கண்ணனும் காந்தாரியும்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: மணிக்கொடி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 10, 2023
பார்வையிட்டோர்: 2,400 
 

 (1939ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

காந்தாரி: இங்கே யார் வருகிறது? நான் அமைதியைத் தேடி இங்கே வந்தேன். என்னைத் தனியே விடுங்கள்!- ஒரு வேளை நரியோ நானும் இறந்த பிணம் என்று கருதி வருகிறதோ இப்பொழுது திரும்பிப் போகிறது போலிருக்கிறது! 

கண்ணன்: தாயே, நான் உனக்குச் சாந்தியளிக்கவே வந்திருக் கிறேன். உன் கண்களைத் திறந்து என்னைப் பார்! 

கா: ஏமாற்றுக்காரன். நான் உன்னை முன்னால் பார்த்த தில்லை. இப்பொழுதும் கண்ணைத் திறந்து பார்த்து நீ யார் என்று தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமில்லை! நீ யார்? 

க: இந்த மண்மீதிலே சிதறிக் கிடக்கும் பிணங்களையும், தவிடு பொடியாய் நொறுங்கிக் கிடக்கும் பொருள்களையும் பார்க்க முடியாத வண்ணம் நீ காப்பாற்றப்பட்டிருப்பதற்காகக் கடவுளுக்குத் தான் வந்தனம் கூற வேண்டும்! 

கா: இது கிருஷ்ணன்தான்! கோக்களைப் பாலிக்கும் கிருஷ்ணனில்லை. ஆனால் அந்த – 

க: ஆறுதலளிக்கும் தூதன்! 

கா: சாபமிடும் நாக்கையுடைய தூதன்! உன் நாக்கினால், சகோதரர்களுக்குள் வெட்டி மடியும் இந்தக் கோர யுத்தத்தின் கொடுமைகள் தோன்றாமல் தடுத்திருக்கலாம் ஆனால் நீயோ சங்கநாதஞ் செய்து பகைமைகளை மூட்டி விட்டாய்! என்னுடைய புத்திரர்களை யெல்லாம் தொலைத்து விட்டாய், அராஜக தூதனே! இப்பொழுது தனியே தளர்ந்து விழும் எனக்கு என்ன செய்தி கொண்டு வந்திருக்கிறாய்? 

க: உனது நாயகன் துக்கத்தில் ஆழ்ந்திருக்கிறான். உனது வீரச் சாந்தியுடன் வந்து, அவனுக்குத் தேறுதல் கூறி, அவனுடைய புண்ணை ஆற்று! 

கா: அவர் சிறிது நேரம் தம்மைத் தனியே விட்டுவிட்டுப் போகச் சொன்னார். அதனால்தான் நான் வந்தேன். நீ அங்கே போ. வீரம் மிகுந்த நூற்றுவரைப் பெற்ற தந்தை, ஒரு கோழையின் துருப்பிடித்த கத்திக்கு இரையாக மரிக்காமல் பார்த்துக் கொள். அந்தோ! பழமை மிக்க குரு வம்சம் – காடும் மலையும் தாண்டி, கடல் மடை திறந்தது போல் ஓடி வந்து அந்தோ! அந்த ராஜ வம்சத்தின் உதிரம் இப்பொழுது பசையறக் காய்ந்த பாலைவன மணலிலா பாய்ந்து மறைய வேண்டும்! 

க: கண்களைத் திறந்து பார்க்கக் கூடாதென்று ஆதிமுதல் நீ மூடியிட்டு மறைத்துக் கொண்டிருப்பதால், நல்ல வேளையாக, உன்னைச் சுற்றிலும் சிதறிக் கிடக்கும் இந்தப் பயங்கரங்களை நீ கண்டு துயரப்படாமலிருக்க முடிகிறது! 

கா: ஆனால் செவிகளின் மூலம் கண்களும் விழிப்படை கின்றன. அந்தகாரம் கனமாயும் அதிகக் கருமையாயும் இருப்ப தற்குத் தக்கபடி நட்சத்திரங்கள் அதிகமாய்ப் பிரகாசிக்கின்றன. (என் கன்னிப்பருவத்தில் நான் நட்சத்திரங்களைப் பார்த்திருக்கிறேன்.) இப்பொழுது விடியற்காலம். கீழ்த் திசையில் செவ்வொளி பரவுவதால் என் கண் இருளும் மறைகிறது ஆனால் தேரேறி வரும் கதிரவனை வெற்றிக் கீதங்களாலும் வேத பாராயணத்தாலும் வரவேற்பதற்கில்லை நரிகளும் ஓநாய்களும், பருந்துகளும் கழுகுகளும் கர்ண கடூரமாக ஊளையிட்டும் கூவியும், கோரமான நித்திய நித்திரையில் வீழ்ந்து விட்ட என் பாரதக் குழந்தைகளைத் தாலாட்டுகின்றன. 

க: குழந்தைகளா! தாயே, அவர்களை உலகம் விறல் வீரர் என்று போற்றுகிறது. அவர்கள் போர்க்களத்தில் கண்ணியமாகப் போராடினார்கள் உன் மடியில் வந்து அவர்கள் ஒளிந்து கிடக்க வில்லையே! 

கா: ஐயோ, எப்பொழுதுமே அவர்கள் என் மடியிலேயே இருந்திருக்கலாகாதா! எல்லாம் உன் வேலை, கிருஷ்ணா! நீ சமாதானத் தூதனாக வந்தாய். ஆனால் உன் உள்ளம் முன்னதாகவே யுத்தத்திற்குத் தயாராக இருந்தது! உள்ளந் தளர்ந்து, பச்சா தாபத்துடன் பரிதவித்துக் கொண்டிருந்த அர்ஜுனன் கையிலிருந்து காண்டீவம் தளர்ந்து விழுந்தபொழுது, மனிதக் காடுகளை அரிந்து தள்ளும் இந்தப் பயங்கரமான கொலைத் தொழிலைச் செய்து முடிக்கும்படி அவன் தளர்ந்த கையைத் திண்ணியதாக உயரச் செய்ததுதான் உன் கடமையோ? உன் ரதத்தைத் திருப்பிக் கொண்டு போவதற்கென்ன? ஏ பார்த்தசாரதி!-போர் முனையில் எதிர்த்து நின்ற இரு பக்கத்தாரும் சமாதானமாய்ப் போகட்டு மென்று நீ ஏன் ரதத்தைத் திருப்பிக் கொண்டு செல்லவில்லை? 

க: அப்படிச் செய்திருந்தால் என் தலையில் எத்தகைய சாபம் வந்து விழுந்திருக்கும்! தெய்வங்களெல்லாம் சேர்ந்துகூட அந்தச் சாபத்தைத் தாங்கியிருக்க முடியாது! 

கா: எல்லோரும் நீ கடவுளென்றும், இந்த அநித்தியமான மணிக்கொடி பூமியில் அவதரித்திருக்கிறா யென்றும் சொல்லுகிறார்களே. நான் இதழ்தொகுப்பு அந்த வதந்தியை எப்பொழுதுமே நம்பியதில்லை. இந்தப் பாரதப் போரில் நீ நடந்து கொண்ட மோசமான முறையைக் கண்டபின் இனி எப்பொழுதுமே அப்படி நம்பவும் முடியாது! 

க: நான் ஒரு மனிதன்தான். நானும் அநித்தியமான ஒரு ஜீவன்தான். என்னைத் தொட்டுப் பார், தாயே – இரண்டு கைகள் தான், நான்கு கைகளில்லை! (அவள் வலக் கரத்தை எடுத்துத் தன் இரு புஜங்களையும் தொட்டுக் காட்டுகிறான்.) 

கா: ஆம், ஆம்! நீ ஒரு மானிடன்தான். ஒரு சாபத்தால் உன்னை நசுக்கிவிட முடியும்! அநீதி யிழைக்கப்பட்ட ஒரு தாயின் கொலைச் சாபத்தால்! 

க: கண்டிப்பான தாயே, உன் இஷ்டம் போல் என்னைச் சபித்திடு. ஆனால் வீரம் மிக்க காந்தாரியின் இன்னிசை இதழ்களி லிருந்து ஒரு சாபமும் வெளிவராதென்று இதுவரை நான் கேள்விப் பட்டிருக்கிறேன்! 

கா: ஆனால் இயற்கையின் சட்டங்களையும் தப்பி விடலாம் என்று நீ எண்ணுகிறாயா? பதினெட்டு நாள் – இரவும், பகலும் இந்தக் குருக்ஷேத்திரத்தில் நிகழ்ந்த பயங்கரங்கள் எல்லாம் உன் நாட்டில் உன் யாதவ மக்களிடையே கலகமாகப் பரிணமிக்கா தென்று எண்ணுகிறாயோ! என் அரண்மனையில் மாதர்கள் கதறுவது போல், உன் நாட்டுப் பெண்டிரும் சோகத்தில் நொந்து சாம்பிக் கதறுவார்கள் – தீமை விளைத்த தீரனே, இதை நீ எப்படித் தப்ப முடியும்? 

க: இதற்குள் உன் இதழ்களிலிருந்து ஒரு சாபம் வெளி வந்து விட்டதே!- பவளம் போன்ற இதழ்கள் என்று எண்ணினேன், இல்லை, உதிரம் போன்ற இதழ்கள்! 

கா: இதிலிருந்து முப்பத்தாறாவது வருஷத்தில், துவாரகையில் உன் யாதவர்கள் துரதிர்ஷ்டம் பிடித்து, தங்களுக்குள்ளே போராடி அங்கும் ஒரு குருக்ஷேத்திரத்தை ஏற்படுத்துவார்கள். உனது உற்றாரும் உறவினரும் தம்வாளாயுதங்களே பழிவாங்கமடிவார்கள். நீயும் தனியே அநாதியாய் மடிவாய்! காதில் விழுகிறதா? 

க: அப்படியானால் இருக்கட்டும்! அன்னையே! இத்தனை சாபத்தையும் கண்ணீரையும் கக்கிய பிறகாவது உன் உள்ளம் ஆறுதலடையட்டும்! ஏ காந்தாரி! நீ சுகமாயிருக்க வேண்டும்! 

கா: வெட்கங்கெட்ட கண்ணா! என்னை இதற்காக வாழ்த்தவா செய்கிறாய்? எனக்கே அவமானமா யிருக்கிறது. பாண்டவர்கள் என் செல்வக் குழந்தைகளைக் கொலை செய்து விட்டார்கள். அவர்களைப் பற்றி ஏதேனும் நான் நிந்தித்தேனா? தெய்வம் என் வாயை அடைத்து விடட்டும்! ஆனால் அவர்கள் அடைந்த இந்த வெற்றி என்ன வெற்றி! சுடர்விட்டுப் பிரகாசிக்கும் சூரியனைக் கரு மேகங்கள் சூழ்ந்து மறைத்தது போன்ற வெற்றி – வெற்றி யடைந்த பின் வெற்றியைக் கொண்டாடுவதற்குக்கூடச் சக்தியில்லாமற் செய்த வெற்றி லட்ச தீபங்களும் தோரணங்களும் கொண்டு கொண்டாடத் தகாத குழப்பமான வெற்றி! ஜெயமடைந்தவர் கண்ணீரும் மாண்டொழிந்தவர் உதிரமும் கலந்தோடும் வெற்றி! 

க: மேகமண்டலங்கள் சூழ்ந்தால்தானே உலகம் மழையை எதிர்பார்த்து வரவேற்கிறது! தாயே, இடிக்குரல் கேட்டுத்தானே மயிலினம் களிகொண்டு, பல வண்ணச் சிம்மாசனத்தில் கொலுவிருப்பது போல், தோகை விரித்தாடுகின்றது! 

கா: மயிலா? அது எங்கே யிருக்கிறது? கோபுரத்திலிருந்து கழுகுகளும் ராஜாளிகளு மல்லவா கத்துகின்றன? மயில் சிம்மா சனத்திலிருந்து துரத்தப்பட்டு விட்டது. ராஜாளிகள் புதை கோபுரத்தில் அமர்ந்து கொக்கரிக்கின்றன – தம் பைசாசக் கண்களால் இரை தேடிப் பார்க்கின்றன! 

க: என்னைச் சபித்தாய், காந்தாரி! நான் கோபங் கொள்ள வில்லை. ஆனால் பாண்டவர்களை ராஜாளிகள் என்று சொல்லாதே.

கா: என் மக்கள்தான் மயில்கள். ஐயோ! அவர்களுக்கேன் அபஜயம் வந்தது? 

க: அவர்கள் தோல்வியை எதிர்கொண்டழைத்தார்கள்! 

கா: ஞானமும் போதமும் அவர்களுக்காகப் போராடினவே! துரோணா! 

க: துரோணர் ஞானத்தையும் போதத்தையும் விற்பனை யல்லவா செய்தார்! செல்வம் மிகுந்த சீடர்களை ரொம்பப் பேணினார் – 

கா: (கண்ணன் வாய்க்கு நேராகக் கையைத் தூக்கி) காது செவிடுபடும்படி என்ன பிதற்றுகிறது உன் நாக்கு ?- அதை வெளியே பிடுங்கி யெறிவேன்-உன் நாக்கை- 

க: (சிறிது பொறுத்து) அம்மா…மந்தமான பையனிடந்தான் குரு அதிகக் கவலை செலுத்துவார்-மாண்புமிக்க துரோணர் உன் மைந்தனுக்குத் தம் அறிவுப் பொக்கிஷத்தைக் கொடுத்தார்! 

கா: என் மைந்தனா மந்தன்? 

க: துரோணர் அவனுக்கு அறிவை அள்ளிக் கொடுத்தார் என்று நான் சொல்லவில்லையா, தாயே? 

கா: கர்ணனுக்கு என்ன! வரையாது கொடுக்கும் வள்ளன்மைக் கவசம் பூண்ட என் மைந்தன்!-இருந்தாலும்…

க: வள்ளன்மை ஹிருதயத்தையும் கைகளையும் திறந்து காட்டி விடுகின்றது-கவசத்தில் ஒரு ஓட்டை! பகைவனின் அம்பு பாய்ந்து அவனைக் கீழே தள்ளி விடுகிறது! 

கா: ஏ கிருஷ்ணா! கர்ணனின் வள்ளன்மை என் துரியோ தனனுடைய வள்ளன்மையிடம் பிச்சை வாங்க வேண்டும்! துரியோதனன் தேர்ப் பாகனைத் தூக்கி அங்க நாட்டின் சிம்மா சனத்தில் வைத்தவனல்லவா! 

க: கர்ணனைப் பற்றி நான் மேலும் சொல்லட்டுமா? வெளியில் எங்கும் பரவி வரும் கதையை நீ கேட்டிருக்கிறாயா? 

கா: அவன் காட்டிக் கொடுத்தான் என்றால் நான் ஆச்சரியப் படமாட்டேன். ஆனால் தவமும், தியாகமும் என் மக்கள் பக்கந் தானே போராடின! பீஷ்மன் எப்படி வீழ்ந்தான் – அவனும் காட்டிக் கொடுத்தானா? 

க: வஞ்சனைகளைப் பற்றிப் பேச வேண்டாம், தாயே! உங்கள் துணைவர்கள் விஸ்வாசத்துடன்தான் இருந்தார்கள். பூமிக்குள் புதைக்கப்பட்டவர்களைப் பற்றி நாம் அவதூறு பேச வேண்டாம்! வயது முதிர்ந்த கிழம் – பண்டை நாளில் எத்தனை எத்தனையோ மாறுதல்களைக் கண்டது மேற்கொண்டு மாறுதலை விரும்ப வில்லை! கல்லறையைப் பக்கத்திலே கண்டதும் தானே ஓடிச் சென்று உள்ளே விழுந்துவிட்டது! -உன் மக்களும் அத்துடன் வீழ்ந்து விட்டனர்! 

கா: கிழத்தோடு சேர்ந்ததாலா தோற்றனர்? அந்தோ! இது எனக்கு முன்னாலே தெரியாதே. பட்டுப் போன அந்த விழுதை மரத்திலிருந்து முன்னாலேயே வெட்டியிருந்தால் மரமனைத்தும் பிழைத்திருக்குமோ! – ஐயோ! (உரக்க அழுகிறாள்.) 

க: அம்மா, அழாதே! உன் கண்ணீரைத் துடைப்பதைத் தவிர, நான் வேறு என்ன செய்ய முடியும்? ஆனால் கண்ணீர் வெளியே வழிவதே யில்லை – கண்களைச் சுற்றிக் கட்டப்பட்டிருக்கும் பால் நுரை போன்ற மெல்லிய துணி அதை உறிஞ்சி விடுகிறது. நீர் ஊற்று கண்ணிலேயே மறைந்து விடுகிறது! 

கா: கைகளை எடு, அயோக்கியா! அடே, போக்கிரி! என்னைத் தீண்டாதே! என் சாபத்தை வாங்கிக் கொண்டு தொலை! 

க: அன்னாய், நான் போகிறேன். உன் சாபத்திலிருந்து நான் தப்பாமல் ஏற்றுக் கொள்வது உனக்கு இன்பமளிக்குமானால், அப்படியே அதை வரவேற்கிறேன். யாதொரு ஆட்சேபமு மின்றிச் சந்தோஷமாய் ஏற்கிறேன். புனித நீரை அர்க்கியமாக ஊற்றி அத்துடன் அந்தச் சாபத்தையும் தாரை வார்த்துவிடு! கொஞ்சம் இரு, ஒரு கிண்ணத்தில் தண்ணீர் கொண்டு வருகிறேன்! 

கா: (அழுதுகொண்டே) நான் இங்கு தங்க மாட்டேன் எங்கேனும் தொலை! என்னை மறுபடி வந்து பாராதே! (ஓடுகிறாள்.) 

க: (அவளைத் தொடர்ந்து ஒடிக்கொண்டு) அப்படியானால், இதோ இருக்கிறது கொதிக்கும் தண்ணீர்! (அவள் கண்களில் கட்டப்பட்டிருந்த துணியின் முடிச்சை அவிழ்க்கிறான்.) 

கா: பாவீ! படுபாவி! வாழ்நாள் பூராவும் பாதுகாத்து வந்த என் கற்பைக் கறைப் படுத்தி விட்ட கொடியா! மாண்டவர் போக ஜீவித் திருக்கும் என் அன்பான ஓர் உயிருக்கும் துரோகியாக என்னைச் செய்து விட்டாயே! 

க: உன் சாபத்தைத் திரும்பச் சொல்லு, தாயே! உன் கண்ணீரை இதோ கை நிறைய ஏந்தி விட்டேன் – சாபத்தை மீட்டும் சொல்லிக் கண்ணை விழித்து உன் இனிய சாபக் கண்ணீரை நான் பருகுவதைப் பார்! 

கா: ஒரு சாபம் மட்டுமா? சபித்துக் கொண்டேயிருப்பேன்! (அவள் கண் இமைகளைத் திறக்கிறாள்.) 

க: சொல்லு சாபங்களை! 

கா: என்ன இது? கட்டவிழ்த்தாய் விட்டது, இமைகள் திறந்திருக்கின்றன – ஆனால் ஒன்றுமே தெரியவில்லையே! 

க: ஆச்சரியம்! உன் கண்ணில் கருமணிகளைக் காணேன்! நாம் நிற்கும் இந்தப் போர்க்களம் அதில் பிரதிபலிக்கக் காணேன்! வாஸ்தவத்திலேயே நீ குருடா? 

கா: ஆமாம், அப்படித்தான் இருக்கிறேன். இந்த ஏமாற்றுக் காரியான காந்தாரியைப் பற்றி உலகம் என்ன நினைக்கும்? குருடி குருடனை விவாகம் செய்து கொண்டாள்! கிருஷ்ணா, நான் கன்னியா யிருந்த பொழுது குருடாக இருக்கவில்லை. இதை நம்பு. இதழ் தொகுப்பு நீ தெய்வந்தான் போலிருக்கிறது. என் கண்களை என்ன மாயம் செய்துவிட்டாய்! (இமைகளை நன்றாய்த் திறந்து கொண்டு) கட்டில்லாமலே இப்பொழுது நான் குருடாயிருக்கிறேன். 

க: தெய்வம் உனக்குக் கண்களைக் கொடுத்தது. நீ அவற்றை மறுத்தாய், அவற்றைத் துர்விநியோகப் படுத்தினாய், அவைகள் போய்விட்டன! இப்பொழுது அதற்காக வருந்துகிறாயா? 

கா: ஒருநாளுமில்லை. எனக்கு இனிமேல் துணியால் கட்ட வேண்டியதே யில்லை, கண்கள் சுயமாகவே தெரியாமலிருக் கின்றன! நல்ல வேளை. என் கண்களுக் குள்ளிருக்கும் இரு கிருஷ்ண விக்ரகங்களும் எழுந்து ஒளிக் கிரணத்தைப் பார்க்கும்படி என்றுமே ஏற்படாமல் செய்துவிடு. என்னை நிரந்தரக் குருடாக்கி விடு! 

க: (புன்னகை புரிந்து) நீ விரும்புகிறபடியே இருக்கும், கவலை வேண்டாம். 

கா: (சிந்தனையிலாழ்ந்து) இந்தப் பயங்கரமான கொலைகளுக் கெல்லாம் காரணம் இப்பொழுது எனக்குப் புலப்படுகிறாப்போல் தோன்றுகிறது… 

க: சொல்லு, எனக்குந் தெரியட்டும்… 

கா: நான் நிச்சயப்படுத்த முடியவில்லை-என்னைச் சிறிது நேரம் தனியே விடேன். 

க: இதற்கெல்லாம் காரணம் திருதராஷ்டிரர்தான் என்று எண்ணுகிறாயா? அவர் தம் மக்களிடமும் சேனைகளிடமும் இளக்கங் காட்டாமல் அதிக உறுதியா யிருந்திருக்க வேண்டு மென்று எண்ணுகிறாயா? 

கா: அவரை யேன் குற்றஞ் சொல்லுகிறாய்? 

க: அவர்தான் இந்தப் பதினெட்டு நாள் இரத்தப் பெருக்கிற்கும் காரணம் என்று சிலர் சொல்லுகிறார்கள். சாரதி குருடாயிருந்து, குதிரைகளும் அடங்காத முரடுகளாயிருந்தால்…

கா: எனது நாதரை – பிரபுவை – நீ இவ்வாறு நிந்திக்கலாகுமா? அவருடைய அடியாளாகவும் பத்தினியாகவும் இருப்பதில் பெருமை கொண்டுள்ள என் முன்பா இப்படிப் பேசுகிறாய்? 

க: காரணந்தான் என்ன என்று நினைக்கிறாய்? ராஜவம்சத்தின் உதிரம் கட்டாரிகளிலும் கத்திகளிலும் வாள்களிலும் பூசப்படத்தான் வேண்டும் என்று பிறப்பிலிருந்தே சாபத்தீடா? 

கா: அந்தோ! ஒருவர் கழுத்தை ஒருவர் நெரிக்கத்தானா வீரமும் பலமும் பயன்பட வேண்டும்! அவர்கள் எல்லோரும் கைகோத்துக் கொண்டு உழைத்தால் நமது பாரத வர்ஷத்தை இந்திர போகங் களோடு கூடிய இன்னொரு ஸ்வர்க்கமாகச் செய்திருக்க மாட்டார் களா? ஐயோ, என் அருமை மக்களே! இடையீடில்லாத துன்பப் படுகுழியில் என்னைத் தள்ளிவிட்டு நீங்கள் யாவருமே மடிய வேண்டுமா? ஒவ்வொரு நாள் காலையிலும், என் ஆசீர்வாதம் பெற்று, எவ்வளவு வேகமாகப் போர்க்களத்திற்குப் பாய்ந்தோடி னார்கள்! அந்தோ! என் உள்ளம் கல்லினால் செய்யப்பட்டதாய்த் தான் இருக்க வேண்டும்!- இல்லாவிட்டால் ‘தர்மமே ஜயம்!’ என்று அவர்களை வாழ்த்தியிருப்பேனா! நான் தாயாக இருக்கவில்லை. அவர்களின் யமனாக இருந்தேன். என் செல்வ மக்களை நான் காப்பாற்றி யிருக்கக்கூடாதா, பாவி? 

க: உனது பவித்திரமான ஆசை, உன் கண்கள் அவிந்ததிலும், உன் மக்கள் பட்டதிலும் நிறைவேறி விட்டது! 

கா: ஆஹா! கடைசியாக, நான்தானா காரணம்? அவர்களைப் பெற்றெடுத்த தாயா? பாவியான எனக்கு எது வேண்டுமானாலும் வரட்டும்! என் பதிக்காகத் தியாகம் செய்தேன்! ஓ! என் மக்களுக்காக நான் ஒரு தவமும் செய்தேனில்லையே! –

– மணிக்கொடி இதழ் தொகுப்பு, 1939

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *