பெயின்ட் டப்பா!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: குங்குமம்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 10, 2015
பார்வையிட்டோர்: 15,338 
 

மூன்று பேர் உட்காரும் அந்த பஸ் இருக்கையில் பாஸ்கரனுக்கு கிடைத்தது மூன்று இன்ச் இடம் தான்! ஏற்கனவே உட்கார்ந்த இருவரும் காலை அகட்டி ஆளுக்கொரு லேப் டாப்பை மடியில் வைத்துக் கொன்டு, ஏதா வேலை செய்து கொண்டு பேசிக் கொண்டிருந்தார்கள். இவனும் நகர்ந்து நகர்ந்து உட்கார இடம் உண்டாக்கப் பார்த்தான். பக்கத்து லேப்டாப் ஆசாமி பாஸ்கரனை முறைத்துப் பார்த்து “நெண்டாமல் சும்மா இருக்க மாட்டே?…….” என்று கோபமாகச் சொன்னான். பாஸ்கரன் பயந்து கொண்டு பேசாமல் வாயை மூடிக் கொண்டான்.

வழியில் ஒரு முரட்டு ஆள் பெயின்ட் டப்பாவோடு ஏறினான். “அண்ணே!…ஏன் டப்பாவை வைத்துக் கொண்டு சிரமப்படுகிறீங்க? இங்கே உட்காருங்க!…” என்று அந்த ஆளுக்கு இடம் கொடுத்து விட்டு பாஸ்கரன் எழுந்து கொண்டான்.

அந்தப் பெயின்டருக்கும் அங்கே மூன்று இஞ்ச் இடம் தான் கிடைத்தது. பக்கத்தில் இருந்தவர்கள் காலை அகட்டிக் கொண்டிருந்ததால், பெயின்டரால் பெயின்ட் டப்பாவை காலுக்கு மத்தியில் கூட வைக்க முடியாமல், பெயின்ட் டப்பாவை மடியிலேயை வைத்துக் கொண்டான். திடீரென்று ஒரு லாரி பஸ்க்கு குறுக்கே வர, பஸ் டிரைவர் ஸடன் பிரேக் போட்டார். பெயின்ட் சிதறி பக்கத்திலிருந்த இருவர் லேப்டாப்களையும் பேண்ட் களையும் பெயின்டால் அபிஷேகம் செய்து விட்டது!

பெயின்டருக்கும், மற்ற இருவருக்கும் வாய் தகராறு முற்றி, பெயின்டர் தன் பக்க நியாயத்தைச் சொல்லி அவர்களை அடிக்கப் போய் விட்டான்.

பாஸ்கரன் முன்னால் நின்று கொண்டு, தான் எதிர் பார்த்த அந்தக் காட்சியை ரசித்துக் கொண்டிருந்தான்.

– குங்குமம் 2013 ல் வந்த கதை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *