ராஜாராமன் எலி பிடித்த கதை

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: July 29, 2014
பார்வையிட்டோர்: 24,619 
 
 

சாரங்கபாணி, கோவிந்தன், ராஜாராமன்; காலைப்பதிப்பை பிரித்து முதலில் பார்ப்பது “இன்றைக்கு நாள் எப்படி” என்கிற தலைப்பை மற்றபடி கோபன் வெறகன் விஷயத்தை ஒபாமாவும், மோடியும் பார்க்கட்டும் என்று விட்டு விடுகிறதில் அவனுக்கு எந்தவொரு சங்கடமும் கிடையாது. அன்றைய நாள் பலனில் இன்றைக்கு சிறு சண்டைகள் பெருங்குழப்பம என்று வந்திருந்தது. அது எப்படி சிறு சண்டை பெரிய குழப்பமாகும் என்று அவனுக்கு புரியவில்லை. தலையைச் சொறிந்து கொண்டான்.

ஒரு குகையில் இருந்து வருகிற நரிமாதிரி கோவிந்தன் குடுக்கென்று வெளியே வந்தார். கோவிந்தன் ரொம்பத் தெளிவான ஆள். மற்றவரை மட்டும் குழப்பிச் சாகடித்து விடுவார். சாமார்த்தியமான சகுனி.

“ஏண்டா ராஜா…. இங்க பொடி டப்பி வச்சிருந்தேன் பார்த்தியா…”

காலையில் அவர் முகத்தில் விழித்தால் “களேபரம்” என்பது

ரங்கநாதனுக்கு அனுபவ சித்தி. களேபரம் பொடி டப்பியில் ஆரம்பித்தது.

“நான் பார்க்கவில்லை” என்று அவன் சொல்லியிருக்கலாம். நாக்கில்
சனி நின்றது.

“நான் பொடி பொடறதில்லையே….”

“நீ பொடி போடமாட்டேன்னு எனக்குத் தெரியும்டா… உன்னை
மாதிரி வயசுப் பையன் அதுவும் கம்ப்ய+ட்டர் இன்ஜினியர் கேவலம்
பொடியா போடுவான்….”

“அப்ப நான் வேற என்ன போடுவேன்னு சொல்லவறீங்க…… நீங்க
ஏதோ பொடி வச்சி பேசற மாதிரி தெரியுது….”

“பையா நான் பொடி வச்சி பேசலை…. பொடியை எங்கேயோ வச்சிட்டுப்
பேசறேன்….. இப்ப என்ன நீ பொடி எதுவும் போடறதில்லைன்னு நான்
ஒத்துக்கறேன்…. சரிதானே….” குப்பென்று கோபம் வந்தது.

அதோடு குழப்பத்துக்கான விதை விழுந்து விட்டது என்றும் முடிவாகி விட்டது ராஜாராமனுக்கு….

“அப்பா நீங்க பேசறது சரியில்லை..” என்று எச்சரிக்கையுடன் இழுத்தான். இந்தாள் சாமார்த்தியமான கலகக்காரன் அதே நேரம் ஆரம்பிக்கிறான் என்ன நடக்கப்போகிறதோ…. என்ற பயம் வந்தது.

“விட்ரா இது ஒரு விஷயமா… எலி இழுத்துக்கிட்டு போயிருக்கும்…”

அதோடு ரங்கநாதன் விட்டிருக்கலாம். விதி வலியது. நாக்கு
கொடியது… மறுபடி ஆரம்பித்தான்.

“ஏம்பா எலி பொடி கூடப்போடுமா…. கோவிந்தன் அவனை ஒரு வினாடி பார்த்தார்… “ சிக்கிக்கிட்டடா மகனே என்ற அர்த்தம் அதில் இருந்தது…

“சுண்டெலி பொடி போடாது எனக்குத் தெரியும். மூஞ்சூறு பத்தி எனக்குத் தெரியலை.. அது அடிக்கடி தும்மி பார்த்திருக்கிறேன்… ஒரு வேளை அது பொடி போடுமோ என்னமோ.. நமக்கு எங்கப்பா தெரியறது.. நாம கம்ப்ய+ட்டரா படிச்சிருக்கோம்….”

இந்தாளை கில்லடின்லே வச்சு வெட்டனும் என்று வெறிவந்நது. ஜாதக பலன் கருதி அடங்கினான்.

அடுத்து வந்தது. அத்தைக் கிழவி… தப்பு சரியான சொத்தைக் கிழவி… மொத்த மனுஷியில் கால்வாசிதான் இருப்பாள். சூனியக் காரியை விட கொஞ்சம் தான் சுமார்… ஆனால் கொடூரமான கிழவி….

“ஏண்டா தம்பி இங்க அவத்தலை வச்சிருந்தேன் பார்த்தியா…”

உனக்கு அது ஒண்ணுதான் குறைச்சல் என்று முனகிக் கொண்டான்…. “நான் எதையும் பார்க்கலே…”

“சரி எலி இழுத்துக்கிட்டுப் போயிருக்கும்…” என்று அவள் முடிவாக சொல்ல, ராஜாராமன் அதோடு விட்டிருக்கலாம்.. இந்த தடவையும் நாக்கில் சனி எட்டிப்பார்த்தது….

“எலி வெத்தலை போடுமாத்தே….”

“எலி வெத்தலை போடுமா…. சாராயம் குடிக்குமா… கையிலே மல்லிகை ப+ சுத்தி தேவடியா வீட்டுக்குப் போகுமா இதெல்லாம் நான் கண்டேனா…. நீ கம்ப்ய+ட்டர் என்ஜினியர்… உனக்கு தெரியாதா….”

“அத்தே” என்று ராஜாராமன் அலறி வாயைத் திறக்கும் முன் அவள் மாயமாகிப் போனாள். “வீடா இது” என்று சத்தம் போட்ட பத்து வினாடி இடைவெளியில் வந்தது. தமக்கை என்கிற குண்டோதரி… அல்லது சண்டோதரி…..

“ஏண்டா ராஜா இங்க மெதுவடை வச்சிருந்தேன் பார்த்தியா….”

நாக்கில் சனி பதுங்கியது….

“நான் பார்க்கலே……”

“எலி இழுத்துட்டுப் போயிருக்கும்;” என்றாள் சாதரனமாக பதுங்கிய சனி பாய்ந்தது.. “உங்கப்பாவோட பொடி டப்பியை எலி இழுத்துட்டுப் போகும்…. உங்கத்தையோட வெத்திலையையும் உன்னோட வடையையும் எலி இழுத்துக்கிட்டுப்போகும்… இப்படியே பேசுங்க… உன்னை ஒரு நா எவனாவது இழுத்துட்டுப் போவான்” சனி வக்கிரமாய்ப் பாhய்ந்தது… அதற்கு இடம் தெரியவில்லை.

“என்னை எதுக்குடா ஒருத்தன் இழுத்திட்டுப் போறது.. அதான் ஒரு அம்மாஞ்சிக்கு கட்டிக் கொடுத்துட்டீங்களே….”

“அந்தாள் அம்மாஞ்சின்னு தெரிஞ்சுதானே நீ கட்டிக்கிட்ட… இந்த பதினாலு வருஷத்திலே ஒரு மாசம் அவருகூட போயி இருந்திருப்பியா… அவரு தானே உங்ககூட இருக்கார்…”

“எம் புருஷன் ஆசையோட என்னைத் தேடி வர்றார்… அதுலே என்ன தப்பு… நீயும் அது மாதிரி ஒருத்தியை கட்டிக்கிட்டு அவ கூடவே போயிடு… எனக்கும் தொல்லை விடும்… பொறாமைப்படாதா…”

சண்டாளி… சதிகாரி வன்று மனசுக்குள் திட்டிக் கொண்டிருந்த போது அம்மா வந்தாள்….

“எண்டா இங்க உலக்கை வச்சிருந்தேன் நீ பாத்தியா…”

“வா நீ யொருத்திதான் பாக்கி… வந்துட்டே ஏன் உலக்கையை எலி இருத்துட்டுப் போயிருக்கும்னு நீயும் சொல்லிடேன்….”

“உலக்கையை எலி இழுத்துட்டுப் போறதா என்னடா சொல்றே… பகவானே…. குருவாய+ரப்பா… அப்பவே கம்ப்ய+ட்டர் படிக்காதேன்னு சொன்னேன்… அந்த ஆள் விட்டாரா.. என் பையனுக்கு என்னமோ ஆயிடுச்சே… ஜயய்யோ…. எல்லாரும் வாங்களேன்…”

ராஜாராமனுக்குப் புரிந்துவிட்டது.. சிறு கலவரம் பெருங்குழப்பம் தான்.

“ஏம்மா இப்படி ஊரைக் கூட்டற” என்று ராஜாராமன் சொல்லி முடியும் முன் “என்ன ஆச்சு… என்ன ஆச்சு..” என்று அமிர்த்தான் ஜேன் பாணியில் அத்தை அப்பா அக்கா எல்லாம் ஆஜர்.

“ஏங்க பாருங்க ஒரு மாதிரியா பேசறான்… உலக்கையை எலி இழுத்துட்டுப் போயிருக்கும்னு சொல்றான்….”

“ஆமாம் நீ சொல்றது சரி… எலி பொடி போடுமான்னு என்னைக் கேட்டான்…” இது அப்பா.

“எலி வெத்திலை போட சுண்ணாம்பு கேட்டதுன்னு என்கிட்ட சொன்னான்… என்ன ஆச்சு இவனுக்கு…” இது அந்த சூனியக்கார கிழவி.

“ஏய் குண்டுப் பெருச்சாளி நீயும் ஏதாவது சொல்லேன் கணக்கு தீர்ந்துவிடும்….”
“பார்த்தியாம்மா என்னையும் வம்புக்கு, இழுக்கறான். நீ எப்படி அத்தானை இழுத்துவச்சிருக்கியோ அதே மாதிரி ஒருத்தியைக் கட்டிட்டு
நானும் அவளோடவே இருந்திடுவேன்னு சொல்றான்… உன் புருஷன் மாதிரி நானும் பொண்டாட்டி கூட இருப்பேன்னு சொல்றாம்மா”.

“அம்மா உலக்கை கெடச்சுட்டது…” என்று சந்தோஷமாக குறுக்கே பாய்ந்தாள் வேலைக்காரி.

“எங்கேடி இருந்தது….”

“கொய்யா மரத்துக்கு கீழே எலி வங்கு இருக்கில்லே… அங்க கெடந்தது…”

“அப்பவே எம்புள்ள உலக்கையை எலிதான் இழுத்திட்டுப் போச்சின்னு சொன்னான்…. நான்தான் நம்பலை.. எம்புள்ளைக்கு என்ன புத்தி பாருங்க…”

“சண்டாளிகளா….” என்று சத்தமாக சபித்துவிட்டு வெளியே பாய்ந்தான் ரங்கநாதன் கோவிந்தராஜாராமன் “ஒரு பல் தேய்க்கிற பிரஸ் வாங்க வேண்டும்.. பல்லை விளக்கிட்டு வந்து உன்னi வச்சிக்கிறேன்…” என்று வெளியே வந்து கத்தினான்.

“த்தூ கூடப் பொறந்தவக்கிட்ட பேசற மாதிரி பேசுடா சொறியா” என்று அவள் சத்தம் போட்டது அண்ணா சாலைக்கும் கேட்டிருக்கும்.

“இந்த எலி விஷயத்தை முடிக்க வேண்டும் என்று தீர்மானம் வர இதற்குச் சரியான இடம் “அண்ணாச்சிக் கடை” என்றும் முடிவெடுத்தான்…”

அண்ணாச்சி நல்ல மனுஷன்: பரோபகாரம் இதம் சரீரம் என்பது அவர் கொள்கை.. மளிகைக்கடை அவரது தொழில். பிருஷ்டத்தை “வரக் வரக்” என்று சொறிந்து கொள்வது அவரது உப தொழில்….சமயத்தில் கூட்டுப்புள்ளி தவறுகிறபோது சொறி தொழில் வெகு வேகமாக நட்ககும். பையன்கள் மோட்டார் ரொம்ப வேகமா ஓடுது என்றும் பேசிக் கொள்வார்கள். மற்றபடி அண்ணாச்சி நல்லவர்…. கடன் கொடுத்துவிட்டு நடுரோட்டில் சண்டைக்கு நிற்பார்… சண்டைதான் மிஞ்சும் காசு மட்டும் தேறாது… நிறைய நஷ்டம் வரும் சலங்கமாட்டார்.. நாகர் கோயிலில் அவருக்கு ஏகப்பட்ட வாடகை வருமானம்… ஒரே பையன் லண்டன் உத்தியோகம்….
அண்ணாச்சி கடைக்கு ராஜாராமன் வந்தபோது அவர் சாகவாசமாக பல்லைக் குத்திக் கொண்டிருந்தார். நம்ம ஆளைப் பார்த்ததும் அளவில்லாத சந்தோஷமாக “அடடே வாங்க தம்பி என்ன வேணும் சொல்லியிருந்தா வீட்டுக்கே அனுப்பியிருக்கமாட்டேன். உங்களை அம்மா கடைக்கெல்லாம் அனுப்பாதே… உங்களுக்கு சில்லரை கணக்குப் சரியா பார்க்கத் தெரியாதுன்னு அம்மாவுக்கு ஆதங்கம்.. நிறையப் படிச்சாலே தொந்திரவு இல்லிங்களா தம்பி” என்று அவனைத் தூக்கி அப்படியே “தபால்” என்று போட்டுப் புதைக்க ரங்கநாதனுக்கு அவமானம் பிடுங்கியது….

“அதொன்னுமில்லே அண்ணாச்சி இந்த எலி விஷயமா ஒரு யோசனைக்கு உங்ககி;ட்ட வந்தேன்….”

“கரெக்ட் தம்பி… சரியான விஷயம் பேச வந்தீங்க… எனக்கும் ரெண்டு மாசமா அதே குடைச்சல்தான்… உட்காருங்க அம்மா கோவிச்சிக்கிட்டாலும் பரவாயில்லே… உங்களை மாதிரி ஒசந்த சிந்தனை உள்ளவங்க கூட தான் இதப்பேசணும்….. தம்பி… உங்களுக்கு புலி தெரியுமா….”

“என்னடா அண்ணாச்சி அஜெண்டா மாறுகிறார்” என்று குழம்பினான் ரங்கநாதன்.
“புலி பத்தியா. நான் பலி பத்தி பேச வந்தேன்” என்று ஆரம்பித்தான் ரங்கநாதன் அப்புறம் அண்ணாச்சி புளி பற்றி பேச வருகிறார் என்று தீர்மானம் செய்து கொண்டான். ஆனானப்பட்ட சன் டிவியிலேலே “ழ” கர “ள” கரப் பிரச்சனை. பல சரக்குக்காரன் புலிபத்தி பேச என்ன இருக்கிறது… “புளி” சமாச்சாரம் தான் பேசுவார் போல…”

“ஓ நம்ம கடையில இருக்கிற புளி பத்தி பேச வந்தீங்களா….”

“அட இல்ல தம்பி காட்டிலே இருக்கே… வேங்கைப்புலி இதப்பத்தித்தான் பேச வந்தேன்… முதல்லே புலியில்லே ஆரம்பிச்ச எலிக்கு வர்றேன்… எப்படி….”

“அது எப்படி புலி பற்றி ஆரம்பித்து எலிக்கு வருவது” அந்த மார்ப்பிள் விவகாரம் ரங்கநாதனுக்கும் புரியவில்லை. புலியைப் பார்த்த மாடு மாதிரி மிரண்டு போய் நின்றான்.

“இந்த கவர்மெண்ட் மாதிரி மோசமான கவர்மெண்ட்டை நான் பார்த்ததில்லே…. எப்படி தம்பி….”

அண்ணாச்சி இந்த எப்பிடி… என்பதை விட்டால் தேவலை என நினைத்துக் கொண்டான் ராஜாராமன்.. தவிர இந்த ஆள் எலி பற்றி அல்லது புலி பற்றி அல்லது கவர்மெண்ட் பற்றி அல்லது என்ன பிற தலைப்பு பற்றி பேசப் போகிறார்” என்ற கலவரம் வேற வயிற்றைக் கலக்கியது….

“தம்பி இப்ப இந்தப் புலியால் கவர்மெண்ட்டுக்கு, இல்லே நமக்கு ஏதாவது பிரதயோஜனம் உண்டா…”

“இல்லேன்னுதான் தோணுது….”

“கரெக்ட்… பாருங்க மனுஷனுங்களுக்கு எந்தப் பிரயோஜனமும் இல்லாத நாலு புலிகளுக்கு நாற்பது மைல் சரணாலயம் விடற கவர்மெண்ட் நாப்பது லட்சம் பேர் இங்க பிளாட்பாரத்துல கிடக்கறாங்களே ஏதாவது செஞ்சுதா.. புலி ஓட்டுப்போட்டு எவனையாவது தேர்ந்தெடுக்குதா… இல்லே புலி பார்லிமெண்ட் போய் சரணாலயம் கேட்டதா…. விட்டா புலிக்கு ரேஷன் கார்டு கொடுத்து தினம் இருபது கிலோ மாட்டுக்கறி மலிவு விலையிலே தரணும்பான் கவர்மெண்டு… எதிர்க்கட்சிக்காரன் அதையும் காட்டிலே போய் தந்திடுன்னு சொல்லுவான் தம்பி என்ன சொல்ற….”
நிஜமாகவே அரசாங்கம் இதைச் செய்தாலும் செய்யும் என்று நினைக்கத் தோன்றியது ரங்கநாதனுக்கு….

“விடு தம்பி.. நீ ஒரு புலியைக் கொன்னுட்டே உன்னை கவர்மெண்ட் என்ன செய்யும்…..”

“தெரியல்லியே” என்று அப்பாவியாய்ச் சொன்னான் ராஜாராமன்.

“உன் தோலை உரிச்சித் தொங்கப் போட்டுருவான்… அதே நேரம் புலி உன்னைக் கொன்னுட்டா… புலியை உரிச்சித் தொங்கப் போடுவாங்களா இந்தப் பசங்க… திக்கென்றது ராஜாராமனுக்கு.

“அண்ணாச்சி வண்டலூர்ல இருக்கிற புலி பத்திரமா இருக்கா…” என்று திகிலுடன் கேட்டான் ராஜாராமன். அவன் ஒரு புலியைக் கொன்றதாகவும் அப்புறம் அவன் தோலுரிந்து நிர்வானமாய்த் தொங்கும் காட்சி மனசில் வந்தது.

“வண்டலுர் புலிக்கொன்ன தம்பி… மணியடிச்சா மாட்டுக்கறி… மயிர் முளைச்சா பொட்டைப்புலின்னு ஜாலியா இருக்கு… சட்டம்… இது சரியில்லை தம்பி.. புலி மனுஷனைக் கொன்னா அதுக்கு தண்டனை… கெடையாது.. ஆனா மனுஷன் மனுசனைக் கொன்னாலும் தண்டனை.. இதெல்லாம் சட்டமாம்… வேடிக்கையா இல்லே.. எதுவும் சரியில்லை தம்பி….”

கையையும் உடம்பையும் ஆட்டி கோபமாகப் பேசிக் கொண்டிருந்த அண்ணாச்சியைப் பார்க்கவே வேடிக்கையாகவே இருந்தது..

“விருங்க தம்பி புலி பொழக்கட்டும் நாசமாய்ப் போகட்டும்… நமக்கென்ன…” அண்ணாச்சி புலியைப் பிழைக்க விட்டதில் ரங்கநாதன் ரொம்பவும் சந்தோஷப்பட்டான். அதோடு தன்னையும் அவர் பிழைக்க விட்டால் பரவாயில்லை என்று வேண்டிக் கொண்டான்…

“இப்ப எலிக்கு வருவோம்… எலி நமக்கு ஏதாவது கெடுதல் செஞ்சிருக்கா… புலி மாதிரி ஆளை அடிச்சித் திங்குமா… அப்பாவி மானை, மாட்டை அடிச்சித் திங்குமா….”

“ச்சீ… எலி சாது அப்படியெல்லாம் செய்யாது….”

“கரெக்ட்டா சொன்ன தம்பி…”

ஆளைத் திங்கிற புலிக்கு சரணாலயம்… சாது மாதிரி திரியற எலிக்கு விஷமருந்து… நியாயமா தம்பி….”

“எலி நம்ம உணவுப் பொருட்களை வீணாக்குதே…”

“ஏன் மனுஷன் யோக்கியமா… நாம திங்கற பொருளை நாம வீணடிக்கிறதில்லையா.. வேர்அவுஸ்லே ஆபிஸருங்க அலட்சியத்தாலே லட்சக்கணக்கான டன் கோதுமை, அரிசி வீணாகுதாம்… விளையற பொருளைப் பாதுகாக்காததாலே லட்சக்கணக்கான டன் பழம், காய்கறி வீணாகுதாம்… எலியைத் தப்பு சொல்லாதீங்க… நம்ம நாட்டோட எதிர்காலமே எலி கையில் இருக்கு தெரியுமா….”

எலியின் கையில் ரேகை இருக்குமா.. அண்ணாச்சி எலிக்கு ஜோசியம் பார்த்திருக்கிறாரா….

ஒரே குழப்பமாக இருந்தது….

“தம்பி எங்காத்தா ஆடு வளர்த்தா… கோழி வளர்த்தா ஆனா எலி வளர்க்கல ஏன் தெரியுமா…”

“தெரியல்லீயே அண்ணாச்சி நெட்ல அதுபத்தி விவரம் இல்லே..”

“இருக்காது தம்பி…. எலியைப் பத்தி எவனும் கவலைப்படறதில்லே… எங்காத்தாளுக்கு ஒரு நெஜம் தெரியும்… எலி தானா வளரும் அதனாலேதான் அவ எலி வளர்கலை….”

“ஓ..”

“தம்பி கோழிக்குத் தீனி போடறோம்… நாய்க்கு கறி போடறோம்… மாட்டுக்கு புல் போடறோம்… எலிக்கு ஏதாவது போடறோமா…”

“இல்லையே…”

“இப்ப நாட்ல ஒரு கோடி மாடுகள்… ரெண்டு கோடி நாய்கள்… இருபது கோடி கோழிகள் இருக்கு… எலி ஜனத்தொகை எவ்வளவு தெரியமா… சுமாரா ஜம்பது கோடி இருக்கும்….”

“அப்படியா….”

“ஆமா தம்பி… நாயை அடிச்சா தப்பு… புலியைப் புடிச்சா தப்பு…. ஆனா எலியை என்ன செஞ்சாலும் தப்பில்லையாம்… எதையும் எதிர்க்கிற இந்த தமிழ்ச் சமுதாயம் இதையும் பார்த்துக்கிட்டுதானே இருக்கு…. மருந்து வச்சிக் கொல்றதை விட்டு அத சாப்பிடற பொருளாமாத்திடக் கூடாதா என்ன.. நமக்கும் மலிவு விலையிலே கறி கெடக்கலாமில்லையா….”

“நீங்க பேசறது ரொம்ப சரி அண்ணாச்சி… இதநான் வெகுஜன இயக்கமாமாத்திடறேன்…. நத்தை திங்கறான்…. மண் புழுதிங்கறான்… எலி திங்கற பாம்பைத் திங்கறான்… எலி திங்க மாட்டானா… உடனே கவனிக்கறேன்… நான் பார்த்துக்கறேன் அண்ணாச்சி…”

தான் ஆரம்பித்த வேலை நன்றாக நடப்பதில் அண்ணாச்சிக்கு ஏகப்பட்ட சந்தோஷம்…..

“மனுஷனுங்க மோசம் தம்பி… நாயை அடிக்கக்கூடாது கொல்லக் கூடாதுங்கறான்… அதுக்கு குடும்பக்கட்டுப்பாடு பண்றான்… அதுலே கூடத் தப்பு பாருங்க…. நாய்னா என்ன ரெண்டு குட்டி போட்ட நாய்க்குக் குடும்பக்கட்டு;ப்பாடு பண்ணினா தப்பில்லையாம்…. அது ஜீவ இம்சை இல்லையா… அது ஒரு கேஸ் போட்டா என்ன ஆகும்… நாய் எப்பாவது குடும்பக்கட்டுப்பாடுக்கு ஒத்துக்கிட்டு கையெழுத்து போட்டதா” ரங்கநாதனுக்கு மறுபடி குழப்பம். குட்டிப்போட்ட நாயை எப்படிக் கண்டுபிடிப்பது… ரொம்ப கஷ்டம்.. ஆண் நாயிடம் விசாரித்தால்… அது பொய் கூட சொல்லலாம்…. இதுக்கு வழி எப்படி…..”

“நாயை விடு தம்பி… இப்ப எலிக்கு வர்றேன்….”

அண்ணாச்சி முதல்லே புலியை விட்டார்…. கவர்மெண்;ட்டை விட்டார்… இப்போது நாயையும் விட்டாச்சு… ஆனால் எலியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறார்…

“தம்பி இப்ப கறி விலை தெரியமா….”

“நான் கறி சாப்பிடுறதில்லை…”

“கறி விலை நாநூற்று ஜம்பது ரூபா… கோழிப்பண்ணை, மாட்டுப்பண்ணை, ஆட்டுப்பண்ணை, வாத்துப்பண்ணை அட முயல் பண்ணை வைக்கிறான்…. வறுத்து திங்கறோம்….. ஒரு பயலுக்காவது யோசனை வந்ததா…. எந்தப் பேங்குகாரனாவது எலிப்பண்ணை வைக்க கடன் தறானா….”

“எதுக்கு எலிப்பண்ணை…. அதுதான் தானா வளருதே?” “அதானே சொல்ல வர்றேன்…. சென்ட்ரல் ஸ்டேஷன்லே மட்டும் ஒரு நாலாயிரத்து முந்நூறு பெருச்சாளி திரியுது…. ஒவ்வொன்றும் ரெண்டு கிலோ தேறும்… வலை போட்டுப்பிடிச்சா மயிலாப்ப+ருக்கே கறி சப்ளை பண்ணலாம்…. கிலோ அஞ்சு ரூபாய்க்கே தரலாம்… கிலோ அரிசிஒரு ரூபாய்க்கு தர்றாங்களே…. கிலோ கறி அஞ்சு ரூபாய்க்கு தந்தால் எவ்வளவு ஓட்டு வாங்கலாம்…. அரசியல்வாதிக்கு இது புரியல்லிலே….”

“எலிக்கறி தின்னலாமா அண்ணாச்சி…”

“நாத்தம் புடிச்ச நண்டு, மீனைத் திங்கற மனுஷன் ஏன் எலியைத் தின்னக்கூடாது… தவிர எலி ரொம்ப சுத்தமான பிராணி…”

அம்மா, அக்கா எல்லாரும் லைப்பாய் சோப்பைக் தொலைத்துவிட்டு தடுமாறியிருக்கிறார்க்ள. இதற்கக் காரணம் எலியாகத் தான் இருக்க வேண்டும்… அந்த சோப் கிருமிகளை கழுவிக்களையுமாமே… எலிக்கு நிறைய விஷயம் தெரிகிறது.. டி.வி. பார்க்கும் போல.. அதான் சுத்தமாக இருக்கிறது..

“தவிர தம்பி எலியிலே சுண்டெலி, சுண்டாத எலி, பெருச்சாளி, பழுப்பு எலி, கருப்பு எலி, கரம்பை எலி,இப்படி எத்தனையோ விதம்…விதம் விதமா ருசி.. சீனாக்காரனுக்கு ஏற்றுமதி பண்ணலாம்…. தவக்களை ஏற்றுமதி பண்ணறப்போ எலியை ஏன் ஏற்றுமதி செய்யக்கூடாது…. இந்த முகர்ஜியை நிதி மந்திரியா போட்டது பெரிய தப்பு…. நெல்லுக்கு தண்ணி வேணும், உரம் போடணும், ப+ச்சி மருந்து அடிக்கனும்… எலிக்கு எதுவும் வேணாம்… ரெண்டு மாசத்திலே ஒரு ஜதை எலி முப்பது எலியாகும்… கொஞ்சம் ஏர்மோன் ஊசிபோட்டா ஒரு எலி ஒரு புலி சைஸ்லே வளர்ந்திடும்…. நமக்கு எவ்வளவு லாபம் கெடக்கும்…. எலி நம்மளை ஏதாவது கேட்குதா… அதுவா வளருது… எப்படி”

“எலி புலி மாதிரி வளருமா அண்ணாச்சி….”

“விஞ்ஞானத்திலே எல்லாம் சாத்தியம் நம்பி…. முப்பது வருஷம் முன்னே அமெரிக்காவிலே இருக்கிற அக்கா கிட்ட நான் ழூஞ்சைப் பார்த்து பேச முடிஞ்சதா…. இப்ப முடியுதே…”

தன் அக்காவின் மூஞ்சை நினைத்து ஆத்திரம் வந்நதது.. ராஜாராமன், தவிர சதிகாரி, அண்ணாச்சி சொல்கிற எலி புலி மாதிரி வளர்ந்து விட்டால் சென்ட்ரல் ஸ்டேஷனில் மயிலாப்ப+ர் பீச்சில் மனிதர்களைவிட புலிகள் தப்பு…. எலிகள் தான் அதிகமாக சுற்றிக் கொண்டிருக்கும் சென்ட்ரல் ஸ்டேஷனில் குழந்தைகளையும் ஒல்லிக்குச்சி பெண்களையும் ஜாக்கிரதையாக பாதுகாக்க வேண்டி வரலாம்… தவிர எதிர்லே இருக்கிற அரசு ஆஸ்பத்திரியில் பிறக்கும் குழந்தைகளை கூண்டில் போட்டுக் காப்பாற்ற செக்ய+ரிட்டியும் அதிகம் போட வேண்டி வரலாம்… அப்புறம் செக்யூரிட்டிக்கும் செக்ய+ரிட்டி போட வேண்டும்… இப்போதே பல பிரச்சனை.. தவிர எலி புலி மாதிரி ஆகும்போது பெருச்சாளி யானை மாதிரி ஆகி.. தும்பிக்கை மாத்திரம் இருக்காது… ரங்கநாதன் நினைப்பை உதறினான்.. சே…. பயமாகி மயக்கம் வந்நதது….

“அப்போ நம்ம வீட்டு எலிக்கு என்ன செய்யறது…”

“விட்டுருங்க… நாளைக்கே எலியைக் கொல்றது தேசியக் குற்றம்னு சட்டம் போட்டாலும் போடுவாங்க… எலி நம்ம தேசிய சொத்து… செல்வம் தரப்போற லட்சுமி… எலிப்பால்லே லேகியம் தயாரிச்சு வயசானவங்க சாப்பிட்டா வீரியம் வருமாம்… யாரோ சொன்னாங்க….”

அண்ணாச்சி பேசிக் கொண்டே போனார். அப்பாவைக் கடைப்பக்கம் அனுப்பக்கூடாது. என்று திட்டம் பண்ணிக் கொண்டான் ராஜாராமன்… அவர் ஒரு மாதிரியான ஆள், அப்படித்தான் அம்மா சொல்லுவாள்…. கண்ணாடியைத் தூக்கிவிட்டு பொம்பிளையைப் பார்ப்பாராம். ;ஆமாம் அது சரி, கண்ணாடி இன்றி வெறும் கண்ணே நன்றாகத் தெரிகிற போது கண்ணாடி எதற்காம்… இதக்கவனிக்கனும்… இந்த மோசடி மன்னன் ஏதோ பண்றார்..

“இதுலே பாருங்க தம்பி நம்ம பிள்ளையார் யார்….”

ராஜாராமன் காதில் யார், யார் என்று ஒரே அசரீரியாக ஒலித்தது… தடுமாறினான்…

“தமிழ் சமுதாயத்தோட முதல் கடவுள் யார்….. பிள்ளையார்…. வினாயகர், அவருடைய வாகனம் எது எலி…. எலியோட முக்கியத்துவத்தை பெரியவங்க எப்படி காட்டியிருக்காங்க….. புரியணும்… சரிதானே….

“சரிதானே..”

“தேசபக்தி வேணும் தம்பி… பக்கத்துலே கறிக்கடைக்காரன் ஜப்பான் காடைன்னு சொல்லி வளர்க்கிறானே… இந்திய எலின்னு வளாக்கிறானா…. நம்ம ஆளுங்களுக்கு உள்ளுர் சமாச்சாரங்களிலே நம்பிக்கை கெடையாது.. முருங்க விதையையும், அமுக்காராவை விடவா வயாகரா… சுய தேசபக்தி இல்லாம போன தேசம்.. சே…

“நீங்க எலி மருந்து விக்கறீங்களா அண்ணாச்சி..”

“ஆமா விக்கறேன்…. இது எலி மருந்துன்னு சொல்லிக் கொடுத்தான். போன வருஷம் வாங்கினேன்… என்ன செய்யறேன் தெரியுமா…. எலிப்பொறியிலே வச்சா இதோட வாசத்துக்கு எலிங்க வந்து சிக்குது.. மருந்தைத் தின்னு தெம்பாத்திரியுது.. பாருங்க ஆறு பொறி வச்சிருக்கேன்… ஒரு நாளைக்கு ஆறு எலி கிடக்குது…”

“என்ன செய்யறீங்க..”

“ஒரு எலி நாலு ரூபா தம்பி… விடியக்காலையில முதபோணி எலிதான்… எலிவித்தக்காசு கீச்சுக் கீச்சுகனு சத்தம் போடுமா…”

“அத வாங்கி என்ன செய்வாங்க…”

“டெஸ்ட்டுக்கு வாங்கறதா சொல்றான்.. டேஸ்ட்டுக்கு வாங்கறானோ என்னவோ யார் கண்டா… ஆட்டுக் கறி கிலோ இருநூத்து ஜம்பது ரூபா.. ஆறு எலி தம்பி எந்த நாடாவது எலி வாங்குமா… சொல்லுங்க… நான் வௌhரத்தை மாத்திக்கறேன்… எலி நமக்கு நமது நாட்டுக்கு நல்லது…. என்னங்கறீங்க….”

“சர்தான் அண்ணாச்சி..”

“அப்புறம் ஒரு ரகசியம் தம்பி ஒரு பைனான்சியர் கிட்ட சொல்லிட்டேன்…. எலிகேசியின் காதல் லீலைகள்னு ஒரு படம் பண்ணப்போறேன்… விஷயம் தெரிஞ்சதும் தமிழ் நடிகைகள் இந்தி நடிகர்கள் நடிக்க ஆர்வமா இருக்காங்க… கதை ரெடியானா முடிஞ்சது….

“படத்துலே ஐலைட் என்ன அண்ணாச்சி… அண்ணாச்சி கண்ணடித்தார்…. எலி அம்மணமா ஓடும்னு கேள்விப்பட்டதில்லே… அதான் ஐலைட். நம்ம இந்திய நடிகைகள் விடுவார்களா இந்த சான்ஸை: ஒரே தொல்லை…..ஆறு கஜம் துணி அரைக்காலே வீசும் கஜமாயிட்டுது,.. அது இல்லாம போனாத்தான் என்னன்னு ஒரே சலம்பல்… கெஞ்சறாங்க..” யாரை ஸெலக்ட் பண்றதுன்னு ஒரே குழப்பம்..

“அதுக்கு “ஏ” சர்டிபிகேட் தருவாங்களா அண்ணாச்சி…”

“ஏ என்ன எக்ஸ்இசட் எல்லாம் தருவான்… ஏ.பி. சிடி. எல்லா சென்டர்களிலேயும் பிச்சிக்கிட்டுப் போகும்… அள்ளிடலாம் அள்ளி… நீங்க தான் கம்ப்ய+ட்டர் கிராபிக்ஸ் பண்றீங்க…. ஓகேவா…”

ராஜாராமன் அப்படியே மயங்கிப் போனான்.

இப்போது ராஜாராமன் எலி அடிக்கிற நிலையில் இருந்து மாறி எலி பிடித்தால் நல்லது.. அதுவும் எலி கடித்தால் நல்லது… என்கிற ஸ்திதிக்கு வந்து அதே யோசனையில் வீட்டுக்கு வந்தான்..

ராஜாராமன் வலைத் தளத்தில் எலி பற்றி ஆரம்பித்த போது அடுக்களையில் ஏதோ சத்தம்….

“ஏங்க… எதுக்காக அவனை அண்ணாச்சிக் கடைக்கு அனுப்பினீங்க….”

“ஐயய்;யோ… ஏம்பா உங்களுக்கு புத்திகெட்டுப் போச்சா.. இப்ப அவன் எலி பத்தி ஆரம்பிச்சிட்டான்…”

சின்ன பையன் ஓடி வந்தான்.

“அம்மா… அம்மா.. எலிபத்தி கம்ப்ய+ட்டர்லே ஒரு விவாதம் ஆரம்பிச்சிட்டது… எலி அண்டு எகானாமிக்ஸ்னு ஒரு தலைப்பு… ரெண்டாவது ரேட்ஸ் அண்டு ரேட்ஸ்… அதாவது எலியும்…. விலையும்….”

“ஐயோ பையனுக்கு கல்யாணம் பண்ணனும்னு நினைச்சேனே…..” அம்மா பதறினாள்….

“கவலைப்படாதே…. கிளி மாதிரி… தப்பு எலி மாதிரி ஒருத்தியை முடிச்சிடலாம்.” என்று அந்த சகுனி முடித்தார் பெரியவர்.

Print Friendly, PDF & Email

1 thought on “ராஜாராமன் எலி பிடித்த கதை

  1. ஹாஹாஹாஹா பிரமாதம் அருமையா இருக்கு கதை …
    அதுலயும் நீங்க எலியை பத்தி சொன்னது இன்னும் பிரமாதம் ஹாஹாஹாஹாஹா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *