்டுவிடுவார்கள். சாயாவனத்தின் கையில் காப்பு கட்டிவிடுவார்கள். வாடகைப் பந்தல் முனுசாமி, “நாளை காலைல வந்து பந்த போட்டுடறேன்..” என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டான். நாளை மதியம் பாரவண்டி அனுப்பினால் வாடகைச் சமையல் பாத்திரங்கள் வந்து சேர்ந்துவிடும். இன்று அந்தியில் மளிகை அனுப்பிவிடுவதாகச் செட்டியார் சொல்லி அனுப்பிவிட்டார்.


எங்கிருந்தோ வந்தான்

 

 (1937ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) தென்னல் காற்று வீசுவது நின்று சுமார் ஒரு மாத காலமாயிற்று; கோடையும் கடுமையாகக் கண்டது. சில நாட்கள் சாதாரணமாகக் கழிந்தன. நான் குடியிருந்த விடுதியில், தங்கியிருந்த மாணவர்களில் அநேகர் கோடை விடுமுறைக்காகத் தத்தம் ஊருக்குச் சென்றுவிட்டனர். என் பக்கத்து அறையும் காலியாகக் கிடந்தது. அன்று ஒரு நாள்; வரண்ட காற்றோடு வந்தவர் போல ஒருவர், திடீரென என் பக்கத்தறையில் குடிவந்தார். அதிகமாக அவரை


புதிய கூண்டு

 

 1 அருவங்குளம் என்ற நாரணம்மாள்புரம் தாமிரவருணியின் வடகரையில் ஒரு சிறு கிராமம். சுற்றிலும் தோப்புத்துரவு; கண்ணுக்கெட்டிய வரையில் வயல்கள்; அதாவது, திருநெல்வேலி ஜில்லாவின் வசீகர சக்தியின் ஒரு பகுதி அது. சாயங்காலம். வேனிற்கால ஆரம்பமாகையால் இரண்டாவது அறுவடை சமீபித்துவிட்டது. பயிர்கள் பொன்னிறம் போர்த்து, காற்றில் அலை போல் நிமிர்ந்து விழுந்து, ஆகாயத்தில் நடக்கும் இந்திர ஜாலங்களுக்குத் தகுந்த, அசைந்தாடும் பொற்பீடமாக விளங்கியது. அகன்ற மார்பில் யக்ஞோபவீதம் போல் ஆற்றில் நீர் பெயருக்கு மட்டிலும் ஓடிக்கொண்டிருந்தது. நீர், ஸ்படிகம்போல்