புதுமைப்பித்தன்

 

புதுமைப்பித்தன் என்ற புனைபெயர் கொண்ட சொ. விருத்தாசலம் (ஏப்ரல் 25, 1906 – சூன் 30, 1948), மிகச்சிறந்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவர். நவீன தமிழ் இலக்கியத்தின் ஒரு முன்னோடியாக இவர் கருதப்படுகிறார். கூரிய சமூக விமர்சனமும் நையாண்டியும், முற்போக்குச் சிந்தனையும், இலக்கியச் சுவையும் கொண்ட இவருடைய படைப்புகள், இவரின் தனித்தன்மையினை நிறுவுகின்றன. இவரது படைப்புகள் மிக அதிகமாக விவாதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, 2002இல் தமிழக அரசு இவரது படைப்புகளை நாட்டுடமை ஆக்கியது.

புதுமைப்பித்தனின் சிறுகதைகள் தான் அவருக்கு எழுத்துலகில் தனி இடத்தை அளித்தன. அவர் எழுதியதாகக் கணிக்கப்படும் 108 சிறுகதைகளில் 48 மட்டுமே அவர் காலத்திலேயே வெளியாகின. அவரது சிறுகதைகள் மணிக்கொடி, கலைமகள், ஜோதி, சுதந்திர சங்கு, ஊழியன், தமிழ்மணி, தினமணியின் ஆண்டு மலர், நந்தன் ஆகிய பத்திரிக்கைகளில் பிரசுரமாயின. மற்றவை அவர் மறைவுக்குப் பின்னர் வெவ்வேறு காலங்களில் பிரசுரமாயின. கடைசித் தொகுப்பு 2000ல் வெளியானது. புதுமைப்பித்தன் 1930களில் உருவாகிய மணிக்கொடி இயக்கத்தின் முக்கிய எழுத்தாளர்களுள் ஒருவராக விளங்கினார். கு. ப. ராஜகோபாலன், பி. எஸ்.ராமையா, வ. ராமசாமி ஆகியோர் மணிக்கொடி இயக்கத்தின் மற்ற புகழ்பெற்ற எழுத்தாளர்களாவர்.

சிறுகதைகள்

  1. சாபவிமோசனம்
  2. செல்லம்மாள்
  3. கோபாலய்யங்காரின் மனைவி
  4. இது மிஷின் யுகம்
  5. கடவுளின் பிரதிநிதி
  6. கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்
  7. படபடப்பு
  8. ஒரு நாள் கழிந்தது
  9. தெரு விளக்கு
  10. காலனும் கிழவியும்
  11. பொன்னகரம்
  12. இரண்டு உலகங்கள்
  13. மனித யந்திரம்
  14. ஆண்மை
  15. ஆற்றங்கரைப் பிள்ளையார்
  16. அபிநவ ஸ்நாப்
  17. அன்று இரவு
  18. அந்த முட்டாள் வேணு
  19. அவதாரம்
  20. பிரம்ம ராக்ஷஸ்
  21. பயம்
  22. டாக்டர் சம்பத்
  23. எப்போதும் முடிவிலே இன்பம்
  24. ஞானக் குகை
  25. கோபாலபுரம்
  26. இலக்கிய மம்ம நாயனார் புராணம்
  27. ‘இந்தப் பாவி’
  28. காளி கோவில்
  29. கபாடபுரம்
  30. கடிதம்
  31. கலியாணி
  32. கனவுப் பெண்
  33. காஞ்சனை
  34. கண்ணன் குழல்
  35. கருச்சிதைவு
  36. கட்டிலை விட்டிறங்காக் கதை
  37. கட்டில் பேசுகிறது
  38. கவந்தனும் காமனும்
  39. கயிற்றரவு
  40. கேள்விக்குறி
  41. கொடுக்காப்புளி மரம்
  42. கொலைகாரன் கை
  43. கொன்ற சிரிப்பு
  44. குப்பனின் கனவு
  45. குற்றவாளி யார்?
  46. மாயவலை
  47. மகாமசானம்
  48. மனக்குகை ஓவியங்கள்
  49. மன நிழல்
  50. மோட்சம்
  51. ‘நானே கொன்றேன்!’
  52. நல்ல வேலைக்காரன்
  53. நம்பிக்கை
  54. நன்மை பயக்குமெனின்
  55. நாசகாரக் கும்பல்
  56. நிகும்பலை
  57. நினைவுப் பாதை
  58. நிர்விகற்ப சமாதி
  59. நிசமும் நினைப்பும்
  60. நியாயம்
  61. நியாயந்தான்
  62. நொண்டி
  63. ஒப்பந்தம்
  64. ஒரு கொலை அனுபவம்
  65. பால்வண்ணம் பிள்ளை
  66. பறிமுதல்
  67. பாட்டியின் தீபாவளி
  68. பித்துக்குளி
  69. பொய்க் குதிரை
  70. ‘பூசனிக்காய்’ அம்பி
  71. புரட்சி மனப்பான்மை
  72. புதிய கூண்டு
  73. புதிய கந்த புராணம்
  74. புதிய நந்தன்
  75. புதிய ஒளி
  76. ராமனாதனின் கடிதம்
  77. சாப விமோசனம்
  78. சாளரம்
  79. சாமாவின் தவறு
  80. சாயங்கால மயக்கம்
  81. சமாதி
  82. சாமியாரும் குழந்தையும் சீடையும்
  83. சணப்பன் கோழி
  84. சங்குத் தேவனின் தர்மம்
  85. செல்வம்
  86. செவ்வாய் தோஷம்
  87. சிற்பியின் நரகம்
  88. சித்தம் போக்கு
  89. சித்தி
  90. சிவசிதம்பர சேவுகம்
  91. சொன்ன சொல்
  92. சுப்பையா பிள்ளையின் காதல்கள்
  93. தனி ஒருவனுக்கு
  94. தேக்கங் கன்றுகள்
  95. திறந்த ஜன்னல்
  96. திருக்குறள் குமரேச பிள்ளை
  97. திருக்குறள் செய்த திருக்கூத்து
  98. தியாகமூர்த்தி
  99. துன்பக் கேணி
  100. உணர்ச்சியின் அடிமைகள்
  101. உபதேசம்
  102. வாடாமல்லிகை
  103. வாழ்க்கை
  104. வழி
  105. வெளிப்பூச்சு
  106. வேதாளம் சொன்ன கதை
  107. விபரீத ஆசை
  108. விநாயக சதுர்த்தி

மொழிபெயர்ப்பு சிறுகதைகள்

  1. ஆஷாட பூதி
  2. ஆட்டுக் குட்டிதான்
  3. அம்மா
  4. அந்தப் பையன்
  5. அஷ்டமாசித்தி
  6. ஆசிரியர் ஆராய்ச்சி
  7. அதிகாலை
  8. பலி
  9. சித்திரவதை
  10. டைமன் கண்ட உண்மை
  11. இனி
  12. இந்தப் பல் விவகாரம்
  13. இஷ்ட சித்தி
  14. காதல் கதை
  15. கலப்பு மணம்
  16. கனவு
  17. காரையில் கண்ட முகம்
  18. கிழவி
  19. லதீபா
  20. மகளுக்கு மணம் செய்து வைத்தார்கள்
  21. மணிமந்திரத் தீவு
  22. மணியோசை
  23. மார்க்ஹீம்
  24. மிளிஸ்
  25. முதலும் முடிவும்
  26. நாடகக்காரி
  27. நட்சத்திர இளவரசி
  28. ஓம் சாந்தி! சாந்தி!
  29. ஒரு கட்டுக்கதை
  30. ஒருவனும் ஒருத்தியும்
  31. பைத்தியக்காரி
  32. பளிங்குச் சிலை
  33. பால்தஸார்
  34. பொய்
  35. பூச்சாண்டியின் மகள்
  36. ராஜ்ய உபாதை
  37. ரோஜர் மால்வினின் ஈமச்சடங்கு
  38. சாராயப் பீப்பாய்
  39. சகோதரர்கள்
  40. சமத்துவம்
  41. ஷெஹர்ஜாதி – கதை சொல்லி
  42. சிரித்த முகக்காரன்
  43. சூனியக்காரி
  44. சுவரில் வழி
  45. தாயில்லாக் குழந்தைகள்
  46. தையல் மிஷின்
  47. தந்தை மகற்காற்றும் உதவி
  48. தெய்வம் கொடுத்த வரம்
  49. தேசிய கீதம்
  50. துன்பத்திற்கு மாற்று
  51. துறவி
  52. உயிர் ஆசை
  53. வீடு திரும்பல்
  54. ஏ படகுக்காரா!
  55. யாத்திரை
  56. எமனை ஏமாற்ற
  57. யுத்த தேவதையின் திருமுக மண்டலம்

புதுமைப்பித்தன் ‘காஞ்சனை’ என்ற தன் சிறுகதைத் தொகுப்புக்கு எழுதிய முன்னுரை:

எச்சரிக்கை!

காஞ்சனை முதலிய பதினான்கு கதைகளுக்குள் துணிந்து பிரவேசிக்க விரும்பும் வாசகர்களுக்கு, தலையெழுத்து அப்படியாகிவிட்ட விமரிசகாகளுக்கு, நம்முடைய கோஷ்டி இது என்று நினைத்துக்கொண்டு கும்மாளி போட்டு வரும் நண்பாகளுக்கு, முதல் முதலிலேயே எச்சரிககை செய்து விடுகிறேன். இவையாவும் கலை உத்தாரணத்திற்கென கங்கணம் கட்டிக்கொண்டு செய்த சேவை அல்ல. இவை யாவும் கதைகள். உலகை உய்விக்கும் நோக்கமோ, கலைக்கு எருவிட்டுச் செழிககச் செய்யும் நோக்கமோ, எனக்கோ என் கதை களுக்கோ சற்றும் கிடையாது. நான் கேட்டது, கண்டது, கனவு கண்டது, காண விரும்பியது, காண விரும்பாதது ஆகிய சம்பவக் கோவைகள் தாம் இவை.

இம்மாதிரி நான் முன் எச்சரிக்கை செய்ய வேண்டிய நிலைமை யாதொ எனின், இரண்டொரு வருஷங்களுக்கு முன் நாள் ‘புதுமைப் பித்தன் கதைகள்’ சோவையை வெளியிட்டேன். என் மீது அபிமானமுடையவரும் கலையின் ஜீவன் சேமமாக இருக்க வேண்டும் என்ற ஆசையில் அதற்குத் தம் கையாலேயே எழடுக்கு மாடம் கட்டி அதைச் சிறை வைக்க விரும்பியவருமான கலாரசிகா ஒருனா, எனக்கும் அவருக்கும் பொதுவான நண்பர், ஒருவா மூலம் நான் எப்பொழுது கதைகள் எழுதுவதை நிறுத்திக்கொள்ளப் போகிறேன் என்று ஆவலோடு கேட்டு விட்டார். அதற்குப் பதில் சொல்லுவது மாதிரி இப்போது இந்தக் கதைத் தொகுதியை வெளியிட்டிருக்கிறேன். பொதுவாக நான் கதை எழுதுவதன் நோக்கம் கலை வளர்ச்சிக்குத் தொண்டு செய்யும் நினைப்பில் பிறந்ததல்ல. அதனால்தான் என்னுடைய கதைகளில் இந்த கலை வியவகாரத்தை எதிர்பார்க்க வேண்டாம் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.

இந்தக் கோவையிலே, என் கதைகளிலே மேலோட்டாகப் படிக்கிறவர்கள்கூட இரண்டு ரகமான வார்ப்புத் தன்மை இருப்பதைப் பார்க்கலாம். சில, 1943-ஆம் வருஷத்துச் சரக்கு. மீதியுள்ளவை 1936-க்கும் அதற்கு முன்பும் பிறந்தவை; 1943-ஆம் வருஷத்துச் சரக்குகளை 1943-ஆம் வருஷத்து ஆசாமிகள் பாராட்டுகின்றனர். அதைப் போலவே, 1936- ஆம் வருஷத்துச் சரக்கையும் அந்தக் காலத்து ‘இவர்கள்” பாராட்டினார்கள். பார்க்கப் போனால் பிஞ்சிலே பழுத்த மாதிரிதான் எனக்குப் படுகிறது. இந்தத் திரட்டு ஒரு வகையில் நல்ல மாதிரி என்பது என் நினைப்பு. என்னைப் பாராட்டுகிறவர்களும் என்னைக் கண்டு மிரண்டு ஓடுகிறவர்களும்
மனசு பக்குவப்படும் முறையைக் கண்டுகொள்ள சௌகர்யமான சந்தர்ப்பத்தை அளிக்கிறது. அப்படித் தான் நான் இதைப் பாவிக்கிறேன்.

1943-ஆம் வருஷத்துச் சரக்குகளைப் பற்றியே சில சர்ச்சைகள், அவை பிறந்த காலத்திலிருந்து இருந்து வருகின்றன. காரணம் பலருக்கு என் போக்கு என்ன என்பது புரியாதிருப்பதுதான்.

என் கதைகள் எதுவானாலும் அதில் அழகு காணுகிற நண்பர் ஒருவர் இந்தக் காஞ்சனைக் கதையைப் படித்துவிட்டு, என்னிடம் வந்து, ”உங்களுக்குப் பேய் பிசாசுகளில் நம்பிக்கை உண்டா? ஏன் கதையை அப்படி எழுதினீர்கள்?” என்று கேட்டார்.நான்,”பேயும் பிசாசும் இல்லை என்றுதான் நம்புகிறேன். ஆனால் பயமாக இருக்கிறதே” என்றேன். “நீங்கள் சும்மா விளையாட வேண்டாம். அந்தக் கதைக்கு அர்த்த மென்ன?” என்று கேட்டார். “சத்தியமாக எனக்கு, தெரியாது” என்றேன். அவருக்கு இது திருப்தி இல்லை என்று தெரிந்து கொண்ட பிற்பாடு அவரிடமிருந்து தப்பித்துக்கொண்டு இலக்கியப் பக்குவம் மிகுந்த என் நண்பர் ஒருவரிடம் போனேன். அவர் அட்டகாசமாய் வரவேற்றார். ஜேம்ஸ் ஜாய்ஸ் மாதிரி பிள்ளையார் மாதிரி உட்கார்ந்திருப்பதைப் பார்க்கவில்லையா? மனிதன் கல் மாதிரி இருக்கும்போது கல் தான் சற்று மனிதன் மாதிரி இருந்து பார்க்கட்டுமே! தவிரவும் பழைய கதைகளை எடுத்துக்கொண்டு அதை இஷ்டமான கோணங்களலெல்லாம் நின்றுகொண்டு பார்க்க எங்களுக்கு உரிமையுண்டு.

சாப விமோசனத்தைப் பற்றிய வரையில் எனக்கு ஒரே ஒரு குறைதான் உண்டு. அதில் வசிஷ்டனையும் கூனியையும் கூட்டிக்கொண்டு வர மறந்துபோனதுதான் அது, மற்றப்படி யார் எப்படிக் கருதினாலும் ராமாயணக் கதையின் அமைதி முற்றும் பொருந்தித்தான் இருக்கிறது.

கட்டிலைவிட்டிறங்காக் கதையில் நடை பலருக்கு ஆயாசமாகப் பட்டது. அதற்கு நான் என்ன செய்யட்டும்? அந்தக் காலத்தில் நடை அப்படித்தான் இருந்தது.

கடைசிக் கதை, கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும். திருப்பணியில் ஈடுபாடுடைய பக்தர்கள் பலருக்கு அவர்கள் ஆரவத்துடன் செதுக்கி அடுக்கும் கல்லுக் குவியலுக்கு இடையில் அகப்பட்டு நசுங்கிப் போகாமல் அவர்களுடைய இஷ்ட தெய்வத்தை நான் மெதுவாகப் பட்டணத்திற்குக் கூட்டிக் கொண்டு விட்டதில் பரம கோபம். நான் அகப்பட்டால் கழுவேற்றிப் புண்ணியம் சம்பாதித்துக் கொள்ள விரும்புவார்கள். என்னுடைய கந்தசாமிப் பிள்ளையுடன் சுற்றுவதற்குத்தான் கடவுள் சம்மதிக்கிறார். இதற்கு நானா பழி?

பொதுவாக என்னுடைய கதைகள் உலகத்துக்கு உபதேசம் பண்ணி உய்விக்க ஏற்பாடு செய்யும் ஸ்தாபனம் அல்ல. பிற்கால நல்வாழ்வுக்குச் செளகரியம் பண்ணி வைக்கும் இன்ஷ்யூரன்ஸ் ஏற்பாடும் அல்ல. எனக்குப் பிடிக்கிறவர்களையும் பிடிக்காதவர்களையும் கிண்டல் செய்து கொண்டிருக்கிறேன். சிலர் என்னோடு சேர்ந்துகொண்டு சிரிக்கிறார்கள்; இன்னும் சிலர் கோபிக்கிறார்கள். இவர்கள் கோபிக்கக் கோபிக்கத்தான் அவர்களை இன்னும் கோபிக்கலைத்து முகம் சிவப்பதைப் பார்க்கவேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. ஆனால் இப்படிக் கோபிப்பவர்கள் கூட்டம் குறையக் குறையத்தான் எனக்குக் கவலை அதிகமாகி வருகிறது.

இவா இன்ன மாதிரிதான் எழுதுவது வழக்கம், அதைப் பாராட்டுவது குறிப்பிட்ட மனப்பக்குவம் தமக்கு இருப்பதாகக் காட்டிக் கொள்ளும் கௌரவம் என்றாகி, என்னைச் சட்டம் போட்டுச் சுவரில் மாட்டிப் பூப்போட்டு மூடிவிடுவதுதான் என் காலை இடறி விடுவதற்குச் சிறந்த வழி. அந்த விளையாட்டெல்லாம் என்னிடம் பலிக்காது, மனப் போக்கிலும் பக்குவத்திலும் வெவவேறு உலகில் சஞ்சரிப்பதாக நினைத்துத் கொண்டு நான் வெகு காலம் ஒதங்க முயன்ற கலைகள் பத்திரிகை என் போக்குக்கெல்லாம் இடம் போட்டுக் கொடுத்து வந்ததுதான் நான் பரம திருப்தியுடன் உங்களுக்குப் பரிசயம் செய்து லைக்கும் காஞ்சனை. நீங்கள் இலைகளைக் கொள்ளாவிட்டாலும் நான் கவலைப் படவில்லை. வாழையடி வாழையாகப் பிறக்கும் வாசகர்களில் எவனோ ஒருவனுக்கு நான் எழுதிக்கொண்டிருப்பதாகவே மதிக்கிறேன்.

விமரிசகர்களுக்கு ஒரு வார்த்தை. வேதாந்திகள் கைக்குள் சிக்காத கடவுள் மாதிரிதான் நான் பிறப்பித்து விட்டவைகளும். அவை உங்கள் அளவு கோல்களுக்குள் அடைபடாதிருந்தால் நானும் பொறுப்பாளி யல்ல; நான் பிறப்பித்து விளையாட விட்டுள்ள ஜீவராசிகளும் பொறுப்பாளிகளல்ல; உங்கள் அளவுகோல்களைத்தான் என் கதைகளின் அருகில் வைத்து அளந்து பார்த்துக் கொள்ளுகிறீர்கள் என்று உங்களுக்குச் சொல்லிவிட விரும்புகிறேன்.
23-12-43
புதுமைப்பித்தன்

அஞ்சலிக் குறிப்பு:

‘சக்தி’ இதழில் 48-இல் வந்தது

உலகக் கலைஞர்களுடன் ஒப்பாக நின்ற, தமிழ் நாட்டின் சிறு கதை மன்னனாகிய “புதுமைப்பித்தன்” என்னும் ஸ்ரீ சொ.விருத்தாசலம் ஜூன் 30-ம் தேதியன்று திருவனந்தபுரத்தில் காலமாகிவிட்டார். பாரதியார் மறைந்த பிறகு தமிழ் இலக்கிய உலகத்திற்கு ஏற்பட்ட மிகப் பெரிய நஷ்டம் இது. வறுமையில் வாடும் ஸ்ரீ புதுமைப்பித்தனின் குடும்பத்திற்கு நிதி திரட்டி அளிக்க வேண்டும் என்று தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் ஸ்ரீ நாரண துரைக்கண்ணன் ஓர் அறிக்கை விட்டிருந்தார். அந்த முயற்சியை உடனே தொடங்கவேண்டும். தங்கள் கலைச் செல்வனின் குடும்பத்திற்கு நிதி அளித்து தமிழர்கள் பெருமை தேடிக்கொள்ள வேண்டும் என்று கூறுகிறோம்.

விகடனில் வந்த அஞ்சலி:

தமிழ் எழுத்தாளர் உலகத்தில் பிரசித்தி பெற்றவரான ஸ்ரீ விருத் தாசலம் (புதுமைப்பித்தன்) மறைவு இலக்கிய அன்பர்களிடையே பெரிய வருத்தத்தை உண்டாக்கியிருக்கிறது. கற்பனைகள் மிகுந்த அவருடைய எழுத்துக்கள் புரட்சியும் புதுமையும் கொண்டு தமிழ் எழுத்தில் ஒரு புது சகாப்தத்தையே ஆரம்பிக்கக் கூடியவை. தமிழிலக்கியத்தில் மறுமலர்ச்சிக்கு முன் நின்று நவ நவமான சிருஷ்டிகள் செய்தவர்களில் புதுமைப்பித்தனுக்கு ஓர் உயர்ந்த ஸ்தானம் உண்டு. அன்னாருடைய மறைவுக்காக எழுத்தாளர் சங்கக் காரியதரிசி சங்கத்தின் சார்பாக வருத்தத்தைத் தெரிவித்து, அவர் பெயரால் ஒரு நிதி திரட்டி அவர் குடும்பத்துக்கு அளிக்கவும், அவருக்கு சாசுவதமான ஒரு ஞாபகச் சின்னம் ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொண்டிருக்கிறார். எழுத்தாளர்களும் எழுத்தின் சுவையறிந்தவர்களும் இந்த முயற்சிக்கு நல்ல ஆதரவு அளிப்பார்கள் என்பதில் சந்தேக மில்லை

கல்கியில் வந்தது:

புதுமைப் பித்தன் என்ற புனை பெயர் கொண்ட ஸ்ரீ சொ.விருத்தாசலம் தமது 42-வது வயதில் அகால மரணமடைந்த செய்தி அறிந்து மிக்க துயர் உறுகிறோம். ஒரு மாமாங்க காலத்திற்குள் நூற்றுக் கணக்கான சிறுகதைகளும் கட்டுரைகளும் புதுமைப் பித்தன் எழுதி யிருக்கிறார். எழை மக்களின் சுகங்களையும், கஷ்டங்களையும் நன்கு அறிந்து உணர்ந்து அநுதாபத்துடன் அபூர்வமான கதைகள் எழுதியிருக்கிறார். மறுமலர்ச்சி எழுத்தாளர் குழுவில் ஸ்ரீ சொ.விருத் தாசலம் இணை யில்லாதவர் கருதுவோர் பலர் உண்டு. இத்தகை சிறந்த எழுத்தாளர் எழுத்துத் தொழிலில் சௌகரியமாக வாழ்க்கை நடத்த முடியவில்லை யென்று கண்டு சமீபத்தில் சினிமாவுக்குக் கதையும் சம்பாஷணையும் எழுதும் துறையில் இறங்கினார். இதுவே தமிழ் நாட்டிற்கு கஷ்டம், தமிழ் வளர்ச்சிக்கு கஷ்டம் என்று சொல்ல வேண்டும். சொ.வி. இப்போது அகால மரணம் அடைந்தது தமிழ் நாட்டின் பெரும் தூரதிருஷ்ட மாகும். புதுமைப் பித்தன் அவர்களின் குடும்பத்தாருக்கும் அவருடைய நண்பர் பெருங் குழுவுக்கும் நம்முடைய மனமார்ந்த அநுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.