கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: December 2013

101 கதைகள் கிடைத்துள்ளன.

செம்மண்

 

 யுக மாற்றங்களைக் காணத் துடிக்கும் புதிய சமுதாயப் பிரதிநிதிகளைப் போல கண்ணையனும், கோபாலும் அந்த வண்டிப்பாதையில் கால்களை வீசிப்போட்டு நடந்து கொண்டிருந்தனர் பாதையின் இருபுறங்களிலும் சங்கம் புதர்களும், கற்றாழைகளும், திருகு கள்ளிகளும் வரிசை வரிசையாக நின்று தனி மனித உடமைகளைக் காவல் செய்து கொண்டிருந்தன. வேலிச் சிட்டுக்கள் “”””க்விச்… க்விச்… “” என ரகசியக் குரலெலுப்பியபடி புதர்களுக்குள் விநோதமாகப் பார்த்தபடி கண்ணையன் நடந்து கொண்டிருந்தான். ஒரு கையில் அன்றைய தினசரியும் கார்க்கியின் நாவலும் இருந்தன. மறுகை ஜிப்பாவின்


வக்கிரம்

 

 “சந்தத் தோப்புக்கு எப்படிப் போவணும்?” என்று கேட்பவர்களுக்கு ஒரு சின்னப்பிள்ளைக் கூட வழி காட்டிவிடும். ஊருக்குக் கிழக்கே தள்ளி இருக்கிறது அது. புதுசாகப் பார்க்கிற வெளியூர்க்காரன் “ஆயிரம் மாடுகள் கொண்டாந்து கட்டலாம் போலிருக்குதே” என்று மூக்கில் விரல் வைத்துவிடுவான். அவ்வளவு விஸ்தாரம். அவ்வளவு மரங்கள் தோப்பைச் சுற்றிச் சின்னச் சின்ன ஒற்றையடிப் பாதைகள் நீள்கின்றன. ஒரு பாதை சின்னபாபு சமுத்திரம் ரயில்வே ஸ்டேஷன் வரைக்கும் போகிறது. பாண்டிச்சேரிக்குக் கூட குறுக்குப்பாதை ஓடுகிறது. நிலா உச்சியில் இருக்கும் போது


கடற்கரையில் ஒரு புதுவித ஜோடி

 

 கிழவி தன் கறுப்பு நிற ப்ரீமியர் பத்மினியின் பின் இருக்கையில் அமர்ந்திருந்தாள். தனியாக இருந்தாள். கதவைத் திறந்து வைத்துக் கொண்டு காற்று வாங்கிக் கொண்டிருந்தாள். தண்ணீர் ஒற்றைக் காலடியில் வைத்திருந்தாள். மெரீனா கடற்கரையில் இன்று நல்ல காற்று. தினம் இப்படி இருக்கும் என்று நம்ப முடியாது. சில மாலை நேரங்களில் கதவடைத்த அறைபோல் கடற்கரையே புழுக்கமாயிருக்கும். வெளிறிய வானத்திலிருந்து காற்றுக்குப் பதில் அனல் இறங்கும். கழுத்தும் முகமும் வேர்வையாய்ப் பெருகும். ‘ராத்திரி மழை பெய்யப் போகுது’ என்று


உழைப்பு

 

 அம்மாக்கண்ணுவின் மனதில் இளஞ்சூடு பரவியது. “”””என்னாங்குற! வெள்ளன வந்து சேரு…”” சொல்லிவிட்டு விடியலுக்கு முன் பெரியான் எழுந்து போய் நீண்ட நேரமாயிற்று. அவரசமாக வேலைகளை முடித்தவள் ‘பாழாப்போன மழ பேஞ்சு மூணு மாசமாச்சு’ என்ற முணுமுணுப்புடன் வெட்டுக்கூட்டையுடன் வெளியே வந்தாள். தென்றல் சிலுசிலுவென்று அவள் முகத்தில் பரவியது. ‘இந்த தென்னலு ஒரு மாசத்துக்கு முன்ன வீசியிருந்தா பயறு நல்லாக் காச்சிருக்கும். மாடுகளவுட்டு மேச்சிருக்க வேண்டாம்…’ நினைத்துக் கொண்டவள் இன்னும் இரண்டு நாளுகளுக்குள் ஊற்று வெட்டித் தண்ணி இறைக்காவிட்டால்


ஒப்பனை

 

 பூமிநாதன் லேசாக முனகுவது கேட்டது. “”””எப்படியோ இருக்குது?”” நளினி, பூமிநாதனின் காலின் மேல் போர்வையை இழுத்துவிட்டாள். நல்ல வேளையாக ஜுரம் இல்லை. அதனால் கவலைப்படாமல் இருந்துவிட முடியாது. மழைக்கு முன்னால் வரும் காற்று போல மாளாத துயரத்துக்கு முன்னால் வந்தது பூமிநாதனுக்கு வியாதி. அதற்கு முன்பே வந்துகுடி புகுந்தது வறுமை. எல்லா சினிமாக் கலைஞர்களையும் போல அதற்கும் முன்னதாகவே வந்து தொற்றிக் கொண்டது குடிப்பழக்கம். நளினி கைப்பையில் இருந்த சில்லறையை எண்ணிப் பார்த்தாள். தேறவில்லை. துருப்பிடித்துக்கிடந்த தகரப்


காளிங்கராயன் கொடை

 

 “”””வாங்க தம்பீ, பட்டணத்துக்குப் போனதிலிருந்து கண்ணிலே கூடக் காண முடியறதில்லே. வாங்க, இப்படிப் பாயிலே உட்காருங்கோ”” என்று அந்தப் பெரியவர் அன்போடு என்னை வரவேற்றார். அந்தி வேளை, பகல் ஒளி மறைந்து இருள் கூடிக் கொண்டிருந்தது. பெரியவர் அப்பொழுதுதான் பண்ணையிலிருந்து வீட்டிற்குத் திரும்பியிருக்கிறார். அவருடைய மருமகள் ஒரு செம்பிலே தண்ணீரும், ஒரு தட்டத்திலே வெற்றிலைப் பாக்கும் கொண்டு வந்து வைத்துவிட்டு, உள் வீட்டுக் கதவருகிலே போய்ச் சற்று மறைவாக நின்று, “”””வீட்டிலே எல்லாரும் சுகமா இருக்காங்களாக?”” என்று


வேப்ப மரம்

 

 நான் என்னவோ வேப்பமரந்தான். முன்பெல்லாம் காற்று அடிக்கும் ; என் கிளைகள் பேயாடும். மழை பெய்யும் ; வாசனை ஒன்றை விசிறுவேன். சித்திரை பிறக்கும் ; என் மலர்கள் தேனீக்களை அழிக்கும். நான் வெறும் வேப்பமரமாகத்தான் இருந்தேன். ஆனால் இப்பொழுது யோகம் அடிக்கிறது ; நான் தெய்வமாகிவிட்டேன். எனக்கு வந்திருக்கும் பெருமையை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. நாள் தவறாமல் யாராவது இங்கு வருகிறார்கள். மரக்கடை வியாபாரி ஒருவன் மட்டும் என்னை முறையாக அறுத்துப் பலகையாக்கினால் 20 பலகையாகும்


சாப விமோசனம்

 

 (ராமாயண பரிசயமுள்ளவர்களுக்கு இந்தக் கதை பிடிபாடாமல் (பிடிக்காமல் கூட) இருக்கலாம். அதை நான் பொருட்படுத்தவில்லை.) 1 சாலையிலே ஒரு கற்சிலை. தளர்ந்து நொடிந்து போன தசைக் கூட்டத்திலும், வீரியத்தைத் துள்ள வைக்கும் மோகன வடிவம்; ஓர் அபூர்வ சிற்பி பூலோகத்தில் இதற்காகவென்றே பிறந்து தன் கனவையெல்லாம் கல்லில் வடித்து வைத்தானோ என்று தோன்றும் அவ்வளவு லாகிரியை ஊட்டுவது. ஆனால் அந்தப் புதுமையின் கண்களிலே ஒரு சோகம் – சொல்லில் அடைபடாத சோகம் – பிறந்து, பார்க்கிறவர்களின் வெறும்


குளத்தங்கரை அரசமரம்

 

 இதுவே தமிழின் முதல் சிறுகதை என்றும் கருதப்படுகிறது. குளத்தங்கரை அரசமரம் என்ற ‘ஒரு சிறிய கதை’ முதலில் ஸூ.பாக்யலக்ஷ்மி அம்மாள் என்பவர் பெயரில், 1915 ஆம் ஆண்டு ‘விவேக போதினி’, செப்டம்பர், அக்டோபர் மாத இதழ்களில் இரு பகுதிகளாக (ஒரு சிறிய கதை) என அடைப்புக் குறிகளுடன் THE PEEPUL TREE NEAR THE TANK (A SHORT STORY) என்ற துணைத் தலைப்புகளுடன் வெளியானது. பார்க்கப்போனால் நான் மரந்தான். ஆனால் என் மனஸிலுள்ளதையெல்லாம் சொல்லுகிறதானால் இன்னைக்கெல்லாம்


அமெரிக்க டாலர் Vs மருதாயிக் கிழவி

 

 ஆழ்வார்குறிச்சி வங்கிக்குள் நுழைந்தாள் மருதாயிக் கிழவி. பின் கொசுவம் வைத்துக் கட்டப்பட்ட சேலை. உழைத்து உழைத்து உரமேறிய உடல். சுருக்கம் விழுந்த முகம் என அவள் இருந்தாலும் பலமான வரவேற்புக்குக் குறைவில்லை. “வாங்கம்மா வாங்க! உக்காருங்க! உங்க மகன் இந்த மாசமும் 500 டாலர் அனுப்பிட்டாரும்மா. அதை உங்க கணக்குல வரவு வெச்சாச்சு. இப்பம் செலவுக்கு எதும் எடுக்கணுமா? ” என்றார் அதிகாரி. “எனக்கு என்னய்யா செலவு? ஒத்தைக் கட்டை. கணக்குலயே இருக்கட்டும். போன மாசம் எடுத்த