வயாகிராவும் – அரைக்கோவணமும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: August 8, 2015
பார்வையிட்டோர்: 25,445 
 
 

“நாலு மணிக்கு ஜெனரல் மானேஜர் மீட்டிங் வச்சிருக்கார்…..முக்கியமான சமாச்சாரமாம்….”

இருக்கை இருக்கையாக வந்து சொல்லிக் கொண்டிருந்தான் சுகவனம்.

“என்னடா சமாச்சாரம் என்ன விஷயம் பத்தி பேசப்போறார்… உனக்கு ஒரு துப்பு கெடச்சிருக்குமே…. காலமே என்ன பேசினார்….”

“அது ரொம்ப மோசமான சமாச்சாரம், அதுக்கும் மீட்டிங்குக்கும் எந்த சம்மந்தம் இருக்க முடியாது…”

“பரவாயில்ல… பேசினதைச் சொல்லுடா….”

“அமெரிக்கா போனதுலே இருந்து பெரிசுக்கு புத்தி சுவாதீனம் இல்ல…காலையிலே டீ ஊத்திக் கொடுத்தேன்.. டீயும் பிஸ்கட்டும் சாப்ட்டுகிட்டே பேச ஆரம்பிக்குது… இதுக்கு பிஸ்கட்டை வாயிலே வச்சா மூடு வந்துடுது
ஸார்.. பிஸ்கட்லே ஏதாவது இருக்குமோ.. ஒன்னும் புரியல்லே….”

பாரின் பிஸ்கட் இல்லையா ஏதாவது இருக்கலாம்.. என்ன சொன்னார் முதல்லே அதைச் சொல்லுடா….”

“கேக்கறார்.. ஏண்டா சுகவனம் அறுபதுக்கு மேலே காதல் வருமாங்கறார்… எனக்கு திக்குன்னுது…”

“நீ என்னடா சொன்ன..”

“அறுபதுக்கு மேலே ஒருவேளை காதல் வரலாம் ஸார்… வராமலும் போகலாம்.. ஆனா கண்டீப்பா வாதம் வரும்னேன்..” எப்படி..”

“வாரிட்டடா… மூஞ்சி சின்னதாப் போயிருக்குமே..”

“சுண்டிப் போச்சில்லே… பார்க்கவே முடியல்லே…”

“ஆமா.. நான் கூட பார்த்தேன்.. முகம் ரெண்டு அங்குலம் மாதிரி சுண்டிக் கெடந்தது….” இது ஆமாம் சாமி ஆறுமுகம்…

“அப்புறம் கேக்கறார் வயக்கராவுக்கும், அமுக்கராவுக்கும் என்னடா வித்தியாசம்னு…..”

“அப்படியா கேட்டார்… வயக்கரா பாரின்… அமுக்கரா உள்நாடு சொல்லிடறது…”

“நான் அப்படி சொல்லலை.. என் பொன்ஜாதி பிரசவத்துக்கு போயிருக்கா ஸார்… அதோட எனக்கு வயக்கரா சாப்பிட்டற வயசாகலைன்று ஒரே போடா போட்டுட்டேன்… எப்படி….”

“தூள்டா… முகம் சுருங்கி போயிருக்குமே…”

“சுருங்கறதா தொங்கியே போச்சே…”

“ஆமா நான் கூட பார்த்தேன்.. ஒரு பத்து சுருக்கம் போல இருந்தது… தோளுக்கு கீழே முகம் தொங்கி இருந்தது… மறுபடியும். ஆமாம் சாமி ஆறுமுகம்..”

“டேய் சுகவனம் அதென்னடா உன்னைக் கண்டா அவருக்கு இவ்வளவு பயம்…. எதச் சொன்னாலும் துணிஞ்சு சொல்லிடறே..”

“அம்மா செல்வாக்கு இருக்கே. வச்சிடமாட்டேன்… வச்சி.. நேத்து எதுக்கோ சத்தம் போட்டேன்.. மனுஷன் பேண்டோட பாத்ரூம் போயிட்டாரே….”

“ஆமா.. ரூம்லே ஒரே நாத்தம்.. எனக்கே முடியல.. இது கூட ஆறுமுகம்தான்.. டேய் ஆறுமுகம் உன் சாமியாட்டம் தாங்க முடியலைடா.. கொஞ்சம் வாயை மூடேன்….”

கொஞ்ச நேரத்தில் எப்படியோ “ஜி.எம். நாட்டு வயக்கரா தயாரிக்கப் போறாராம்…” என்று அலுவலகம் முழுவதும் செய்தி பரவிவிட்டது.

“ஒரு புது புராடக்ட்.. ஏம்பா நமக்கு ஆளுக்கு முப்பது ஸாம்பளுக்கு கெடக்குமா…”

“உங்களுக்கு ஜம்பத்து ஜந்து வயசாச்சு ஸார்..”

“ஆசைக்கு சாப்பிடலாம்பா.. வயசானா என்ன..”

“சாப்பிட்டு என்ன பண்றது..”

“எனக்கும் புரியலை.. பங்கஜம்த்தைக் கூப்பிடு என்று ஆரம்பிக்க சுகவனம் சத்தம் போட்டான்.”

“வேண்டாம் ஸார்.. அம்மாவுக்கு துரோகம் செய்யாதீங்க…”

“டேய் சும்மா இருடா.. இந்தப் பைலைக் கொடுக்கக் கூப்பிட்டேன்….தப்பா நெனைக்காதே பங்கஜம்… பங்கஜம்… இந்த சித்த வாயேன்…”

பங்கஜம் உடன் ஆஜர்.. ஸார் வந்துட்டேன்.. நம்ம ஜி.எம். வயாக்கரா தயாரிக்கப் போறாராமே. வயக்கரா சாப்பிட்டா என்ன ஆகும்…”

ஐயா சாப்பிட்டா பேதியாகும்… பங்கஜம்மா சாப்பிட்டா வாந்தியாகும்..

“நான் சாப்பிட்டா மாத்திரம் என் வாந்தியாகும்..” பங்கஜத்துக்கு குழப்பம் அவள் வெகுளி…

ஜி.எம். மீட்டிங் ஆரம்பித்தது.. மொத்த ஆபிஸீம் ஆஜர்.

எல்லோருக்கும் டீயும் பிஸ்கட்டும் வந்தது.

“இந்த கிளைமேட்டுக்கு வெங்காய பகோடா இருந்தா சூப்பரா இருக்கும். இல்லே”

“ஜி.எம். சூடா தருவாரு இப்ப வாங்கிக்கலாம் ரெடியா இரு…”

“ஒகே ப்ரண்ட்ஸ்… இப்ப நாம ஒரு முக்கியமான சமாச்சாரம் பத்தி பேசப் போறோம்.. கொஞ்சம் கம்பெனி பத்தி கொஞ்சம் வேற சமாச்சாரம்…”

ஜகந்நாதன் உள்ளே நுழைந்தான்.. அவனுக்கு சோப்பு என்று இன்னொரு நாமகரணம் கூட உண்டு…

“எக்ஸ்க்ய+ஸ்மி… ஸார் கொஞ்சம் லேட் ஸார்..”

“பரவாயிலே… வாய்யா.. எங்கே நீ வராம போயிடுவேன்னு

“நீங்க மீட்டிங் போட்டு வராமலா…. நீங்க அமெரிக்காவுல மீட்டிங் வச்சாலும் வந்துர மாட்டேன்…”

“சோப்பைக் கையில எடுத்துட்டாண்டா..”

“உங்க எல்லாத்துக்கும் தெரிஞ்சிக்கும்… புனாவிலே என்னோட பெரியம்மா மகளுக்கு மகள் வயிற்றுப் பேரன் இருக்கிறது..”

“தெரியும் என்ன.. அந்தப் பையன் இப்போ அமெரிக்காவிலேதானே இருக்கான்..”

“பார்த்தியா.. இதுக்குத்தான் ஜகந்நாதன் வேணும்மின்னு சொல்றது யானை மாதிரி ஞாபகம் இவனுக்கு…”

“கமுத்திட்டாண்யா கெழவனை..”

“விடு வேடிக்கையைப் பார்ப்பம்…”

“அந்த பையன் பேரு சூரிய நாராயணன்.. பதினாறு வயசு… பி.எச்.டி வாங்கிட்டான். இப்ப அவன் வெறும் சூரிய நாராயணன் இல்ல.. டாக்டர் சூரிய நாராயணன்…”

“ஆச்சரியமா இருக்குண்ணா.. நம்ம ஊர்லேன்னா ஈஸியா பி.எச்.டி வாங்கலாம்… அமெரிக்காவுல வாங்கறது சாமானியமா….பெரிய ஜீனியஸா இருக்கனும்……. பொறக்கும் போதே டாக்டர்கள் சொன்னாங்களாம் இவர் பெரிய ஜீனியஸா ஆவான்னு…. பொறக்கும் போதே ரெண்டு பல்லு வந்திருச்சாமே….”

“ஆச்சரியமா இருக்கே… பொறக்கும் போதே ரெண்டு பல்லு மொளைச்சிருந்தா.. எங்க பெரியம்மா பையனுக்கு இன்னும் பல்லே வரலைங்கன்னா…”

“அவனுக்கு எவ்வளவு வயசாச்சு ஜகர்நாதா…”

“ஜம்பத்திரண்டு வயசாச்சு.. முப்பத்தி ரெண்டு பல்லும் வரலண்ணா…

“என்னய்யா அதிசயமா இருக்க.. ஜம்பத்தி ரண்டு வயசில முப்பத்திரண்டு பல்லும் வர்லியா…”

“விடுங்கண்ணா.. அவனுக்கு பல்லுவராட்டி என்ன.. கொம்பு முளைச்சா நமக்கு என்ன – நம்ப சூரியா… டாக்டர் சூரியா பத்தி பேசுவோம்…”

“டாக்டர் சூரியாவாம் கேட்டுகய்யா.. சோப்பை நனைச்சு பதமாக்கிட்டான்…”

“உரசிக்கிரசி பேர் வாங்கிடுவான் ஜகஜாலனாச்சே…”

“ஆமா நம்ம பையன் பத்தி பேசுவம்யா…”

ஸார் இந்த வயசிலே டாக்டரேட் கொடுப்பானா..

“அமெரிக்காவுலே கொடுப்பான்யா.. அதான் அமெரிக்கா..திறமைக்கு மதிப்பு கொடுக்கற ஊர்… நம்ம இந்தியாவானா இவன் ப்ளஸ்டு எழுத முடியாது.. அதான் எல்லா புத்திசாலிங்க பாரின் போகப் காரணம்
இந்தியா திருந்தனும்யா ரொம்ப மோசம்…ஃ

ஆமா சார்… இந்தியா ரொம்ப ரொம்ப மோசம்.. “ ஆமாம் சார் ஆறுமுகம்..”

“அவரு எதுல ஸார் டாக்டரேட் வரங்கியிருக்கார்…”

“அதான் சரியா ஞாபகத்துக்கு வரமாட்டேங்குது… நிய+க்கிளியர் தெராபியோ இல்ல கர்னல் கெடாபியோ சொன்னான்…”

“கர்னல் கெடாபியா இருக்கும் ஸார்.. என்று ஊடே புகுந்தான் ஜகந்நாதன். இந்த மாதிரி ஒரு வார்த்தையை எல்லாருக்கும் எங்கோ கேட்டது மாதிரி இருக்க யாரும் பதில் பெசவில்லை.

“அமெரிக்காவிலே பாருங்க எதுக்கு வேணாலும் டாக்டர் பட்டம் தர்றான்…. ரஸம் வக்கிறது எப்படி.. நாலு விதமா பொடிமாஸ் செஞ்சா ஏன் உடம்புக்கு நல்லது… அரைக் கோவணம் கட்டினா என்ன சௌகர்யம்ன்னு
திஸீஸ் எழுதினா கூட டாக்டர் பட்டம் தர்ரான்….”

“நீங்க கூட ஒரு டாக்டர் பட்டம் வாங்கலாம் அண்ணா..”

“அரைக்கோவணம் கட்டறதுலே என்ன சௌகரியம்னு திஸீஸ் தரலாம்கறியாய்யா…”

“என்ன அப்படிச் சொல்லிட்டீங்க… நம்ப ஊர் அரைக் கோவணம் தான் ஜட்டியா மாறி அமெரிக்காவுல பெரிய போடா போடறது…..

அமெரிக்காவிலே அரைக்கால் கோவணம் கட்டின எத்தனை பெண்கள் நீங்க டீவி பார்க்கறதில்லையா.. அமெரிக்க தேசிய உடையே ஜட்டிதான்னா.. ஆறுநாள் குழந்தை முதல் எண்பது வயசு கெழவன்
கெழவி வரை ஜட்டி மாத்திரமே போடறாங்க… நம்ம மெயின் எக்ஸ்போர்ட் இதுதான். அதோட வசதியெ தனின்னா…’

“அமெரிக்காவுலே எண்பது வயசுக் கிழவி ஜட்டி போடறது இவனுக்கு எப்படி தெரியும்..சேஷன்” என்றார் பெரிய மானேஜர்..அதோட ஜட்டியிலே அப்படியென்ன பெரிய சௌகரியம்…. உனக்குத் தெரியுமா”

“நான் பக்கத்து வீட்டு கொடியிலே ஜட்டி பாத்திருக்கேன் தவிர எனக்கும் ஜட்டிக்கும் என்ன சம்மந்தம்.. அந்த ஜட்டி சைஸ் பெரிசு ஆம்பளை ஜட்டியா பொம்பளை ஜட்டியான்னு அனுமானம் பண்ண முடியலை.. அதோட அவ்வளவு பெரிய ஜட்டிக்கு என்ன தேவைன்னும் புரியலை அப்புறம் ஆம்பளை ஜட்டிக்கும், பொம்பளை ஜட்டிக்கும் அடிப்படையில் என்ன வித்தியாசம் ஸார்..”

“யோவ் எனக்கு மாத்திரம் ஸ்கூல்லே படிச்ச அனுபவமா என்ன கர்மம்.. வேற ஏதாவது பேசு விடு.. பேச்சுக் கவனிப்போம்..

ஜெகந்நாதன் பேச்சைக் கேட்டட ஜி.எம். விஸ்வநாதன் ஒரு நிமிடம் சலனப்பட்டுப் போனார்.. உண்மையிலே அரைக் கோவணமும் ஜட்டியும் ஒன்னுதானா.. ஜட்டிதான் அரைக்கோவணம் என்றால் என் பேட்டன் ரைட்ஸ் நாம் வாங்கக் கூடாது. அமெரிக்காக்காரன் மஞ்களையும், மாட்டு மூத்திரத்தையும் காப்புரிமை செய்யும் போது நான் ஏன் அரைக்கோவணம் இந்திய பாரம்பரிய சொத்து. கலைச்சின்னம் பண்பாட்டு உறைவிடம் இப்படி சொல்லி காப்பிரைட் வாங்கக் கூடாது. தவிர எத்தனை இந்திப் படங்களில் அரைச்கோவணம். கால் கோவணம் முதலானது கட்டி நடிகைகள் டான்ஸ் ஆடி இருக்கிறார்கள்.. பதினாறு வயசிலே படம் பார்த்தபோது கோவணமும் கிராமிய மணமும் சினிமாத் தியேட்டர் முழுக்க பரவியிருந்ததே.. நாம மறந்தே போனமே.. நாம் நிறைய ஏமாந்து கோண்டிருக்கிறோம்.. இதை கவனிக்க வேண்டும் என்று மனசுக்குள் குறித்துக் கொண்டார்.

“நீ சொல்றது ரொம்ப சரி ஜகந்நாதன்.. நம்ம ஊர் அரைக்கோவணம் தான் அமெரிக்க ஜட்டி இந்தியாவில் இருந்து தான் அது போயிருக்கும்…குறிப்பா தமிழ்நாட்டிலே இருந்துதான் இது போயிருக்கனும்.. இல்லையா..”

“ஆமாண்ணா.. அதுவும் சமுத்திரக்கரை ஓரமா இருந்துதான் இந்த நாகரீகம் அமெரிக்கா போயிருக்கணும்…”

ஏது இவன் தன் சொந்த ஊர் தக்கலையில் இருந்துதான் அரைக்கோவணம் அமெரிக்கா போய் இருக்க வேண்டும் என்று சொல்லுவானோ என்று யோசித்தார்.. அப்புறம் தன் தாத்தா பெரியப்பா இவர்கள் கோவணம் கட்டினார்கள் என்றும் ஏன் தான் கூட ஒரு எட்டு வயசுவரை கோவணத்தோடு சுற்றியது ஞாபகம் வர பேச்சை மாற்றாவிட்டால் தன் மானம் ஜெட் ஏர்வெஸ் ஏறலாம் என்று பயந்து பேச்சை மாற்றினார்.

“அட டிராக் மாறிடிச்சய்யா… நம்ம சூரிய நாராயணன் விஷயத்துக்கு வருவோம்…”

ஆமா ஸார் அத விட்டுட்டு… இப்ப நம்ம சூரியாவை அமெரிக்காவுலே நெறய பேர் கூப்பிட்டு பாராட்டி பார்ட்டி கொடுத்திருக்காங்க.. நம்ம குழந்தைகளை நாம பாராட்டாம எப்படி ஆகறது.. அதான் வர்ர மாசம் சூரியா வர்ர போது ஒரு பார்ட்டி தரலாம்னு இருக்கேன்.. எல்லோரும் கண்டிப்பா வரணும்…”

“கண்டிப்பா வரோம் ஸார்… என்று எல்லோரும் ஏக காலத்தில் கைதூக்க விஸ்வநாதன் முகம் முறம் மாதிரி அகன்றது.

“அதுல முக்கிய விஷயம் என்னண்ணா.. விஸ்வநாதன் ஒரு வினாடி நிறுத்த. இந்தகெழம் என்ன சனியனi விளம்பப்போகுதே.. என்று கூட்டம் மூச்சைப் பிடித்து கவனித்தது…

“பொதுவா அமெரிக்காவில் வெறும் பார்ட்டி இதெல்லாம் நடத்தறதை விட முதல்லே.. இந்த மாதிரி அறிஞர்களைப் பேச வைப்பாங்க… அல்லது ஒரு கிளாஸ் மாதிரி வகுப்பு எடுப்பாங்க.. அப்புறம் பேச்சு முடிஞ்சதும் கேள்வி கேட்டு முடிச்சு அப்புறம் பார்ட்டி வைக்கறது வழக்கம். நாம அப்படித்தான் செய்யனும்.. எப்படி..”

“ஆகா… அற்புதமான யோசனை.. கொடுத்து வைக்க வேணாமா டாக்டர் சூரியா பேச்சைக் கேட்க.. பதினாறு வயசுலே டாக்டர் பட்டம். இப்பவே அவரு பேச்சக் கேட்டுருவோம் அடுத்த வருஷம் இன்னும் எத்தனை டாக்டர் பட்டம் வாங்குவாரோ… அப்புறம் பேச நேரமிருக்குமோ… என்னவோ…

ஜகந்நாதன் சொன்ன மாதிரி நடந்து விடலாம் என்று விஸ்வநாதன் நினைத்தார்.. பேத்திக்கு பதினைந்து வயசு ஆகிறது.. அப்படி இப்படி வளைத்துப் போட்டு விட வேண்டும்.. ஒரு மூணு நாலு வருஷத்தில்ல பிரளயமா வந்து விடும்..

பார்ட்டி என்றதும் சந்தோஷப்பட்ட பார்ட்டிகள் வகுப்பு என்றதும் வாடிப்போய்விட்டனர்.

“எவ்வளவு நேரம்யா நடக்கும் லீவு நாள்ளே பார்ட்டி வச்சித் தொலைச்சிடுவானா கிழவன்.”

“பார்ட்டின்னா எப்படி கேக்.சிப்ஸ்.காப்பி மாத்திரமா – நான் கேக் சாப்பிட மாட்டேன் சைவம்..”

“ஓகே ப்ரண்ட்ஸ்.. நான் டாக்டர் சூரிய நாராணன் கிட்ட தேதி கெடச்சதும் உங்களுக்கு சொல்லிடறேன்.. கட்டாயம் மீட்டிங் வரணும் நன்றி…”

எல்லோரும் வெளியே வந்ததும் எல்லோருக்கும் ஜகந்நாதன் மேல் கடுப்பு வந்து….

“ஐஸ் வைக்கிறது எப்படின்னு ஒரு திஸிஸ் இவன் கொடுக்கலாம் டாக்டர் பட்டம் கெடைக்கும் – சாகடிக்கணும்யா இவனை…”

“எப்படி சாகடிக்கிறது…”

“எலக்டிரிக் டிரெயின்லே வர்ர போது பின்னாலிருந்து தள்ளிடலாம். இதைச் சொன்னது சதாசிவம்.

“அதும் நல்ல யோசனைதான்.. அவன் செத்தால் இந்த ஆபிஸ் உருப்படும்… சரி அவன் வர்ரான்… மூட்டையைக் கட்டு…”

ஆடிட்டர், சதாசிவத்தை தனியாகக் கூப்பிட்டு காதைக் கடித்தான். நீ பாட்டுக்கு டிரெயின்லே இருந்து தள்ளிச் சாகடிக்கலாம்னு ஐடியா கொடுக்கறியே… நாளைக்கு டிரயின்லே இருந்து அவனாக் கீழே விழுந்து செத்தால் கூட நீதான் செஞ்சேன்னு நாலு சாட்சியை போலீஸ் வரவழைப்பான்… அள்ளிக்கிட்டு போயிடுவான்.. மவனே.. சோப்பு சாகக்கூடாது.. அதும் டிரெயின்லே இருந்து விழுந்து சாகக் கூடாதுன்னு வேண்டிக்கோ.. புரியுதா ஆடிட்டர் மிரட்டியதும் திகீர் என்றது சதா சிவத்துக்குஃஃ இதற்கப்புறம் அவன் சதாசிவம் அல்ல “சதாசவம்” சதாசவத்துக்கு இல்லை சதாசிவத்துக்கு ஒரு மாதிரி பயம் அதிகரிக்க ஆரம்பித்தது.

அவன் ஜகந்நாதனிடம் வந்தான்.

“ஜகா வீட்டுக்குப் புறப்படறியா உன் ப்ளான் என்ன”

“மாம்பலம் போகனும்.. அப்புறம் கோடம்பாக்கம்….”

“எதிலே போவ…”

“அட என்ன கேள்வி ஏரோப்பிளான்லயா போக முடியும் எலக்டிரிக் ட்ரெயின்லே தான்…”

“ஏன் கால் டாக்ஸியிலே போயேன்..”

“நான் கால் டாக்ஸியிலே போவேன். அரை டாக்ஸியிலே போவேன் இல்லே நான் எலக்ட்ரிக் டிரெயின்லே போனா என்ன எதுலதான் போனா உனக்கென்ன..”

“உங்கள் நண்பருக்கு வாகன ஆபத்து உண்டுன்னு இன்னிக்கு நாள் பேப்பர்லே படிச்சேன். அதான்…”

“கவலைப்படாதீங்க… அது வேற யாருக்காவது வரும் எனக்கு வராது….”

“டிரயின்லே வாசற்படி ஓரத்திலோ நிப்பீங்களா…”

“எப்பவும் அப்படித்தான் டிராவல்…”

“எதுக்கும் சீட்லே உட்கார்ந்து வாங்களேன்…

“ஏன்….. யாரும் பின்னால் இருந்து தள்ள முடியாதே..”

“ஜகந்நாதன் தன் பையை எடுத்துக் கொண்டு புறப்பட்டான்..பின்னாலிருந்து தள்ளிச் சாகடிக்கலாம்னு ஐடியா கொடுத்தாச்சு. ஏதாவது ஆச்சின்னா போலீஸ் நம்மளையில்லே குடையும் என்று தவித்தான் சதாசிவம். தவிர யாராவது நெஜமாகவே பின்னாலிருந்து தள்ளிவிட்டு நம்மீது பழியைப் போட்டால் என்ன ஆவது… சதாசிவத்துக்கு பிரஷர் ஏற ஆரம்பித்தது…

ராத்திரி தூக்கத்தில் எழுந்து சதாசிவம் “நான் தள்ளல்லே நான் தள்ளல்லே என்னை விட்டுருங்கோ… நான் அடி தாங்கமாட்டேன்..சந்தேகமானா சரஸீவைக் கேளுங்க.. என்று சத்தம் போட ஸரசு சதாவை
உலுக்கி எழுப்பினாள்…

“என்ன உளறல்… என்னை எதுக்கு கேட்கச் சொல்றீங்க… யாரைக் கேக்கனும்… என்ன கேட்கனும்…

பேயைப் பார்த்த மாதிரி விழித்தான் சதா….

“நீ பொம்பளை போலீஸா…”

“பேசாம படுங்க.. நான் பேண்ட் சட்டையா போட்டிருக்கேன். இது புடவை ஜாக்கட் நான் சரஸ{ தூக்கம் வந்தது பின்பு. “ஜகந்நாதன் எலக்ட்ரிக் டிரெயினில் இருந்து விழுந்திருப்பானோ என்;ற சந்தேகம் மறுபடி வந்தது கண்ணை மூடித்தூங்க முடியவில்லை. மறுபடி துக்கம் வந்தபோது எலக்ட்ரிக் டிரெயின் ப+ம் என்று அலறிக் கொண்டு ஓட ஒரு ஆள் வாசல் ஓரம் இருந்து தலைகுப்புற விழுந்தான்.. ஐயோ சதாசிவம் நீயா தள்ளினே என்று அவன் அலற சதாசிவம் மறுபடி தூக்கத்தில் அலறினான்.. “ஐயோ ஸரசு… போலீஸ்காரங்க வந்துட்டாங்க… ஸரசு காப்பாத்து… ஸரசு..ஸரசு பொத்தென்று அவன் வாயில் போட்டாள்.. பேசாம என்னைத் தூங்க விடுங்க.. பதினைஞ்சு வருஷமா இதே கஷ்டம்.. எப்பத்தான் நிம்மதியா தூங்கப் போறேனோ..”

மானேஜர் சுந்தரம் வீட்டில் வேற மாதிரி விஷயம் நடந்தது.

“என்னங்க…காய்கறி வந்திருக்கா.. வாழைக்காயும் கத்தரிக்காயும் வாங்குங்க…”

அமுக்கரா கனவில் இருந்த சுந்தரத்துக்கு எரிச்சல் வந்தது. எல்லாம் என் தலையிலே போடு.. நீ வாங்கக் கூடாதா..

“பால் வச்சிருக்கேங்க அடுப்பிலே…”

சலிப்புடன் எழுந்து போனார் சுந்தரம்.

“ஏம்மா… வயாக்கராவும் அமுக்கராவும் கொடு.. காய்காரி விசித்திரமாக அவளைப் பார்த்தபோது கூட அவருக்குப் புரியவில்லை. “ஏன் ஸாமி… வயசு திரும்பிடுச்சா…”

“அதற்குள் மாமியே வந்து விட்டாள்….”

“என்னம்மா.. தகராறு.. ஒரு காய் வாங்கத் துப்பில்லே…”

“ஸாமி வயக்கரா கேக்கறாறு… உடம்பு பலமாயிருக்கா மாமி…”

“ஐயோ” என்றார்; சுந்தரம்.

“அது என்னத்திற்கு சாப்பிடறது காய்காரம்மா…”

“மூட்டு வலிக்கு… மூட்டுவலிக்கு” என்று அலறினார் சுந்தரம்”

“ஸாமி சரியில்ல மாமி கவனியுங்க.. என்று சொல்லிவிட்டு நகர்ந்தாள் காய்காரி..

சுந்தரம் ஆபீஸீக்குப் புறப்பட்டபோது தான் அழகான அந்த சம்பவம் நடந்தது..

“ஏங்க மறக்காம எனக்கு வயக்கரா வாங்கி வந்துடுங்க..”

தடக்கென்று விழ இருந்தவர் சமாளித்து சுற்றிப் பார்க்க ஏழெட்டு வீட்டுக்காரர்கள் தன்னையும் மனைவியையும் ஆச்சரியத்துடன் பார்க்க மறுபடி “மறக்காதீங்க” வயாக்கரா முக்கியம் என்றாள் மாமி.

“எதுக்கு மாமி வயாக்கரா..”

“மூட்டு வலிக்கு நல்லதுன்னு அவர் சாப்பிடறாராம் நானும் சாப்பிடப் போறேன்..”

“அவசியம் சாப்பிடுங்க மாமி… என்று சத்தமில்லாமல் சிரித்தாள் நீலாயுதாட்சி… ஒடம்பையும் நல்லாத்தான் வச்சிருக்கிங்க.. வேண்டியது தான்…”

ஆரத்தி சுற்றி டாக்டர் சூரிய நாராயணனை ஆபிஸீக்கு அழைத்து வந்தார்கள்.. அவன் முக்கால் டிரவுசர் போட்டிருந்தான்.

சரியாக நாலுமணிக்கு மீட்டிங் ஆரம்பித்தது.. அதென்னய்யா பிரம்பு கையிலே.. தப்பா ஏதாவது சொன்னா அடிக்கவா….

“அடிப்பாரு… விட்டன்னா கண்ணாடி கண்ணுக்குள்ளே போயிடாது. மீசை முளைக்காத இவன் அடிச்சி நான் வாங்கறதாவது. ஆளைப்பாரு தலைப்பரட்டை மாதிரியில்லை.. இருக்கான்.. என்னய்யா முக்கால் பேண்ட்… இது அமெரிக்கா ஸ்டைலா…”

“ஜென்டில் மேன்… நான் சரியா முப்பது நிமிஷம் பேசுவேன். அஞ்சு நிமிஷம் இந்த வயசுல எவ்வளவு கஷ்டப்பட்டு டிகிரி வாங்கினேன்னு அடுத்த அஞ்சு நிமிஷம் அமெரிக்கன் லைப் ஸ்டைல்.. அப்புறம் நாம செய்யறதப்பு – ஓகே.. பதினாறு வயசிலே டாக்டர் பட்டம்கறது சாதாரண விஷயமில்லே.. என்று ஆரம்பித்த அதன் கஷ்டங்களைச் சொன்னான்…நான் எதப்பத்தி திஸீஸ் கொடுத்தேன்… தெரியுமா.. நம்ம ஊர் இட்லி, தோசை, ஆப்பம், பணியாரம், வத்தக்குழம்பு, வத்தாத குழம்பு, ரஸம், வடாம், இதில் உள்ள நிய+ட்ரிஷியஸ் வேல்ய+…. இதப்பத்தி நம்ப பெரியவங்க எவ்வளவு நூறாண்டு முன்னே தெரிஞ்சு வச்சிருக்காங்கன்னு மூணுவருஷம் ஆராய்ச்சி செய்து திஸீஸ் தந்து பட்டம் வாங்கினேன்…”

“அட கண்ராவியே கடைசியா கொழம்பு சமாச்சாரமா..டேய் சாம்பாரு….”

“நாம அமெரிக்கா மாதிரி உயர முயற்சி செய்யனும்.. சுகாதாரத்தை முக்கியமா அவங்க நெனைக்கறாங்க.. இந்த் ப+மி நம்முடையது. காற்றும். தண்ணீரும் நமக்குச் சொந்தம். நாம எல்லாத்தையும் பாழ்படுத்தி, மாசுபடுத்தி நமக்கு நாமே குழி தோண்டிக்கிறோம். நோய்களை அதிகப்படுத்தி உடம்பை வீணாக்கிக்கிறோம். சூர்யா பேசிக் கொண்டே போக ஆல் முழுவதும் பல மாதிரி உணர்ச்சிகளுடன் கேட்டுக் கொண்டிருந்தது. அரை மணி முடிய ஒரு நிமிஷம் இருந்தது. ஓ.கே. ஜென்டில்மேன்… பொறுமையா… மூன்று நிமிஷம் கைத்தட்டல். என்னோட பேச்சைக் கேட்டதுக்கு நன்றி….”

“ஏதாவது கேள்விகள் இருந்தால் கேட்கலாம்….”

“நம்ம மனேஜ்மெண்ட் நாட்டு வயக்கிரா தயாரிக்க யோசிக்கிறதா ஒரு பேச்சு வந்தது. உங்க சத்துணவு ஆய்வுலே வயக்கிறாவுக்கும் அமுக்கிராவுக்கும் உள்ள வித்தியாசம் சொல்ல முடியுமா டாக்டர்…

அற்புதமான கேள்வி என்று பங்கஜம் சிலாகிக்க மற்றவர்கள் சுவராஸ்யமாகக் காத்திருந்தனர்.

“வயக்கரா பார்முலா எனக்குத் தெரியாது.. ஒரு வேளை அதிலே ஸ்டிராய்டு கலந்திருக்கலாம்.. அமுக்கரா இன்னும் அமெரிக்காவிலே பாபலராகலே.. அதிலே ஆல்கலாய்டு இருக்கு… அது ஸ்டீராய்டு.. இது
ஆல்கலாய்டு… வேற கேள்வி…”

சுந்தரம் கெமிகல் சமாச்சாரம் இங்கிலீஸ் விஷயங்களில் அவ்வளவு பரிட்சயமானவர் அல்ல. மற்றவர்களும் அப்படியே. ஸ்டீராய்டு ஆல்காய்டு பற்றி கேள்வி கேட்க யாரும் தயாரில்லை.. அது பற்றி எந்த எழவும் தெரியாது..

“தேங்க்ஸ்;… டாக்டர்” என்று பெருந்தன்மையுடன் சுந்தரம் சொல்ல கூட்டம் இனிதாக பார்ட்டிக்கு புறப்பட்டர்…

“ஜகந்தாதா மீட்டிங் எப்படி..”

“தூள் சார்… ஒரு பய மூச்சுவிடலை… புத்தி;சாலி ஆள் ஸார் சூர்யா…..”

அப்படிங்கறே,

ஆமா சார் ஏதோயோசனையா இருக்கப்பல இருக்கிங்க போல தெரியுது.

ஆமா…..நானும் சூர்யாவும் சேர்ந்து அரைக்கோவணம் அதான் ஜட்டி காப்புரிமை வாங்கலாம்னு யோசிச்சிட்டு இருக்கோம். எப்படி…”

“ரகசியமாச் செய்திடுவோம் ஸார்.. எவனாவது முந்திக்கிட்டா பிரச்சனை என்று ஒத்து ஊதினான் ஜகந்நாதன்..”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *