வேட்பாளர் மனசு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: December 2, 2022
பார்வையிட்டோர்: 1,699 
 
 

(1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ரெட்ணய்யாவுக்கு மிக நீண்ட காலமாக ஒரேயொரு ஆசை.

அந்த ஆசையை எப்படியாவது நிறைவேற்ற வேணும் என்ற எண்ணத்துடனும் திண்டாட்டத்துடனும் அந்த நாளை எதிர் பார்த்துக் காத்திருந்தார்.

அந்த நாளும் வந்தது. உடனே குதித்தார் களத்தில் ரெட் ணய்யா. அது வேறெந்தக் களமுமில்லை தேர்தல் களம்தான்.

நாலு ஏக்கர் வயல் பரப்புக்கு உரிமையாளரான ரெட்ணய்யவுக்கு அறுபது வயது நிரம்பி முடிய ஆறு நாட்களே எஞ்சியிருந்தன.

நாளடி நீளமும் அரையடி அகலமும் உருவ அமைப்பும் கொண்ட ரெட்ணய்யா நாலு முழ வேஷ்டி மடித்துக் கட்டி, பழுப்பு நிறத்தில் “நஷனல்” அணிந்து பட்டுச் சால்வையை கழுத்தைச் சுற்றி தோள்களின் மீது எடுப்பாக எறிந்து மிடுக்காக நடப்பாரேயானால் இளமையின் இரகசியம் இதமாகத் தெரியும்.

தேர்தலின் அறிவித்தலைக் கண்டதுதான் தாமதம் துள்ளி எழுந்த ரெட்ணய்யா பெண்டாட்டியின் பேச்சுக்கு மத்தியிலும் பத்துச்சத வட்டிக்குப் பணமெடுத்து இரண்டாயிரம் ரூபாவைக் கட்டுப்பணமாகச் செலுத்தி கழுதையின் சின்னத்தைப் பெற்றுக் கொண்டு தேர்தல் களத்தில் குதித்தார்.

கட்டுப் பணத்தைச் செலுத்திக்கொண்டு கம்பீரமாக ஊருக்குப் போன ரெட்ணய்யாவைப் பார்க்க அந்த ஊர்ச் சிறுவர்களுக் வேடிக்கையாக இருக்கவே, அச்சிறுவர்கள் எல்லோரும் அவரைச் சூழ்ந்து கொண்டனர்.

இதைக் கண்ட ரெட்ணய்யா தனக்கும் நிறையச் செல்வாக்குண்டு என்று எண்ணி மனதுக்குள் சிரித்துக்கொண்டார்.

பின்பு சந்தோஷத்தின் மிகுதியால் அவர்களைப் பார்த்து ‘தம்பி மாரே’ இந்த ஐயாவுக்கு தேர்தலுக்காக ஒரு புதிய பெயர் ஒன்றை வையுங்கள் பார்க்கலாம்’ என்றார்.

உடனே அக் கூட்டத்திலிருந்த ஒரு பையன் அவரைப் பார்த்து ‘ஐயா உங்களுக்கு வெற்றி கிடைப்பது நிச்சயம்.

எனவே வெற்றிமணி ரெட்ணய்யா என்று பெயர் வைப்போம் என்றான். ரெட்ணய்யாவும் புழுகுவில் அப்பெயரை மறுப்பின்றி எற்றுக்கொண்டார்.

எனவே ரெட்ணய்யாவின் தேர்தல் திருநாமம் வெற்றிமணி ரெட்ணய்யா என அழைக்கப்பட்டது.

தேர்தலுக்கு வெற்றிமணி ரெட்ணய்யாவுக்கு ஒத்தாசை புரிந்து கொண்டு குழந்தைவேல், பொன்னையா, செல்லையா, கந்தையா ஆகியோர் ஓடியாடி உதவி புரிந்து கொண்டிருந்தனர்.

தேர்தலின் முதற்கட்டமாக மதில், சுவர்களில் எழுதுவதும், தேர்தல் பிரசாரமும் ஆரம்பமானது.

எனவே முதற்கட்ட வேலையாக வெற்றிமணி ரெட்ணய்யா இரவோடு இரவாக எல்லாருடைய மதில்களிலும் தனது சொந்தச் செலவைப் பயன்படுத்தி, தனது மேற்பார்வையில் கழுதையின் படத்தை கீறுவித்தார்.

பின்பு மறுநாள் காலையில் பொழுது புலர்ந்ததும் சிறிய படங்களைப் பார்க்கும் ஆசையில் தெருவில் நடைபவனியை ஆரம்பித்தார்.

நடைபவனியை ஆரம்பித்த அவர் ஒவ்வொரு கழுதையையும் உற்று நோக்கினார்.

கழுதையின் படத்தைப் பார்த்ததும் அவரது முகம் கொருக் காய்ப் புளி போல் சுருண்டது.

ஏனெனில் அவர் பணம் செலவழித்து அழகாகக் கீறிய கழுதையின் படத்தின்மேல் ஒரு மனிதன் மலம் கழிப்பதுபோல் எதிரணியினர் கீறியிருந்தனர்.

இதனால் கோபம் கொண்ட ரெட்ணய்யா அன்று முழுவதும் படுத்த பாடுக்கையாகவே கிடந்தார்.

படுக்கையில் கிடந்த அவரை ஒருவாறு குழந்தைவேல், பொன்னையா, செல்லையா, ஈந்தையா ஆகிய நால்வருமாகச் சேர்ந்து உஷார்க் குளிசை கொடுத்து மீண்டும் சுறுசுறுப்பாகச் செயற்பட வைத்தனர்.

இப்படியாக இரண்டு மூன்று நாட்கள் நகர்ந்தன. மறுநாள் வழமை போல் காலையில் எழுந்து கொண்ட ரெட்ணய்யா அயல்வர்களின் மதிலை உற்றுநோக்கினார். அங்கே –

வாங்கப்போறான் வாத்தி குழந்தைவேல், பொன்னையாவும்குப் பொல்லடி, செல்லையாவுக்குச் செருப்படி, கந்தையாவுக்கு சுல்லெறி என்ற திருவாசகங்கள் தெருவாசமாய்ச் சுவரை அவங்கரித்துக் காணப்பட்டது.

அந்த வாசகத்தைக் கண்டது தொடக்கம் குழந்தைவேலும் செல்லையாவும், பொன்னையாவும், கந்தையாவும் மிருகத்திய இருந்து உண்ணி கமருவது போல் கழன்று விட்டனர்.

ஆனாலும் ரெட்ணய்யா கலங்கவில்லை. சிறுவர்களின் உதவுயுடன் தேர்தல் மேடைகள் அமைத்துப் பேசித் தள்ளினார்.

அன்று தேர்தலில் பிரச்சாரக் கூட்ட கடைசி நாளாக இருந்தது.

சிறுவர்கள் மூலம் மேடையை அலங்கரித்தார். அலங்கரிக்கப் பட்ட மேடையை சென்றடைவதற்காக பலரிடம் வாடகைக்கு காரைக் கேட்டார்.

எல்லோரும் இல்லையென்று கூறவே, வெட்கத்தை வெளியில் விடாமல், புதிய பாணியில் செல்வோம் என்று கூறிக்கொண்டு கழுதை வண்டியில் மேடைச் சென்றடைந்தார்.

மேடையைச் சென்றடைந்தவர் நாளைந்து கைத்தட்டலிடையே பேச்சை ஆரம்பித்தார்.

“இங்கு கூடியிருக்கும் பல்லாயிரக்கணக்கான தாய்மார்களே தந்தைமார்களே! அனைவருக்கும் எனது வணக்கம்” என்று கூறி மேடையை சுற்றும் முற்றும் பார்த்தார்,

அங்கே சனங்களைக் காண முடியவில்லை, அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒன்றிரண்டு பேர் இருந்தனர். இதைக் கண்டு ரெட்ணய்யா மீண்டும் தொடர்ந்தார்.

“இங்கு சனக்கூட்டத்தைக் காணவில்லை. நாலைந்து சனங்கள் தான் இருக்குது என்று கவலைப்படாதீர்கள்.

இங்கு சனம் வராததன் காரணம் என்னவென்றால், ‘இன்று தேர்தலின் கடைசிப் பிரசாரக் கூட்டம் மூன்று இடங்களில் நாடபெறுகிறது.

அதனால் சனங்கள் எல்லாம் எனது கூட்டம் என்று நினைத்து மறதியாக அடுத்த கூட்டத்திற்கு போய்விட்டார்கள்.

எனவேதான் மற்றவர்களின் கூட்டத்திற்கு சனம் அதிகமாகவும் எனது கூட்டத்திற்கு சனம் குறைவாகவும் உள்ளது என்று கூறிக்கொண்டு மேடையருகில் நின்ற சிறுவர்களை நோக்கினார்.

ஆனால் யாருமே சோடா கொடுப்பதாக இல்லை. உடனே சிநுவர்களைப் பார்த்து ‘தம்பி, தொண்டை வரண்டு போச்சு கொஞ்சம் சோடா தாறீங்களா’ என்று கேட்டார்.

அது கணீரென மைக்கில் ஒலித்தது.

சோடாவைக் குடித்துக் கொண்டு மீண்டும் பேச்சை ஆரம்பித்தார்.

‘நான் ஒரு மேடைப் பேச்சாளன் அல்ல. நான் இந்தப் பேச்சு பேசுவதன் அனுபவம் எனது வீட்டருகில் இருக்கும் தண்ணீர்க் குழாயடிச் சண்டையைக் கேட்டுக் கேட்டே வந்தது தான்’

‘எனக்கு எதிராக இரண்டு பேர் ‘எலக்ஷன்’ கேட்டிருக்கிறார்கள்.

அவர்களின் சின்னம் காரும். மின் குமிழும் (பல்ப்) ஆகும்,

ஆனால் அவர்களுக்கு படங்கள் ஓட்டுக்களைப் போட்டு விடாதீர்கள் காரணம் என்னவென்றால் பெற்றோல் விலையேறிய கால மாதலால் கார் ஓடாது.

தண்ணீரில்லாமல் ‘பவர் கட்’ இருப்பதனால் ‘பல்ப்’ எரியாது எனவே கழுதைதான் உதவி புரியும். ஆகவே எனக்குப் போடா விட்டாலும் கழுதைக்குப் போடுங்கள்.

தயவு செய்து எனக்கும் ஒரு சந்தர்ப்பம் தாருங்கள் என்று கூறி விடை பெறுகிறேன் வணக்கம் என்று கூறிக்கொண்டு மேடையை விட்டிறங்கிச் சென்றார் ரெட்ணய்யா.

மறுநாள் காலையில் வாக்குச் சாவடியில் ஓட்டுப்போடுதல் ஆரம்பமானது. ரெட்ணய்யா முழி விசலத்திற்காக முதல் ஓட்டை போடுவதற்கு தனது மனைவியை அனுப்பி வைத்தார்.

மனைவி ஓட்டுப் போட்டுட்டு வெளியில் வரும்வரைக் காததிருந்த ரெட்ணய்யா மனைவியைப் பார்த்து “எதுக்கு நேரே புள்ளடி போட்டாய்?” என்று கேட்டார்,

அதற்கு அவர் மனைவி “மனுசா! ஏன் தான் ஒரு வோட்டை வீணாக்குவான் என்று காருக்கு நேரே போட்டுட்டன்” என்றார்

இதைக் கேட்ட அவருக்கு மண்டை வெடித்து விடும் போல் இருந்தது. ஆனாலும் நிலைமையைச் சமாளித்து விடலாம் என்ற எண்ணத்தில் தனது தரிப்புத்தியை பயன்படுத்தி, அங்கவீனர்களை ‘கரியர்’ சைக்கிளில் ஏற்றி வந்து ஓட்டுப் போட வைக்கும் படவத்தை ஆரம்பித்தார்.

பல சிரமங்களுக்கு மத்தியில் ஒரு கண் தெரியாத கிழவியை பைசிக்கள் ‘கரியரில்’ வைத்து ஏற்றி வந்து அக் கிழவியை வாசி களிக்கும் பெட்டியினருகே கொண்டு சென்று விட்டு, உலக வழக்கிற் காக ‘ஆருக்கு நேரே புள்ளடி போட ஆச்சி’ என்று கேட்டார்.

அதற்கு அக் கிழவியே ரெட்ணய்யாவின் சின்னமான கழுதையை மறந்து – ‘தம்பி, அந்த ‘பல்ப்’ புக்கு நேரே புள்ளடி போடு’ என்றாள். இதைக் கேட்டதும் ரெட்ணய்யாவுக்கு என்ன செய்வதென்றே தெரியாமல் திண்டாடினார்.

அன்றிரவு தேர்தல் முடிவுகள் வெளியாகின. தேர்தல் முடிவை வெளியிட்டவர் ‘இந்தத் தேர்தலிலே முதலாவதாக ஒரே ஒரு வாக்கை மட்டுமே பெற்று கட்டுக்காசை இழக்கிறார் ரெட்னய்யா’ என்று வாசித்தார்.

சனக் கூட்டத்தின் நடுவே நின்ற ரெட்ணய்யா அறிவிப்பை கேட்டதும் ‘பொலிட்டிக்ஸ்’ என்பது போலிறிக்ஸ் என்று உணர்ந்தவராக சனக் கூட்டத்தில் இருந்து நைசாக நழுவிச் சென்று கொண்டிருந்தார்.

– ஓ. கே.குணநாதன் நகைச்சுவை கதைகள், முதற் பதிப்பு: அக்டோபர் 1993, ப்ரியா பிரசுரம், மட்டக்களப்பு

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *