கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை முதல் அத்தியாயம்
கதைப்பதிவு: July 18, 2023
பார்வையிட்டோர்: 2,281 
 
 

(ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1 – 5 | அத்தியாயம் 6 – 10

1. வாலிபத் துறவி 

கதிரவன் மலை வாயில் விழும் மாலைக்காலம் நெருங்கி விட்டதால் ஜெயின, புத்த, சிவ, விஷணு ஆகிய நான்கு காஞ்சிகளும் ஒரே சுவர்ண காஞ்சியாக எங்கும் பொன் பூச்சைத் தீட்டிவிட்டதன் காரணமாக, அது கண்ணை மயக்கும் காஞ்சியாயி ருந்ததே யொழிய மனத்துக்கு மகிழ்ச்சியை அளிக்கும் நகரமா யில்லை யென்பதை, அப்பொழுதே மூடத் தொடங்கிவிட்ட அதன் பெரும் வாயிற் கதவுகள் போட்ட பயங்கரச் சப்தமும், அம்மாநகரத்தின் மதில்கள் மீது வீரர்கள் ஏற்றத் தொடங்கிவிட்ட போர்க்கருவி வண்டிகளின் சக்கர ஒலிகளின் கிரீச்சாகாரமும் திருபித்தன அந்த சுவர்ண காஞ்சியின் நிராதரவான நிலையைப் பார்த்துப் பதிதாயப்படுவனபோல், மேய்ச்சல் வயல்களிலிருந்து கூட்டம் கூட்டமாக வாயில்களுக்குள் பிரவேசித்துக் கொண்டிருந்த பசுமாடுகள் உறுமிய சப்த ஜாலங்களும், கூடுகளுக்குள் சீக்கிரம் நுழைந்து விட வேண்டுமென்ற அவசரத்தால் எங்கிருந்தோ கூட்டம் கூட்டமாக வந்து கொண்டிருந்த பட்சி ஜாலங்களின் ஒலிகளும் விவரிக்க இயலாத ஒரு பிரமையையும் பயத்தையும் உண்டாக்கின. 

அந்தி வேளையை முன்னிட்டுச் சிவ விஷ்ணு காஞ்சிகளின் பெரும் குளங்களில் மாலைக் கடன்களை முடித்துக் கொண்டிருந்த அந்தணர்கள் விட்ட அர்க்கிய மந்திரங்களும், குளங்கரைகளில் உட்கார்ந்து விஷ்ணு சகஸ்ர நாமத்தைக் குருமார்கள் உபதேசிக்கத் திரும்ப இரண்டு இரண்டு தரமாகத் திருப்பிச் சொல்லிக் கொண்டிருந்த பிராமமணச் சிறார்களின் ஒலிகளும், சுவாண காஞ்சிக்குப் பாதுகாப்பை அளிக்கும் மந்திர சப்தங்களாயிருப்பது போக, அச்சத்தை அளிப்பனவாகவே தென்பட்டதன்றி அந்த மாலை சாதனைகள் நடந்த வேகம் மாணவப்பிள்ளைகள் சீக்கிரம் இல்லங்களுக்கு விரைவதில் அக்கறை கொண்டிருப்பதையே விளக்கமாக எடுத்துக் காட்டின. 

சாதாரண ஜெயின, புத்த காஞ்சிகளில் எழும் சமண சுலோகங்களின் ஒலிகள் கூட அந்த மாலை வேளைகளில் அமைதியை அளிப்பதற்குப் பதில் வேதனையை அளிப்பதாகத் தோன்றின. அம்மாநகர் மக்களின் காதுகளுக்கு இப்படிச் சகல மதத்தினரையும், சகல மந்திரங்களையும், மனிதர்களையும், விலங்குகளையும், பட்சிகளையும் கூட ஒன்றுபடுத்தும் சக்தி ஆனந்தத்துக்கு மட்டுமல்ல, துன்பத்துக்கும் அச்சத்துக்கும் உண்டு என்பதை அறிவுறுத்தும் அத்தாட்சியாக அமைந்திருப்பது. காஞ்சியின் அந்த மாலைக் காஞ்சன நேரம். 

பின்னொரு காலத்தில் கணிகண்ணன் நாடு கடத்தப்பட்டதை முன்னிட்டு “மணிவண்ணா! நீ கிடக்க வேண்டாம், நீயும் உந்தன் பைந்நாகப் பாய் சுருட்டிக் கொள்” என்ற திருமழிசைப்பிரான் கட்டளையை முன்னிட்டு அரவனைப் பாயைச் சுருட்டிக்கொண்டு சென்றுவிட்ட ‘சொன்ன வண்ணம் செய்த பெருமாள்’ கூட அதற்கு இன்னும் காலம் இருக்கிறதென்ற நினைப்பாலோ, அல்லது காஞ்சியிருக்கும் ஆபத்தான நிலைமையை முன்னிட்டோ, திருவெஃகாவில் நன்றாகக் கண்ணை இறுக மூடிக்கொண்டு படுத்திருந்தார். அவர் காட்டிய குறிப்பைப் புரிந்து கொண்டதால் அர்த்த ஜாம சேவையை அந்திக் காலத்திலேயே மூடித்துக் கொண்ட வைணவ பக்த சிகாமணிகள் இல்லங்களுக்கு விரையலாயினர். அப்பேர்ப்பட்ட பல விஷ்ணு ஆலய பட்டர்களும், சிவாலய குருமார்களும் பக்தியைச் சத்தியானுசாரம் சீக்கிரமாக முடித்துக் கொண்டு இல்லங்களுக்கு ஏகத் தயார் செய்து கொண்டனர். 

காஞ்சியின் அந்த நிராதரவான மனத்தை உளைக்கும் நிலையைக் காண இஷ்டப்படாதவன் போலக் கதிரவனும் சற்று வேகமாக அஸ்தமனமாகி விட்டதால் காஞ்சி கதவுகள் வெகுவேகமாக சாத்தப்பட்ட சப்தம் நகரெங்கும் பெரிதாக எதிரொலி செயதது காஞ்சியின் நான்கு பெரும் வாயில்களின் கதவுகளில் மூன்று வாயிற் கதவுகள் சாத்தப்பட்டாலும் வடக்கு நோக்கியிருந்த கதவு மட்டும் சாத்தப்படாமல் யாரையோ எதிர்பார்த்த வண்ணம் வரும் மனிதர்கள் எத்தனை பேரானாலும் விழுங்கத் தயாராக இருக்கும் கபந்தனைப்போல் பயங்கரமாக வாயைப் பிளந்து கொண்டு நின்றிருந்தது. அது எதிர் பார்த்ததும் வீணாகாமல் பல புரவிகள் வரும் பேரோலி வெகு தூரத்தில் எழுந்துகொண்டிருந்ததால், கதவு சாத்தவும் காவலர் தங்கள் வேலையும் சீக்கிரம் முடியும் என்ற நினைப்பால் தங்கள் முகங்களில் மகிழ்ச்சியைப்படர் விட்டுக் கொண்டு எந்தத் துன்பத்திலும் மனித வாழ்க்கையில் கடுகளவு ஆனந்தம் உண்டு என்பதை நிரூபித்தனர். புரவிகளில் வருபவர்கள் எப்படியும் வந்துதானாக வேண்டும் என்ற நியதி இருந்தாலும் கூட மனித சுபாவத்தின் காரணமாக மதில் மீதிருந்த வீரர்களில் இருவர் கண்களுக்கு மேல் தங்கள் இடக் கைகளை லேசாக மறைத்து தூரத்தே உற்று நோக்கினார்கள் அப்படி நோக்கியும் புரவிகளோ, புரவி வீரர்களோ, அவர்களுக்கு முன்பு வர வேண்டிய கொடியோ கண்ணுக்குப் புலப்படாததால் மீண்டும். முகங்களில் துயரத்தை சிருஷ்டித்துக் கொண்டனர். 

அவர்கள் துயரத்தைத் துடைப்பனபோல் காஞ்சியில் விளக்கு வைக்கும் நேரத்தில் ஒரு சிறு புரவிக்கூட்டம் வரவே செய்தது. சுமார் பத்துப் புரவிகளுக்கு மேற்படாத அந்தக் கூட்டத்தின் முன்னிலையில் பல்லவக் கொடியை உயரத் தாங்கிப் பிடித்த வீரனொருவனும் வந்துகொண்டிருந்தான் அவனுக்குப்பின்னால் புரவி வீரர் கூட்டத்தின் தலைவனாய் மற்ற வீரர்களைப்போல் பூர்ண கவசமணிந்தவனாய், ஆஜானுபாகுவாய். தலையில் தனியொரு சிறு கிரீடத்தையும் அணிந்தவனாய் வந்தவனைக் கண்டதும் அந்த வடபெருங்கதவுகளுக்குப் பின்னாலிருந்த பெரும் மணியொன்று அடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து எங்கோ இன்னும் இரண்டு பெருமணிகளின் ஓசை கேட்டதும் அந்தப் புரவி வீரர் தலைவன் நகுருக்குள் புகுந்தான். புகுந்த சமயத்தில் கதவுகளை இனி சாத்தலாமென்பதற்கு அறிகுறியாகத் தனது கையையும் அதிகாரத் தோரணையில் அசைத்துவிட்டுச் செல்லவே ‘கதவை மூடு கதவை மூடு’ என்ற சொற்கள் மதில் மீதிருந்த வீரர்களிடமிருந்து எழுந்தன. அதை அடுத்துப் பெரும் சங்கநாதமொன்றும் அந்த வடக்கு வாயிற்பகுதியில் மட்டுமன்றி நகரத்தின் இதர பகுதிகளிலும் ஒலித்தது. 

அதையொட்டி இருபது வீரர்கள் இருபுறமும் கதவு தொட்டு அகற்ற, இருபெரும் யானைகள் மத்தங்கலால் முட்டக கதவுகள் ஆமை வேகத்தில் மூடத் தொடங்கின. சிறவுகளின் இரும்பு இணைப்புச் சுழல் அச்சுகள் போட்ட சத்தம் முட்டிய இரு வேழங்களின் பிளிறலை அர்த்தமற்றதாகச் செய்தன. இவ்வண்ணம் சாத்தப்பட்டுக் கொண்டிருந்த சுதவுகளை நோக்கித் தூரத்தே ஒருவன் வெகு வேகமாக ஓடிவந்து கொண்டிருந்தான். கதவுகளை மூடவேண்டாம் என்பதைத் தெரிவிக்கத் தனது வலக்கையை உயரத் தூக்கி ஆட்டியும் தனது கருத்தைத் தெரிவித்தான். ஆனால் சுழல முற்பட்ட அச்சுகள் நிற்கவில்லை. பின்னாலிருநத மத்தகஜங்களுக்கு அவன் எங்கோ ஓடி வந்தது தெரியவில்லை யாதலாலும், தெரிந்தாலும் மாவுத்தன் கையைத் தவிர வேறு சைகைகள் அவற்றிற்குப் புரியாத காரணத்தாலும், அவை தங்கள் பணியை நிறுத்தவில்லை. அரசன் ஆணை திட்டமாயிருந்த படியாலும், சற்று முன்பு சென்ற புரவிப்படைத் தலைவனின் உத்தரவும் சந்தேகத்துக்கு இடமில்லாதிருந்த படியாலும், வீரர்கள் தூரத்தே ஓடி வருபவனைக் கண்டாலும் லட்சியம் செய்பவர்களாகத் தெரியவில்லை. சாத்த முற்பட்ட கதவுகள் சாத்திக்கொண்டே இருந்தன. தூரத்தே வந்தவன் மதில் புறத்தை அடைய பல அடிதூரம் இருக்கும் பொழுதே அந்த மாபெரும் வடதிசைக் கதவுகள் பெரும் சத்தத்துடன் மூடப்பட்டன. அதன் உட்புறத்தில் எடுத்து வீழ்த்தப்பட்ட பெரும் இரும்புச் சலாகைத் தாழ்ப்பால்கள் குறுக்கே விழுந்த ஒலி ஏதோ அதிர்வெடிபோல் கேட்கவே அத்துடன் நகரப் பிரவேசம் முடித்துவிட்ட தென்பது மிகவும் தெளிவாயிற்று காஞ்சி மக்களுக்கு. 

ஆனால் கதவை நோக்கி ஓடிவந்தவன் அதையும் இலட்சியம் செய்ததாகத் தெரியவில்லை. மானின் ஓட்டத்தையும் தோற்கடிக்கும் பாணியில் ஓடிவந்து கதவுகளுக்கு முன்பு நின்றான்: பிறகு அண்ணாந்து பார்த்து “யாரப்பா! சிறிது கதவைத் திறவுங்கள் வெரு தூரத்திலிருந்து வருகிறேன்” என்ற இரைந்து மேலே நின்ற மதில் காவலரை நோக்கிக் கூவினான்.  

காவலரில் ஒருவன் கேட்டான் “நீ இந்த ஊருக்குப் புதிதா?” 

“இப்பொழுது புதிதுதான். சிறுவயதில் இங்குதான் இருந்தேன்” என்றான, அந்தப் பிரயாணி. 

“நாளைக் காலையில் வா. இனி இந்தக் கதவைத் திறக்க முடியாது. மகாராஜா உத்தரவு” என்றான் மதில் மேலிருந்த காவலன். ஆனால் பிரயாணி சொன்னாள் “எனக்குக் கதவைத் திறந்தால் மகாராஜா ஒன்றும் சொல்லமாட்டார்” என்று. 

“நீ மகாராஜாவுக்கு உறவா?” -காவலன் கேள்வியில் இகழ்ச்சி இருந்தது. 

”இல்லை, ஆனால் அவர் குருவின் புதல்வன்’ என்றான் பிரயாணி. 

மேலிருந்த காவலன் கீழிருந்த பயணியை உற்று நோகிகினான். மதிலின் பந்த வெளிச்சத்தில் வந்திருப்பவன் வாலிபனென்பதைப் புரிந்து கொண்டான் காவலன். 

அந்த வாலிபன் மிக விசித்திரமாயிருந்தான். அவன் மூலக் கச்சமாக ஒரே துணியை இடுப்பில் கட்டியிருந்தான். அந்தத் துணியும் காவியாயிருந்தது. அவன் கையில் நீண்ட வழவழப்பான ஒரு கனத்த தடியிருந்தது. அதன் உயரத்திலிருந்து அது சந்நியாசியின் தடியாகத் தெரியவில்லை. பாதுகாப்புக்காக ஏற்பட்ட பயங்கரத் தடியாகவே புலப்பட்டது. அந்த தடியில் ஒரு நுணி முட்டையையும் கட்டிச் செருகித் தடியைத் தோளில் சாத்திக் கொண்டிருந்தான், அந்த வாலிபன். அவன் முகவாய்கட்டையிலும் மேலுதட்டிலும், முளைத்திருந்த அரும்பு மீசையும், கட்டையான தாடியுங்கூட அவன் செவ்விய முகத்துக்கு அழகையே ஊட்டின. மதில் பந்த வெளிச்சத்தில் பளபளத்த கண்கள் ஆழ்ந்த சிந்தனையைக் காட்டின். 

அந்த வாலிபனின் தோற்றத்தையும் கண்களின் எதிர்பார்ப்பையும் கண்ட காவலனுக்கு அவன் மீது அனுதாபம் உண்டானாலும் அவன் ஏதும் செய்ய முடியாததால், “அப்பா! நீ பாராயிருந்தாலும் கதவைத் திறக்க முடியாது. வேறு வழி எதுவும் கிடையாது” என்றான். 

அந்த வாலிபத் துறவி சிறிது சிந்தித்தான் “உன்னிடம் பெரும் கயிறு இருக்க வேண்டுமே?” என்று வினவினான். 

”இருக்கிறது. அது நேரம் கழித்துவரும் வீராகளுக்கு, துறவிகளுக்கு அல்ல” என்றான் காவலன். 

“தயவுசெய்து கயிற்றைத் தொங்கவிடு. நான் கண்டிப்பாய் உள்ளே போக வேண்டும்” என்றான் வாலிபத் துறவி. 

“கயிற்றைப் பிடித்து ஏறும் பழக்கமுண்டா?” என்று வினவினான் காவலன். 

“இல்லை. இருந்தாலும் முயன்றால் முடியாதது உலகத்தில் எதுவும் கிடையாது” என்று தத்துவம் பேசினான் வாலிபன். 

“நடுவில் நழுவி விழுநதால் உன் எலும்புகூடக் கிடைக்காது. மதில் மிக உயரம். கீழே பாறாங்கல் தரை, பார்த்தாயா?” 

”பார்த்தேன்” 

“அப்படியும் ஏற விரும்புகிநாய்?” 

“ஆம்”

“சரி உன் தலை எழுத்து” என்ற காவலன் கயித்தை எடுத்து வந்து மதிலோரமாகக் கீழே தொங்கவிட்டான். 

அது கைக் கெட்டும் தூரம் வந்ததும் தடியை மூட்டையுடன் முகவாய்க்கட்டையில் இடுக்கிக் கொண்டு கைகளால் கயிற்றைப் பிடித்துக் கொண்டு கால்களை மதில் மீது தாக்கித் தாக்கி குரங்குபோல வெகு துரிதமாக ஏறினான் அந்த வாலியத் துறவி. 

அவன் இலாவகத்தைக் கண்டு பெருவியப்படைந்தான் காவலன். அதைவிட இன்னொரு வியப்பும் காவலனுக்குக் காத்திருந்தது. வாலிபன் மதிலின்மீது ஏறி முடித்த பிறகு. 


2. சத்திரத்தில் ஒரு சங்கடம் 

நீண்ட நாள் பல போர்களைக் கண்டலன் போலும், பல கோட்டைகள் மீது ஏறியவன் போலும், மிக இலாவகமாகவும் துரிதமாகவும் மதிலின்மீது ஏறிவந்த வாலிபத் துறவி, மதிலின் உச்சியை அடைந்ததும் ஒரு கையால் கயிற்றைப் பிடித்துக் கொண்டு இன்னொரு கையால் மதிலின் தாழ்வரைப் பிடியைக் கைப்பற்றி அநாயாசமாக மேலே ஏறிக் குதித்தான். அப்படி ஏறியதும், கழுத்தில் கௌவியிருந்த தடியையும் தடியிலிருந்த மூட்டையையும் மதிலின் அகரை மேல்தாழ்வரையில் வைத்துவிட்டுக் காவலளை நோக்கி, “ஐயா! மிக்க நன்றி உங்கள் கருணையில்லாவிட்டால் இன்று நான் காஞ்சிக்குள் நுழைய முடியாது” என்று கூறிவிட்டு அங்கேயே உட்கார்ந்து கழியில் கட்டப்பட்டிருந்த முட்டையை அவிழ்த்தான். அதன் உட்புறத்திலிருந்த பொருள்களைக் கண்டு வியப்பு உச்சிக்கு ஏறிவிடவே காவலன் வினவினான் “உன் தொழில் என்ன? எதற்கு இந்த மாநகரம் வந்தாய்?” என்று. 

வாலிபன். தனது மூட்டையிலிருந்த பொருள்களைச் சோதிப்பதை ஒரு விநாடி நிறுத்திக் கொண்டு, “நான் ஒரு மாணவன். இங்குள்ள பெரியவரிடம் படிக்க வந்திருக்கிறேன்” என்று கூறிவிட்டு முட்டையிலிருந்த ஓலைச் சுவடிக் கும்பலைத் தள்ளித் தள்ளி அலசினான். 

காவலன், வாலிபத் துறவியின் பதிலினால் திருப்தி அடைந்ததாகத் தெரியவில்லை. மூட்டையில் இலைச் சுவடிகளுக்குள்ளிருந்து தலை நீட்டிய ஒரு கத்தியைக் காட்டி, “அது. எதற்கு?” என்று வினவினான். 

வாலிபன் ஒலைகளைத் ஒலைகளைத் துருவிப் பார்த்த வண்ணம் சொன்னான “அது சிறிய வாள். வெது தூரத்திலிருந்து வருகிறேன். ஆகையினால் தற்காப்புக்கு எடுத்து வந்தேன்” 

காவலன் சந்தேகம் அப்பொழுதும் தணியவில்லை. “சரி. நீ யாரிடம் படிக்க வந்திருக்கிறாய்?” என்று வினவினான். 

வாலிபன் சொன்ன பதில் காவலனைத் தூக்கிவாரிப் போட்டது “மஹாயனரிடம்'” என்றான் வாலிபன் தலையை நிமிராமலே. 

“மஹாயனரிடமா?” -காவலன் பதிலில் வியப்பு மிதமிஞ்சி ஒலித்தது. 

“ஆம். ஏன்?” என்று வாலிபன் காவலனை வியப் பொலியால் தலையை நிமிர்ந்தே கேட்டான். 

”அவர் இப்பொழுது யாருக்கும் யாருக்கும் பாடம் சொல்லிக் கொடுப்பதில்லை.” -காவலன் பதில் திட்டமாயிருந்தது. 

“ஏன் நோய்வாய்ப்ட்டிருக்கிறாரா?”

“இல்லை”

“அப்படியானால் பாடம் சொல்லிக் கொடுத்தால் என்ன?”

“காரணம் எனக்குத் தெரியாது ஆனால், வரும் சீடர்களை யெல்லாம் திருப்பி அனுப்பிவிடுகிறார். நீ எங்கிருந்து வருகிறாய்?” 

“சோழ நாட்டிலிருந்து”. 

“பாவம், நீண்டதூரம் வந்திருக்கிறாய் ஆனால், நீயும் திரும்ப வேண்டியது தான். ஆனால் உடனடியாகத திரும்பவும் முடியாது” என்று காவலன் திட்டமாகச் சொன்னான். 

காவலன் சொன்னதை வாலிபன் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. சட்டென்று மூட்டையிலிருந்து ஏதோ கண்டுபிடித்து விட்டவன் போல் ஒரு சிறு முத்திரையிட்ட ஓலையை எடுத்துக் கொண்டு “நல்லவேளை இது தொலையவில்லை” என்று கூறி ஆசுவாசப் பெருமூச்சு விட்டான். அந்த ஓலையை மட்டும் மடியில் செருகிக் கொண்டு மீதிச் சுவடிகளையும் கத்தியையும் மூட்டையில் வைத்து வெகு ஜாக்கிரதையாகக் கட்டலானான். 

அப்பொழுது இடைப்புகுந்த காவலன் “துறவி! அந்தக் கத்தி சிறியதாயிருக்கிறதே. அது போதுமா உன் பாதுகாப்பிற்கு?’ என்று வினாவினான். 

வாலிபன் காவலனை நோக்கிப் புன்முறுவல் செய்தான். அந்தக் கத்தியை எடுத்துக் காட்டி “இது சாதாரண கத்தியல்ல. புகாரின் கத்தி’ என்று கூறிவிட்டு இரண்டாக நடுவே மடிக்கப் பட்டிருந்த சுத்தியைப் பிரித்து நடுவிலிருந்த இணைப்புப் பட்டயத்தால் அழுத்தி ஒன்றாக்கினான். சாதாரணமாக மூன்று கைப்பிடி நீளத்திலிருந்த அந்தக் கத்தி ஆறு கைப்பிடி நீளமாக நீண்டு மிக மெல்லியதாக, ஏதோ தாழை மர சர்ப்பம்போல் மதில் பந்தத்தின் வெளிச்சத்தில் மின்னியது. அது மின்னிய நிலையில் சர்ப்பம்போல. வளையதாகவும் ஒரு பிரமையை அளித்தது காவல் வீரனுக்கு. “மிக மெல்லிய ஆயுதம். ஆனால் பயங்கரமானது” என்றான் காவுலன் அச்சத்துடன். 

வாலிபன் காவலனைப் பெருமையுடன் பார்த்தான். “புகார் கடற்கோளால் முக்கால்வாசி அழிந்துவிட்டதேயன்றி அதன் போர்க்கலை அழியவில்லை. ஆயுதங்களும் மறையவில்லை” என்று கூறினான் பெருமையுடன். பிறரு கத்தியைப் பழையபடி மடித்து பத்திரப்படுத்தி முட்டையில் கட்டிக் கொண்டு எழுந்தான். அவனிருந்த இடத்திலிருந்து கீழே படிகள் ஓடிக் கொண்டிருந்ததைக் கவனித்து ”இதில் நான் இறங்கிச் செல்லலாமா?” என்று காவலனை வினவினான் 

“செல்லலாம். ஆனால் இந்த இரவில் மஹாயனா இருக்குமிடம் போக முடியாதே! இங்கேயே தங்கிவிடேன்” என்றான் காவலன். மதில் தாழ்வரையைச் சுற்றுமுற்றும் பார்த்தான வாவிபத் துறவி, ஆங்காங்கு தற்காப்பை முன்னிட்டு விற்கூடங்களும் வேற்கூடங்களும் மற்றும் பொறிக் கூடங்களும் அமைக்கப்பட்டிருந்ததைக் கவனித்தான். “ஆம். இந்தக் கூடங்களில் ஒன்றில் படுக்கலாம். ஆனால் நான் சாப்பிட வேண்டும்” என்று காவலனை நோக்கிக் கூறிவிட்டு “இந்த நகரத்தில் ஓர் இரவு தங்க எது நல்ல சத்திரம்?” என்று வினவினான் காவலன்.

“வேண்டாம். ஆனைக்கூட்டிச் சத்திரமே போதும். நீங்கள் மிக நன்றாக பழகுகிறீர்கள். உங்களை மறக்க மாட்டேன். உங்கள் பெயர்?” 

காவலன் சிறிது சிந்தித்தான். “முகுந்தன்” என்றான் சிந்தனைக்குப் பிறகு. 

வாலிபனின் அழகிய முகத்தில் புன்முறுவல் படாந்தது “மிக நல்லதாகப் போயிற்று. என பெயரும் அதுதான்” என்று சொல்லிவிட்டுத் திடுதிடுவென்று படிகளில் இறங்கினான். காஞ்சியின் கோட்டைச் சுவரோரப் பெருவீதியிலிருந்து சிறிது துரத்தில் மாளிகைகள் பல தெரிந்தன. அவற்றில் எரிந்த அலங்கார விளக்குகள் நாஞ்சிக்கும் வட நாட்டுக்கும் இருந்த தொடர்பை விளக்குவனபோல ஒளியை வீசி, மானிகைகளின் முகப்பு எழுச்சிகளுக்குத் தனி மெருகைக கொடுத்தன அவையெல்லாம் படைத் தலைவர்களின் மாளிகைகளாயிருக்க வேண்டுமென்பதை அவற்றின் அமைப்பிலிருந்தும் எதிரே காவல் புரிந்த வீரர்களில் நடமாட்டங்களிலிருந்தும் புரிந்து கொண்டவாலிபத் துறவி மெல்ல அந்த விடுதிகளை நோக்கி நடந்தான். அங்கிருந்த வீரர்களை விசாரித்துக் கொண்டே ஆனைக்கட்டிச் சத்திரத்துக்கு வந்து சேர்ந்தான். 

ஆணைக்கட்டிச் சத்திரம் அப்படியொன்றும் பெரிதாயுமில்லை. பார்க்கத் தக்கதாயுமில்லை. எதிரேயிருந்த யானை மண்டபத்தின் அமைப்பும் அவற்றில் கட்டப்பட்டிருந்த யானைகளும் அந்தச் சந்திரத்துக்கு ஒரு தனி மதிப்பைக் கொடுத்திருக்க வேண்டும் எனது தனக்குள் சொவ்லிக் கொண்ட வாலிபத் நுறவி அந்தச் சத்திரத்துக்குள் நுழைந்தான். சத்திரத்து வெளி முற்றத்தை அடுத்த கூடத்தில் சாப்பாட்டு மஞ்சங்கள் பல இருந்தன. பலர் சாப்பிட்டுக கொண்டும் இருந்தார்கள். சாப்பிடும் மஞ்சங்களிலிருந்து மது, மாமிச வகையறாக்கள் அந்தச் சத்திரம் துறவிகளுக்காக ஏற்பட்டதல்லவென்பதை சந்தேகமற எடுத்துக்காட்டின. துறவி அந்தக் காட்சியைப் பார்த்து நின்று கொண்டிருந்த சமயத்தில் அவனை நோக்கிவந்த சத்திரக்காரன், “சுவாமி! இது தங்களைப் போன்றவர்களுக்காக ஏற்பட்ட சத்திரமல்ல. நீங்கள் ஊருக்குள் போய்ச்சாப்பிடுவது நல்லது” என்று சொன்னான். 

வாலிபத் துறவி சத்திரக்காரனை உற்றுநோக்கினான். “நீண்ட தூரத்திலிருந்து வருகிறேன், இரவு தங்க அறை ஒன்று கிடைக்குமா?” என்று வினவினான் சத்திரக்காரனை நோக்கி. 

சத்திரக்காரன் முகத்தில் வியப்பு விரிந்தது “நீங்கள் மாமிசம் புசிப்பீர்களா?” என்று வினவினான். 

“புசிக்க ஆட்சேபணையில்லை ஆனால் சில நாட்களாக. விரதமிருந்து வருகிறேன். ஆகையால் பழம் பால் ஏதாவது கொடுத்தால் போதும்” என்று சொன்ன துறவி மாமிசத்தை உண்டு கொண்டிருந்தவர்கள் வரிசையில் இருந்த ஒரு மஞ்சத்தில் போய் உட்கார்ந்து கொண்டான். 

அவனது துறவி வேஷத்தையும், தடியையும் பார்த்த மற்றவர்கள் வியப்பு நிரம்பிய விழிகளைச் சத்திரக்காரன் மீது திருப்பினார்கள். இந்த மாதிரி பல வினோதமான பயணிகளைப் பார்த்திருக்கும் சத்திரக்காரன் அவர்கள் பார்வையைப்பற்றி அக்கறை கொள்ளாமல், “யாரடா அங்கே! சாமியாருக்கு பழம் பால். கொண்டு வா” என்று உத்திரவிட பரிமாறும் ஆட்கள் ஒரு குவளையில் நீரும், ஒரு தட்டில் பழ வகையறாக்களையும் கொண்டுவந்து வாலிபத் துறவியின் முன்பு வைத்தார்கள். 

சாமியார் உடனடியாக பழங்களில் கை வைக்கவில்லை. குவளை நீரை எடுத்துக் கொண்டு வெளி முற்றத்துக்கு வந்து கைகளை நன்றாக அலம்பிக் கொண்டான். பிறகு வானத்தை நோக்கி ஏதோ முணுமுணுத்தான். அதற்குப் பின்பே வந்து ஆசனத்தில் அமர்ந்து பழங்களை ருசி பார்க்கலானான். 

பழங்கள் வெகு துரிதமாக உரிக்கப்படுவதையும் சாமியார் வாய்க்குள் சட்டென்று மறைவதையும் பார்த்துப் பக்கத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் மட்டுமின்றி சத்திரக்கானும் பிரமித்தான். “சாமியாருக்குப் பாம்பு வயிறு போலிருக்கிறது. சாப்பிடும் வேகத்தில் சத்திரத்தையே ஒழித்துவிடுவான் போலிருக்கிறது” என்று சொல்லிக் கொண்டான் சத்திரக்காரன் உள்ளுர, அந்தச் சமயத்தில் பரிமாறும் ஏவலாளி ஒரு குவளையில் பாலும் கொண்டு வைக்கவே அதை பரம பிரீதியுடன் பார்த்தான் வாலிபத் துறவி. அதை எடுத்து அவன் குடிக்க வாய்க்கருகில் கொண்டுபோன சமயத்தில் தான் அந்த நிகழ்ச்சி நடைபெற்றது. 

அப்பொழுது கேட்டது வெளியே பலமான வெறிபிடித்த சிரிப்பு ஒன்று. அந்தச் சிரிப்பைத் தொடர்ந்து தடித்தனமான காலடிக்கும் கேட்டன. நல்ல குடி வெறியுடனும் பெருத்த மீசையுடனும் சிவந்த கண்களுடனும் திறந்த வாயிற்கதவைத் தட்டி வேண்டுமென்றே ஓசை கிளப்பிக் கொண்டு உள்ளே நுழைந்தான் ஒரு வீரன். அவன் தனது பருமனால் உள் வாயிற்படியை அடைத்துக் கொண்டு சாப்பிடும் கூடத்தின் மீது ஒருமுறை கண்களை ஓட்டினான். பிறகு கச்சையில் தொங்கிய பலமான வாளை அனாவசியமாகத் தட்டித் சத்திரக்காரனை நோக்கி, “யாரவன், அதோ சாப்பிடுகிற சாமியார்?” என்று வினவினான். 

“யாரோ வெளி ஊரிலிருந்து வந்திருக்கிறார். இன்றுவரை பார்தததில்லை” என்றான் சத்திரக்காரன் கிலி பிடித்த குரலில். 

அதற்கு மேல் ஏதும் பேசாத அந்த முரடன் தனக்குப் பின்னால் நின்றிருந்த இரு வீரர்களை நோக்கி, “டேய் நீங்கள் இங்கேயே நில்லுங்கள். ஆனைக்கட்டி மதுவை நான் ருசி பார்த்துவிட்டு வருகிறேன்” என்று கூறிவிட்டுச் சாப்பிடுமிடத்திற்கு வந்து ஒரு மஞ்சத்தின் மீது தன் பெருங்கால்களை அகற்றிக் கொண்டு உட்கார்ந்து “யாரடா அங்கே: என் செலவில் எல்லாருக்கும் மது கொண்டுவா” என்று உத்தரவிட்டான். 

பரிமாறும் ஆள் அவன் உத்தரவைக் கேட்டு உள்ளே பறந்து பெரும் குவளையொன்றில் மதுவைக் கொண்டு வந்ததும் “அதை எல்லாருக்கும் பரிமாறு” என்றான அந்த முரட்டு வீரன். 

எல்லாருக்கும் மதுவைக் குவளைகளில் ஊற்றிவந்த ஏவலாள் வாலிபத் துறவி உட்கார்ந்திருந்த இடத்தை அடைந்ததும் “எனக்கு வேண்டாம்” என்று வாலிபத் துறவி கையை நீட்டி மது ஊற்றப்படுவதைத் தடுக்கவும் செய்தான். 

“போடு அவன் குவணையிலும்” என்று சீரினான் முரடன்.

“போடாதே” – திட்டமாக எழுந்தது வாலிபத் துருவியின் குரல்.

முரடன் வாலிபத் துறவியைச் சுட்டுவிடுவதுபோல் பார்த்தான் “குடிக்கிறாயா? குடிக்கச் செய்யட்டுமா வீரபத்திரன உத்தரவை எதிர்த்து இதுவரை யாரும் பிழைத்ததில்லை” என்றான் அந்த முரடன். 

“நான் சந்நியாசி” என்றான் வாலிபத் துறவி. 

“எத்தளையோ சந்நியாசிகள் குடிப்பதை நான் பார்த்திருக்கிறேன். நீயும் குடி” என்று முரடன சொன்னதோடு நில்லாமல் வாலிபத் துறவிக்கு அருகில் வந்து குவளையை எடுத்துப் பரிமாறுபவனிடம் நீட்டி, “உம், ஊற்று?” என்றான். 

ஏவலாள் நடுக்கும் கைகளுடன் ஊற்றினான் “இப்பொழுது மதுவை அருந்து” என்று வீரபத்திரன் வாலிபத் துறவியின் தலையைப் பிடித்தான் அடுத்த விநாடி சாப்பாட்டு அரங்கில் பெரும் விசித்திரம் ஏற்பட்டது. வாலிபத் துறவியின் மெல்லிய கை முஷ்டியாகி வீரபத்திரன் முகவாய்க்கட்டையில் பாய, வீரபத்திரன் வெட்டிச் சாய்த்த புளியமரம் போல் வீழ்ந்தான். தரையில் அவன் கைக் குவளையிலிருந்த மது அவன் மீதே சாய்ந்து உடல்மீது குருதிபோல் மதுவைப் பாய்ச்சி விட்டது. 

விஷயம் அத்துடன் நிற்கவில்லை. ருத்திரகாரமான கோபத்துடன் எழுந்த வீரபத்திரன் தனது பெருவாளைக் கச்சையிலிருந்து உருவி பெருமீசையுடன் தடவிக் கொண்டான். 

“வீரபத்திரப் பெருமானே! இங்கு சண்டை வேண்டாம். இது சத்திரம்” என்று கூவிய சத்திரக்காரன் இரண்டு எட்டில் வீரபத்திரனை அடைந்து அவனைத் தடுக்க முயன்றான். ஆனால் வீரபத்திரன் அவனை இடக் கையால் அனாயாசமாகத் தள்ளிவிட்டுத் திரும்பிக் துறவியை நோக்கினான். 

துறவி எழுந்து நின்று சிரித்துக் கொண்டிருந்தான். சிரிப்பு யமச் சிரிப்பாயிருந்தது. அவன் கையில் மடக்குவாள் நீண்டு, சாப்பாட்டு அரங்கின் விளக்கில் நாகசர்ப்பம் போல் மின்னிக் கொண்டிருந்தது. 


3. அபாய உதவி 

கையில் நீண்டு மின்னிக்கொண்டிருந்ததில் படர்ந்து விட்ட ஏளனப் புனசிரிப்புடன், எதிரே ராட்சஸப் பிரமாணமாய் நின்ற வீரபத்திரனுடைய அடுத்த நடவடிக்கையை எதிர்பார்த்து வாலிபத் துறவியை சாப்பாட்டுக் கூடததிலிருந்த எல்லாருமே மிதமிஞ்சிய வியப்புடனும் அடுத்து நிகழவிருந்த விபரீதத்தை எண்ணி அச்சத்துடனும் நோக்கிக் கொண்டிருந்த சமயத்தில் வீரபத்திரனுடைய குரல் இடிபோல முழங்கியது. தனது பட்டையான பெருவாளை இருமுறை திருப்பிய வண்ணம், “விளையாட்டுக் கருவியால் என்னைக் கொன்று விடலாமென்று நினைக்கிறாயா?” என்று வினவினான வீரபத்திரன். இடிபோன்ற குரல்: குடியின் சேஷ்டையால் சிறிது ஆட்டம் கொடுக்க. 

வாலிபத் துறவி அவனுக்கு நேராக பதில் சொல்லவில்லை. சற்று எட்ட இருந்த சத்திரக்காரனை நோக்கி, “ஐயா! நீங்கள் எனக்கு உணவு அளித்திருக்கிறீர்கள் உண்ட விட்டுக்கு இரண்டகம் செய்ய எனக்கு விருப்பமில்லை. அந்தத் தடியனை இங்கே கொன்றால் உங்களுக்கு ஏதாவது அரசாங்கத்திடமிருந்து உபத்திரவம் கிடைக்குமானால் அதை நான் செய்யவில்லை. சிறிது காயப்படுத்தி மாத்திரம் விட்டுவிடுகிறேன். என்ள சொல்கிறீர்கள்?” என்று வினவினான்.

வாலிபத் துறவி தன்னை எதிர்த்து வருவதோடு தன்னைக் கொல்லலாமாலென்பதைப் பற்றி சத்திரக்காரனைச் சந்தேகம் கேட்க முற்பட்டதால் வீரபத்திரன் ருத்திராகாரமாக மாறினான். சாப்பாட்டுக் கூடத்தின் விளக்கொலியில் குடியால் சிவந்திருந்த அவன் கண்கள் பயங்கரமாக உருண்டன. உருண்ட அந்தக் கண்களை நோக்கிய் கூடத்திலிருந்த மற்றவர்கள் ஓரளவு நடுங்கவே செய்தாலும் ஏதும் நடவடிக்கை எடுக்கச் சக்தியற்றவர்களாக சண்டை ஏற்பட்டால் தாங்கள் பாதிக்கப் படாமல் இருப்பதற்காக கூடத்தின் பக்கங்களில் ஒதுங்கிக் கொண்டார்கள். அந்தச் சமயத்தில் வீரபத்திரன கடகடவென நகைத்தான். சத்திரக்காரனை நோக்கி, “ஏனய்யா! சாமியார் யோசனை கேட்கிறானே சொல்வதுதானே” என்று சிரிப்பை உதிரவிட்ட வேகத்தில் அடக்கிக் கொண்டு கேள்வியை வீசி பற்களை நறநறவென்று கடித்தான். 

சத்திரக்காரன் மிகுந்த கிலியிலிருந்தபடியால், “பெருமானே! வேண்டாம். சாமியார் வாலியக் கொழுப்பில் பேசுகிறார். சிறுபிள்ளை, விட்டு விடுங்கள்” என்று கெஞ்சினான். 

வாலிபத் துறவி சத்திரக்காரனை நோக்கி மிக மெதுவாக ஆனால் அழுத்தந்திருத்தமாகப் பேசினான். “ஐயா! இவனிடம் கெஞ்சுவதை விட நீங்கள் என்னிடம் கெஞ்சுவது நல்லது. இவனை விட்டுவிடட்டுமா. கொன்று விடட்டுமா?” என்று கேட்டான் அவன். 

சாப்பாட்டுக் கூடத்திலிருந்தவர்கள் துறவியின் துணிவைக் கண்டு வியந்தார்கள். ‘இவனுக்கு ஆனாலும் அசட்டுத் துணிவு’ என்ற நினைப்பை உதிர்க்கும் கண்களால் பரஸ்பரம் பார்த்துக் கொண்டார்கள். 

அப்பொழுது வீரபத்திரன் அவர்களை நோக்கி, “நீங்கள் எல்லாரும் சாட்சி. என் கோபததை வேண்டுமென்றே கிளறுகிறான இவன். இறந்தால் பயணியைக் கொன்ற பாவம் என்னை அனுகாது” என்று கூறிவிட்டு “டேய் சாமியார்! உன் தவம் பலித்துவிட்டது. உனக்கு மோட்சம் கிடைக்கப் போகிறது, பயணத்துக்குச் சித்தம் செய்துகொள்” என்று கூறிய வண்ணம் தனது வாளைச் சரேலென்று கண்ணிமைக்கும் நேரத்தில் வாலிபனை நோக்கிப் பாய்ச்சி விட்டான். இவன் வாளின் வேகம். இரண்டெட்டில். தனக்கும் துறவிக்குமிருந்த இடைவெளியைக் கடந்துவிட்ட துரிதம் இரண்டும், சத்திரக்காரனையும் மற்றவர்களையும் அச்சத்தில் மூழ்கடித்துவிடவே சட்டென்று மூச்சைப் பிடித்துக் கொண்டார்கள்.

ஆனால் பிடித்த மூச்சை வெளியில் விடவில்லை அவர்கள். வாலிபத் துறவியின் காலம் முடிந்துவிட்டது என்று அவன் சடலத்தின் சாய்வை எதிர்பார்த்திருந்தவர்கள். சண்டையில் மின்னல் வேகத்தில் ஏற்பட்டுவிட்ட திடீர்த திருப்பத்தால் பிரமை பிடித்து சலனமின்றி நின்று, கூடத்தில் சத்திரக்காரன், பல புதுமைகளைச் சிருஷ்டித்து விட்ட பிரமையை கண்டனர். அவர்கள் பார்த்ததெல்லாம் வீரபத்திரன் வாள்வீச்சு ஒன்று. வாலிபத் துறவி அந்த வாள் வீச்சுக்குக் குனிந்து மண்டியிட்டது இரண்டு, கேட்டதோ வீரபத்திரனின் பயங்கர அலறலும் கீழே விழந்த அவன் பெருவாளின் ‘கிளாங்’ என்ற ஒலியும். 

அடுத்த விநாடி சுய நிலைக்கு வந்ததும் சத்திரக்காரன் கூடத்தின் நடுவில் வீரபத்திரன் தனது வாள் கரத்திலிருந்த குருதியைத் தடுக்க இன்னொரு கையால் அதை பிடித்துக் கொண்டிருந்த காட்சியைக் கண்டான். வாலிபத் துறவி அந்த நாகசர்ப்பத்தின் நுனியில் நான்கு விரற்கடை நீளத்துக்குப் படிந்துவிட்ட எதிரியின் ரத்தத்தைக் கையால் துடைத்துவிட்டு சாப்பாட்டுத் தளத்தில் இருந்த குவளை நீரில் கையைவிட்டு அலம்பிக் கொண்டிருந்ததையும் பார்த்தான். 

அந்த விநாடிநேரச் சண்டையால் சத்திரக்காரனுக்கும் சரி, மற்றவர்களுக்கும் சரி நிலைமை பட்டவர்த்தனமாகத் தெரிந்தது. சாமியார் உண்மையில் அஹிம்சையில் நம்பிக்கையில்லாதவர் என்பதையும் அவர் மோட்சத்துக்குச் செல்வதானால் வீரபத்திரனை முன்னோடியாக அனுப்பிவிட்டுத்தான் புறப்படுவாரென்பதையும் உணர்ந்து கொண்டதால் வியப்பும் திகைப்பும் ஒருங்கே மனத்தை அலைக்கழிக்க நின்றார்கள். அவர்கள் பதுமை நிலையும் மசமசப்புத்தனமும் வீரபத்திரனுக்கு மிகுந்த எரிச்சலைக் கொடுத்திருக்க வேண்டும். ஆகவே அவன் கூவினான். “முட்டாள்களா! எதற்காக நிற்கிறீர்கள்? கைக் குருதியை நிறுத்த ஏற்பாடு செய்யுங்கள்” என்று. 

இதைக் கேட்ட அவர்கள் பெரும் பரபரப்பைக் காட்டினார்கள் “யாரடா அங்கே? சீக்கிரம் நீர் கொண்டு வந்து எஜமானின் காயத்தைக் கழுவுங்கள். இரண்டு சாண்துணியும் பச்சிலைச் சாறும் கொண்டு வாருங்கள்” என்றான். சத்திரக்காரன், அவன் கட்டளையைக் கேட்ட பரிமாறும் ஆட்கள் பறந்தார்கள் சமையலறைக்குள்ளே. 

“தேவையில்லை!” – அவர்களைத் தடுத்தான் வாலிபத் துறவி “மூலிகை என்னிடமே இருக்கிறது” என்று ஒரு குவளையில் நீரை எடுத்துக் கொண்டு வீரபத்திரப் பெருமானிடம் சென்று காயத்தைக் கழுவினான். பிறகு தன் மூட்டையில் துழாவி பச்சிலை ஒன்றை எடுத்து எதிரேயிருந்த விளக்கில் சிறிது வாட்டி, அதைக் காயமடைந்த இடத்தில் வைத்து, தனது மூட்டைத் துணியில் ஒரு மூலையை நீளமாகச் கிழித்து திறமையுடன் கட்டும் போட்டான். “கச்சிதமாகிவிட்டது. இனி கையைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். நாளைக்கே நீங்கள் மீண்டும் வாளைச் சுழற்றலாம்” என்று வீரபத்திரனை நோக்கிக் கூறிவிட்டு கூடத்தில் எட்டக் கிடந்த வாளை எடுத்து வந்து அதன் உறையிலும் போட்டான். 

பிறகு சிறிது தள்ளி நின்று வீரபத்திரப் பெருமானைப் பார்த்தான். வீரபத்திரப் பெருமானின் தோற்றம், வாளும் கச்சையும் அங்கியுமாக மிகப் பிரமாதமாயிருந்தது. அவன் பெரிய கண்களிலோ வியப்பு மிதமிஞ்சித் தாண்டவமாடிக் கொண்டிருந்தது. தான் கானபது கனவா அல்லது உண்மையில் சுயநினைவோடு இருக்கிறோமா என்பதைத் தீர்மானித்துக் கொள்ள இருமுறை தலையைத் தானாகவே ஆட்டிக் கொண்டான். அந்த ஆட்டத்துக்குப் பின் அந்தக் கண்களில் ஏதோ ஒரு புத்தொளி பிறந்தது. என்ன காரணத்தினாலோ இரு முறை பெரிதாகக் கனைத்தான் கைகளையும் தட்டினான்.

அதைத் தொடர்ந்து சத்திரத்து ரேழியிலிருந்து நான்கு வீரர்கள் உள்ளே தடதடவென வந்து வாலிபத் துறவியை வளைத்துக் கொண்டனர். துறலி நாகசர்ப்பத்தை எட்ட வைத்திருந்ததால் அதை அணுக முடியாத நிலையில் அந்த வீரர்கள் மத்தியில் அகப்பட்டுக் கொண்டான். வந்த வீரர்கனின் வாட்கள் அவனது மார்பைத் தடவின. வீரபத்திரன் தனியாக வரவில்லையென்பதை உணர்ந்து கொண்டதால் சத்திரக்காரன் பெரும் கிலிக்கு உள்ளானான். சாமியார் வாழ்வு அன்றுடன் முடிந்துவிட்ட தென்று தீர்மானித்தான். 

ஆனால், வீரபுத்திரன் உடனடியாகத் நுறவியை வெட்ட உத்தரவளிக்கவில்லை. “டேய் சாமியார் இப்பொழுதாவது நான் கொடுக்கும் மதுவை அருந்து, உன்னை வெட்டிப்போட எனக்கு இஷ்டமில்லை” என்றான். 

வாலிபத் துறவியின் முகத்தில் சிந்தனை படர்ந்தது. அவன் நாசியிலிருந்து ஆயாசப் பெருமுச்சு, வந்தது. “சரி கொடுங்கள் மதுவை” என்றான் சலிப்புடன் 

“நீ புத்திசாலி. சாமியாருக்குக் கூட உயிர் வெல்லமாயிருக்கிறது” என்று கூறிய வீரபத்திரன் தானே ஒரு குவளையில் மதுவைக் கொண்டுவந்து, “சாமியார்! வாயைத் திற” என்றான். 

வாலிபத் துறவி வாயைத் திறந்தான். வாய் நிறைய மதுவை வாங்கியதும் சட்டென்று அதைப் பூராவையும் வீரபத்திரன் முகத்தில் துறவி உமிழ்ந்துவிடவே வீரபுத்திரன கண்களை எரிச்சலால் மூடிக் கொண்டான். அடுத்த விநாடி வீரபத்திரன் வாள் அதன் உறையிலிருந்து துறவியின் கையில் காட்சியளித்தது. பயங்கரமாக அதன் நுனி வீரபத்திரன் கழுத்தைத் தடவி நின்றது. அவன் கண்கள் மற்ற வீரர்களை நோக்கின். இகழ்ச்சி ததும்ப “வாள்களைக் கீழே போடுங்கள்” என்ற உத்தரவு எந்தவித உணர்ச்சியுமில்லாத வறண்ட குரலில் ஒலித்தது. 

வாள்கள் கீழே படபடவென்று வீழ்ந்தன. அவற்றின் ஒலி அந்தச் சத்திரத்துச் சுவர்களைத் தாக்கிப் பல பல எதிரொலிகளைக் கிளப்பின. வீரபத்திரன் இருபுறமும் தனது பெரிய கண்களை உருட்டினான் அச்சத்துடன். 

அப்பொழுது அவனுக்கு இன்னோர் உதவியும் வந்தது. அந்த உதவி கழுத்தில் தடவிய வாளைவிட அதிக அச்சத்தை அளித்தது வீரபத்திரப் பெருமானுக்கு. 


4. முகுந்தன் 

வீரபத்திரன் கழுத்தில் வாளின் நுனியை லேசாக ஊன்றிய வண்ணம் மற்ற வீரர்களை நிராயுதபாணிகளாக்கி விட்ட வாலிபத்துறவி தனது கூரிய விழிகளை அவர்கள் மீது ஒரு முறை ஓடவிடவே, அவற்றின் குறிப்பையறிந்து கொண்டு அவர்கள் நாற்புறமும் விலகி நகர்ந்தனர். “நான் அயர்ந்துவிடுவேனென்று ஏதாவது பைத்தியக்காரத்தனமான செயல்களில் ஈடுபடாதீர்கள். உங்கள் தலைவனை, இந்த மாமிச பர்வதத்தை நான் கொல்லப் போவதில்லை. வெளியூரிலிருந்து வரும் பயணிகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு சிறிது பாடம் மட்டும் கற்பிக்கப் போகிறேன்” என்று எச்சரித்த வாலிபத் துறவி, வீரபத்திரனை நோக்கி, “பெருமானே! அப்படியே திரும்பி வாயிற்படியை நோக்கி நகருங்கள்'” என்று உத்தரவிட்டான். 

வீரபத்திரன் ஏதோ பழக்கப்பட்ட போர் யானை திரும்புவதுபோல மிக நிதானமாகத் திரும்பினான். வாலிபத் துறவியும் வாளை அவனது கழுத்தின் பின்புறத்தில் ஊன்றிய வண்ணம், “இப்பொழுது வாயிலை நோக்கி நடக்கலாம்” என்று கூறினான் சர்வ சாதாரணமாக. 

இம்முறை வீரபத்திரன் வாலிபத் துறவியின் உத்தரவுப்படி நடக்க மறுத்தான “என்னை என்ன செய்வதாக உத்தேசம்?” என்று வினவினான் கடுப்புடனும் அச்சத்துடனும். 

“வாயிலுக்குப் போனதும் தெரியும்'” என்றான் வாலிபத் துறவி.

வீரபத்திரன் மனத்தின் அச்சத்தோடு சினமும் உற்பத்தியானாலும் அச்சத்தை மறைத்துக் கொண்டு, “நான் யாரென்று உனக்குத் தெரியுமா?” என்று வினவினான். 

“தெரியும் ” – வாலிபத் துறவியின் பதிலில் ஏளனம் ஒலித்தது.

“யார்?” – மிக மிடுக்காகக் கேட்டான, வீரபத்திரன். 

“வாளை அலங்காரத்துக்கு அணிந்து கொண்டு சத்திரங்களில் நுழைந்து கலவரம் விளைவிக்கும் ஒரு குடிகாரன் வெறியன்’ என்ற வாலிபத் துறவி, “சரி, நட” என்று சொல்லிக் கழுத்தில் கத்தியைச் சிறிது பலமாகவே அழுத்தினான். 

அந்தச் சமயத்தில் சத்திரக்காரன் இடைப் புகுந்து, “இவர் மன்னர் உப தளபதிகளில் ஒருவர்” என்று அறிமுகப்படுத்தினான். 

வாலிபத் துறவி சத்திரக்காரனைத் தனது ஓரக்கண்ணால் நோக்கிவிட்டு, “மன்னருக்கு எனது அநுதாபங்கள்” என்று உரைத்துவிட்டு வீரபத்திரனைத் தனது இடக்கையால் தட்டி “உபதளபதி! சற்று நடவுங்கள். இல்லை நான் நடத்திச் செல்லும்படி யாயிருக்கும்” என்று கூறினான். 

வீரபத்திரன் ஓர் அடி பாயிற்படியை நோக்கி எடுத்து வைத்துச் சிறிது நின்றான் “நான் இந்த நிலையில் வெளியே போனால் மக்கள் என்னைப் பார்த்து நகைப்பார்கள்” என்றும் கூறினான். 

“அப்படியா” என்று ஏதோ சிந்தித்த லாலிபத் துறவி. “அதுவும் நியாயந்தான். சரி, கீழே மண்டியிட்டுத் தவழ்ந்து செல்லுங்கள். வெளியே இருக்கிற இருட்டில் முகம் தெரியாது” என்று கூறினான். 

ஆட்டுக் குட்டியிடம் புலி விளையாடுவதைப்போல் தன்னிடம் வாலிபத் துறவி விளையாடுகிறானென்பதையறிந்து கொண்ட வீரபத்திரன், கோபம் தலைக்கேறி விட்டதால் விளைவைச் சிறிதும் யோசிக்காமல் சரேலென்று திரும்பினான். வெறுங்கையாலேயே வாளைப் பிடித்து இழுத்து எறிந்துவிடவும் முயன்றான். 

ஆனால் வாள் வாலிபத்துறவியின் இரும்புப் பிடியில் இருந்ததால் அசைய மறுத்தது. தவிர, வீரபத்திரன் அந்த வாளைப் பிடித்து இழுத்ததால் அவன் உள்ளங்கையை வேகமாக அறுத்தும் விட்டதால் “ஐயோ” என்று பெரிதாக அலறினான் உபதளபதி. அப்பொழுது தான் எதிர்பாராத அந்த உதவி வந்தது அவனுக்கு.

”இங்கு என்ன நடக்கிறது?” என்று எழுந்த அமைதியும் அதிகாரமும் நிறைந்த குரலைக் கேட்டு வீரபத்திரன் மட்டுமின்றி மற்ற வீரர்களும் சத்திரக்காரனும் ஏற்கனவே அரைகுறையாகச் சாப்பிட்டு நின்றவர்களுங்கூட சட்டென்று சிலைகளாகிவிட்டனர். அந்த குரலில் இருந்த ஏதோ ஒரு விவரிக்க முடியாத ஒலி வாலிபத் துறவியையும் அசர வைத்ததால் அவன் அக்குரல் வந்த திசையை நோக்கினான். சத்திரத்துக்கு உள் வாயிற்படியில் ஓர் உயரமான மனிதர் நின்று கொண்டிருந்தார். 

நின்று கொண்டிருந்தாரே தவிர அவர் அசையவில்லை. நல்ல உயரமான அந்த மனிதர் மிகச் சாதாரண உடையையே அணிந்திருந்தாலும், அதிலும் ஒரு கம்பீரம் இருக்கவே செய்தது. 

முழங்காலிலிருந்து சிறிது மட்டமே இறங்கிய நாலு முழ வெள்ளை ஆடையும், மேலே உடலைச் சுற்றி ‘ஆட்டிடையன்’ போர்வைபோல் போர்த்தப் பட்ட கெட்டிப் பழுப்புத் துணியும் அவர் எளிமையைக் காட்டின. ஆனால் அந்த முகம், அதுவும். விளக்கின ஒளி லேசாகப்பட்டபோதே மின்னிய அந்த ஆழமான கண்கள், எந்தவித எளிமையையும் காட்டவில்லை. சூரிய அறிவையும் எதையும் நொடிப் பொழுதில் அளந்து விடக் கூடிய ஆற்றலையும் எடுத்துக் காட்டின. 

அந்தச் சீரிய ஆழக் கண்கள் கூடத்தின் நிலையை ஒரு முறை துழாவின. வாலிபத் துறவியிடம் வந்தபோது சிறிது திடமாகவே நிலைத்தன, ”இங்கே என்ன நடக்கிறது என்று கேட்டேன்” என்ற சொற்களும் வாலிபத் துறவியை நோக்கி உதிர்ந்தன. 

வாலிபத் துறவி சிறிது சிந்தித்தான், “இந்த உபதளபதியைச் கேட்டால் சொல்லுவார்” என்று வீரபத்திரனைச் சுட்டிக் காட்டினான. 

அறுபது வயதைத் தாண்டியிருந்தாலும் அந்த வயதைக் காட்டாத முகத்தைப் படைத்த அந்தப் பெரியவர், “நான் உன்னிடம் கேட்டேன் கேள்வியை” என்றார் நிதானமான குரலில் மேலுக்குத்தான் நிதானமிருந்தது. ஆனால் உத்தரவுக்கான ஒலி அதில் பூரணமாயிருந்தது. 

அப்பொழுதும் வாவிபத்துறவி நேரடியாகப் பதில் சொல்லவில்லை “சத்திரக்காரரே! நீர் தான் சகலத்தையும் பார்த்துக் கொண்டிருந்தீரே சொல்லும்” என்றான் சத்திரக்காரனை நோக்கி. ஆனால் சத்திரக்காரன் வாயைத் திறக்கவில்லை. பெரியவரே பேசினார் “அப்பா! நீ இந்த ஊருக்குப் புதியதாக இருக்கவேண்டும்” என்றார். 

“ஆம்” என்றான் வாவிபத் துறவி. 

“தெரிகிறது. இல்லையேல இந்த மாநகரத்தில் நான் கேள்வி கேட்டு உடனடியாகப் பதில் சொல்லாதவன் யாரும் கிடையாது” என்றார் அவர். 

வாலிபத் துறவி அப்பொழுதும் அசைய வில்லை. அவரது உடைகளைப் பார்த்தான் ஒரு விநாடி பிறகு “நீங்கள் படைத் தலைவரல்லவென்று தெரிகிறது” என்றான். 

“இதை உணர பெரிய அறிவு தேவையில்லை. என் உடையே பறைசாற்றும்” என்ற பெரியவர். “வாலிபனே! கேள்விக்குப் பதில் சொல்கிறாயா, மறுக்கிறாயா?” என்று வினவினார். 

வாலிபத் துறவி அதற்குமேல் தயங்கவில்லை “இந்த உபதளபதி இஷ்டவிரோதமாக என்னைக் குடிக்க வைக்க விரும்பினார். நான் அதற்கு இஷ்டப்படாததால் சிறிது தர்க்கம் ஏற்பட்டது. அதன் விளைவை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள்” என்று கூறிய வாலிபத் துறவி கையில் இருந்த வாளால் கீழே கிடந்த வாட்களையும் வீரபத்திரன் கைக் காயத்தையும் சுட்டிக் காட்டினான். 

பெரியவர் அந்த வாட்களையும் வீரபத்திரன் காயத்தையும் ஏற்கனவே பார்த்திருந்தார். நடந்ததையும் ஓளவு ஊகித்திருந்தார். ஆகவே அந்த வாட்களையோ, வீரபத்திரன் கையையோ கவனிக்காமல், “அப்படியா!” என்று மட்டும் சொன்னார். பிறகு அவர் கண்கள் வீரபத்திரன் மீது ஒரு வினாடி நிலைத்தன. “வீரபத்திரா! நீ திருந்திவிட்டாய் என்று நினைத்தேன் மீண்டும் குடி வெறியில் கலவரம் செய்கிறாய். இன்றிரவு சிறையில் இரு. நாளை உன்னை விசாரிக்கிறேன்” என்று கூறித் தமது மெல்லிய கழுத்தைத் திருப்பி வெளியே பார்த்தார். 

அந்தப் பார்வையிலேயே ஏதோ மந்திரமிருந்திருக்க வேண்டும். அடுத்த விநாடி ஆயுதபாணிகளான பத்து வீரர்கள் அவரைத் தாண்டி உள்ளே வந்தார்கள். அவர் மனத்திலிருப்பதைப் புரிந்து கொண்டவர்கள் போல வீரபத்திரனைச் சுற்றிக் கொண்டார்கள். அப்பொழுது பெரியவர் கூறினார் “வாலிபனே! வீரபத்திரன் வாளை அவனிடமே கொடுத்துவிடு” என்று. 

வாலிபத்துறவி பதிலேதும் பேசாமல் வாளை வீரபத்திரனிடம் நீட்டினான். அதைப் பேயறைந்த முகத்துடன் வாங்கி உறையின் போட்டுக் கொண்ட வீரபத்திரன் தன்னைச் சுற்றிய வீரர்களுடன் வெளியே சென்றான. அவர்கள் செல்வதற்கு வழிவிட்டு. சத்திரத்து வெளி முற்றத்துக்கு வந்துவிட்ட பெரியவா, வீரபத்திரனின் துணைவர்களைப் பார்க்கவே, அவர்களும் பறந்தனர் வெனியே. 

எல்லாரும் வெளியே சென்றதும் பெரியவர், வாலிபத் துறவியை நோக்கினார். சில விநாடிகள் அவர் சிந்தனையில் ஏதோ படர்ந்திருப்பதை விழிகள் காட்டின. அந்தச் சிந்தனை கூட விநாடி நேரத்தில் மறைந்தது. ஏதோ முடிவுக்கு வந்து விட்ட பெரியவர் “உன் பெயரென்ன?” என்று வினவினார். 

“முகுந்தன்” என்று பதில் சொன்னான் வாலிபத் துறவி.

“இந்தச் சிறு வயதில் ஏன் துறவியாகிவிட்டாய்?” என்று வினவினார் பெரியவர். 

“விரக்திக்கு வயது கிடையாது. வயது வந்தவர்களெல்லாரும் விரக்தருமலலா” என்று பதில் சொன்னான் வாலிபத்துறவி. 

“விரக்தனுக்கும் வாள் தேவையா? சண்டை தேவையா?” என்று பெரியவர் கேட்டார். 

“விரக்தனுக்கும் தற்காப்பு அவசியம். உதாரணமாக நான துறவி குடிப்பதில்லை. வலுக்கட்டாயமாக குடிக்க வைக்க முற்பட்டான் உபதளபதி. இந்த மாதிரி நிலைகளிலிருந்து காப்பாற்றிக் கொள்வதற்குக் கத்தி தேவையாய் இருக்கிறது”. 

“எதிரியின் கத்தி?” 

“இல்லை. என்னிடம் ஒரு கத்தியிருக்கிறது” என்று சற்று எட்டக் கூடத்தில் தனது மூட்டைக்கருகில் மின்னிக் கொண்டிருந்த நாகசர்ப்பத்தைக் காட்டினான். 

அதை நோக்கிய பெரியவர் அதை எடுத்து வரும்படி சத்திரக்காரனுக்கு உத்தரவிட்டார். சத்திரக்காரன் எடுத்து வந்ததும் அதன் நுனியை விரலால் கூர் பார்த்தார். “மிகச் சிறந்த, பலமான ஆயுதம்” என்ற அவர், மீண்டும் வாலிபத்துறவியின் மீது கண்களை ஓட்டி “முகுந்தா! சோழ நாட்டிலிருந்து எப்பொழுது புறப்பட்டாய்?” என்று வினவினார். 

வாலிபத் துறவியின் முகத்தில் வியப்பு விரிந்தது “நான் சோழநாட்டிலிருந்து வருவதாக யார் சொன்னது?” என்று வினவினான். 

பெரியவர் அந்தக் கேள்விக்குப் பதில் சொல்லவிலவை “முகுந்தா! மூட்டையிலிருக்கும் அந்த முத்திரை ஓலையை எடுத்து வா” என்று ஓர் அதிர்வெடியை நிதானமாக வீசினார். 

முகுந்தன் முகத்தில் மேலும் வியப்பு விரிந்தது. “அதைப் பற்றி யார் சொன்னது உங்களுக்கு?” என்று வினவினான் வியப்பு குரலிலும் ஒலிக்க. 

பெரியவர் கையிலிருந்த நாகசர்ப்பத்தைச் சுட்டிக் காட்டி “இவர்தான்” என்றார். இத்துடன், ”சரி ஓலையைக் கொண்டு வா” என்று சற்று அழுத்தியும் சொன்னார். 

“அதைத் தங்களிடம் கொடுக்க முடியாது” என்றான் முகுந்தன்.

“ஏன்?” 

“அதை மஹாயனரிடந்தான் கொடுக்கவேண்டும்.”

“அவரிடந்தான் கொடுக்கச் சொல்கிறேன்.” 

இதைக் கேட்டதும் மலைத்தான் வாலிபத் துறவி “அப்படியானால் தாங்கள்.” என்று தொடங்கினான். 

அப்பொழுது சத்திரக்காரன உதவிக்கு வந்து மஹாயனர் வார்த்தைகளை மிக அச்சத்துடனும் மரியாதையுடனும் உதிர்த்தான வாலிபத் துரவி. பிரமை தட்டிய விழிகளை அவர்மீது நாட்டினான். ஆனால் அந்தப் பிரமையைவிட ஆயிரம் மடங்கு உயர்ந்த மற்றொரு நடவடிக்கையிலும் இறங்கிய மஹாயனர், “நீ எதிர்பார்த்தது இதுதானா பார்?” என்று கூறி மடியிலிருந்த எதையோ எடுத்து நீட்டினார். 

அதைக் கண்டதும் வாலிபத் துறவியின் உறுதியெல்லாம் எங்கோ பறந்துவிடவே அவன் சட்டென்று அவர் முன்பு மண்டியிட்டு அவர் பாதங்களில் சிரம் வைத்து வணங்கினான். 

5. பளிங்கு மண்டபம் 

மஹாயனர் மடியிலிருந்து எடுத்து நீட்டிய பொருளை கையில் வாங்கியதும் பிரமை தட்டி அவர் முன்பு மண்டியிட்டு விட்ட வாலிபனான முகுந்தன் மண்டியிட்ட நிலையிலிருந்து நீண்ட நேரம் எழுந்திருக்கவே இல்லை. குனிந்த தலைமையயும் நிமிர்த்த வில்லை. கையில் பளபளத்த அந்தப் பெரிய மரகதக் கல் மோதிரத்தைக் கண்ணால் விழுங்கி விடுபவன் போல் பார்த்துக் கொண்டே இருந்தான். அதன் உட்புறத்தைத் திருப்பி இருமுறை பார்த்து அதில் வெட்டப் பட்டிருந்த எழுத்துக்களை ஏதோ மந்திரத்தை உச்சரிப்பது போல் முணுமுணுத்தான், “புத்தம் சரணம் கச்சாமி” என்ற வார்த்தையொன்றும் புது வார்த்தையல்ல அவனுக்கு. மௌரிய சாம்ராஜ்யமும், ஏன் தொல் உலகில் பல பகுதிகளுங்கூட அந்தக் காலத்தில் உச்சரித்துக் கொண்டிருந்த வார்த்தைக்கு இருபுறமும் வார்த்தைக்குச் சம்பந்தமில்லாத குறிகள் வெட்டப்பட்டிருந்ததால், அவற்றையும் அதிர்ச்சியடைந்த உள்ளத்துடனும் கண்களுடனும் நோக்கினான் வாலிபத் துறவியான முகுந்தன். 

“முகுந்தா! வணங்கியது போதும் எழுந்திரு” என்று மஹாயனர் கூறி அவன் சிரத்தை ஆசீர்வதிக்கும் முறையில் தொட்டபிறகே உணர்வு வந்த வாலிபத் துறவி மெல்ல எழுந்திருந்து பயபக்தியுடன் அந்த மோதிரத்தைப் பெரியவரிடம் கொடுக்கக் கையை நீட்டினான். 

மஹாயனர் அவனைத் தமது கருணைக் கண்களால் நோக்கினார்; “முகுந்தா! அந்த மோதிரம் உன்னைச் சேர்ந்தது. நீயே வைத்துக்கொள், இத்தனை நாள் அதை வைத்து நான் காப்பாற்றியது போதும்” என்று கூறி. “வா முகுந்தா மற்ற விஷயங்களைப் பிறகு பேசிக் கொள்வோம்!” என்று கூறி வாயிற்படியை நோக்கித் திரும்பினார்.

வாலிபத் துறவியும் பழையபடி தனது மூட்டையைக் கட்டி அதில் நாகசர்ப்பத்தையும் திணித்துக் கொண்டு சிறு தடியுடன் மஹாயனரைப் பின்பற்றினான். அப்படிப் பின் பற்றிச் செல்கையிலேயே கேட்டான், “குருநாதரே! ஒலையைக் கேட்டீர்கள், பார்க்கவில்லையே” என்று. 

“மடத்துக்குப் போனதும் பார்த்துக் கொள்வோம். அதிலிருக்கிற விஷயம் எனக்குத் தெரியாததாக இருக்க முடியாது” என்று அலட்சியமாகக் கூறிய மஹாயனர் முன்னே நடந்தார். 

இருவரும் சத்திரத்து வாயிலுக்கு வந்ததும் உருவியவாளும். கையுமாக நின்றிருந்த பத்துப் பதினைந்து வீரர்களைப் பார்த்த மஹாயனர், “நீங்கள் மடத்துப் படை வீட்டுக்குச் செல்லுங்கள். நாளைக் காலையில் பார்ப்போம்” என்று கூறி அவர்கள் செல்லலாமென்பதற்கு அறிகுறியாகக் கையையும் அசைத்துவிட்டு, காஞ்சியின் பெரிய சாலையில் சிறிய மூட்டையுடனும் தடியுடனும் தொடர்ந்துவந்த வாலிபத் துறவியுடன் நடந்து சென்றார். 

இரவு ஏறிவிட்ட அந்த நேரத்திலும் காஞ்சி மாநகர் விழித்துக் விளக்குகள் கொண்டிருந்தது. வீடுகளின் உட்புறங்களில் எல்லாம் எரித்த விளக்குகள் மூலம் வெளியே வெளிச்சப்பட்டைகள் வீதியில் போவோர் வருவோர் மீது அவ்வப்பொழுது விழுந்து அவர்கள் யாரென்பதை விளக்கிக் கொண்டிருந்தன. சாதாரண வீடுகளையொட்டி ஆங்காங்கு எழுத்திருந்த பெரிய மாளிகைகளில் கூட தீபங்கள் பளிச்சென்று எரிந்தாலும், உள்ளேகூட மனித உலாவும் சத்தமும் பேச்சின் அரவமும் கேட்டுக் கொண்டிருந்தாலும் நகர மக்கள் எதையோ ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது சந்தேகமறப் புலனாயிற்று வாலிபத் துறவிக்கு. இருப்பினும் அவன் எதையும் கேட்காமல் மௌனமாக மஹாயனருடன் நடந்து சென்றான். 

முன்னால் சென்ற மஹாயனரோ, பின்னால் ஒருவன் தொடர்ந்து வருகிறானே என்ற பிரக்ஞை அறவே இல்லாமலும் பேச்சு எதுவும் கொடுக்காமலும் வேகமாக நடந்தார். அவர் வயதுக்கு அவர் நடந்த வேகம் மிக அதிகமாயிருந்ததால் வாலிபத்துறவி சிறிது நேரம் நடையிலும் சிறிது நேரம் ஓட்டத்திலும் சென்று கொண்டிருந்தான். அப்படிச்சென்றபோது அவர்கள் இருவர் நடை எழுப்பிய சத்தமும், யானைகட்டி மண்டப யானைகளின் பிளிறலும், கோட்டை வீரர் எச்சரிக்கைக் கூச்சலும் தவிர மற்றபடி பெரும் அரவமே வழக்கமாக காஞ்சி மாநகரில் இரவு நேரங்களில் ஒலிக்கும் நடன ஓசைகளோ இல்லாததைக் கண்டும் வியப்பு ஏதுமின்றி மஹாயனருடன் சென்றான் முகுந்தன். 

மஹாயனர் கோட்டை வாசல் வீதியிலிருந்த காஞ்சியின் உட்புறப் பெரும் வீதிகளில் திரும்பினபோதுதான் சிறிது சந்தேகப்பட்டு “குருநாதரே!” என்று அழைத்தான் முகுந்தன். 

மஹாயளர் அவனைத் திரும்பிப் பார்க்கவுமில்லை. வேகமான தமது நடையை நிறுத்தவுமில்லை. “என்ன முகுந்தா” என்று மட்டும் கேட்டுக் கொண்டு நடையைச் சிறிது துரிதப்படுத்தினார். 

“நான் கேள்விப்பட்டவரை…” என்று இழுத்தான் முகுந்தன், அவரை எட்டிச் சிறிது ஓடி! 
 
“கேள்விப்பட்டவரை?” மஹாயளர் வினவினார் நடையை நிறுத்தாமல், 

“புத்த விஹாரம் காஞ்சிக்குக் கிழக்குப் புறத்திவிருக்க வேண்டும்'” என்றான் முகுந்தன்.

“அங்கு தானிருக்கிறது. வேறு எங்கும் போய்விடவில்லை. அவ்வளவு பெரிய கட்டடத்தை யார் பெயர்க்க முடியும்?” என்று விதண்டாவாதமாகப் பேசினார் மஹாயனர். 

அவர் விதண்டாவாதத்தை முகுந்தன் கவனிக்கவே செய்தாலும் அதைப் பொருட்படுத்தாமல், “அப்படியானால் நாம் போகும் வழி மிகச் சுற்று வழி போலிருக்கிறதே” என்றான் முகுந்தன. 

“எங்கு போவதற்குச் சுற்று வழி” மஹாயனர் அலட்சியமாகக் கேட்டார். 

“மடத்துக்கு”

“அங்கு போவதாக யார் சொன்னது?” ‘

“வேறு எங்கு போகிறோம்?” 

“நீ இருக்க வேண்டிய இடத்துக்கு” 

வாலிபத் துறவி சட்டென்று நின்றுவிட்டான். அவன் நின்று விட்டத்தை உணர்ந்து மஹாயனரும் நின்று அவனை நோக்கித் திரும்பினார். சாதாரணமாகக் கோபம் துளிர்க்காத அவர் கண்களில் சற்றுக் கோபம் துளிர்த்திருந்ததைச் சற்று எட்ட இருந்த வீட்டுச் சாளரத்திலிருந்து விசிய விளக்கொளி நன்றாக எடுத்துக் காட்டவே முகுந்தன் சொன்னான் பணிவுடன். “எனக்குப் பல விஷயங்கள் புரியவில்லை குருநாதரே!” என்று. 

“புரியாத விஷயங்களைப் பற்றி ஏன் கவலைப்படுகிறாய்?” என்று கேட்டார் மஹாயனர். 

“நான் வந்த காரியம் புத்த மடத்தில் தங்களிடம் வித்தை கற்க” என்று சுட்டிக் காட்டினான் முகுந்தன்.

“ஆம்” அலட்சியமாக பதில் சொன்னார் மஹாயனர். 

”வித்தை கற்பதானால் நான் மடத்துக்குத்தான் வர வேண்டும்” என்று சொன்னான் முகுந்தன். 

“அப்படி ஏதாவது நிபந்தனை கூறினாரா உன் தந்தை?”

”இல்லை” 

“என்ன சொலலியனுப்பினார்?” 

“நீங்கள் எதைச் சொன்னாலும் தட்டாமல் நடக்கும் படி சொன்னார்”.

“அப்படித்தான் செய்கிறாயா இப்பொழுது?” என்று சுற்று உஷ்ணமாகவே கேட்ட மஹாயனர். சட்டென்று திரும்பி மேலும், நடக்கலானார். 

வேறு வழியின்றி முகுந்தன் அவரைப் பின்பற்றிச் சென்றான். மஹாயனர் பல தெருக்களைக் கடந்து கிழக்கு ராஜவீதியின் எல்லையிலிருந்த மிகக் குறுகலான ஒரு வீதிக்கு வந்து அங்கிருந்த ஒரு சிறிய வீட்டின் வாயிலில் நின்றார். ”முகுந்தார் வீட்டின் வாயிற் கதவை உன் கைத்தடியால் இருமுறை லேசாகத் தட்டு” என்று உத்தரவும் இட்டார், வாலிபத் துறவிக்கு. 

குறுகலான அந்த வீதிக்கு காஞ்சியே கண்டு அஞ்சக் கூடிய மஹாயனர் ஏன் வந்தார்? அந்தச் சிறிய வீட்டுக் கதயை எதற்காகத் தட்டச் சொல்கிறார் என்பதை எண்ணிப் பார்த்து ஏதும் புரியாவிட்டாலும் மஹாயனர் கட்டளையை மறுக்க முடியாமல் அவர் சொற்படிக் கதவை இருமுறை தட்டினான். சிறிது நேரம் கழித்து உள்ளிருந்து ஒரு குரல் கேட்டது. “யாரது?” என்று. 

வாயிலில் நின்றிருந்த மஹாயனர் “நான்தான்” என்று குரல் கொடுக்கவே உள்ளிருந்த பெரும் தாழ்ப்பாழ் கிரிச்சென்ற பெரும் சத்தத்துடன் அகற்றப்பட்டு வாயிற் பெரும் கதவும் மிகக் கஷ்டத்துடன் திறக்கப்பட்டது. அந்தக் கதவின் திண்மையையும் அதைத் திறப்பதிலிருந்த கஷ்டத்தையும் கவனித்த முகுந்தன், ‘இத்தனை சிறிய வீட்டுக்கு இத்தனை பெரிய கதவு எதற்கு? அரண்மனையில் இருக்க வேண்டிய கதவை இந்தச் சிறுவிட்டுக்கு ஏன் பொருத்தியிருக்கிறார்கள்?’ என்று தனக்குள் கேட்டுக் கொண்டாலும் அதைப் பற்றி வாய்விட்டு விசாரிக்காமல் மஹாயனர் உள்ளே செல்ல வழிவிட்டு நின்றான். 

மஹாயனர் தன்னைத் தொடர்ந்து வரும்படி முகுந்தனுக்குச் சைகை செய்து அந்த வீட்டுக்குள் நுழைந்தார். உடன் நுழைந்த முகுந்தன் கதவைத் திறந்தது ஒரு பணிப் பெண் என்பதைக் கவனித்து வியந்து கொண்டே நடந்தானென்றால். அடுத்து கண்ணுக்கு தெரிந்தவை அவன் வியப்பை லட்சோப லட்சம் மடங்கு உயரச் செய்தன. 

அந்தச் சிறிய வாயிலுக்கு அப்பால் ஒரு சிறு இடைகழி இருந்தது. அது ஒரு பெரிய பளிங்குக் கூடத்திற்குள் இணைந்தது. பளிங்குக் கூடத்திலிருந்த தூண்களின் சித்திர வேலைப்பாடுகளின் மதிப்போ ஒரு சிற்றூரையே விலைக்கு வாங்கக் கூடிய நிலையிலிருந்ததைக் கண்ட முகுந்தன், இந்தச் சிறிய வீதியில் சிறு முகப்புடன் கூடிய இந்த பெரிய அரண்மனை இருக்க வேண்டிய அவசியம் என்னவென்று சிந்தித்தான். பல விநாடிகள் அவன் கால்கள் அந்தப் பளிங்கு மண்டபத்திலிருந்து அசைய மறுத்தன. 

நீண்ட நேரம் அந்தப் பளிங்குமண்டபத்தின் மீதே கண்களை ஓட்டினான். ஒவ்வொரு தூணிலும் ஒரு பெண்சிலை செதுக்கப்பட்டிருந்ததால் தூண்களே பெண்களாக காட்சியளித்தன. ஒவ்வொரு உருவமும் ஏதோ நர்த்தன சாஸ்திரத்தின் ஒரு பகுதியை விவரிப்பதாக அபிநயமும் நாட்டியமும் பொருந்திய நிலையில் இருந்ததால் இதை யாரோ மிக ரசிகனான சிற்பி தயாரித்திருக்க வேண்டும் என் தீாமானித்தான் முகுந்தன். நாட்டிப் நவரசங்களையும் அள்ளி வீசிய அந்தப் பதுமைகள் அவனைப் பார்த்துச் சிரிப்பது போன்ற பிரமை ஏற்பட்டதால் முகுந்தன் பளிங்கு மண்டபத்தின் தரையை நோக்கினான். 

அந்தத் தரையில் மண்டப நர்த்தனப் பிரதிமைகள் ஒரிரண்டின் கைகளிலிருந்த விளக்குகளின் ஒளி படிந்திருந்ததால் அவன் உருவம் தலைகீழாகத் தெளிவாகத் தெரிந்தது. கண்ணாடியையும் பழிக்கும் அந்தத் தரையின் தெளிவைக் கண்டு பெரும் பிரமைக்கு உள்ளான முகுந்தன் அதில் தெரிந்த தன் உருவத்தைக் கண்டு வியந்து கொண்டே நின்றான். ஒருமுறை கையால் தனது சிறு தாடியைத் தடவிக் கொண்டபோது பிரதிபிம்பமும் அதைச் செய்தது. பிறகு வேண்டுமென்றே முகுந்தன் தனது மீசையைத் தடவினான் பிம்பமும் மீசையைத் தடவியது. அதைக் கண்டு அவன் லேசாகப் புன்முறுவல் செய்தபோது பிரதிபிம்பமும் லேசாகப் புள்முறுவல் செய்தது. அந்தச் சமயத்தில் மற்றொரு விசித்திரமும் நிகழ்ந்தது. பிரதி பிம்பத்தின் தலை சட்டென்று ஏதோ நிழலால் மறைக்கப் பட்டு அகன்றது. தலையற்ற முண்டம் மட்டும் தரைக்குள் தெரிந்தது. இது எப்படி சாத்தியம்? என்று அவன் சிந்திக்கையில்தான் அந்தச் சிரிப்பொலி அவன் காதில் விழுந்தது. தலை நிமிர்ந்து நோக்கிய முகுந்தன் தன் எதிரில் இரண்டடி தூரத்தில் மற்றொரு சிலை நிற்பதைக் கண்டான். சிரித்தது அந்த அழகு சிலையாகத்தான் இருக்கவேண்டும் என்று முடிவு கட்டிய முகுந்தன் “பெண்ணே நீ யார்? இங்கு என்ன செய்கிறாய்?” என்று வினவினான். 

அவள் பதில் சொல்லவில்லை – சற்று தூரத்திலிருந்து மஹாயனர் குரல் ஒலித்தது. ”அவள் தான் மாதவி” என்று. 

இதைக் கேட்டதும் முகுந்தன் குழப்பம் அதிகமாகியதே தவிரக் குறையவில்லை. 

“நான் எதற்காக இங்கு அழைத்து வரப்பட்டேன்” என்ற சீற்றத்துடன் சற்று எட்ட இருந்த மாடிப்படி முனையில் நின்ற மஹாயனரை நோக்கி வினவினான் முகுந்தன். 

“உன் துறவறத்துக்கு முடிவு கட்ட” என்றார் மஹாயனர்.

– தொடரும்…

– மாதவியின் மனம் (நாவல்), பாரதி பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *