நாரதர் ஒரு கம்ப்யூட்டருடன் கைலாயத்துக்குள் நுழைந்தார். வழக்கம் போல கணபதிக்கும் முருகனுக்கும் அது யாருக்கு என்று சண்டை. “என்ன நாரதா, நீ வந்த நோக்கம் நிறைவேறிவிட்டதல்லவா?” என்று சிவன் கேட்க, “நாராயணா… அபசாரம்! அபசாரம்!” என்று நாரதர் பதற, “வேறு வழியில்லை சுவாமி, வழக்கம் போல் நீங்களே ஒரு போட்டி வைத்து, அந்த கம்ப்யூட்டர் யாருக்கு என்று முடிவு செய்யுங்கள்” என்றாள் பார்வதி.
அதற்குள் முருகன் ‘ஓ’வென்று அழத் தொடங்கிவிட்டான். “கணபதி மவுஸை எடுத்துக்கொண்டு ஓடி விட்டான். எனக்கு ஒன்றும் இந்தக் கம்ப்யூட்டர் வேண்டாம். நான் பூவுலகம் சென்று, எனக்கென்று ஒரு வெப்ஸைட்
உருவாக்கிக்கொண்டு என் பக்தர்களுடன் ‘சாட்’ செய்யப்போகிறேன்” என்று கோபமாகச் சொல்லிவிட்டு, மயில் வாகனத்தில் கிளம்பி விட்டான் முருகன்.
ரவுசு பண்ணியபடி மவுஸ§டன் ஓடும் கணபதியின் பின்னால் ‘பிரௌஸ்’ பண்ணிய படி ஓடினர் பரமசிவனும் பார்வதியும்.
நாரதர் ‘யாஹ¨..!’ என்று துள்ளிக் குதித்தார்.
– 15th ஆகஸ்ட் 2007