சின்ன வீடு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 3, 2024
பார்வையிட்டோர்: 898 
 
 

(1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘சின்ன வீடு’ என்று அந்த வட்டார மக்களால் மரியாதையோடு அழைக்கப் பெற்றுவரும் அந்தக் குடில்…… 

சிங்கப்பூர் தீவின் மேற்கே …….. 

கடற்கரையை விட்டு வெகு தூரத்தில் 

நகர் புறத்தினின்று மிக மிகத் தள்ளி…… 

ஆரவாரமற்ற வட்டத்தில், துத்தநாகத் தகடு வேயப் பெற்று அமைந்திருந்தது. 

சின்ன வீட்டைச் சுற்றி முள் வேலி, வேலி ஓரமாகத் தங்கு தடையின்றி ஓடிக்கொண்டிருக்கும் சாய்க்கடை. அதனை ஒட்டி நீண்டு செல்லும் பசும்புல் ஐந்தடி சற் றேறக்குறைய இருபது அடிக்கு ஒன்றாக நின்றுகொண்டிருக்கும் மின்விளக்குக் கம்பங்கள். அடுத்தது. அந்த வட்டாரத் துக்கான ஒரே சுப்பிச்சாலை. 

சின்ன வீட்டின் எல்லைக்குள் நுழைய….. 

தங்குதடையின்றி ஓடிக்கொண்டிருக்கும் சாய்க்கடையின் மேல், நான்கடி அகலத்தில், எட்டடி நீளத்தில், இரண்டு அங்குல கனத்தில், குறுக்கும் நெடுக்குமாகப் பொருத்தப்பெற்ற மரச்சட்டங்களாலான மேடை, அதைக் கடந்து சென்று, வெளிவாயிலின் இரும்புக் கதவுகளைத் திறந்து உள்ளே நுழைந்தால்… 

பட்டுக் கம்பளம் விரித்தாற்போன்ற பசும்புற்தரை. நுழைவுவாயிலுக்கும் சின்னவீட்டின் வாசலுக்கும் இடையே மூன்றடி அகலத்தில் – இளமஞ்சள் மணற்பரப்பிலான நடை பாதை. நடைபாதையின் இடப் பக்கத்தில் ஒற்றை மாமரம் பூவும் பிஞ்சுமாக…… 

நடைபாதையின் வலப்பக்கத்தில் ஒரு பலாமரம்; அங் கொன்றும் இங்கொன்றுமாக சில காய்களும், பழுப்பு நிறக் காகிதத்தால் சுற்றிப் போர்த்தப்பெற்ற இரண்டு பழங் களும் தொங்கிக் கொண்டிருந்தன. 

வேலியோரத்தின் நெடுகிலும் – மல்லிகை. சாமந்தி, செம்பருத்தி, கனகாம்பரம், கோழிக்கொண்டை, குண்டு மல்லி, தும்பைப்பூ, நித்திய கல்யாணி, மாதுளஞ் செடி போன்றவை சின்னவீட்டை எடுப்பாக்கிக் கொண்டிருந்தன. 

வேலியின் வலதுபக்க மூலையில் செங்கரும்புப் புதர் அங்கிருந்து சற்றுத் தள்ளி, எட்டடி நீள அகலமும் நான்கடி ஆழம் கொண்ட மீன் குளம், குளத்தைச் சுற்றிலும் இரண்டு வரிசைகளில் சர்க்கரைவல்லிக் கிழங்குப் பாத்திகள், அல்லிக் கொடிகள் கரையோரத்தை அலங்கரிக்க, விராலும், கெண்டையும், மயிரையும், இறாலும் குளத்தை ஆட்சி செய்து கொண்டிருந்தன சர்க்கரைவல்லிக் கிழங்குப் பாத்திக்கும் செங்கரும்புப் புதருக்கும் இடைப்பட்டப் பகுதி யில், இரண்டடி அகலம், நான்கடி நீளம், இரண்டடி ஆழம் கொண்ட ஒரு நீர்த்தேக்கம். குளத்து மீன்களுக்கு இரையா வதைத் தடுக்கும் பொருட்டு, மீன் குஞ்சுகளை வளர்க்கும் நாற்றங்காலாக அமைந்திருந்தது. 

குளத்தின் வடக்கே கோழிக்கூண்டு, இரண்டு மாடி களைக் கொண்டிருந்தது. மேல் தளத்தில முட்டையிட்டு அடைகாக்கும் கோழிகள்; கீழ்த்தளத்தில் இரண்டு அங்குல இடைவெளிவிட்டுப் பொருத்தப்பெற்ற மரச்சட்டப் பரப்பில் சேவல்களும், பெட்டைகளும், குஞ்சுகளுமாக ஏறக்குறைய அறுபது உருப்படிகளின் குடியிருப்பு. 

கோழிக்கூண்டை அடுத்து, ஆறடி தள்ளி, வேலியை ஒட்டி, துத்தநாகத் தகடுகளால் கட்டப்பட்டிருந்த ‘எடுப்புக் கழிப்பறை’ அதனை அடுத்து ஒரு சிறிய பள்ளம், அதில் கோழிகளின் எச்சங்களும், உதிர்ந்த இலைகள் மற்றும் காய்ந்தபுல் முதலியன நிரப்பப் பெற்று புகைந்து கொண் டிருந்தது. செடிகளுக்கும் கொடிகளுக்கும் எரு அங்கிருந்து தான் பெறப்படுகிறது. அதற்கு அடுத்து இரண்டு கொய்யா மரங்கள்: அவற்றை ஒட்டி அவரைப் பந்தல். 

அவரைப் பந்தலுக்கு ஏழடி தள்ளி-மேற்கே-கிணறு பன்னிரண்டு அடி ஆழத்தில் தோண்டப் பெற்றிருந்த அந்தக் கிணறு. நான்கடி வட்டத்திலான சீமைக் காரைக்கட்டுக் (காங்கிரிட்) குழாய்களால் பொறுத்தப் பெற்று, தரையிலி ருந்து இரண்டடி உயரத்தில் முற்றுப் பெற்றிருந்தது, கிணற்றின் இரு மருங்கிலும் ‘ஐந்தடி உயரத்தில் இரண்டு மரத்தூண்டுகள்; குறுக்கே, இரண்டு அங்குல வட்ட இரும் புக் குழாய் பொறுத்தப் பெற்று, அந்த இரும்புக் குழாயின் மத்தியில் ஒரு இழுவைக்கப்பி தொங்கிக் கொண்டிருக்க, இழுலைக்கப்பியின் உருளையில் ஒட்டப்பட்டிருந்த தேங் காய்நார் கயிறு, கிணற்றடியில் ஏவலுக்குக் காத்துக் கொண்டிருந்த வாளியின் பிடியில் சுற்றப்பட்டிருந்தது. 

கிணற்றுக்கும் சமையலறைக்கும் இடைப்பட்டப் பகுதி யில், சிலுவை வடிவிலான இரண்டு மரத் தூண்கள் நிறுத்தப் பெற்றிருந்தன. அவற்றில் இடையே கட்டப்பட்டிருந்த நான்கு கம்பிகளிலும் ஈரத் துணிகள் உலர்ந்து கொண் டிருந்தன. 

சின்ன வீட்டினுள் செல்வதற்கு முன், அதன் பின்புறத் தோற்றத்தைக் காண்போம். வேலி ஓரத்திலிருந்து மூன்றடி தள்ளி, பட்டாளத்து மறவர்கள் அணிவகுத்து நிற்பது போன்று வரிசையாக நடப்பெற்றிருந்த மரவல்லிச் செடி கள். அவற்றின் அடியில் பச்சையும் சிவப்புமாகக் காய்த்துக் குலுங்கும் மிளகாய்ச் செடிகள். ஊன்றப்பெற்ற ‘காண்டா கம்புகளில் படர்ந்து, பச்சைநிறக் காய்களைத் தொங்க விட்டுப் பூரித்து நிற்கும் பயிற்றங்கொடிகள் …… 

மேற்கே… 

வேலிக்கு அரனாக, பூப்பூத்தும்-பிஞ்சுகளைக் குலை தள்ளியும் மிடுக்காக நிற்கும் ‘பீசாங் இம்மாசு’, பச்சை நாடன், கறிவாழை மரங்கள், சின்ன வீட்டின் சமையலறை யிலிருந்து மிளகாய், கத்தரி, வாழை, பயிற்றங்கொடி ஆகியவற்றின் ஊடே, வேலி வேலியோரத்துப் பெரிய சாய்க்கடையை நோக்கிப் பாயும் ஒரு சிறிய ‘அள்ளூர்’. 

சின்ன வீட்டின் சமையலறைக்கும் வேலி. ஒர வாழை மரங்களுக்கும் இடையே, தரை மட்டத்தில் தண்ணீர்க் குழாய் இணைக்கப்பட்டிருந்தது. வேலி ஓரத்தில் ஒரு நெடிதுயர்ந்த கம்பம்; கம்பத்தின் உச்சியிலிருந்து சின்ன வீட்டின் கூரையை நோக்கித் தொய்ந்து செல்லும் மின் வடங்கள். 

சிவப்பு வெள்ளைச் சாயமடித்த வாயிற்கதவைத் தாண்டி உள்ளே அடியெடுத்து வைத்ததும் காட்சி தருவது-கூடம் மரத்திலான ஒரு சதுர மேசை; நான்கு நாற்காலிகள்; சுவரோரத்தில் ஒரு நீண்ட இருக்கை-நான்கு பேர் அமரக் கூடியது; பஞ்சிலான திண்டுகள் அலங்கரித்தன. பக்கத்தில் ஒரு பேழை – பன்மொழி நூல்கள் அதில் அடக்கம். பேழை யின் மேல் கண்ணாடிச் சட்டத்தினுள் ஒரு நிழற்படம்; நால் வரின் நெஞ்சளவுப் படம். அதில் தோள்கோர்த்து முறு வலிப்பவர்கள்…… 

பீட்டர், 

அப்துல்காதர், 

குவான், 

அண்ணாமலை. 

நால்வரும் ஐம்பத்தைந்து அகவையைத் தாண்டிய கிழச்சிங்கங்கள்: இனிய பண்பினர்; சொத்தையில்லாப் பல்லினர்; குந்திக்கிடந்து தொந்தி வளர்க்கா தேனீக்கள்; உழைப்பால் உயர்ந்த சிங்கப்பூரின் நம்பிக்கை விண்மீன்கள்; சிங்கப்பூரியர்கள். 

கூடத்தை அடுத்து இடைபாதை-நேராகச் சமையல றைக்குச் செல்கிறது. அதற்கு முன்னர்……. 

நான்கு கதவுகளைக் கொண்ட நான்கு தனித்தனி அறைகள். இரண்டு இரண்டாக ஒவ்வொரு புறத்திலும்; வலது பக்கத்து முதல் அறை… 

திருக்குரான் வாசகங்கள் பொறிக்கப்பெற்ற கண்ணாடிச் சட்டம் கதவில் மாட்டப்பட்டிருக்க, உள்ளே. கூரையிலிருந்து தொங்கிக் கொண்டிருக்கும் மின் விளக்கு, பலகையிலான கட்டிலில் சுருட்டி வைக்கப்பட்டிருக்கும் பாயும் – தலையணையும், கட்டிலில் மேல், மையப்பகுதியில் சுருட்டி முடிச்சுப் போட்டுத் தொங்கிக் கொண்டிருக்கும் கொசுவலை; கம்பிக் கொடியில் மடித்துப் போடப்பெற்ற போர்வை; கட்டிலுக்கு அடியில் ஒரு மரப்பெட்டி ; அதற்குப் பக்கத்தில் தொழுகைப்பாய், இது…அப்துல் காதரின் அறை. 

அப்துல் காதரின் அறைக்கு நேர் எதிரே… 

செவ்வண்ண ஊதுவத்திக்கலன் கதவோரத்தில் மாட்டப் பெற்றிருக்க, உள்ளே கூரையிலிருந்து தொங்கிக் கொண்டிருக்கும் மின் விளக்கு ; பலகையிலான கட்டில் ; தொங்கிக் கொண்டிருக்கும் கொசுவலை : சுருட்டி வைக்கப் பட்டிருக்கும் பாயும் தலையணையும் : கொடியில் போர்வை; கட்டிலுக்கடியில் ஒரு மரப்பெட்டி ; சுவரோரத்து மரப் பேழையின் மேல் சீன எழுத்துக்கள் எழுதப் பெற்ற காகிதக் கற்றைகள் : இது குவானின் அறை. 

குவானின் பக்கத்து அறை………… 

தட்டினால் திறக்கப்படும். என்னும் வாசகம் தீட்டப் பெற்ற கண்ணாடிச் சட்டம் கதவில் தொங்கிக்கொண்டிருக்க, உள்ளே, கூரையிலிருந்து மின் விளக்கு ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. சுருட்டப்பட்டிருக்கும் பாயும் தலையணை யும், கட்டிலின் மேல் பள்ளி கொண்டிருக்க, மேலே கொசு வலை தொங்க, சுவரோரப் பேழையின்மேல் மெழுகு வர்த்தி நிறுத்தம் பாவமன்னிப்பு வரலாறு, பழைய கட்டிலின் அடியில் தோல்பை அடைக்கலம் கொள்ள, அது. பீட்டரின் அறைதான் என்று சொல்லாமல் விளங்கி விடுகிறது. 

பீட்டரின் அறைக்கு நேர் எதிரே… 

திருக்குறள் பாக்கள் அடங்கிய கண்ணாடிச் சட்டம் கதவில் தொங்கிக் கொண்டிருக்கிறது. உள்ளே… தொங்கிக் கொண்டிருக்கும் மின்விளக்கு, பலகையிலான கட்டில், அதனடியில் ஒரு துத்தநாகப் பெட்டி, சுருட்டி வைத்த நிலையில் பாயும் தலையணையும், மேலே தொங்கிக் கொண் டிருக்கும் கொசுவலை, சுவரை ஒட்டி ஒரு மரப்பேழை, அதன் மேல் கண்ணாடிச் சட்டத்துள் மூவரின் நிழற்படம் பக்கத்தில் ஊதுவர்த்தி நிறுத்தம். அது. அண்ணாமலையின் அறை, 

மீதமூள்ளது, சமையலறை……… 

மூன்றடி உயரத்தில், இரண்டடி அங்குலத்தில் நான்கு அங்குல மொத்தில் சமையலறையின் சுவரோரத்தில் எழுந்து நிற்கும் ‘சிமிட்டி’ மேடை, நடுப்பகுதியில் ஒரு கரி’ அடுப்பு அடுப்புக்கு நேர் மேல்புறத்தில் புகைக்குழாய். கரி அடுப்பின் மூன்று கால்களின் மேல் கரி பிடிக்காமலிருக்க அப்துல் காதரின் ஆலோசனையின் பேரில் அமைக்கப் பெற்றது. ஆறடி உயரத்தில் குளிர்பதனப் பெட்டி. கிண் ணங்களையும், கோப்பை. கத்தி, கரண்டி, அகப்பை போன்ற சமையலறைக்குத் தேவையான பொருட்களையும் அவரவருக்கென தனித்தனியாக ஒதுக்கப் பெற்றிருக்கும் சாப்பாட்டுத் தட்டை, குவளை, கரண்டி, அகப்பை போன்ற சமையலறைக்குத் தேவையான பொருட்களையும், அவரவருக்கெனத் தனித்தனியாக ஒதுக்கப் பெற்றிருக்கும் சாப்பாட்டுத் தட்டை, குவளை, கரண்டி, முள், வெந்நீர் புட்டி முதலான பொருட்கள் அடங்கிய சல்லடைக் கம்பிக் கதவுகளைக் கொண்ட மரப்பேழையும், சமையலறையின் ஒரு மூலையில்; தண்ணீர்க் குழாயின் அடியில் சீனத்துப்பீங் கான் தக்கரும், அதில் நிரம்பியிருக்கும் நீரின் தெள்ளிய தோற்றமும், மேலே தொங்கிக் கொண்டிருக்கும் மின் விளக்கும், அது ஓர் எளிய-அளவுக்கேற்ற சமையலறை என்று பறைசாற்றியதோடு, ஆடம்பரமல்ல முக்கியம். தேவை களை நிறைவு செய்யும் இடமென்று சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தது. 

அன்று தைத்திங்கள் முதல் நாள். 

உறக்கத்தில் ஆழ்ந்து கிடக்கும் உயிர்வாழ் இனங்களை உதிக்கும் ஞாயிறு எழுப்புவதற்கு முன் 

கின்ன வீட்டின் வெளி வாயிலில்……….. 

மாமரத்துக்கும் பலாமரத்துக்கும் இடைப்பட்டப் புல் தரையில்… 

அரைக்கால் சட்டையுடன் குவான் நிற்க. 

அப்துல் காதர் குவானுக்கு நிற்க, 

அண்ணாமலையும், பீட்டரும் அப்துல் காதரின் இடது வலது புறமாகப் பின் நிற்க, 

“தைச் சீ” என வழங்கும் உடற்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். குவான் தனது உடலைப் பல் கோணங்களில் அசைத்து, ஆட்டி, எம்பி, மூச்சை இழுத்தும் விட்டும் பயிற்சியளிக்க, இதை மூவரும் தொடர . ஒரு மணி நேரமாகத் தென்றல் அவர்கள் உடல் நலத்தில் கலந்து சங்கமமாகிறது. 

பயிற்சி முடிந்து, கூடம் அடைந்த நால்வரும் வழக்கம் போல் ஆளுக்கோர் ஆப்பிள் (சீமை இலந்தை) கனியைத் தோலோடு மென்று தின்றனர். அரை மணி நேரத்திற்குப் பின்னர்……. 

அப்துல் காதர் சமையற்கட்டை நோக்கிச் செல்கிறார். 

கால் மணி நேர இடைவெளியில், ஒவ்வொருவராகக் காலைக் கடன்களை முடித்துக்கொண்டு கூடத்தை அடை வதற்கும் அப்துல்காதர் காலைச் சிற்றுண்டி தயாரித்து மேசைக்குக் கொண்டுவரவும் சரியாக இருந்தது. அனைவரும் மேசைக்கு வந்து விட்டனர்; அண்ணாமலையைத் தவிர. பத்து நிமிடங்கள் கழித்து அண்ணாமலை வந்து சேர்ந்து கொண்டார். அனைவரும் புரிந்து கொண் டனர். பொங்கல் புது நாளன்று உடற்பயிற்சி முடிந்தவுடன் காலைக் கடன்களை முடித்துக்கொண்டு, புத்தம் புது மலர் களைக் கொய்து, காலஞ்சென்ற தன் மனைவி மக்களின் நிழற்படத்தின் முன் பரப்பி, ஊதுவத்தி ஏற்றிவைத்து.சில நிமிடங்கள் மௌனமாக நிற்பது அண்ணாமலையின் வழக்கம். அந்த சில நிமிடங்களில், ஆ சை, அன்பு, பாசம், பற்று போன்ற உணர்வுகளுக்கிடையே நிகழும் போராட் டம்… சதிராடும் சொந்தங்களின் நிழலாட்டம். இவற்றை யெல்லாம் கடந்துவிட்ட புத்துணர்வோடு புது வாழ்வின் வசந்த காலத்தில் உலா வருவார்…… 

இடியாப்பம், உருளைக்கிழங்கு கூட்டு, ஆவி பறக்கும் தேநீர், ஆளுக்கொரு வாழைப்பழம், காலைச் சிற்றுண்டியை முடித்துக்கொண்டனர். 

“இன்றைக்கு என்ன சமையல்?” கணை தொடுத்தார். அப்துல் காதர். 

“மரக்கறி பிரியாணி!” விடையளித்தார் குவான். 

“தக்காளிக் கூட்டு!” என்றார் பீட்டர். 

அண்ணாமலையைப் பார்க்கிறார் அப்துல் காதர். அவரும் காதரை ஏறிடுகிறார். 

“நீ ஒண்ணும் கேட்கலியா?” காதர் வினவினார். 

“காதர் காக்கா, இன்னிக்கு பொங்கல் புது நாள். தமிழனோட வருசப் பொறப்பு. உனக்குத் தெரியும் என்னைப் பத்தி. இருந்தாலும், அவுங்க அவுங்களோட ஆசா பாசங்களைப் புரிஞ்சுக்கிட்டு நடந்துக்கிட்டாத்தான், கட்டுக்கோப்பான ஒரு கூட்டமைப்பை உருவாக்க முடியும்னு தீர்மானம் பண்ணி இங்க கூடி வாழ்ந்துக்கிட்டு இருக்கோம் குவான் பன்றிக்கறி சாப்பிடுவான்; நானும் சாப்பிடுவேன் எல்லாருக்கும் தெரியும் பீட்டரும் நீயும் மாட்டுக்கறி சாப் பிடுவீங்க குவானும் சாப்பிடுவான். நமக்கு நல்லா தெரியும். பெரிய கடைத் தெருவுல எல்லாம் விக்கிறாங்க ஆசைப்பட்டவங்க சாப்பிட நாம தடை சொல்லல. சாப் பிட்டுட்டு இந்தச் சின்ன வீட்டுக்குள்ள நுழையக்கூடாதுனு நாம மொகம் சுளிச்சதும் கிடையாது. ஆனா… மாட்டுக் கறியையும் பன்றிக் கறியையும் இந்தச் சின்ன வீட்டுல புழங் கப்படாதுனு முடிவு செஞ்சு, அந்த முடிவை சமையல்கார னாக இருந்துக்கிட்டு நீ அமல் படுத்திக்கிட்டு வரும் போது… என்னால என்ன காக்கா புதுசா கேட்க முடியும்? உனக்கு என்ன விருப்பமோ அதை ஆக்கிப் போடு” அண்ணாமலை மனந்திறந்தார்; நீட்ட முழக்கோடு. 

குவானின் முகம் இரத்தச் சிவப்பாகியது 

பீட்டரின் கண்களில் நீர் கட்டியது. 

“அண்ணாமலை அய்யனாரே! இது உனக்கு மட்டும் பெருநாள் இல்ல, சாப்பிட்டுத்தான் உயிர் வாழனும்கிறது பிறப்பு நியதி; அந்த சாப்பாட்டுக்கான தானியங்களை விளைச்சு தருகிறானே உழவன், குவானோட இனத்தானும் உழுறான், பீட்டரோட சொந்தக்காரனும் உழறான். என்னோட வம்சத்தானும் உழுறான். அரேபியாவிலே உழா விட்டாலும் மலேசியாவிலே உழுறானே அவன் என்னோட உடன்பிறப்பு…இவங்க எல்லாம் பட்ட பாட்டுக்கு, படுற பாட்டுக்கு வந்தனை செய்யுற நாள் இது. பரங்கிப்பேட்டை டால்ச்சா மட்டுமில்ல ஏ. ஒன் சைவ சாப்பாட்டையும் என்னால சமைச்சுப் போட முடியும்… எல்லாம் அந்த வல்ல இறைவனோட கட்டளைதான் ..” என்று தனது இயலுந் தன்மையை விளம்பிக்கொண்டே, பிரம்புக் கூடையை எடுத்துக்கொண்டு சந்தைக்குப் புறப்பட்டார் அப்துல்காதர். 

“பூவூற்று” வாளியை எடுத்துக்கொண்டு. மலர்ப்பாத்தியை நாடிச் சென்றார் பீட்டர். 

விளக்குமாற்றை எடுத்துக்கொண்டு பெருக்குவதற்குப் புறப்பட்டார் குவான். 

கோழிக்கூண்டில் கீழ்த்தளக் கதவைத் திறந்து விட்டார் அண்ணாமலை. (கொக்கரக்கோ) என்று கூவிக் கொண்டே செங்கொண்டைச் சேவல்கள் சிறகடித்துச் பறந்து செல்ல, ‘கொக் கொக்’ கென்று பெட்டைக் கோழி கள் கொக்கரித்துக் கொண்டு துள்ளிச் செல்ல, ‘கீய் மூய்! யென்று இசையெழுப்பிக் கொண்டே கோழிக் குஞ்சுகள் தட்டுத்தடுமாறிக் கொண்டு பின் தொடர…… புதிய தோர் உலகத்தின் பண்ணொலி மாந்தி மெய்மறந் திருந்த அண்ணாமலையின் செவிப்பறைகளில்………

கீய் தீய் கீய்.. கொக் கொக்…கீய் கீய் ..’ எனும் ஒலியலை ஊடுருவ, சுதாரித்துக்கொண்டு திரும்பினார் அண்ணாமலை. கோழிக்கூண்டின் மேல்தளத்திலிருந்து சத்தம் வருவதை அறிந்துகொண்டு கதவைத் திறந்தார். அங்கே ……. கள்ளிப்பெட்டியில்… அடைகாக்கும் தாய்க் கோழி குந்தியிருக்க, தேங்காய்நார் பூம்பரப்பிலிருந்து, *கீய் .. கீய்… கீய்… கீய்…’ஒலி நேரம் செல்லச் செல்ல சத்தம் கூடிக்கொண்டிருந்தது. அண்ணாமலை புரிந்து கொண்டார் இத்தனை குஞ்சுகள் என்பதனையும் ஓரளவுக்கு ஒலி வழியே கணித்துக் கொண்டார். 

கூட்டிப் பெருக்கிக் கொண்டிருந்த குவானிடம் ஓடிச் சென்று செய்தியைச் சொன்னார். குவானின் வாயெல்லாம் பல்லாக – துள்ளிக் குதித்தோடினார் கோழிக்கூண்டை நோக்கி… 

பூச்செடிகளுக்குக் களையெடுத்துக் கொண்டிருந்த பீட்டரிடம் ஓடினார் அண்ணாமலை. நாளுக்குப் பல பூ மலரக்கண்டு புளங்காகிதம் அடையும் பீட்டருக்கு, அடை காத்த முட்டையிலிருந்து புறப்பட்டுவரும் பிஞ்சுக் குஞ்சு களைக் காண்பதில் கொள்ளை ஆசை. கோழிக்கூண்டை நோக்கி விரைந்தார்…… 

சந்தைக்குச் சென் றிருக்கும் அப்துல் காதர் வர நேர மாகும். காரியங்கள் கிடுகிடுவென நடந்தாக வேண்டும். அடையிலிருக்கும் கோழிக் குஞ்சுசுகளுக்கு வெளி உலகைக் காட்ட, சடங்கு சம்பிரதாயங்கள் எல்லாம் நடந்தாக வேண்டும். அண்ணாமலைப் பெரியார் தான் விழாத் தலைவர். வரவேற்பாளரான குவான், பாராங் கத்தியை ஏந்தி வந்தார்; அறிமுக உரையாளரான பீட்டர், தண்ணீர் நிரம்பிய கிண்ணம், கூட்டிப் பெருக்கப்பட்டிருந்த தரையில் கள்ளிப் பெட்டியை இறக்கி வைத்தார் அண்ணாமலை, தாய்க் கோழியின் கொக்கரிப்பு அதிகரித்துக் கொண்டிருந்தது. பெட்டியின் பக்கத்தில், தரையில், பாராங்கத்தியைப் படுக்கப் போட்டார் குவான் ; அதனருகில் தண்ணீர்க் கிண்ணத்தை வைத்தார் பீட்டர். வட்ட வடிவி லான பிரம்புக்கூடை ஒன்றை எடுத்து வந்து கள்ளிப் பெட்டி யின் அருகில் வைத்தார் குவான்;மனைக்கட்டையை எடுத்துப் போட்டு, கள்ளிப் பெட்டிக்குப் பக்கத்தில் அமர்ந்த அண்ணாமலை, தாய்க் கோழியின் தலையிலிருந்து கழுத்து வழியாக முதுகு இறக்கை வரையில் பதமாகத் தடவிக் கொடுக்க ஆரம்பித்தார். தடவலின் ‘ஒணக்’கை தாய்க் கோழியை அமைதிபெற செய்தது. இரண்டு கைநிறைய குறு நொய்யை (பொடி அரிசி) அள்ளி வந்து பாராங்கத்தியின் முன்னே தூவினார் பீட்டர். 

சந்தையிலிருந்து திரும்பிய அப்துல் காதர், ஆரவாரம் கேட்டு, விழாவில் கலந்து கொண்டார். வழுக்கைத் தலை யில் வெள்ளைத் துண்டைப் போர்த்திக் கொண்டார். 

வலதுகர விரல்களை இறக்கைகளின் இடையே ஓட விட்டு. தாய்க் கோழியை அலாக்காகத் தூக்கிய அண்ணாமலை. கவிழ்த்து வைக்கப்பட்டிருந்த கூடையினுள் தாய்க் கோழியை விட்டு மூடினார். கள்ளிப் பெட்டியில் தேங்காய்நார் வட்டத்திற்குள்… 

மஞ்சள், கருப்பு, கருப்பும் வெள்ளையும், சாம்பல் ஆகிய நிறங்களிலான கோழிக் குஞ்சுகள். ‘கீய்… கியோ… கீய்’ என்று அண்ணாந்து பார்த்தவண்ணம் தாயை அழைத் தனவோ – தந்தையை விளித்தனவோ, அல்லது கசாப்புக் கடைக்காரன் வருகைக்குக் கட்டியம் கூறினவோ… பேத மில்லா நாதவொலி. 

உடைந்து காய்ந்த முட்டை ஓடுகளின் இடையே தனது கையைக் கொண்டு சென்ற அண்ணாமலை, பஞ்சுப் பந்து போலிருந்த கோழிக்குஞ்சுகள் ஒவ்வொன்றையும் உள்ளங் கையில் அடக்கி எடுத்து, அவற்றின் அலகுகளில் ஒட்டிக் கொண்டிருந்த வெள்ளை நிறத்திலான பருப்பை, வவதுகை சுட்டு விரல் நகத்தால் பெயர்த்தெடுத்து, கிண்ணத்துத் தண்ணீரில் அவற்றின் அல குகளையும் கால்களையும் நனைத்து, பாராங்கத்தியின் மேல் விடுகிறார். தமக்குப் புதிதாகப்பட்ட பூமியையும், வானத்தையும் தொட்டு. நோக்கி, தாய்க்கோழியின் குரல் வந்த திசை நோக்கி ஓட லாயின. கூடையைச் சுற்றி வலம்வருகின்றன. நின்ற பாடில்லை; ஓட்டமும் துள்ளலும்தான். இறுதியாகக் கூடையை அகற்றினார் அப்துல்காதர். குகைவிட்டுக் கிளம்பியப் புலியைப் போல் வில்லிட்டுப் புறப்பட்ட அம்பைப் போல், கொக்கரித்துப் பறந்துவந்த தாய்க் கோழியின் குரலொலி வானைப் பிளந்தது. வட்டமிட்ட குஞ்சுகளின் ஆரவாரம் அடங்குவற்குச் சிறிது நேரம் பிடித்தது. சிதறிக் கிடந்த நொய்யைத் தாய்க்கோழி கொத்திக் காட்ட, குஞ்சுகளும் பின்பற்றின. இந்தச் சில நொடிப்பொழுது நிகழ்வுகளை மெய்மறந்து மாந்திக் கொண்டிருந்த நால்வரும் தத்தமது கடமைகளைச் செய்யப் புறப்பட்டனர். 

அப்துல் காதர் சமையலில் மும்முரமாக ஈடுபட்டார். 

வேலி ஓரத்து ‘லாலான்’ புல்லைச் செதுக்க முற்பட்டார் பீட்டர். 

மேல்மூடி வெட்டப்பட்ட இரண்டு காலி மண்ணெண்” ணெய்க் கலன்களைச்சுமந்திருந்த தள்ளுவண்டியைத் தள்ளிக் கொண்டு, வெளிவாயிலைவிட்டு, சாலையைக் கடந்து, குக் கிராமம் நோக்கி விரைந்தார் குவான். 

கிணற்றிலிருந்து நீர் கோரி-கோழிக்கூண்டைச் சுத்தம் செய்து கொண்டிருந்தார் அண்ணாமலை. 

கீழ்வானக் கதிரவன் நடுவானம் நோக்கி நகர்ந்து கொண்டிருந்தான். 

மண்ணெண்ணெய்க் கலன்களில் பழைய சோற்றை நிரப்பிக் கொண்டு, செம்மண் வீதியில் வண்டியைத் தள்ளிக் கொண்டு கடைத்தெருவைக் கடந்து வந்தார் குவான். வலது பக்கம் திரும்பிப் பார்த்தார். மாலை நேரங்களில் அவர் சிற்றுண்டி அருந்தும் காப்பிக்கடை ; பக்கத்தில் சலவைக்கடை -அதில் பாதி ஒற்றை நாற்காலி போட்ட முடித்திருத்தகம்; முடிவில் மருந்துக்கடை. 

சாலையைக் கடந்துகொண்டிருந்த குவானின் இடது புறத்தில்…… 

முகம்மது குஞ்சுவின் ரோசாக் கடை; பக்கத்தில் அரிசிக் கடை; துவிச்சக்கர வண்டி பழுது பார்க்கும் கடை; அதையடுத்து வாளி, தேநீர் கிண்டி,வெண்ணீர்த் தவலை போன்ற துத்தநாகப் (தகர) பாத்திரங்கள் பழுது பார்க்கும் ‘ஓட்டு’க் கடை; அதன் கோடியில் காய்க்கறிச் சந்தை. 

சின்னவீட்டின் வெளிவாயிலைக் கடந்து உள்ளே வரு கிறார் குவான். தள்ளு வண்டியின் கடமுடா சத்தத்தைக் கேட்டு, மூலை முடுக்குகளில் மேய்ந்து கொண்டிருந்த கோழி களுக்கிடையே பரபரப்பு. அலுங்காமல் குலுங்காமல் தீனி யென்றால்…. கோழிக்கூண்டை நோக்கி விரைகின்றன. ஐந்தறிவுக் கோழிகள்; பிறப்பெடுத்த சமுதாயத்தின் மானத் தையும், வரலாற்றுப் பெருமைகளையும் பலிபீடம் நோக்கி இழுத்துச் செல்கின்றனர் ஆறறிவு மாந்தப் பிண்டங்கள். 

கோழிக்கூண்டின் ஓரமாக நீண்ட வரிசையில் – பலகை யால் ஆக்கப்பெற்றிருந்த தொட்டியில் சோற்றை அள்ளிப் போட்டார் குவான். ‘கொக்கரக்கோ’ முழக்கத்துடனும், “கொக்…. கொக் … கொக்…’ என்ற கொக்கரிப்புடனும் கோழிப்படை சோற்றுக் கூடையை முற்றுகையிட்டது. 

தெரிந்த, பழக்கமான சில நண்பர்களின் வீட்டிலிருந்து தினந்தோறும் பழைய சோற்றைப் பெற்றுவருவார் குவான். இயேசுநாதர் ஆண்டு முதல் நாளில்-சனவரித் திங்கள் முதல் நாளில் – பொதுப் புத்தாண்டு துவக்க நாளில் – ஒவ்வொரு இல்லத்தாருக்கும் இரண்டு கோழிகள். இருபது முட்டைகள் அன்பளிப்பாக வழங்கப் பெறுவது வாடிக்கை. 

வேலி ஓரமாக அந்த வண்டி வந்து நிற்கிறது. ஓட்டுநர் பகுதியை உள்ளடக்கி மொத்தம் நாற்பத்தொன்பது கதவு களைக் கொண்டிருந்தது. “மல வண்டி’ என்று சொன்னால் கண்பட்டு விடுமோ என்னவோ, “பவுன் வண்டி” என்று அவ்வட்டார மக்கள் அதனை அழைப்பது விசித்திரம்தான், நீல நிற உடை அணிந்திருந்த ஒரு வயோதிகர், பல்லிடுக்கில் பற்றிய புகையும் சுருட்டுடன் மூடி போடப்பட் டிருந்த இரண்டு கருப்புத் தொட்டிகளைக் கீழே இறக்கி, இரும்புக் கொக்கிகள் இரு முனைகளில் தொங்கிக் கொண்டிருந்த ‘காண்டா’ கம்பில் கருப்புத் தொட்டிகளை மாட்டிக் கொண்டு – வலது தோளில் சுமந்தவாறு சின்ன வீட்டின் கழிவறை நோக்கி விரைந்தார். பழையன கழிகின்றது; ஒரு தொட்டியின் மூடியை அகற்றி, அதிலிருந்த தண்ணீரைக் குவளையால் மொண்டு கழிவறையின் அடித்தளத்தைக் கழுவிச் சுத்தம் செய்து, மற்றொரு தொட்டியின் மூடியை அகற்றி – உள்ளே தள்ளிவிட்டு தொட்டிகளில் மூடிகளைப் பொருத்தி, காண்டாக்கம்பில் மாட்டிக் கொண்டு நகர்ந்தார். பவுன் வண்டி அடுத்த கொல்லையை நோக்கி விரைகிறது. 

தாவர இனங்களுக்கு ஆகவேண்டியதைச் செய்து முடித்த பீட்டர், கோழிக்கூண்டை அடைந்து, ஒரு சிறிய தட்டை யில் பழைய சோற்றை அள்ளிக் கொண்டு குளத்தருகே வருகிறார். குளத்தின் நாலாபுறங்களிலும் அவர் வருகையை எதிர்பார்த்து மிதந்து கொண்டிருந்த மீன்கள், பீட்டரின் நிழல் கண்டதும் துள்ளிக் குதித்து நீந்தத் தொடங்கின. சோற்றை அள்ளிக் குளத்தில் இறைத்தார் பீட்டர், குளத் தில் பெரிய போராட்டமே நடந்து ஓய்ந்தது. 

நான்கு கால்களைக் கொண்ட மர ஏணியை வாழை மரத்தருகே தூக்கி வந்து நிறுத்தி, கையில் கத்தியுடன் அதில் ஏறி, கிழிபடாத வாழை இலைகளாகப் பார்த்து நறுக்கி, பக்குவமாகத் தரையில் இறக்கிவிட்டு. இறங்கி வந்து, இலைகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கிக் கொண்டு கிணற்றை அடைந்தார் அண்ணாமலை. வாளி யைக் கொண்டு கப்பி வழியாக நீரைக் கோரி, முகம் கை கால்களை அலம்பிக் கொண்டு, இலைகளை எடுத்துக் கோண்டு சமையலறையை அடைந்தார். 

நெய்வாசம் கமகமக்கிறது. மரக்கறி பிரியாணி தயாரா கிக் கொண்டிருந்தது. 

மண்ணெண்ணெய்க் கலன்களையும், தள்ளு வண்டியை யும் கழுவிக்கொண்டு கிணற்றடியை விட்டகலுகிறார் குவான். 

ஒரு பிடி பிண்ணாக்கைப் பொடியாக்கி’சிறு குளத்து மீன் குஞ்சுகளுக்குப் போட்டு விட்டுக், கிணற்றடியை நாடினார் பீட்டர். 

இதமான வெய்யில் காய்ந்து கொண்டிருந்தது. பனியிழை மென்காற்று வீசிக்கொண்டிருந்தது. 

கூடத்து மேசை மீதிருந்த குளிர்நீர் புட்டியை எடுத்து குவலையை நிரப்பினான் குவான். பீட்டரும் அண்ணாமலை யும் பத்திரிக்கைச் செய்தியில் மூழ்கியிருந்தனர். குவானும் ஒரு பத்திரிகையை எடுத்து விரித்தார்…… 

அப்துல் காதர் சமையல் அதிகாரத்தின் கடைசிப் பத்தியை இயற்றிக கொண்டிருந்தார். 

உச்சிப் பொழுதின் கோட்டைத் தாண்டிக் கொண்டி ருந்தான் கதிரவன். 

மகிழ்வுந்து ஒன்று வெளிவாயிலருகே வந்து நிற்கிறது. பன்னிரண்டு அசுவை மதிக்கத்தக்க சிறுவனொருவன் உந்தி லிருந்து இறங்கி, வாயிற்கதவின் கொக்கியை இழுத்துக் கதவைத் திறக்க-மகிழ்வுந்து உள்ளே வந்து நிற்கிறது. 

ஓசை கேட்டு குவானும், பீட்டரும், அண்ணாமலையும் சின்ன வீட்டின் வாசலை அடைகின்றனர். அங்கே….. 

அண்ணாமலையிள் தம்பி மகன் முத்தரசன், அவன் மனைவி பவளக்கொடி, பிள்ளைகள் இனியன், குமுதன், கனியன், வெண்ணிலா ஆகியோர் ஆளுக்கொரு பையைத் தூக்கிக் கொண்டு வாயிலை அடைந்தனர், 

மூத்தவன் இனியன் ; கடைக்குட்டி. கனியன் – அகவை ஆறு. குமுதனும் வெண்ணிலாவும் இடைப்பட்ட வர்கள், எல்லோருக்கும் வணக்கம் சொல்லிக் கொண்டு உள்ளே சென்றனர். 

“நலமா பெரியப்பா?” முத்தரசு 

நாரண புதுமைப்பித்தன் 1à7 

“எப்படி இருக்கிங்க மாமா? “பவளக்கொடி. 

“தாத்தா…தாத்தா…” பேரப்பிள்ளைகள், 

ஆரவாரமற்றுக் கிடந்த சின்ன வீடு’ உயிர் பெற்று. களைகட்டியது… 

சமையலறையிலிருந்து கூடத்துக்கு வந்தார் அப்துல் காதர். 

ஆளுக்கொரு தாத்தாவைக் கட்டிப்பிடித்துக் கொண்டு கும்மாளமிட்டனர் குழந்தைகள். மல்லிகை மாலையையும் உதிரிப்பூக்களையும், ஊதுவத்திக். கட்டையும் எடுத்துக் கொண்டு அண்ணாமலையின் அறையை நோக்கி நடந்தாள் பவளக்கொடி, முத்தரசன் பின் தொடர சற்றைக்கெல் லாம் அனைவரும் அண்ணாமலையின் அறையில் குழுமினர்- அண்ணாமலையின் மனைவி, மகன், மகள் ஆகியோரின் படத்துக்கு மாலை சூட்டி’ உதிரிப்பூக்களை முன்னே பரப்பி ஊதுவத்திகளைக் கொளுத்தி வைத்து, அனைவரும் மௌளன அஞ்சலி செலுத்திவிட்டு, கூடத்திற்கு மீண்டனர். பவளக் கொடி அடுக்களை நோக்கி நடந்தாள். 

“குவான் தாத்தா, இப்பவே போயி, இதுல இருக்கிற சட்டையைப் போட்டுக்கிட்டு வாங்க” என்று கூறிக் கொண்டே, அன்பளிப்புத்தாளில் மடிக்கப் பெற்றிருந்த பொட்டலத்தைக் குவானிடம் கொடுத்தான் இனியன். 

அவனைத் தொடர்ந்து பீட்டருக்கு வெண்ணிலாவும், அப்துல் காதருக்கு கனியனும், அண்ணாமலைக்குக் குமுதனும்-ஆளுக்கொரு பொட்டலமாகக் கொடுத்து அனுப்பினர். முதலில் அறையிலிருந்து வெளிப்பட்டவர் குவான். இனியனின் தோள் பிடித்துச் சிரித்தார். அந்தச் சிரிப்பில் இமயத்தின் குளுமை படர்ந்திருந்தது, 

பீட்டர் வந்தார். அவரை நோக்கி ஓடிச்சென்ற வெண்ணிலாவை அள்ளி அனைத்துக் கொண்டார். அந்த அரவணைப்பில் ‘நயகரா’ நீர்வீழ்ச்சியின் குளுமை அடர்ந் திருந்தது. 

புதுச்சட்டையை அணிந்து கொண்டு, தோளை உலுக்கி நடந்து வந்தார் அப்துல் காதர். கனியன் முன் குத்துக் காலிட்டு, அவனது பிஞ்சுக் கன்னங்களில் தனது உள்ளங்கை களை அழுத்திக் கூர்ந்து நோக்கினார். அந்தப் பார்வையில் “தோபா ஏரி’யின் குளுமை உலா வந்தது. 

புத்தாடை பூண்டு வந்த அண்ணாமலையை நாடி ஓடினான் குமுதன். அவனை அள்ளி அணைத்து உச்சி முகர்ந்தார் அண்ணாமலை. அந்த அரவணைப்பில் பொதிகைமலை’த் தென்றலின் குளிர்ச்சி ஊடுருவியது 

‘காதர் மாமா. சாப்பாடு எடுக்கவா?’, பவளக்கொடி யின் குரல் கேட்டுத் திரும்பினார் காதர். 

“பொறும்மா, அந்தக் தக்காளிப்பச்சடி இன்னும் ஆகல…” 

“அதை நான் கவனிச்சுக்கிறேன் மாமா; நீங்க ஓய் வெடுத்துக்குங்க” வாழை இலைகளைத் துண்டாடி, ஈரத் துணியால் சுத்தம் செய்து கொண்டே கூறினாள் பவளம். 

“பீட்டர்,குவான், அண்ணாமலை, இதுக்கு என்ன சொல்லப் போறிங்க…மருமவ பச்சடி செய்யப் போவுதாம்; அப்புறம், நாளையில் இருந்து இந்தக் காதர் கிழவனை அடுப்படிப் பக்கம் போவக் கூடாதுனு சொல்ல மாட்டிங்களே..” காதரின் இந்தக் கூற்றுக் கேட்டு எல்லோரும் வாய் விட்டுச் சிரித்தனர்…வயிறு குலுங்கச் சிரிக்க அங்கே யாருக்கும் தொந்தி கிடையாது. 

எலுமிச்சம் சாற்றைக் குளிர் நீரில் கலந்து குழந்தை களுக்கும் முத்தரசுவுக்கும் கொடுத்தார் காதர். பவளக் கொடிக்காக ஒரு கோப்பையில் ஊற்றி எடுத்துக் கொண்டு அடுக்களையை நோக்கி நடந்தார்……. 

“தாத்தா, தாத்தா …எனக்குப் பூ வேணும்….’ என்று அண்ணாமலையைப் பார்த்துக் கேட்டாள் வெண்ணிலா. அவள் கரம் பற்றி அழைத்துச் சென்றார் அண்ணாமலை. 

“பீட்டர், தாத்தா…எனக்குக் கொய்யாக்கா வேணும்’ என்றான் கனியன். 

“குவான் தாத்தா, எனக்கு மீன்குஞ்சு வேணும்…” என்றான் குமுதன். 

அடுக்களையிலிருந்து வந்து கொண்டிருந்த அப்துல் காதரிடம் ஓடிச்சென்று, “சமையல்காரத் தாத்தா… நான் கோழிக்குஞ்சு பார்க்கணும்” என்றான் இனியன். 

இப்படியாக…..
மலர்வனத்தையும்,
பழத்தோப்பையும், 
மீன் குளத்தையும், 

கோழிப் பண்ணையையும் சுற்றிக் காட்டிட நான்கு இளஞ்சிங்கங்களை அழைத்துக் கொண்டு சென்றனர் நான்கு முதிய சிங்கப்பூரியர்கள். 


சின்ன வீட்டில் தனித்து விடப்பட்ட முத்தரசுவும் பவளக்கொடியும்… 

“இந்த வாண்டுகளுக்குத் தாத்தாக்களைக் கண்டுட்டா போதும், பாருங்களேன்…கும்மாளமடிக்கிறத…” பூரிப்பு நிறைந்திருந்தது பவளத்தின் குரலில். 

“இந்த மாதிரிக் காட்சிகளைப் பார்க்கப் பூரிப்பாதான் இருக்கு. வயதானவங்களைத் தனியா விட்டுப்புட்டுப் பாடு படுத்தக் கூடாதுனு சொல்றாங்க. நமக்கு என்ன கொறைச் சல்? வீடு இல்லையா? காடி இல்லையா? ஆதரிக்கிற மனசு தான் இல்லையா? கேட்க மாட்டங்கிறாரே பெரியப்பா. பெரிய வீடும் பெரிய வசதியும் வேண்டாம்கிறாரு. கடைசி மூச்சு இருக்கிற வரைக்கும் உழைச்சுக்கிட்டே இருப்பேன் கிறாரு…..” அலுத்துக் கொண்டான் முத்தரசு. 

“அவுங்க இங்கே மகிழ்ச்சியா இல்லேன்னு சொல்றிங்களா?” கேட்டு வைத்தாள் பவளக்கொடி. 

“எப்படி அப்படிச் சொல்ல முடியும். நல்லாதான் இருக்காங்க. யாருக்கும் தொந்தரவு கொடுக்காமதான் வாழ்ந்துக்கிட்டு வாராங்க. குற்றம் குறைனு சொல்றதுக்கு ஒண்ணுமே இல்லதான்……” முத்தரசு இழுத்தான். 

“அது என்ன ‘இல்லதான்’னு இழுக்கிறீங்க…” பவளம் விடவில்லை. 

“உனக்குப் புரியாது பவளம்… நம்ம உறவுக்காரங்களை நெனச்சாதான் என்னமோ போல இருக்கு. என்ன சொல் லிக்கிறாங்க தெரியுமா? தாய் தந்தையை இழந்த என்னைத் தன் சொந்தப் பிள்ளை மாதிரி வளர்த்து ஆளாக்கி, பட்ட தாரியாக்கிக் கெளரவமான நிலைக்குக் கொண்டு வந்த. பெரியப்பாவை ஒதுக்கி வச்சுட்டேனாம். அனாதை ஆக்கிட்டேனாம்.” முத்தரசுவின் குரலில் வேதனையின் சாயல் இழையோடியது. 

“கல்யாணம் நடந்த காலத்துல இருந்து நானுந்தான். மாமாகிட்ட சொல்லிக்கிட்டு வாரேன். அவுங்க புடிச்ச முயலுக்கு மூணுகாலுன்னு சாதிக்கும்போது நாமஎன்னாங்க செய்ய முடியும்?” கணவனின் மனவேதனையைப் பங்கு. போட்டுக் கொண்டாள் பவளம். 

“எனக்கென்னமோ பெரியப்பா சொல்றதுல பொருள் இருக்குதுனு தான் தோணுது. ஆண்டுக்கு ஆறு தடவையா வது குடும்பத்தோட இங்க வந்துட்டுப் போறோம். ஏதாவது காரியம்னா தொலைபேசியில் பேசிக்கிறோம்….” 

“இப்படி, நமக்கு நாமே சமாதானம் சொல்லிக்க வேண்டியதுதான்…” 

“பிள்ளைகளைக் கவனிச்சியா பவளம்.. தாத்தாவைப் பார்க்கப் போகணும்னு போன வாரம்தான் சொன்னோம். ஒரு வார காலமா என்ன கொண்டாட்டம்… அந்தத் தாத்தா வுக்கு அது வாங்கணும், இந்தத் தாத்தாவுக்கு இது வாங் கணும், அந்தத் தாத்தாகிட்ட அது கேட்கப் போறேன். இந்தத் தாத்தாகிட்ட இது கேட்கப் போறேன்னு ஆளுக்கு ஆளு போட்டி போட்டுக்கிட்டு வீட்டையே அமர்க்களப் படுத்திட்டாங்களே… ‘ முத்தரசு பெருமிதத்துடன் கூறினான். 

“இப்படி ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவை பிள்ளைங்க கிட்டச் சொல்றதும், வந்து பார்க்கிறதும், அந்த நினைவுல ரெண்டு மாசத்துக்கு பிள்ளைங்க மிதக்கிறதும்… குடும்பமா இருக்கிற நமக்கு சர்க்கரைப் பொங்கலாத்தாங்க இருக்கு மத்தவங்க இதைப் புரிஞ்சுக்க மாட்டங்கிறாங்களே” பவளம் நிலையைத் தொட்டாள். 

”நெஞ்சுக்கு நீதி-மனசாட்சி தான் மகளே…” குரல் வந்த திசை நோக்கித் திரும்பினர் முத்தரசும் பவளக்கொடியும். 

கூடை நிறை மலர் சிரிக்க, வெண்ணிலாவின் கரம் பற்றி, விழி வழியே நீரோடும் தோற்றத்துடன் நின்று கொண்டிருந்தார் அண்ணாமலை. 

“பெரியப்பா” முத்தரசு திடுக்கிட்டுப் போனான். 

“மாமா…” பவளக்கொடி தடுமாறி நிற்கிறாள். 

“இப்பவும் சொல்றேன் நல்லாக் கேட்டுக்குங்க… சொந்தம், பந்தம், வசதி வாய்ப்புனு சொல்லிகிட்டு என்னைச் சோம்பேறியா ஆக்கிடாதீங்க, நான் வாழ ஆசைப்படுறேன்; அதுவும் சுதந்திரமா வாழ ஆசைப்படு றேன். உங்க துணையை அறுத்துக்கிட்டு வாழ ஆசைப் படுறதா நினைச்சுக்காதீங்க… தொண்டையில ஓட்டையைப் போட்டுக்கிட்டு அது வழியா உணவுக் குழாயை உள்ளே விட்டுப்புட்டு – அந்தத் துணையோட வாழ நான் ஆசைப் படல; கையில ஒரு பையை ஏந்திக்கிட்டு, குழாய் வழியா வர்ர மூத்திரத்தை அதிலே நிரப்பிகிட்டு, நாளெல்லாம் சித்ர வதைப் படுத்துற அந்தத் துணையோட வாழ நான் ஆசைப் படல;மாற்று சிறுநீரகத்தைப் பொருத்திக்கிட்டு, இயந்திரத் தைத் துணையாக் கொண்டு நித்தம் நித்தம் வேதனையோட வாழ நான் ஆசைப்படல. சாவுனா சாவுதான். தப்பவே முடியாது. அது நல்ல சாவா அமையணும். அந்த சுதந் திரத்தை மட்டும் பறிச்சிடாதிங்க…” அண்ணாமலை அளந்து கொட்டி அழுதேவிட்டார். வெண்ணிலா விழித் தாள்; பவளம் புரிந்துகொண்டாள்; முத்தரசு சிலை யானான். 

“எல்லாரும் வந்துக்கிட்டு இருக்காங்க, மருமகளே சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்” என்று ஆணையிட்டுக் கொண்டே வெண்ணிலாவுடன் உள்ளே சென்றார் அண்ணாமலை. 

உலா சென்ற அனைவரும் உள்ளே வந்தனர். 

”பவளக்கொடி” என்று இழுத்து விளித்தார் குவான். 

“வந்துட்டேன் மாமா” அடுக்களை நோக்கி நடந்தாள் பவளம். 

“முதல்ல பிள்ளைகளுக்குச் சாப்பாடு போடு…” 

“முதல்ல பெரியவங்க நீங்க எல்லாம் சாப்பிடுங்க மாமா” முத்தரசு கேட்டுக் கொண்டான். 

“வழக்கத்தை மாத்தாதே மவனே… எப்பவும் போல நாங்க அப்புறமா சாப்புடறோம். இன்னும் அம்பது வருசம். கழிச்சு சாப்பிடும் போதுகூட பிள்ளைகளுக்குப் பரிமாறுன பின்னாலதான் நாங்க சாப்பிடுவோம்…. என்ன சொல்ற குவான்…?” அண்ணாமலை தெம்போடு கேட்டார். 

“கரெக்டா சொன்ன அண்ணாமலை. முறைனா முறைதான்” ஒத்து ஊதினார் குவான். 

தாத்தாக்கள் நால்வரும் நீண்ட இருக்கையில் அமர்ந்தனர். 

வெள்ளரிக்கூட்டு, தக்காளிப் பச்சடி, கத்தரிக்காய் வதக்கல், உருளைக்கிழங்கு குர்மா, பண்டோங் சுவைநீர். மரக்கறி பிரியாணி…… 

சோற்றைப் பிசைந்த குழந்தைகள், முதல் கவளத்தை உருட்டிக்கொண்டு எழுந்தனர். 

அண்ணாமலைக்கு வெண்ணிலாவும், பீட்டருக்குக் கனியனும், குவானுக்கு இனியனும், அப்துல் காதருக்கு குமுதனும் ஊட்டினர். உண்ட நால்வருக்கும் பூரிப்புப் பெற்ற மனங்களில் ஆலம்மழை. 

“நாங்க கொடுத்து வச்சவங்க..” பீட்டர் ஆரம்பித்தார். 

“இந்த வயசுல எங்களுக்கு இப்படிப்பட்ட சுத்தமான கள்ளங் கபடு தெரியாத வெள்ளை மனசுங்க கவளச்சோறு ஊட்டுனா… அது அமுதம் மாதிரி…” என்று அண்ணாமலை முடிப்பதற்குள் அப்துல் காதர் இடைமறித்து, 

“திருவள்ளுவர் அப்படித்தான் சொல்லியிருக்காரு. தம் மக்கள் சிறுகை அளாவிய கூழ் இருக்கே, அது அமுதம் மாதிரி ருசிக்குமாம்.” 

முத்தரசு, இந்தக் குழந்தைகள் உன் பிள்ளைகளாக இருக்கலாம். ஆனா, எங்க பேரர்கள். சிங்கப்பூரர்கள். அவுங்க ஊட்டுற சோறு உங்களுக்கு மட்டுமல்ல, எங்களுக் கும் அமுதச் சுவையைத் தருது.. வள்ளுவம் வென்றது… முடித்து வைத்தார் குவான். 

குழந்தைகள் உண்டுகளித்த பின், பெரியவர்கள் சாப் பிட்டு முடித்த கையோடு, முத்தரசுவும் பவளக்கொடியும் அமர்ந்தனர். பெரியவர்கள் பரிமாறினர். 

எங்கும் இன்பம்; எதிலும் இன்பம். பொங்கும் இன்பம் எங்கும் தங்கிட – பொங்கல் விருந்து நிறைவு பெற்றது. 

நால்வரும் நான்குவகையினர் அவரவர்க்கென பல்வேறு பழக்க வழக்கங்கள். பண்பாட்டுத் துறையிலோ நால்வரும் நால்வரே. 

மொழி எனுமிடத்தில் ஒரு சிறு வேறுபாடு…

அண்ணா மலையும், பீட்டரும், அப்துல் காதரும் பேசுவது தமிழ்தான். அதில் பீட்டர் பிறப்பால் மலையாளி; வளர்ந்த சூழ்நிலை, பள்ளி வாழ்க்கை, வேலையிடத்துச் சூழல், பொதுவாக சிங்கப்பூர் சூழலில் வளர்ந்ததால் தேர்ந்த தமிழ்ஞானம் பெற்றவர். 

திருவாளர் குவான்… சீனத்திலிருந்து இளவயதில் சிங்கப்பூர் வந்தவர். வளர்ந்து வாழ்ந்த காலகட்டத்தில் பெரும்பாலும் தமிழ்மொழி பேசுவோரின் மத்தியில் கழித் தவர். ஏட்டுத் தமிழ் அவருக்கு எட்டாவிட்டாலும் நாட்டுத் நடைமுறைத் தமிழ் அவருக்குத் தண்ணீர் பட்ட பாடம். 

அப்துல் காதர் கப்பல் பட்டறைத் தொழிலாளியாகப் பணியாற்றியவர். துறைமுகத் தொழிலாளியாக இருந்து உயர்ந்தவர் குவான். இராணுவ இலாகாவில், படைசாராத் துறையில் தொழிலாளியாகச் சேர்ந்து முன்னேறியவர் பீட்டர். நகராண்மைக் கழகத் தொழிலாளியாக வேலையில் சேர்ந்து, குத்தகையாளராக முன்னேறியவர் அண்ணாமலை. 

அவர்களின் பூர்வீகம் :- 

அப்துல் காதர். இந்தியத் துணைக்கண்டத்தின் தென்கோடியில் பிறந்தவர். வறுமையான குடும்பம், தூரத்து உறக்க்காரர்களின் உதவியால் சிங்கப்பூர் வந்தவர். ஈட்டிய ஊதியத்தைத் தனது ஒரே அண்ணன் குடும்பத்துக்கு அனுப்புவார். அண்ணன் பிள்ளைகள் பட்டதாரிகள் ஆகும் வரையில் சாமர் த்தியம் செய்து பணம் அனுப்பியவர். ஒரு முறை கூட அவர்களைச் சென்று பார்க்காதவர், அதற்கான காரணத்தை யாரிடமும் சொல்லாதவர்: தன்னையும் தன் அண்ணன் குடும்பத்தையும் வறுமைப்பிடியிலிருந்து கரை சேர்த்த இந்த மண்ணை நொடிப் பொழுதேனும் பிரிந் திருக்கக் கூடாது. எனும் திடசித்தம் கொண்டவர். பிரியப் போகும் தன்னுயிரைச் சுமந்திருக்கும் உடல் இந்த மண்ணுக்கே உரமாக வேண்டும் என்ற முடிவில் வாழ்பவர் அண்ணனும் தங்கையும் உழைத்து, தங்கையை நல்லதோர் இடத்தில் மணமுடித்துக் கொடுத்த தனது அண்ணன் மகனின் கடிதச் செய்தி கண்டு மகிழ்வெய்தியவர். வாழ்ந்த இடத்து நட்பாலும், சார்ந்திருந்த தொழில்துறை உறவா லும், ஒத்த வயதினரான குவான். பீட்டர், அண்ணாமலை ஆகியோரின் பினைப்பாலும், ஒரு கூட்டுறவுத் திட்டம் உருவாயிற்று; அது தான் இந்த சின்ன வீடு. 

குவான்… சீனத்துக் கிராமமொன்றில் பிறந்தவர். உற வினர்களுடன் சிங்கப்பூர் வந்தவர். “கொங்கி” எனப்படும் சீனர் சமுக சங்கத்தில் ஈடுபாடு கொண்டவர். அதற்கென பச்சை குத்திக் கொண்டவர். நல்ல காரியங்களுக்காக அமைக்கப் பெற்ற கொங்சிகளின் செயல்முறைகள் குண்டர் தனத்துக்கு அடிகோலிய போது கைது செய்யப்பட்டவர். சிறைவாசம் அனுபவித்தவர். விடுதலைக்குப் பின் நாட்டு நடப்புக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொண்டவர். மணமுடித்து- இரண்டு பிள்ளைகளுக்குத் தந்தையானவர் மனைவி காலமான நேரத்தில் சிறிது சஞ்சலமடைந்த போதிலும், உற்றார் உறவினர் நண்பர்களின் ஆதரவோடு பிள்ளைகளைப் படிக்க வைத்து, பட்டதாரிகளாக்கி” பொறுப்புமிக்கப் பதவிகளில் அமர்த்தி, மணக்கோலத்தை யும் கண்டு பூரித்துப் போனவர். பழக்கத்தால், நட்பு முறையால் பீட்டரையும் அண்ணாமலையையும், அப்துல் காதரையும் நெருங்கியவர். கூட்டுறவுத் திட்டம் ஒன்று உருவாயிற்று: அது தான் சின்ன வீடு. 

பீட்டர்……. இந்தியத் துணைக்கண்டத்தின் கேரளக் கரையில் பிறப்பெடுத்தவர். “கேறிவாடே, சிங்கப்பூரில் திவசம் திருவோணம் தன்னே…” என்று, அன்றைய நீசூன் வட்டாரத்தில் பெரிய சோற்றுக்கடை உரிமையாளரான அவரின் உறவுக்காரர் எழுதியிருந்த கடிதம் கண்டு சிங்கப்பூர் வந்தவர். ஆரம்பத்தில் சோற்றுக்கடையில் எடுபிடி வேலை செய்தார். நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கான சோற்றுப் பொட்டலங்களை (“பொதி” என்று குறிப்பிடுவார்கள்; குழந்தைகளின் தலையணை அளவில் இருக்கும்) கட்டி தொழிளர்களுக்கு அனுப்பும் குத்தகையை அவரின் உறவுக் காரர் பெற்றிருந்தார். ஓராண்டு கழிவதற்குள் பிரிட்டீசு இராணுவ இலாக்காவில்-படைசாராத் துறையில் தொழிலாளியாகச் சேர்ந்து கணக்கராக உயர்ந்தவர். திருமணம் செய்து கொண்டு மூன்று பிள்ளைகளுக்குத் தந்தையானவர் புற்று நோய்க்கு மனைவியைப் பலி கொடுத்தவர். பிள்ளைகள் மூவரையும் பட்டதாரிகளாக்கி, மணவாழ்க்கையை அமைத்துக் கொடுத்தவர். வேலை ஓய்வு பெறுவதற்கு முன்னர் அண்ணாமலை பீட்டர், குவான் ஆகியோருடன் நட்புப் பாராட்டியவர். அவர்களுள் ஒரு கூட்டுறவுத் திட்டம் உருவாயிற்று. அது தான் இந்தச் சின்ன வீடு. 

அண்ணாமலை……மூவாரிலிருந்து சிங்கப்பூர் வந்தவர். சர்கென்றி கெர்னி செரால்ட் டெம்பளர் போன்றோர் கம்யூனிச பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட கால கட்டத்தில், ஊர்க் காவல் படையில் பணியாற்றியவர். ஒரு நாள்.. 

அண்ணாமலையின் பெரியப்பா, பெயர் சின்னையா பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கி, கித்தா (ரப்பர்) மரத்தில் கட்டப்பட்டு. சுட்டுக் கொலை செய்யப்பட்டார் “சின்னையாவுக்குத் துணைபோகும்…… அண்ணாமலை …. ஆகியோர் எங்களின் அடுத்த குறி” என்று, அவரின் இரத்தத்தாலேயே எழுதப்பெற்ற குறிப்பை, அவரின் கழுத்தில் மாட்டிவிட்டுச் சென்றனர். செய்தி அறிந்த அண்ணாமலையின் பெற்றோர்கள் பதறிப் போனார்கள் மூட்டையைக்கட்டி அண்ணாமலையை சிங்கப்பூரில் வாழ்ந்து கொண்டிருந்த தமக்கை வீட்டிற்கு அனுப்பி வைத்தார்கள். நகராண்மைக் கழகத்தில் தொழிலாளியாகச் சேர்ந்தார். தம்பியையும் உடன் அழைத்துக் கொண்டார். திருமணம் செய்து கொண்டு இரண்டு செல்வங்களுக்குத் தந்தையானவர். தாய் தந்தையர் ஒருவர் பின் ஒருவராக நெடும் பயணம் மேற்கொள்ள தம்பிக்கு மணமுடித்து வைத்தவர். முத்தரசுவைப் பெற்றுப் போட்டுவிட்டு தம்பி மனைவி வாழைமரமானாள். 

கடும் உழைப்பின் மூலம் முன்னேறி சாலை, சாய்க்கடை அமைப்பது. பாலம் கட்டுவது போன்ற வேலைகளை மேற் கொள்ளும் குத்தகைக்காரரானார் அண்ணாமலை. அவர் தம்பி, தன் மகனை மனைவி வழி உறவினர் வீட்டில் வளர்க்க விட்டுவிட்டு, பொழுதெல்லாம் மது மயக்கத்தில் கிடக்கும் செய்தி அறிந்து மனம் நொந்தார். எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் தன்னுடன் தங்க மறுத்துவிட்ட தம்பி யின் விவகாரத்தினின்றும் படிப்படியாக விலகிக் கொண்டார். 

அண்ணாமலை சொந்த வீடு வாங்கினார். மனைவி ஆசைப்பட்ட மகிழ்வுந்தை வாங்கிக் கொடுத்தார். மகிழ்ச்சி கரமாக குடும்பம் ஓடிக்கொண்டிருந்தது. 

குத்தகைத் தொழில் என்றால், நிர்ணயிக்கப்பெற்ற காலக் கெடுவுக்குள் வேலையை முடித்துக் கொடுக்க வேண்டும். தவறினால் அபராதம் கட்ட நேரிடும். அடுத்த குத்தகை பெறுவதில் சிரமங்களை சந்திக்க நேரக்கூடும். எனவே, ‘கெடு’வில் எப்போழுதும் கண்ணுங் கருத்துமாக இருப்பவர் அண்ணாமலை. அன்று தீபாவளி ….. 

தான் மேற்கொண்டிருந்த சாலை அமைக்கும் பணியை சீன, மலாய்க்காரத் தொழிலாளிகளைக் கொண்டு தொடர முனைந்தார் அண்ணாமலை. மேற்பார்வையிட காலையிலேயே புறப்பட்டார். மனைவியும். மனைவியும், மகனும், மகளும் உறவினர்கள் இல்லம் நாடி மகிழ்வுந்தில் புறப்பட்டனர்….. 

பிற்பகல் மூன்று மணியிருக்கும். அண்ணாமலைக்கு அந்தச் செய்தி வந்தது. அதிர்ந்து போனார். ஓட்டிச் சென்ற மகிழ்வுந்து விபத்துக்குள்ளாகி மூவரும் மாண்டுவிட்ட அதிர்ச்சியிலிருந்து விடுபடுவதற்குள் ஒரு வார இடைவெளியில்-தம்பி தூக்கு போட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்ட செய்தி அறிந்து நிலை குலைந்து போனார். 

கால ஓட்டத்தில் எத்தனையோ மாற்றங்கள். தம்பி மகன் முத்தரசுவை தத்து எடுத்துக் கொண்டார் அண்ணா மலை. அவனைப் படிக்கவைத்து, பட்டதாரியாக்கி, நல்ல வேலையில் அமர்த்தி, திருமணத்தையும் செய்து வைத்து மகிழ்ந்தவர். பீட்டர், குவான். அப்துல் காதர் போன்றோ ளிடம் நெருக்கம் ஏற்பட்டது. கூட்டுறவுத் திட்டமொன்று உருவாயிற்று. அது தான் இந்தச் சின்ன வீடு. 


ஒவ்வொர் அறையிலுமாக ஒவ்வொரு குழந்தை தூங்கிக்கொண்டிருந்தது. பொங்கல் சாப்பாடு. உண்ட களைப்பு தொண்டருக்கும் உண்டல்லவா? 

அப்துல் காதர் அவரைக்காய் பறித்து பொட்டலம் கட்டிக் கொண்டிருந்தார். குவான் மரவல்லிக் கிழங்குகளை யும், சர்க்கரைவல்லிக் கிழங்குகளையும் மூட்டை கட்டிக் கொண்டிருந்தார். பீட்டர் தேங்காய்களை உரித்து சாக்கில் திணித்துக் கொண்டிருந்தார். பிரம்புக் கூடையில் கோழி முட்டைகளை அடுக்கிக் கொண்டிருந்தார் அண்ணாமலை 

குழந்தைகளை எழுப்பி சிங்காரித்தாள் பவளக்கொடி. பெரியவர்களுக்கு உதவியாக ஒத்தாசை செய்து கொண்டி ருந்தான் முத்தரசு. மகிழ்வுந்தின் பின்கட்டில் அனைத்தும் ஏற்றப் பெற்றன. தேநீர் அருந்திய பின் தாத்தாக்களுக் கான பேரர்களின் முத்தப் பரிமாற்றத்துடன், விடை பெறும் படலம் முற்றுப்பெற, மகிழ்வுந்து சின்ன வீட்டின் வாயிலைக் கடந்து மறைந்தது. ஆரவாரம் ஓய்ந்த அமைதி நிலவியது. 

நால்வருக்குமே ஒரு வயது குறைந்து விட்டதைப் போன்ற உணர்வு…. 

பொங்கலுக்கு மட்டுமன்று’ சீனப் புத்தாண்டின் போது, குவானின் பிள்ளைகள், மருமக்கள், பேரக் குழந்தைகள் படையெடுப்பு நிகழும். பழங்களிலிருந்து பலகாரங்கள் வரை குவிந்து விடும். சின்ன வீடே அமர்க்களப்பட்டுப் போகும். அன்றும் காதர் தான் பண்டாரி, மீன் தலைக் கறி அன்றைய பிரதான உருப்படி. அந்தி சாயும் நேரத்தில் விடை பெறு வார்கள். வழக்கம் போல் தாத்தாக்களுக்குக் குழந்தைகளின் முத்தப் பரிமாற்றம். அதைத் தொடர்ந்து காய், கிழங்கு மூட்டைகளை ஏற்றிக்கொண்ட மகிழ்வுந்துகளின் புறப்பாடு. 

நால்வருக்கும் ஒரு வயது குறைந்து விட்டதைப் போன்ற உணர்வு. 

ஏசு நாதரின் தோற்றத்தைக் குறிக்கும் கிருசுமசு பண்டி கையின் போது, பீட்டரின் மகன்களும் மகளும் பரிவாரத் துடன் வந்து இறங்குவர். முதல் நாள் இரவே வந்து விடு வார்கள். மறுநாள் சமையலுக்கான திட்டங்கள் முதலில் வகுக்கப்பெறும். அப்பொழுதும் அப்துல் காதர் தான் சமையல்காரர். வான்கோழி தான் அன்றைய சிறப்பு உருப்படி. நள்ளிரவு நெருங்கும் நேரத்தில் பீட்டரையும் சுமந்து கொண்டு, அடுத்திருக்கும் மாதா கோயிலை நோக்கி மகிழ்வுந்துகள் புறப்படும். நள்ளிரவு ‘செபத்’தை முடித்துக் கொண்டு திரும்புவர். இரவெல்லாம் அரட்டைதான். நேரம் செல்லச் செல்ல, கொண்டு வந்திருக்கும் தலையணை துப் பட்டிகளை விரித்துப் போட்டு ஒவ்வொருவராக முடங்குவர் குழந்தைகள் அறைகளின் கொசுவலைக்குள் தஞ்சமடைவர். 

அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் நடமாட்டம் ஆரம்ப மாகிவிடும். வசதிக் குறைவுதான். காலைக்கடன்களை முடித்துக் கொள்ளவும், பொழுது பொல பொலவென்று புலர்வதற்கும் சரியாக இருக்கும். இத்தனை வசதியின்மைக் கிடையிலும் அங்கே ஒரு நிறைவு. தந்தையைக் காண்பதி லும், மூன்று உடன் பிறப்புகள் ஒன்றுகூடி மகிழ்வதிலும், அவர்தம் துணைவர்களுடன் அளவளாவி இன்புறுவதிலும், தாங்கள் ஈன்றெடுத்த செல்வங்கள் ஒன்று சேர்ந்து களிப்பதி லும், ஏற்படும் அந்த இன்ப நிலை – கோடிப் பொன் கொடுத்தாலும் கிட்டாத ஒன்று. 

காலையில் மாதாகோயில், சென்று திரும்புவதற்குள் சமையல் வேலையில் முக்கால் வாசியை முடித்திருப்பார் அப்துல் காதர். வெள்ளரி, அன்னாசி கூட்டு, சின்ன வெங்காயம் வெள்ளரி வதக்கல் போன்ற காரியங்களைப் பெண்களிடம் விட்டு விட்டு கிணற்றடி சென்றுகுளியலை முடித்துக் கொள்வார். கூட்டல் பெருக்கல், கோழிக்கூண்டு, பூச்செடிகள், மீன்குளம் முதலியவற்றைக் கவனித்து விட்டு, கிணற்றடியை நாடி வருவார்கள் குவானும் அண்ணாமலையும்……. 

குழந்தைகள் -தாத்தாக்களுக்கான பரிசுகளை வழங்கும் படலம் தொடங்கும். போட்டி போட்டுக் கொண்டு பரிசுப் பொருட்களைக் குவிப்பார்கள். அந்த ஒரு மணி நேர குழந்தைகளின் ஆட்சியில், புதியதோர் உலகம் நிறுவப் பெற்று, பாசத் தென்றல் அரவணைப்பில் மெய்மறந்து போவார்கள். 

மதிய உணவுக்குப் பின் ஓய்வு. மாலையில் விடை பெறுதல். அதற்கு முன் தாத்தாக்களுக்கு குழந்தைகளின் முத்தமாரி. காய், கிழங்கு மூட்டைகளை சுமந்து கொண்டு மகிழ்வுந்துகள் புறப்படும். 

நால்வருக்கும் ஒரு வயது குறைந்து விட்டதைப் போன்ற உணர்வு…… 

நோன்பு மாதம் முழுவதும் அப்துல் காதர் தான் சமையல்காரர். நோன்பு பிடிப்பதில் மட்டும் தவறமாட்டார். நோன்புப் பெருநாளன்று பள்ளிவாசலுக்குச் சென்று, தொழுகையை முடித்துக் கொண்டு சின்ன வீடு வருவார். அன்றும் சமையல் அவருடையதுதான். அன்றைக்கு முக்கிய உருப்படி – பரங்கிப்பேட்டை டால்ச்சா, உற்றார் உறவினர் என்று யாருமில்லை அவருக்கு. நண்பர்களும் ஊர்க்காரர் களும் வருவார்கள் கண்டு செல்வதற்கு. உண்டு மகிழ்வார் கள். 

அன்றைய தினத்தில, மாலை நேர சிற்றுண்டியின் போது, வீடே அல்லோலகல்லோலப்பட்டுவிடும். அண்ணா மலையின் சேனைகளும், குவானின் பரிவாரங்களும், பீட்டரின் பாளையங்களும் மொய்த்து விடுவார்கள். சொந்தம் உள்ளவர்களுக்கு ஒரு பரிவாரம், அல்லது ஒரு சேனை, அல்லது ஒரு பாளையம். சொந்தம் என்று சொல்லிக் கொள்ள யாருமே இல்லாத அப்துல் காதருக்கோ ஒரு பட்டாளமே திரண்டு வரும். “அல்லா மகத்தானவன்” என்று வாயார வாழ்த்தி, நெஞ்சுருகிப் போவார். 

நால்வருக்கும் அன்று நான்கு வயது குறைந்து விட்டதைப் போன்ற உணர்வு……. 

தீபாவளிப் பண்டிகை. அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் முடிச்சுப் போட முடியாது தான். ஆனால், அண்ணாமலைக்கும் தீபாவளிக்கும் முடிச்சுப் போட முடியு மல்லவா? அதுதான் சின்ன வீட்டில் நடை பெறாத காரியம். அண்ணாமலை அதைத் துக்க நாளாகவே கடைப் பிடித்தார். மனைவி மக்களை இழந்தது தீபாவளியன்று என்ற போதிலும், பண்டிகை வருவது வெவ்வேறு தேதி களில் அல்லவா என்று யாரேனும் வாதிட்டால் … கோளங் களின் சுழற்சியால்தான் மனிதவர்க்கம் இயங்கிக் கொண் டிருக்கிறது என்று தான் நம்புவதன் காரணத்தால், இழந்து விட்ட சொந்தத்தையும், தொடர வேண்டிய பாரம்பரிய பந்தத்தையும் இன்னும் எத்தனை தீபாவளிகள் வந்தாலும் ஈடு செய்ய முடியாதென்று அறைந்து விடுவார். 

ஒரு சமயம் இது குறித்து பேச்சு எழுந்த பொழுது குவான் கேட்டார்: “உனது பாரம்பரியத் தொடர்பு அழிந்து போகக் கூடாது என்ற எண்ணமிருந்திருந்தால். மறுமணம் செய்துகொண்டு பெருக்கி இருக்கலாமே? பீட்டரும் அப்துல் காதரும். வாயடைத்துப் போயினர். அண்ணாமலை சரணாகதி அடைந்து விடுவார் – அடுத்த தீபாவளிக்கு ஆட்டிறைச்சி பிரியாணிதான் என்று இறுமாந் திருந்தவர்களின் தலைகள், அண்ணாமலையின் நேரடி பதில் கேட்டுக் குனிந்தன. 

“குவான், நடைமுறை வாழ்க்கையை ஆதாரமாகக் கொண்டு கேள்வியை எழுப்பி விட்டாய். தாய் தந்தை யருக்குப் பிறகு தாரமாக வருபவள்தான் வாழ்க்கை அத்தி யாயத்தை எழுதுபவள். அவள் யார்? நிச்சயமாக உடன் பிறந்தவளாக இருக்க முடியாது. திருமணம் என்கின்ற பந்தத்தில் அந்நியன் ஒருவனுடன் சங்கமமாகிறாள். அவள் மூலம் பிறப்புக்கள் தோன்றி, ‘என்னுடைய தாய் இவர் என்னுடைய தந்தை இவர்’ என்று பரம்பரையின் பாரம் பரியத்தைப் பறைசாற்ற வேண்டியவர்கள் பிள்ளைகள் – கூண்டோடு அவர்களையெல்லாம் இழந்து விட்ட நான், மறுமணம் செய்துகொண்டு, பிள்ளைகளைப் பெற்றெடுத்து. ‘இவர் தான் என் தாய் – இவர் தான் என் தந்தை’ எனப் பேர்சொல்ல வைத்து, அவளை … ஆமாம் அவளை என்னை நம்பிக் கரம்பிடித்து, இரண்டு செல்வங்களை ஈன்றெடுத்து, பரிதாபமாகப் போனாளே அவளைப் புறக்கணித்துவிட்டு, நான் மட்டும் பேர் போட்டுக்கொள்வது பச்சைத் துரோக வல்லவா? நான் மட்டுமா வாழ்ந்து பேர் போடப் பிறந்த வன்? அவளுக்கும் வழங்கப்பட வேண்டிய அந்த உரிமை பறிக்கப்பட்ட பின், வேறொருத்தியை மணந்து கொண்டு நான்மட்டும் பாரம்பரிய விருத்தி செய்து கொள்வது என்ன நியாயம்?” உணர்ச்சி வயப்பட்டார் அண்ணாமலை. அவரை ஆரத்தழுவிக் கொண்டார் குவான். 

தீபாவளி வரும்… போகும். யாருக்கும் வயது கூடுவதாகவே உணர்வு ஏற்படுவதில்லை. 

நாட்கள் நகர்கின்றன. 

ஒருநாள் மாலை நேரம்… 

காப்பிக்கடை நாற்காலியில் அமர்ந்து காப்பி அருந்திக் கொண்டிருந்தார் குவான். சிந்தனைக் கோடுகள் அவர் நெற்றித் திரையில் படம் போட்டுக் கொண்டிருந்தன. முகத்தில் வாட்டம். பக்கத்து நாற்காலியில் மச்சக்காரன் வந்து அமர்கிறான். பிடிப்பான கால்சட்டை,திறந்து விட்ட முழுக்கைச் சட்டை, முப்பது வயதிருக்கும். கன்னத்தில் பெரிய மச்சம். 

“அய்யா எங்கிட்டெ பேசனும்னு சொல்லி விட்டீங் களாமே..” 

“ஆமா, ஒரு முக்கியமான சங்கதி. உன் கூட்டாளி அந்தக் கண்ணாடிக்காரன் எங்க பீட்டருகிட்ட வம்புக்கு வந்திருக்கான்….?’ குவான் முடிக்கவில்லை. 

“அய்யா.பீட்டர்கிட்டயா?” பற்களை நறநறவென்று கடித்துக் கொண்டே, “அந்தப் பயலுக்குக் கொஞ்ச நாளா கொழுப்பு வச்சுப் போயிருக்கு ” மச்சக்காரன் ஆவேசப் பட்டான். 

“காப்பி குடிக்கிறது…?” அவன் முகம் பாராமலேயே கேட்டார் குவான். 

“அதெல்லாம் ஒண்ணும் வேணாம். முதல்ல அந்தப் பயலை ஒருகை பார்த்துட்டு வந்துடுறேன்…” ஆவேசத்துடன் எழுந்தான். 

“பொறுப்பா. நான் சொல்லப் போறதைக் கவனமா, கேளு”

“இவனுங்களுக்கெல்லாம் மூஞ்சு கொடுக்கக் கூடாதையா; அப்புறம் நம்மையே முழுங்கிடுவானுங்க” 

“நடந்தது என்னானு உனக்குத் தெரியுமா?” 

“மூணு நாளாதான் நான் கம்பத்துல இல்லியே … வந்ததும் வராததுமா மவன் சொன்னான். அதான் ஓடிவந்திருக்கேன்” 

“பீட்டர் ஆஸ்பத்திரியில் இருக்கான்…” 

“என்ன, ஆஸ்பத்திரிலியா?” மச்சக்காரனின் இதழ்கள் துடித்தன. 

“ஆமா, கை மூட்டு பிசகியிருக்கிறதா சொன்னாங்க…. இப்ப தேவலாம்…” 

“அதுக்குக் கண்ணாடிக்காரன் தான் காரணமா?” எழுந்து கொண்டே கேட்டான் மச்சக்காரன். 

“அட, குந்தப்பா. ஏன் ஆவேசப்படற… கண்ணாடிக்காரனை வெளுத்துக்கட்ட என்னால முடியாதா…? உன்னை எதுக்குவரச்சொன்னேன்…”

“சொல்லுங்க…எதுக்கு வரச்சொன்னிங்க…?” அவசரப் பட்டான். 

“போன வாரம் சனிக்கிழமை ராத்திரி ஒன்பது மணியிருக்கும். சின்ன வீட்டோட வெளிக்கதவை ஆட்டி அசைக்கிற சத்தம் கேட்டுச்சு. வெளிய வந்து பார்த்தோம். கதவு ஓரமா ஒரு பொடியனும் குட்டியும் நடுங்கிப் போய் நின்னு கிட்டிருந்தாங்க….” 

“யாரவன்?” 

“சொல்றேன், கேளு. தங்களை அடிக்கிறதுக்கு ஆளுங்க தொரத்திக்கிட்டு வர்ரதாச் சொன்னான். எதுக்கும் விசாரிப்போமேனு கதவைத் திறந்து உள்ளே வரச் சொன்னோம். அந்த நேரமா பார்த்து, நாலஞ்சு பசங்க கையில கம்பு, சைக்கில் செயினோட அந்தப் பக்கமா வந்தானுங்க…” 

“கண்ணாடிக்காரனும் இருந்தானா?” 

“அவன் அங்க இல்ல. அடிக்க வர்ரவனுங்க அவனுங்க தான்னு பொடியன் சொன்னான்” 

“‘பசால்’ இல்லாம எதுக்கு அடிக்க வரணும்?’ நகத்தைக் கடித்துக் கொண்டே கேட்டான் மச்சக்காரன். 

“பொடியன், பத்தாங்கட்டை அரிசிக்கடை மொதலாளி யோட மவன், கூட வந்திருந்த குட்டி, அதே இடத்துல மசாலாக்கடை வச்சிருக்கவரோட மவ. சித்தி பண்ற கொடுமை தாங்காம அவன் கூட ஓடியாந்துட்டாளாம். தொரத்திக்கிட்டு வர்ரது அவ மாமனோட ஆளுங்களாம்…” விவரித்தார் குவான். 

“அதுக்கு நீங்க என்ன பண்ணுனிங்க?” 

“மொளைச்சு நாலு இலை வுடுல, அதுக்குள்ள பெத்த வங்கள விட்டுப்புட்டு ஒட்டமான்னு கேட்டு நாலு போடு போட்டிருப்பேன். அப்துல் காதர் தடுத்துட்டான். ‘இது பெரிய விவகாரம்; இதுங்க வளரவேண்டிய பயிருங்கன்னு சொல்லிகிட்டே வெளிய போயி போலீசுக்குபோன் செஞ்சுட் டான். கொஞ்ச நேரத்துல போலீசு வந்துச்சு. பசங்க மாயமா மறைஞ்சுட்டானுங்க. போலீசுகாரங்க எங்களை விசாரிச்சாங்க தெரிஞ்சதைச் சொன்னோம் பொடியனை யும் குட்டியையும் அழைச்சுக்கிட்டு போயிட்டாங்க…….” 

“சரி, கண்ணாடிக்காரனுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்?” குறுக்கு விசாரணை செய்வது போலிருந்தது மச்சக் காரனின் பேச்சுத் தோரணை. 

“பத்தாங்கட்டைக் காரனுக்கும் கண்ணாடிக்காரனுக்கும் பழக்கம் இருக்கும்னு நினைக்கிறேன்” என்றார் குவான். 

“உம்…அப்புறம்.. ?” வினவினான் மச்சக்காரன். 

“மறுநாள் ராத்திரி எட்டு, எட்டரை மணியிருக்கும்’ பீட்டர் கடைத்தெருவுக்குப் போயி மெழுகுவர்த்தி வாங்கிகிட்டுத் திரும்பும் போது கண்ணாடிக்காரன் இடைமறிச்சிருக்கான்!” நிறுத்தினார் குவான். 

“சொல்லுங்க. அய்யா…” துரிதப்படுத்தினான் மச்சக் காரன்-சிந்தனை யை எங்கோ அலையவிட்டுக் கொண்டே….. 

“போலீசு உனக்கு எப்போதும் பாதுகாப்பு கொடுக்காதுடா; இந்தா வாங்கிக்க’னு, கையில பிடிச்சிருந்த கம்பால அடிச்சுப் போட்டுட்டு, ஓடிப்போயிட்டான்.’ 

“அவனுக்குக் கெட்டகாலம் புடிச்சிருக்கு. கொஞ்சநேரம் இங்கயே இருங்க, அவனை நிமித்திபுட்டு வந்துடுறேன்” என்று கூறி எழுந்தவனின் கரத்தைப்பற்றி இழுத்து அமர வைத்தார் குவான். 

வலிமையை இரும்புக் கரத்தின் உணர்ந்து அடங்கினான் மச்சக்காரன். 

“இதோ, பார்” என்று கூறிக்கொண்டே, தனது இடதுகை பெருவிரலுக்கும் சுட்டு விரலுக்கும் இடைப் பட்டப் பகுதியை விரித்துக் காட்டினார் குவான். அங்கே- பருந்துச் சின்னத்தில் பச்சை குத்தப்பட்டிருந்தது. அதைக் கண்ட மச்சக்காரனின் புருவங்கள் வளைந்து நிமிர்ந்தன. 

“நீ பொறக்கறதுக்கு முன்னமேயே இந்த நடவடிக் கையை விட்டொழிச்சவன் நான். ஒரு சமுகம் இன்னொரு சமூகத்தால மிரட்டப்பட்டு, கொத்தடிமைகளாக இருந்த. காலத்துல, சமூக நன்மைக்காக “கொங்சி” அமைச்சோம். காலப் போக்குல சட்டம் ஒழுங்கு நிலை நாட்டப்பட்டது. கொங்சிங்க மறைஞ்சு போயிடுச்சு. ஆனா, அதையே, விடாப் பிடியா பிடிச்சிக்கிட்டு ஒரு கூட்டம் வயிறு வளர்க்க. கொலை, கொள்ளை, விபச்சாரம், அபின், கஞ்சா… இப்படிச்சட்டவிரோதகாரியங்கள்ல ஈடுபட்டுக்கிட்டு இருக்கு, எந்த அமைதிக்காக நாங்க கோலம் போட்டோமோ, அதே கோலத்தை அலங்கோலப் படுத்திக்கிட்டு அராஜகம் செய்து கிட்டு இருக்காங்க…”வேதனையோடு கூறினார் குவான். 

“அப்படின்னா, கண்ணாடிக்காரனை போலீசுக்குக் காட்டிக் கொடுத்துட்டிங்களா?” மிரட்சியோடு கேட்டான் மச்சக்காரன். 

“இல்லை” அமைதியாகச் சொன்னார் குவான்.

“இல்லையா?” வியந்தான் அவன். 

“ஆமா…” 

”அப்ப, என்ன செய்யச் சொல்றீங்க…?” அவன் தடுமாறிப் போனான். 

“யாருமே கெட்டவனாப் பொறக்கிறது இல்ல. உதா ரணத்துக்கு உன்னையே எடுத்துக்கியேன்…” 

“அய்யா…” அவன் தலைகுனிந்தான். 

“தலை குனியாதே; நிமிர்ந்து நில். ஒரு காலத்துல நீயும் இந்த வட்டாரத்துல பெரிய கில்லாடிதான். ஆனா. இன்னிக்கு…? குடும்பம்னு ஒண்ணு அமைய, பிள்ளை குட்டி களோட மனுசனா வாழலியா…?” 

அவன் பெருமூச்சு விட்டான். 

“உழைக்கணும்கிற எண்ணம் வேணும்’பா. இன்னும் இருவது வருசம் கழிச்சு சிங்கப்பூரைப் பாரு. இன்றைய சோம்பேறிங்கள அன்றைக்குக் காறித் துப்புவாங்க. அவ மானச்சின்னமாக் கருதுவாங்க. கண்ணாடிக்காரனுக்கு நல்ல புத்திமதி சொல்லி மனுசனா வாழ வழிகாட்டு. நீ நெனச்சா நிச்சயமா முடியும். சின்ன வீட்டை சாமன்யமா நெனச்சுக் காதே. எல்லார் மேலயும் கண்வச்சுகிட்டுத்தான் இருக்கு. வைரம் எது, கண்ணாடித்துண்டு எதுனு அதுக்குத் தெரியும். பஸ் வந்துக்கிட்டு இருக்கு, ஆஸ்பத்திரிக்குப் போயிட்டு வந்துடுறேன்”. 

“முயற்சி செய்யுறேன்” என்று மச்சக்காரன் சொல்லி முடிப்பதற்கும், பேருந்து நிற்பதற்கும் சரியாக இருந்தது. குவான் அதில் ஏறிக்கொள்கிறார். 

மருத்துவமனையின் பார்வையாளர் அறையில், பீட்டரைச் சூழ்ந்து அவரின் பிள்ளைகள்’ முத்தரசு, பவளக்கொடி, குவானின் மூத்த மகன், அண்ணாமலை, அப்துல் காதர், மற்றும் சில நண்பர்கள் குழுமியிருக்க, குவான் வந்து சேர்கிறார். சூழ்நிலையைக் கண்ணுற்றதும் பீட்டர் பெயர் வெட்டப்பட்டுவிட்டார் என்பதை விளங்கி கொண்ட குவான் ‘பீட்டர். எப்படி இருக்கே…?’ என்று கேட்டு வைத்தார். 

“நல்லா இருக்கேன், குவான்” என்று கூறிக்கொண்டே தன் மகள் பக்கமாகத் திரும்பி, “எனக்கு என்னம்மா குறை?” என்று கேட்டார். 

”அந்தச் சின்ன வீடு, அவ்வளவு பாதுகாப்பானதா இல்லெப்ப…” குறைபட்டுக் கொண்டாள். 

“அப்படிச் சொல்லக் கூடாதம்மா பெரிய வீடுகள் எல்லாம் என்னம்மா நூத்துக்கு நூறு பாதுகாப்பானதுனு ‘கியாரண்டி’? சின்ன வீட்டுல வாழுறதுக்கு பழக்கப் படுத்தி கிட்டா எல்லாம் சரியாயிடும். சின்ன வீட்டை சிங்கப்பூர் மாதிரினு நெனச்சுக்க. பாதுகாப்பான இடம். பட்டத்தை வாங்கிக்கிட்டு, வசதியா வாழலாம்கிற நெனப்புல, பெரிய நாடா பார்த்து ஓடறாங்களே… அதைப்போல எங்களைக் கணக்குப் போட்டுடாதம்மா. பட்டத்தை நாங்க வாங்காம இருக்கலாம். ஆனா, பல ‘டிகிரி’களையும், ‘டிப்லோமா’க் களையும் உருவாக்கித் தந்திருக்கிறோம். அதனால, நாங்க இருக்க வேண்டிய இடத்துலதான் இருக்கணும். இல்லாட்டா எங்களையும் இழுத்துக்கிட்டு பெரிய நாடா பார்த்து ஓடிடுங்க. அங்க… துப்பாக்கியும் கையுமா காத்துக்கிட்டு இருக்கானுங்க…” 

“அய்யய்யே…என்னப்பா! நீங்க… ஒண்ணு கிடக்க ஒண்ணை சொல்லிக்கிட்டு இருக்கிங்க…” 

“சுத்தி வளைச்சி பொடி வைச்சு பேசுறானேனு சலிச் சுக்கிறியா… உண்மையைத் தாம்மா சொல்றேன். மாமரம் வெயில்ல காஞ்சி, மழைக் காத்துல அல்லல்பட்டாத்தாம்மா மாங்கனி கிடைக்கும். எனக்குச் சின்ன வீடு புடிச்சுப் போச்சு என்னைத் தொந்தரவு செய்யாதிங்க. அண்ணாமலை, புறப்படுவோமா?” 

“நான் கொண்டுபோய் விட்டுட்டு வந்துடுறேன்” என்றான் குவானின் மகன். 

“ரொம்ப நன்றியட்பா. நாங்க நாலுபேர். எங்களுக் காகவே டாக்சி விட்டிருக்காங்க. அரைமணி நேரத்துல வீட்டுல இருப்போம். நாங்க வர்ரோம்.” என்று கூறிக் கொண்டே வாடகைஉந்தின் கதவைத் திறக்கிறார் குவான். நால்வரும் புறப்படுகின்றனர். 

வந்திருந்த அனைவர் மனங்களிலும் பல்வேறு எண்ணங்கள் – நால்வரைப் பற்றி. 

அந்த நால்வருக்கோ ஒரே சிந்தனை-சின்ன வீட்டைப் யற்றி. 

(முற்றும்) 

முடிப்பதற்கு முன் சில 

சின்ன வீடு என்பது-சிங்கப்பூர்….. 

அரசியல், பொருளாதார குமுகச் சிக்கல்களை மையமாகக் கொண்டு கதையை அமைக்கவில்லை. ஆங்காங்கே அலை இழையோடுகிறது என்றாலும் அதற்கு நான் பொருப்பல்ல… 

நடப்பு அப்படி… 

பிறந்து வளர்ந்த மலாயா மண்ணின் ஒரு பகுதி இன்னும் பசுமையான நினைவுக் திரையில் பசுமையாக உள்ளது. அதை அப்படியே ‘சின்ன வீட்டின் தோற்றத்திலும் சூழலிலும் புகுத்தியுள்ளேன். 

குறுகிய கால முனைப்பு, கதை சொந்தக் கற்பனையே. ‘மச்சக்காரன்’- ‘கண்ணாடிக்காரன்’-உருவகங்ளோ பெயர் குறிக்க வேண்டாம் என்று அப்படி அமைத்தேன் அவ்வளவே-

– அவன் (சிங்கப்பூரன் சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூன் 1993, நிலவுப் பதிப்பகம், சிங்கப்பூர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *