கோழியின் குணம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 30, 2024
பார்வையிட்டோர்: 1,481 
 
 

மார்கழி மாதம் குளிர்ந்த பனிக்காற்று வீசிக்கொண்டு இருந்தது. அந்த புல் வெளியில் நல்ல பாம்பும் சாரைப்பாம்பும் ஒன்றை ஒன்று தழுவிக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் அதைப் பார்த்துக் கொண்டிருந்த கோழி பயத்தில் கொக்கரித்துக் கொண்டிருந்தது.

அவை கத்துவதை கண்டு இரண்டும் பிரிந்து சென்று விட்டது. கோழி அன்று பத்தாவது முட்டையை இட்டுக் கொண்டிருந்தது. பிறகு இரைதேடுவதற்காக கோழி வெளியே சென்று விட்டது. நல்ல பாம்பிற்கு ஒரே பசியாக இருந்தது. கோழி இட்டு வைத்திருந்த முட்டை வாசம் பாம்பிற்கு வந்தது.

உடனே பாம்பு புற்றை விட்டு மெதுவாக வெளியே வந்து தாவாரத்தின் மேல் இருந்த கோழி முட்டைகள் இருக்கும் இடத்திற்குச் சென்று ஐந்து முட்டைகளைக் விழுங்கிவிட்டது. முட்டைகளை விழுங்கி விட்டதால் பாம்பிற்கு வயிறு கொஞ்சம் பெருத்து விட்டது. உடனே தன்னுடைய சட்டை கிழிவதை கண்ட பாம்பு அந்த சட்டையை முழுவதுமாக உரித்து விட்டு தன்னுடைய புற்றை நோக்கி சென்று விட்டது.

மாலை நேரம் சூரியன் மெல்ல கிழக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. இரைதேடச் சென்றக்கோழி வீட்டிற்கு வந்தது. தன்னுடைய முட்டைகள் காணாமல் போனதை பார்த்து செய்வதறியாது வருத்தப்பட்டது. அதன் அருகில் பாம்பு சட்டை கிடப்பதை பார்த்து அதிர்ச்சியானது. கோழி வருத்தத்துடன் இருந்தது. எலி வந்தது. கோழி அமைதியாக இருப்பதை பார்த்து

“என்ன நடந்தது ?”என்று கேட்டது.

“இரை தேடச் சென்ற பிறகு அந்த பாம்பு முட்டைகளை விழுங்கி விட்டது” என்று அழுத வண்ணம் கோழி கூறியது.

“ஒன்றும் கவலைப்படாதே! நான் பாம்பின் இடத்திற்கு சென்று அவற்றிடம் ஏன் இப்படி செய்தாய்? என்று நியாயத்தை கேட்டு விட்டு வருகிறேன்” என்று எலி சென்று விட்டது.

நல்ல பாம்பு அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தது. சாரைப்பாம்பு இரைதேடி விட்டு எந்த இரையும் கிடைக்காததால் புற்றுக்குள் மிகுந்த பசியுடன் வந்து இறங்கியது. சாரைப்பாம்பு வந்தவுடன் நல்ல பாம்பு கண்ணை விழித்துக் கொண்டது. “என்ன உனக்கு இன்று இரை கிடைத்ததா?”

“இல்லை” என்று சாரை பாம்பு மிகுந்த வருத்தத்துடன் கூறியது.

“எனக்கு இன்று இரை கிடைத்து” என்று நல்ல பாம்பு மகிழ்ச்சியுடன் கூறிக் கொண்டிருந்தது. அப்பொழுது எலியானது புற்று உள்ளே நுழைந்தது நல்ல பாம்பிடம் கேட்டது.

“ஏன் கோழியின் முட்டைகளை நீ விழுங்கினாய்?”

“அது எங்களுக்கு ஒருநாள் இடையூறு செய்தது. அதனால்தான் அதன் முட்டைகளை அப்படி செய்தேன்” என்று தலைக்கணத்துடன் கூறியது. “சரி நீ எங்கள் வீட்டிற்குள் வந்து விட்டாய்! எங்களுக்கு இரையாகி விடு” என்று கூறி பசியுடன் இருந்த சாரைப்பாம்பும் நல்ல பாம்பும் எலியை தன்னுடைய ஐந்து குட்டிகளுக்கும் எலியை இரையாக்கியது. சாரைபாம்பிற்கு வயிறு நிரம்பியது. நியாயம் கேட்க சென்ற எலியின் நிலை அநியாயமானது!

நியாயம் கேட்க சென்ற எலியானது இன்னும் எந்த ஒரு பதிலும் இல்லை என்பதால் கோழி பாம்பு புற்று இருக்கும் இடத்தில் வெளியே நின்று பார்த்துக் கொண்டிருந்தது. எலியின் முடி பாம்பு புற்றின் வெளியே காற்றில் பறந்து வந்துகொண்டிருந்தது. இதைப் பார்த்த கோழி எலியை அந்த பாம்பு கொன்று விட்டதை எண்ணி மிகவும் வருத்தப்பட்டது. கோழி பாம்பை கொள்வதற்காக புற்றின் வெளியே காத்துக் கொண்டிருந்தது. கோழி கொக்கரித்துக் கொண்டு இருந்தது. கோழி வெளியே கத்திக் கொண்டிருப்பதை உணர்ந்த நல்ல பாம்பும் சாரைப்பாம்பும் பயந்து கொண்டு புற்றின் உள்ளே அமைதியாக இருந்தன. கோழியும் நீண்ட நேரமாக காத்துக் கொண்டிருந்தது. புற்றை விட்டு இரண்டு பாம்பும் வெளியே வராததால் பொழுது ஆகிவிட்டது என்று கோழியும் தாவரத்திற்குற்குச்சென்று விட்டது.

மறுநாள் மேகம் இருட்டியது. மின்னல் கண்களைப் பறித்துக் கொண்டிருந்தது.

இரை தேடிச் சென்ற சாரைப்பாம்பு பொழுது ஆகியும் புற்றிற்கு வராததால் நல்ல பாம்பு தன்னுடைய குட்டிகளுடன் பயத்துடனே இருந்தது. பிறகு நல்ல பாம்பு குட்டிகளை புற்றின் உள்ளே விட்டுவிட்டு சாரைப் பாம்பைதேடிச் சென்றது.

பாம்பு மாத்திரைகள் போடப்பட்டிருந்த அந்த தோட்டத்தில் சாரைப்பாம்பு இறந்து கிடந்ததை பார்த்து நல்ல பாம்பு செய்வதறியாது அந்த இடத்திலேயே நின்று கொண்டிருந்தது. பலத்த காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. பாம்பு விரைவாக செல்லத் தொடங்கியது. மெதுவாக வேலியின் மீது ஏறியது. அது மின் வேலி என்பதால் மின்சாரம் பாய்ந்து நல்ல பாம்பும் இறந்து விட்டது. பலத்த காற்று அடித்ததால் பனைமரம் சாய்ந்து புற்றின் மேல் விழுந்தது. பாம்பு குட்டிகள் பனை மரத்தால் நசுக்கப்பட்டு துடித்துக் கொண்டிருப்பதை தூரத்தில் உள்ள தாழ்வாரத்தின் ஒரு சிறிய துவாரத்தின் வழியாக அந்தக் கோழி பார்த்துக் கொக்கரித்துக் கொண்டிருந்தது…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *