கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: August 13, 2018
பார்வையிட்டோர்: 13,408 
 
 

விடிந்தது கூட தெரியாமல் தூங்கிக் கொண்டிருந்த லவ்டொமி திடுக்கிட்டு எழுந்து நேரத்தை சரி பார்த்தான். “அய்யயோ… நேரம் போனதே தெரியாமல் தூங்கிட்டேனா…!?” என தடபுடலாக எழுந்தவன் பல்லையும் விளக்காமல் குப்பாயாட்டம் கிடந்த தன்னுடைய பேண்ட், சட்டை எல்லாக் கன்றாவிகளையும் எடுத்து மாட்டிக்கொண்டவன், மேசையில் கிடந்த நோட் புக்க சிலவற்றை எடுத்துக் கொண்டு பஸ்ஸுக்காக வீதிக்கு தாவி ஓடிச் சென்றான்.

‘இழவத்தம்பி… “சோரி” லவ்டொமி’ கிராமத்தில் படு மோடலாக! வலம் வரும் ஒரு டீனேச் பையன்…

‘இழவத்தம்பி’ எனும் ‘தன்னுடைய பெயர் அசிங்கமாக இருக்கே’னு! நெடு நாளாக கடுப்பில் இருந்தவனுக்கு, ஒருநாள் அவனுடைய, வயசான பொக்கை வாய் தாத்தா, வெற்றிலை,பாக்கை போட்டு மென்டு கொண்டே ‘லவ்த்டொமி… லவ்த்டொமி’னு ஏதோ ஒன்றுக்கு இவனை தேடி அவர் கூப்பிட்டு கத்தியபோது – கொல்லைப் புறத்தில் கக்கா போய்க் கொண்டுருந்த இழவத்தம்பியின் காதில் ‘லவ்டொமி’ என விழ”அட இது சூப்பரா இருக்கே”என்று தனக்கு தானே சூட்டிக் கொண்ட பெயர்தான் ‘லவ்டொமி!’

அடுப்பாஙகரையில் படுத்து தூங்கி எழும்பியவனைப் போன்று தீஞ்சி, கருகி பாதி வெந்து போனமாதிரி மண்டை!. அந்த மண்டைக்கு மல்ட்டி கலரில் டை அடித்துவிட்ட பரட்டை தலைமுடி . பாதி தெரிந்த! அண்டர்வேயாருக்கு விளம்பரம் பண்ணுவதாட்டம் நீண்ட நாள் துவைக்காத ஒரு ஜீன்ஸ். ‘எப்போ அது கழன்று கீழே விழும் என்ற அதன் பரிதாபமான நிலை ஒரு பக்கம். இரண்டு அங்குலத்தில் கழுத்தில் தொங்கும் ஒரு நாய்ச் சங்கிலி, அத்தோடு அங்கங்கு பிஞ்சிபோன டீசேட்டும், காதில் தொங்கிக் கொண்டிருக்கும் பித்தாலையில் ஒரு கடுக்கன் அதன் ஓரமாக நிரந்தரமாக வைத்து தைத்தாற்போல் ஒரு இயர் செட்!. எருமை மாடே கண்டு எகிறி பாய்ந்து ஓடிவிடும் என்றளவிற்கு ஒரு கூலிங் கிளாஸ் அத்தோடு ஒரு சோடி பாத்ரூம் செப்பள்… இதுதான் நம்முடைய மோடல் பைய்யன் லவ்டொமியின் பேஷன் ஸ்டைல்!.

காலையில் செல்லும் முதல் பஸ்ஸான கேம்பஸ் பஸ் வந்து கொண்டிருந்தது. ஓடிச் சென்று அதில் பாய்ந்து ஏறிய லவ்டொமி கண்டக்டரிடம், “வந்தாறுமூலை கேம்பஸுக்கு ஒரு டிக்கெட்” என்றான். அவனை ஒருமுறை ஏற இறங்க பார்த்துவிட்டு டிக்கெட்டை கிழித்து கொடுத்தார் கண்டக்டர்.

பஸ் வேகமாக சென்று கொண்டிருந்தது. கேம்பஸில் படிக்கும் யுவதிகள், லவ்டொமியை பார்த்ததும் “ஹேய்…டுடே வெறி ஸ்மார்ட்டா, ஸ்டைலா இருக்கானே..! இவனை அடிக்கடி பார்க்கிறோம்! இவன் எந்த டிபார்ட்மெண்ட்!?” ஆளாளுக்கு அவர்கள் பேசிக் கொண்டதை கேட்டும் கேட்காததுபோல் முடியை ஒரு பக்கம் கோறிவிட்டு கையிலிருந்த நோட்டு புக்குளை அடிக்கடி எடுத்து ஏதோ பார்த்தவன் தனக்குள்ளே பெருமையாக சிரித்துக்கொண்டான், லவ்டொமி.

வந்தாறுமூலை கேம்பஸ் அருகாமையில் அன்றைய தினமும் பொதுச் சந்தை என்பதால் . ஜன நெருசல் அதிகமாகி, காலையிலே சந்தை அல்லோல் பட்டுக் கொண்டிருந்தது.

கேம்பஸ் ஸ்டாப் வந்ததும் அந்த யுவதிகலோடு சேர்ந்து லவ்டொமியும் இறங்கிக்கொண்டான். அவர்கள், அவனைத் திரும்ப திரும்பப் பார்த்துச் சென்றதுமே டீசேர்ட்டில் தொங்கியிருந்த கூலிங் கிளாஸை எடுத்து பந்தாவுடன் ஸ்டைலாக மாட்டிக்கொண்டான் லவ்டொமி.

“”வாவ்…” என கேம்பஸ் யுவதிகள் அனைவரும் வாயைப் பொழந்து கொண்டு கேம்பஸுக்குள் நுழைந்தார்கள்.

பாடங்கள் முடிந்து மீண்டும் பஸ் ஏறி ஊர் திரும்பிய அந்த யுவதிகள் லவ்டொமியை பற்றியே அன்று முழுவதும் ‘கேன்சம் போய், ஸ்டைல் மன்னன்’ என்று புகழ்ந்து தள்ளி பேசிக்கொண்டு வந்தார்கள்…

ஒரு பயணியை ஏற்றுவதற்காக சந்தையின் நடுவில் பஸ் ஓரமாக நிறுத்தப்பட்டது. வியாபாரிகளின் கூச்சலின் சத்தமும் – மக்களின் பேரம் பேசும் சத்தமும் ஒன்றாக சேர்ந்து போட்டி போட்டு காச்சு மூச்சென்று ஒரே ஆர்ப்பாட்டமாக ஓயாமல் ஒலித்துக் கொண்டிருக்க…

“யக்கா… வாங்கக்கா வாங்க…”.

கத்தரிக்காய் எவ்வளவு போடனும்? யக்கோவ்…”னு, எக்கோவ் தெரிக்கும் அளவிற்கு ஒருத்தன் மட்டும் உச்சகட்ட கைபீச் 5.7 சவுண்ட் எபக்ட்டுடன் வித்தியாசமாக கூவிக்கொண்டிருந்தான்.

“யக்கோவ்… யக்கோவு”னு வந்த எக்கோவால், பஸ்ஸின் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த கேம்பஸ், யுவதிகள் உற்று கவனித்து கண்களை ஷூம் பண்ணிப் பார்த்தார்கள்.

“கேம்பஸ் கீம்பஸ்னு ஏறி இறங்கி பெரிய படிக்கிறவனாட்டம் புக்கும் ஆளுமா பொண்ணுங்களுக்கு பந்தா காட்டிவிட்டு யாவாரத்துக்கு வர்ரதே லேட்டாகி… இதுல கத்தரிக்காய் விற்க்கிற இடத்துல கூலிங் கிளாஸ்வேற மைனருக்கு!…, அதை கழட்டுடா முதல்ல” என திட்டிக்கொண்டே மண்டையில் ஓங்கி ஒன்று விட்டார் கடைக்கார முதளாலி!.

கூலிங் கிளாஸ் கீழே விழ குபீரென்ற சிரிப்பு சத்தம் கேட்டது. நிமிர்ந்து பார்த்தான் லவ்டொமி, பஸ்ஸுக்குள் அதே கேம்பஸ் யுவதிகல்.

அவர்களை கண்டுகொண்டதும் சுதாரித்துக் கொண்ட லவ்டொமி – எதுவுமே நடக்காததுபோல் ஈ… என்று பல்லைக்காட்டி சிரித்துவிட்டு கீழே கிடந்த கூலிங் கிளாஸை எடுத்து மாட்டிக்கொண்டான். தலைமுடியையும் ஸ்டைலாக கோறிவிட்டு முதளாலியிடம் “கேய்… மேன் கத்ரி! கௌவ்மாச்யா…? என பாவணை பண்ணி பேச ‘தொப்…தொப்’ என்று வந்து விழுந்தது கத்தரிக்காய்கள் லவ்டொமி எனும் இழவத்தம்பியின் தலையை நோக்கி..!.

“ப்ர்ர்ர்ரூ….போலாம் ரைட்…”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *