What is Purat…Sanik…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: May 9, 2020
பார்வையிட்டோர்: 39,258 
 
 

1947 வருஷம் ஆகஸ்ட் 15 ம் தேதி வெள்ளையர்கள் இந்தியாவுக்கு சுதந்திரம் அளித்தார்கள்.இந்தியாவுக்கு சுதந்திரம் அளித்ததும் நிறைய வெள்ளையர்கள் இந்தியாவை விட்டுக் கிளம்பி இங்கிலந்து சென்று விட்டார்கள்.

சில வெள்ளையர்கள் கொஞ்ச காலம் இந்தியாவில் இருந்து வந்தார்கள்.

அப்போது என்னுடைய அப்பா ஒரு தலைமை குமாஸ்தாவாக பணி புரிந்து வந்தார்.

என்னுடைய அப்பாவுக்கு “பாஸ்” சாம்சன்.அவர் அந்த ஆபீஸில் ஒரு ஆபீஸராக வேலை செய்து வந்தார்.

அப்போது எல்லாம் வாரத்தில் ஆறு நாட்கள் வேலை உண்டு.ஞாயிற்றுக் கிழமை ஒரு நாள் தான் விடுமுறை.

என் அப்பாவுக்கு கீழே ஆறு குமாஸ்தாக்கள் வேலை செய்து வந்தார்கள்.அவர்களில் மூன்று பேர் வெள்ளையர்கள்,மூன்று பேர் தமிழர்கள்.

அந்த மூன்று தமிழர்களும்,ஆங்கிலேயர்கள் ஆட்சி புரிந்து வந்ததால்,அந்த வெள்ளைக்கார துரை ‘ஆபீஸர்’ ‘புரட்டாசி சனிக் கிழமை’ பூஜைக்கு ‘லீவு’ ‘அப்லை’ தர மாட்டார் என்று பயந்து ‘லீவு’க்கு ‘அப்லை’ பண்ணவில்லை.

சுந்ததிரம் கிடைத்ததும் என் அப்பாவின் கீழே வேலை செய்து வந்த மூன்று வெள்ளையர்களும் வேலையை ராஜினாமா பண்ணி விட்டு இங்கிலாந்து நாட்டுக்குப் போய் விட்டார்கள். அந்த இடத்தில் புதிதாக மூன்று தமிழர்கள் வேலைக்கு சேர்ந்தார்கள்.

இந்த வருஷம் புரட்டாசி மாசம் வந்தது.அன்று வெள்ளிக் கிழமை.

‘போன வருஷம் தான் நாம ‘புரட்டசி சனிக்கிழமையை ’கொண்டாட முடியவில்லை. இப்போ நமக்கு சுததந்திரம் கிடைச்சு இருக்கு. இந்த வருஷம் நாம ‘புரட்டாசி சனிக்கிழமை’யை கொண்டாடி ஆகணும்’ என்று நினைத்து, அந்த ஆறு பேரும் அந்த வருஷம் வந்த முதல் ‘புரட்டாசி சனிக் கிழமை’ அன்று ஒரு நாள் லீவு எடுத்துக் கொண்டு வெங்கடாஜபதி சுவாமிக்கு பூஜை பண்ண நினைத்து ஒரு நாள் ‘லீவு அப்லிகேஷனை’ எழுதி என் அப்பாவிடம் கொடுத்தார்கள்.

அந்த லீவு ‘அப்லிகேஷனில்’ அவர்கள் ‘To celebrate Purattasi Sanikizhamai’ என்கிற காரணத்தை எழுதி இருந்தார்கள்.

என் அப்பா அந்த ஆறு ‘அப்லிகேஷனையும்’ கையிலே வாங்கிக் கொண்டு அவர்களைப் பார்த்து “என்ன, நீங்க அறு பேரும் ஒன்னா லீவு போட்டு இருக்கேள்.’ஆபீஸ்’லே என்னே தவிர யாரும் இருக்க மாட்டாளே. நான் எப்படி அந்த வெள்ளைக்காரத் துரைக் கிட்டே சொல்லி உங்களுக்கு ‘லீவு ‘தரச் சொல்றது. அவருக்கு இந்த ‘புரட்டாசி சனிக்கிழமை’ன்னா என்னன்னே தெரியாதே” என்று சொன்னதும் “நாங்க அவசியம் வெங்கடாஜலபதி சுவாமிக்கு பூஜை பண்ணனும். நாங்க போன வருஷம் அந்த வெள்ளைக்கார துரைக்கு பயந்துக் கிட்டு லீவு கேக்காம இருந்தோம். இப்போ தான் நமக்கு சுதந்திரம் கிடைச்சு இருக்கே. நீங்க எப்படியாவது மெல்ல அந்த துரை கிட்டே சொல்லி எங்களுக்கு லீவு வாங்கிக் குடுங்க” என்று சொல்லி கெஞ்சினார்கள்.

என் அப்பா ‘இவா ஆறு பேரும் ‘வெங்கடாஜலபதி சுவாமிக்கு பூஜை பண்ணியே ஆகணும்’ன்னு கெஞ்சறாளே,‘நாம என்ன சொல்லி அந்த வெள்ளைகார துரை கிட்டே இவாளுக்கு லீவு ‘சான்க்ஷன்’ பண்ணச் சொல்றது’ என்று யோஜனைப் பண்ணினார்.

கொஞ்ச நேரம் ஆனதும் “சரி, நான் உங்க ஆறு பேர் ‘அப்லிகேஷனையும்’ ‘ரெகமண்ட்’ பண்ணி சாம்சன் துரை கிட்டே அனுப்பறேன்.உங்க அதிரிஷடம் அவர் ‘லீவு சான்க்ஷன்’ பண்ணா நீங்க எடுத்துக்கோங்கோ. அவர் லீவு ‘சான்க்ஷன்’ பண்ணாட்டா, நான் ஒன்னும் பண்ண முடியாது” என்று சொன்னதும் அந்த அறு பேரும் “சார், நீங்க எப்படியாவது உங்க புத்திசாலித் தனத்தே உபயோகப் படுத்தி, அந்த துரை கிட்டே இருந்து எங்களுக்கு லீவு வாங்கிக் குடுங்க” என்று மறுபடியும் கெஞ்சினார்கள்.

ஆறு பேரும் அப்படி சொல்லவே என்னுடைய அப்பா “சரி, நீங்கோ எல்லாம் உங்க சீட்டு க்குப் போய் வேலை பண்ணிண்டு இருங்கோ. நான் மெல்ல அந்த துரை கிட்டேச் சொல்லிப் பாக்கறேன்” என்று சொல்லி விட்டு,அந்த ஆறு ‘அப்லிகேஷனலும்’ அவருடைய ‘ரெகமண்டே ஷனை’ப் போட்டு சாம்சன் துரை இடம் அனுப்பினார்.

அந்த ஆறு குமாஸ்தாக்களும் ‘நமக்கு அந்த துரே லீவு தருவாரோ, தரமாட்டாரோ’என்று கவலைப்பட்டுக் கொண்டு இருந்தார்கள்.

அந்த ஆறு ‘அப்லிகேஷனும்’தன்னுடைய ‘டேபிளுக்கு’ வந்தவுடன் சாம்சன் தன் மூக்கு க் கண்ணாடியைப் போட்டுக் கொண்டு எல்லா ‘அப்லிகேஷனையும்’ மறுபடியும் மறுபடியும் படித்தார். அவருக்கு ஒன்னும் புரியவில்லை.

அவருக்குக் கோவம் வந்து தன் பியூனை விட்டு என் அப்பாவையும், ஆறு ‘க்லாக்கை’யும் தன் ‘ரூமுக்’கு வரச் சொன்னார்.

“சாம்சன் துரே உங்களேயும், ஆறு ‘க்லார்க்’கையும் உடனே அவருடைய ‘ரூமு’க்கு வரச் சொன்னார்.அவர் ரொம்ப கோவமா இருக்கார்.ஜாக்கிறதையா இருங்க ஐயரே” என்று சொல்லி விட்டுப் போனான்.

என்னுடைய அப்பா யோஜனைப் பண்ணிக் கொண்டே போனார். ’நாம் என்ன சொன்னா இந்த சான்சன் துரை ஒத்துண்டு அந்த ஆறு பேருக்கும் லீவு குடுப்பார்.நான் நிச்சியமா ஏதாவது சொல்லி, அந்த துரையை அவா ஆறு பேருக்கும் லீவு தரச் சொல்லணும்’ என்று முடிவு பண்ணினார்.

என் அப்பா உடனே தன் சீட்டை விட்டு எழுந்து,ஆறு ‘க்லாக்கை’யும் தன்னுடன் அழைத்துக் கொண்டு சாம்சன் துரை இருந்த ‘ரூமி’ன் கதவை மெல்ல ரெண்டு தடவைத் தட்டி விட்டு “‘மே ஐ கம் இன்’ ”என்று சொல்லி விட்டு எல்லோரையும் அழைத்துக் கொண்டு உள்ளே போனார்.

ஏற்கெனவே செக்க சிவக்க இருந்த சாம்சன் முகம் இன்னும் சிவப்பாக ஆகி ஒரு கோவைப் பழம் போல இருந்தது.

சாம்சன் என் அப்பாவைப் பார்த்து “வாட் இட் திஸ் ஐயர்.ஆல் சிக்ஸ் க்லார்க்ஸ் ஆர் ஆஸ் கிங்க் லீவ் டு மாரோ.Bye the bye.ஆல் ஹாவ் ஆஸ்க்ட் லீவ் பார் celebrating Purat.. Sani…..What is Purat… Sani….I don’t remember they asked leave for this last year” என்று கத்தி விட்டு அந்த ஆறு ‘அப்லிகேஷனையும்’ என் அப்பா கிட்டே எறிந்தார்.

என் அப்பா சாம்சன் எறிந்த ஆறு ‘அப்லிகேஷனையும்’குனிந்து தன் கையிலே எடுத்துக் கொண்டு, அவரைப் பார்த்து நிதானமாக ஆங்கிலத்தில் “சார், இந்த பண்டிகை,உங்க ‘கிருஸ்துமஸ்’ பண்டிகையைப் போல ரொம்ப முக்கியமான பண்டிகை. அதனால் அந்த ஆறு ‘க்ளார்க்கு’ம் அந்த பண்டிகையை கொண்டாடியே ஆகணும். இந்த பண்டிகை போன வருஷம் ஒரு ‘சண்டே’ அன்னைக்கு வந்தது. அதனால்லே அவா லீவு கேக்கலே. ஆபீஸ் லீவு ஆனதாலே அவா அந்த முக்கியமான பண்டிகையை லீவு கேக்காம கொண்டாடினா. நாளை ஒரு நாளை நான் தனியா ‘மேனேஜ்’ பண்ணீண்டு வறேன்.நீங்க அந்த ஆறு பேருக்கும் லீவு குடுங்க” என்று சொன்னார்.

உடனே சாம்சன் ஆங்கிலத்தில் “அப்படியா ஐயர்.இந்த பண்டிகை ‘கிருஸ்துமஸ்’ பண்டிகை மாதிரி அவ்வளவு முக்கியமானதா.நீங்க சொல்றதாலே நான் அவங்க ஆறு பேரு க்கும் லீவு சான்ஷன் பண்றேன்” என்று சொல்லி விட்டு ஆறு பேருக்கும் லீவி ‘சான்க்ஷன்’ பண்ணினார்.

என்னுடைய அப்பா சாம்சன் துரையை ‘தாங்க்’ பண்ணி விட்டு,ஆறு ‘க்ளார்க்கையும்’ தன்னுடன் வெளியே அழைத்து வந்தார்.

வெளியில் வந்ததும் அந்த ஆறு ‘க்லாக்கும்’என் அப்பாவைப் பார்த்து “ ஐயர்,நீங்க உண்மையிலே ரொம்ப புத்திசாலி.போன வருஷம் ‘புரட்டாசி சனிகிழமை’ ஒரு ‘சண்டே’லே வந்திச்சு, அதான் அவங்க லீவு கேக்கலேன்னு சொன்னீங்க.நீங்க சொன்னதே அந்த துரையை நம்பிட்டாரே. உடனே எங்களுக்கு லீவு ‘சான்க்ஷன்’ பண்ணி இருக்காரே.உங்களுக்கு ரொம்ப ‘தாங்க்ஸ்’ ஐயர்” என்று சந்தோஷப் பட்டுக் கொண்டு சொல்லி விட்டு அவர்கள் சீட்டுக்குப் போய் வேலையைக் கவனித்து வந்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *